Followers

Sunday, March 13, 2022

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்...!

 

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்...!

 

 

பிரியாணி... பிரியாணி.. பிரியாணி என முகநூலே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிற உறுதி செய்யப்படாத வதந்தி பற்றியோ,

நம்முடைய நாட்டின் தேசிய உணவாக எழுச்சி பெற்று, ஸ்விக்கி (ஸோமோட்டோ?) நிறுவனத்தில் கடந்த ஓராண்டில் மிக அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட எழுச்சி உணவாக பிரியாணி நிமிர்ந்து நிற்பதைப் பற்றியோ,

ஒரு அண்டா பிரியாணிக்காக ஊரையே சூறையாடி, கடைகளைக் கொள்ளையடித்து, மாநகரத்தையே பீதியிலும் பதற்றத்திலும் உறைய வைத்த கோவை மாநகர காமெடி வில்லன்களைப் பற்றியோ நான் இங்கு சொல்லப் போவதில்லை.

பிரியாணி சாப்பிட்டதால் சத்திய இஸ்லாத்தை ஏற்ற ஒரு பிரிட்டிஷ்காரரைப் பற்றிச் சொல்லத்தான் இந்தப் பதிவு.

அவருடைய பெயர் டேவிட் ஆன்ஸன் (David Ansen). 1920களில் இந்தியத் துணைக் கண்டத்தையே கிலாஃபத் இயக்கம் உலுக்கிக் கொண்டிருந்த நாள்களில் டெய்லி மிரர் என்கிற நாளிதழின் நிருபராக பம்பாயில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

 

அந்த வேளையில் பம்பாயில் கிலாஃபத் இயக்கம் தொடர்பாக முஸ்லிம் வணிகர்களின் எழுச்சி மாநாடு நடக்கின்றது. மாநாட்டுக்காக வந்திருந்த முக்கியப் பிரமுகர்களுக்காக ஹுஸைன் சோட்டானி என்பவர் சிறப்பு விருந்து அளிக்கின்றார். இந்த விருந்தில் டேவிட்டும் கலந்துக்கொள்கின்றார்.

அந்த விருந்தில் தான் தனது வாழ் நாளில் முதன்முறையாக பிரியாணியைச் சுவைக்கிறார், டேவிட் ஆன்ஸன்.

 

மணிமணியான பாஸ்மதி அரிசி, மிதமான சூட்டில் பதமாக வெந்த இறைச்சித் துண்டுகள் ஆகியவற்றுடன் கமகமவென்று மணக்க, மணக்க இருந்த பிரியாணி அந்த ஆங்கிலேயரின் இதயத்தை கொள்ளை கொண்டது.

 

உடனே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறி விட்டார். மாற்றத்துக்கான காரணம் வினவப்பட்ட போது அந்த ஆங்கிலேயர் சொன்னார்: ‘உடலுக்கு சக்தி அளிக்கின்ற உணவே இத்துணை ருசியாக, நேர்த்தியாக, உயர்வானதாக இருக்கிறது எனில் இவர்களின் ஆன்மாவுக்கு ஊட்டம் அளிக்கின்ற மார்க்கம் எந்தளவுக்கு மகத்தானதாக இருக்கும் என எண்ணிப் பார்த்தேன்’.

டேவிட் ஆன்ஸன் தாவூத் ஆன்ஸனாகி விட்டார். டெய்லி மிரர் நாளிதழிலிருந்து விலகி விட்டார். ‘தி முஸ்லிம் அவுட்லுக்’ (The Muslim Outlook) என்கிற நாளிதழின் பொறுப்பை ஏற்றார். 1941-இல் இறக்கின்ற வரை அதன் முதன்மை ஆசிரியராக இருந்தார்.

 

அல்லாமா இக்பால் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருக்கின்றார். ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதி சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் ஐஎஃப்டி வெளியிட்டிருக்கின்ற ‘அழைப்பியல் சிந்தனைகள்’ என்கிற நூலில் இது பற்றிய விவரங்கள் இருக்கின்றன.

 

டெய்ல் பீஸ் : இன்றும் தமிழகமெங்கும் அண்டா அண்டாவாக பிரியாணி சமைக்கப்படுகின்றது. பிளேட் பிளேட்களாய் பிரியாணி கோடிக்கணக்கான மக்களால் தின்று தீர்க்கப்படுகின்றது. ஆனால் டேவிட் ஆன்ஸனைப் போன்று யோசிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்?

#பிரியாணி

 

-Azeez Luthfullah

 

ஒரு சிறுமி கூட்டு பலாத்காரம்

 

ம.பி.யின் பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த அலிராஜ்பூர் மாவட்டத்தில் பகோரியா ஹாத்தின் (ஆண்டின் மிகப்பெரிய திருவிழா) ஒரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

 

இச்சம்பவம் நேற்று நடந்ததாகவும், வீடியோ எடுத்த இளைஞரிடமிருந்து கிடைத்த தகவலின் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அலிராஜ்பூர் எஸ்பி மனோஜ் கே சிங் தெரிவித்தார்.

 

பிஜேபி அதிகாரத்தில் உள்ளதால் அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்பது சந்தேகமே... இந்துத்வா ஒரு சமூகத்தை எவ்வாறு வளர்த்தெடுக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஒரு பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஒரு சமூகம் உருப்படுமா?




 

Friday, March 11, 2022

மோஜம் கான்!

 

மோஜம் கான்!

 

சுற்றுலா நிறுவனம் நடத்தி வருபவர். பாகிஸ்தான் நாட்டுக்காரர்.

உக்ரைனில் பேரூந்து வசதியின்றி நம் நாட்டு மாணவர்கள் தவித்து வந்தபோது உக்ரைன் ஓட்டுனர்கள் 250 டாலர்கள் கேட்டு அடாவடி செய்துள்ளனர். அப்போது மோஜம்கான் வெறும் 25 லிருந்து 30 டாலரே வாங்கி 2500 மாணவ மாணவிகளை உக்ரைன் பார்டரில் கொண்டு விட்டுள்ளார்.

 

'பணம் இல்லாமல் சிரமப்பட்ட பல இந்திய மாணவ மாணவிகளை எந்த கட்டணமும் இன்றி இலவசமாக பார்டர் வரை அழைத்து பத்திரமாக சேர்ப்பித்துள்ளார்.'

-நிதிஷ் குமார் (இந்திய மாணவர்)

 

'நாம் அனைவரும் மனித குலத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் சகோதரர்கள். எல்லைகளை நாம்தான் பிரித்துக் கொண்டோம். நான் செய்த இந்த சேவைக்கான வெகுமதியை எனது இறைவனிடம் எதிர் பார்க்கிறேன். ஊர் சென்ற பல மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்க என்னிடம் நன்றியை தெரிவித்தனர். இந்த அன்புக்கு அளவு ஏது? அனைவரையும் நேசிப்போம். இதுவரை 2500 இந்திய மாணவர்களுக்கு மேல் அனுப்பியுள்ளேன்.'

-மோஜம் கான்.




 

Wednesday, March 09, 2022

16 தங்க பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்

 

கர்நாடகா, ராய்ச்சூர், எஸ்எல்என் பொறியியல் கல்லூரியில் 22 வயது சிவில் பொறியியல் பட்டதாரி புஷ்ரா மடீன் 16 தங்க பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். மார்ச் 10 அன்று நடக்கவிருக்கும் பல்கலைக் கழகத்தின் ஆண்டு விழாவில் முதலிடம் பெற்ற பதக்கங்களை அவர் பெறவிருக்கிறார்...

 

By Muslim Mirror Staff

Bushra Mateen, a 22-year-old civil engineering graduate has set a new record by winning 16 gold medals at SLN College of Engineering, Raichur, Karnataka. She is about to receive the medals including the one for topper at the varsity’s annual convocation on 10 March.

According to the university, she has won the highest number of gold medals in the history of Visvesvaraya Technological University (VTU). Previously, the highest number of gold medals won by any students was 13.




 

Sunday, March 06, 2022

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி பிஸ்மத் மஃரூஃப்.

 

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி பிஸ்மத் மஃரூஃப். கிரிக்கெட் மைதானத்துக்கு தனது ஆறு மாத குழந்தையையும் கொண்டு வந்திருந்தார். உடனே இந்திய கிரிக்கெட் அணி மகளிர் வீராங்களைகள் அந்த குழந்தையோடு கொஞ்சி மகிழ்கின்றனர்.

 

பொதுவாக இரு நாட்டு மக்களும் நட்புடனேயே உள்ளனர். அரசியல்தான் இடையில் புகுந்து இரு நாட்டு மக்களையும் பிரித்து வைக்கிறது. இரு நாடுகளும் வர்த்தக பரிவர்த்தனையில் ஈடுபட்டால் இரு நாட்டுக்குமே பலன். ஆனால் அரசியல்வாதிகள் ஒன்று சேர விட மாட்டார்கள்.