பெல்ஜியம் கல்லூரி மாணவி
கத்தோலிக்க குடுமப பின்னணியைக் கொண்டவர் 21 வயதான சிலகி. கல்லூரி மாணவியான இவர் குர்ஆனால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்கிறார். இஸ்லாமிய உடைகளை விரும்பி அணிகிறார். இஸ்லாமிய சட்ட திட்டங்களை கற்றுக் கொள்கிறார்.
'நான் ஹிஜாப் அணிந்தவுடன் எனது நண்பர்கள் என்னை விட்டு தூரமாகிறார்கள். 'ஹாய்' கூட சொல்வதில்லை. சிரியாவுக்கு சென்று அங்கு வெடி குண்டுகளை வீசப் போவதாக என் காது படவே பேசுகின்றனர்' என்கிறார் சில்கி.
இந்த உலகில் இஸ்லாமியனாக வாழ்வது என்பது மிகப் பெரும் போராட்டமாகிப் போயுள்ளது. இதன் மூலம் அவர்களின் உறுதி மேலும் அதிகரிக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.
அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்-5663
சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.
No comments:
Post a Comment