இஸ்ரேலின் நம்பமுடியாத தொழில்நுட்பம்
- பார்வைக் குறைபாடுள்ள துரதிர்ஷ்டவசமானவர்கள் எல்லாவற்றையும் நாம் செய்வது போலவே பார்க்க உதவுகிறது. ஆஹா அருமையான கண்டுபிடிப்பு - பிராண்ட் அம்பாசிடர் 'மெஸ்ஸி. '
. . . . . . . . .
அனைத்திற்கும் ஆயிரம் வருடப் பெருமை பேசி காலம் கழிப்பதில் எந்த பயனும் இல்லை.
அப்படிப் பேசுவதால் நாம் முன்னேறப் போவதும் இல்லை.
அதை வைத்து புதியதாக மக்களுக்குப் பயன் உள்ள உபகரணங்களை, உக்திகளை, வழிகளைக் கண்டுபிடிக்க முயல வேண்டும். அதில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கான கல்வி, பயிற்சி இளம் தலைமுறைக்குக் கொடுக்க வேண்டும்.
அமெரிக்க ஆயுதங்களைத் தம் நாட்டு வளங்களைக் கொடுத்து வாங்கி குவிப்பதில் காட்டும் ஆர்வத்தை விட்டு, அவர்கள் ஆதரவில் கை கட்டி நிற்பதை விட்டு, தாமே தயாரிக்க அரபு நாடுகள் முன்னேறாத வரை இவர்கள் வீழ்வதில் அதிக நாட்கள் ஆகாது.
அதுபோல், நாம் நமது கல்வியை ஆக்க பூர்வ வாழ்விற்குப் பயன்படும் வழியில் கற்காது, நம் நாட்டின் அரசு பதவிகளில் ஆதிக்கம் செலுத்தாத வரை நாமே நமக்குப் பெட்டியைச் செதுக்குகிறோம். என்பதே உண்மை.
இதற்குப் பலர் பலவகையில் காரணம் கற்பிக்கின்றனர். விவாதங்கள் செய்கின்றனர். இவர்கள் நமக்குத் தேவை இல்லை.
நம் சமுதாயம் ஆதிக்கம் பெற, உயர்வு பெற வழிகாட்டும், கல்வி கொடுக்கும், பயிற்சி கொடுக்கும் தலைமைகளும் குழுக்களும், கட்சிகளும் தேவை.
.ஒரு நேர உணவு கொடுத்து உள்ளம் மகிழாதீர்கள். ஏழைகளுக்குத் திருமணம் என்று பல ஆயிரங்களுக்கு விளம்பர பேனர்கள், மேடை அலங்காரங்கள், வரதட்சணைகள், தங்கத் தாலி, காணொளிப் பதிவு, பத்திரிக்கை விளம்பரம் என ஆடம்பரம் வேண்டாம். எளிய திருமணம் இவை அல்ல. அப்படிச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை.
மற்றவர் உழைத்து வாழ, சுயமாக வாழ உறுதுணையாக இருங்கள். அவர்கள் எப்பொழுதும் கை நீட்டி நீங்கள் கொடுத்து மகிழ்வது நல்லதல்ல.
No comments:
Post a Comment