Followers

Tuesday, December 20, 2022

பரங்கி பழம்

 

நம்ம நாட்டுல பரங்கி பழம் எளிதாக கிடைக்கும் அதற்கு இங்கு மதிப்பு இல்லை . நாம் பாதம்,பிஸ்தானு பெரும் முதலாளிகள் விளம்பரங்கள் செய்து விற்பனை செய்வதை கௌரவமாக வாங்கி சாப்பிட்டு வருகிறோம் .


நான் கொஞ்சம் ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன் அரபு நாடுகளில் பணி செய்த அனுபவம் உண்டு அங்கு குழந்தை இன்மை பிரச்சினை மிக குறைவு , அங்கு முழுக்க முழுக்க சுகப்பிரசவம் தான் ஆகுது . அரேபியர்கள் வீடுகளில் அடுத்த அடுத்த உயரங்களில் குழந்தைகள் இருப்பார்கள் . அந்த பிள்ளைகளை வளர்க்க நம் நாடுகளில் இருந்து நிறைய பெண்கள் பணி அமர்த்த படுவார்கள் . அரேபிய தம்பதிகளுக்கு வேலையே அடுத்த அடுத்து குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டும் தான் .


இங்கு நம்ம நாட்டுல ஒரு குழந்தை பெற்று எடுக்க லட்சம்,கோடினு செலவு பண்றோம் . இதற்கு காரணம் நாம் மாறிய அந்நிய வாழ்க்கை முறை தான் .


நம்ம நாட்டுல நாம் வீடு அருகில் கிடைக்க கூடிய பரங்கி பழ விதைகளை குப்பையில் தூக்கி எறிந்து விடுகிறோம் . நம்ம தூக்கி வீசும் இதன் விதைகள் தான் அரேபியர்கள் கைகளில் எப்போதும் இருக்கும் . அரேபியர்கள் இல்லற வாழ்வில் முழு நிறைவோடு வாழ முதற் காரணம் நம் ஊர் பரங்கி விதைகள் .


இந்த பரங்கி பழங்களை நாம் குப்பையில் தூக்கி எறிவோம்,, அல்லது கோயில் அன்னதானம் செய்ய வழங்குவோம் . இந்த பரங்கி பழ விதைகள் விலை மதிப்பு மிகுந்தது இதை நான் நம் ஊரில் மக்கள் அதிகம் செலவு செய்யும் அதிகப்படியான helth centre , weight loss மையங்களில் பார்க்கிறேன் .


நம் ஊர் பணக்கார பெண்களுக்கு பரங்கி பழமே தெரியாது பரங்கி விதை எப்படி தெரியும். இப்ப organic foods பாரம்பரிய உணவு இவை பணக்காரர்கள் உணவாக மாறி இருக்கிறது . இந்த பணக்கார மக்கள் தங்கள் உணவு தேவையை உழவர்களிடம் இருந்து பெரும் போது அதற்க்கான முழு பயனும் அவர்களுக்கு கிடைக்கும் .


அரசியல் கட்சிக்கு, நடிகருக்கு ,யூடியூப்பருக்கு எல்லாம் எவ்வளோ பேசும் நாமும் நமது ஊடகங்களும் ஒரு நிமிடம் உழவர்களின் பொருளுக்காக பேசினால்

மக்களுக்கு எளிதாக அந்த பொருட்கள் பற்றிய புரிதல் வரும் மக்கள் அதை தேட தொடங்குவார்கள் . உழவு , உணவு, உடல்,, உயிர், ஆன்மா!....


பரங்கி விதைகளை நாம் தொடர்ந்து உண்டு வரும் போது புகை பழக்கம் , மது பழக்கம் வேகமாக மறந்து போகும் உடல் மற்றும் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும் .


பரங்கி பழம் நம்ம ஊரில் சும்மாவே கிடைக்கும் அப்படி கிடைத்தால் அந்த பழத்தை நீங்கள் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் கூட அதன் விதைகளை எடுத்து காயவைத்து எடுத்து வையுங்கள் . ஒரு முறை அந்த விதைகளை உங்கள் வாய் மென்று விட்டால் அடுத்து அடுத்து அந்த விதை உங்களை உண்ண தூண்டும் . 



காப்பி  பேஸ்ட்

No comments: