உபி - கான்பூர்
உபியில் மேல் சாதியினர் தாகூர்கள். இவர்கள் வீட்டுக்கு அருகில் தலித் மக்களின் இடம் உள்ளது. அங்கு தலித் குடும்பத்தவர் தங்களின் மகனுக்கு மணமேடை அமைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மேல் சாதியினரான எங்கள் வீட்டுக்கு அருகில் மணமேடை அமைப்பதா என்று கும்பலாக சென்ற தாக்கூர்கள் மணமேடையை உடைத்து அங்கிருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கி விரட்டியுள்ளனர்.
மணநாளை சந்தோஷமாக கொண்டாடி மகிழ இருந்த அந்த குடும்பம் வெட்டு, குத்து என்று போய் தற்போது காவல் துறைக்கு அலைந்து கொண்டுள்ளது. உயர் சாதி வெறி உபியை ஆட்டி படைக்கிறது. பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் தீண்டாமை கொடுமை வட மாநிலங்களில் அதிகரித்துள்ளது. அந்த கொடுமையை தமிழகத்திலும் கொண்டு வரத்தான் அண்ணாமலை பாடுபடுகிறார்.
“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(நூல்: அஹ்மத் 22391)
என்று மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதர முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.
No comments:
Post a Comment