நமது நாட்டில்
இந்து ராஷ்ட்ரா நடைமுறைபடுத்தப்படுவதாகவே உணர்கிறேன்.
#பாஜக ஆளும் மராட்டியத்தில், தலித் நபரை மாட்டு சாணம் உண்ண வைத்து #RSSorg குண்டர்கள் அட்டூழியம்! மூன்று மாதங்கள்
கழித்து வழக்கு பதிவு!
மகாராஷ்டிரா
மாநிலம் ஜால்னாவில், ஒரு தலித்
நபரை ‘பசு பாதுகாவலர்கள்’ என்று கூறிக்கொண்ட குண்டர்கள் தாக்கி, பின்னர் அவரை வலுக்கட்டாயமாக மாட்டுச் சாணம்
உண்ண வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆறு ‘பசு பாதுகாவலர்கள்’ மீது காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி
வெளியிட்டுள்ளது.
இந்தச்
சம்பவம் கடந்த மே மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பானதாகக்
கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பரமேஷ்வர் சுஹாஸ் ஹிவாலே என அடையாளம்
காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையை அணுகினார்.
மே 23 அன்று, டியூல்காவ்ன் ராஜா பகுதியில் நடைபெற்ற
வாராந்திர கால்நடைச் சந்தையில் ஒரு காளையை வாங்கிய பிறகு, தனது 11 வயது மகன் மற்றும் நாராயண் மரோதி காம்ப்ளே
என்ற அறிமுகமான ஒருவருடன் ஜால்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாக ஹிவாலே அதிகாரிகளிடம்
தெரிவித்தார்.
வீடு
திரும்பிக் கொண்டிருந்தபோது, கன்ஹையாநகர் பகுதியில் அவரது வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், தாங்கள் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மற்றும்
பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு, அந்தக் காளையை ஒரு முஸ்லிம் இறைச்சிக்
கடைக்காரருக்கு விற்க ஹிவாலே திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டியதாக அவர் காவல்துறையிடம்
தெரிவித்துள்ளார்.
இந்தக்
குற்றச்சாட்டை ஹிவாலே மறுத்ததோடு, காளையை வாங்கியதற்கான ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம்
காட்டியுள்ளார். இருப்பினும், அந்த ‘பசு பாதுகாவலர்கள்’ அவரை அறைந்ததாகவும், அவரது பெயர் மற்றும் சாதியைக் கேட்டறிந்த
பிறகு சாதி தொடர்பான இழிவுச் சொற்களால் திட்டியதாகவும், பின்னர் அவரது வாயில் வலுக்கட்டாயமாக
மாட்டுச் சாணத்தைத் திணித்ததாகவும் ஹிவாலே குற்றம் சாட்டியுள்ளார் என்று பிரஸ்
டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது.
நமது நாட்டில்
இந்து ராஷ்ட்ரா நடைமுறைபடுத்தப்படுவதாகவே உணர்கிறேன்.

No comments:
Post a Comment