மோஜம் கான்!
சுற்றுலா
நிறுவனம் நடத்தி வருபவர். பாகிஸ்தான் நாட்டுக்காரர்.
உக்ரைனில்
பேரூந்து வசதியின்றி நம் நாட்டு மாணவர்கள் தவித்து வந்தபோது உக்ரைன் ஓட்டுனர்கள்
250 டாலர்கள் கேட்டு அடாவடி செய்துள்ளனர். அப்போது மோஜம்கான் வெறும் 25 லிருந்து
30 டாலரே வாங்கி 2500 மாணவ மாணவிகளை உக்ரைன் பார்டரில் கொண்டு விட்டுள்ளார்.
'பணம் இல்லாமல்
சிரமப்பட்ட பல இந்திய மாணவ மாணவிகளை எந்த கட்டணமும் இன்றி இலவசமாக பார்டர் வரை
அழைத்து பத்திரமாக சேர்ப்பித்துள்ளார்.'
-நிதிஷ் குமார்
(இந்திய மாணவர்)
'நாம் அனைவரும்
மனித குலத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் சகோதரர்கள். எல்லைகளை நாம்தான் பிரித்துக்
கொண்டோம். நான் செய்த இந்த சேவைக்கான வெகுமதியை எனது இறைவனிடம் எதிர்
பார்க்கிறேன். ஊர் சென்ற பல மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்க
என்னிடம் நன்றியை தெரிவித்தனர். இந்த அன்புக்கு அளவு ஏது? அனைவரையும் நேசிப்போம்.
இதுவரை 2500 இந்திய மாணவர்களுக்கு மேல் அனுப்பியுள்ளேன்.'
-மோஜம் கான்.
1 comment:
செய்தி உண்மையானதுதான். நானும் சில நாட்களுக்கு முன்னா் கேள்விப் பட்டேன். பாராட்டுககுரியது.
ஆனாலும் தங்களின் அரேபிய அடிமைத்தனம் தங்களை விட்டுப் போகாது. பாக்கிஸ்தானைச் சோ்ந்த ஒருவா் செய்த நல்ல காரியத்தை இவ்வளவு அக்கறையோடு பதிவிடும் தாங்கள் இந்த கரிசனத்தை மேற்படி நபா் ஒரு இந்துவாக இருந்தால் பதிவிட மாட்டீர்கள். மத பாசம் என்று வந்து விட்டால் . . .தங்களுக்கு ஒரு இந்தியனை விட பாக்கிஸ்தான் முஸ்லீம்தான் முக்கியம்.
Post a Comment