கிபி 841
ஐரோப்பாவில் முதன் முதலாக இஸ்லாமியர்களால் சாலமோ (இத்தாலி) வில் ஒரு பல்கலைக் கழகம் நிர்மாணிக்கப்பட்டது. அதன் பிறகு அதன் நீட்சியாக டொலெடோ, செலிலி, க்ரான்டா போன்ற பகுதிகளிலும் இஸ்லாமியர்களால் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டது. அங்கு படித்து பட்டம் பெறுபவர்களுக்கு அரபுகளின் உடையான தவ்ப் அணிவிக்கப்பட்டது. பட்டம் பெறுபவர்கள் தங்கள் நாடுகளுக்கு அதே உடையோடு சென்று அதனை அறிமுகப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக உலகமெங்கும் பட்டம் பெறுபவர்களின் உடையாக அது மாறிப் போனது.
நேற்று கால்பந்து விளையாட்டில் பட்டம் வென்ற அணிக்கு அரபு உடையை உடுத்தி அழகு பார்த்தனர். இதனை சிலர் விமரிசித்திருந்தனர். இந்த உடையானது கல்லூரி படிப்பிலிருந்தே துவங்குவதை அவர்கள் ஏனோ அறிந்திருக்கவில்லை.
No comments:
Post a Comment