Followers

Monday, July 10, 2006

எனக்கு பிடித்த ஆறு!

எனக்கு பிடித்த ஆறு!

எல்லோரும் 'எனக்கு பிடித்த ஆறு' என்ற தலைப்பில் கலக்கி விட்டீர்கள். திரு கோவி கண்ணனும், திரு கால்கரி சிவாவும் கூட என்னை அழைத்திருந்தார்கள். இருவரின் அழைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பற்றிய பதிவு போடும் அளவுக்கு வயதிலோ, அனுபவத்திலோ பெரியவன் அல்ல என்பதுதான் என் தயக்கத்துக்கு முதல் காரணம். கோவிக் கண்ணன் திரும்பவும் ஞாபகப் படுத்தியதால் இன்று பதிவு போட்டு விடுவது என்று முடிவு செய்து அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டேன். இனி எனக்குப் பிடித்த ஆறுக்குள் செல்வோமா!

எனக்கு பிடித்த ஆறு எழத்தாளர்கள்!

1) தமிழ்வாணன்
2) பி.ஜெய்னுல்லாபுதீன்
3) சுஜாதா
4) அப்துல் ரகுமான்
5) கல்கி
6) மதன்

பிடித்த ஆறு உணவு வகைகள்

1) தயிர் சாதம் - ஊறுகாய்
2) தேங்காய்ப் பால் சாதம் - மீன் குழம்பு
3) புலவ் - குருமா
4) கப்ஸா(அரேபிய உணவு)
5) புரோஸ்டட் சிக்கன்
6) தமீஸ் - பாயா

எனக்கு பிடித்த ஆறு பொழுது போக்குகள்

1) கேரம்
2) பால் பேட்மிண்டன்
3) புத்தகங்கள்
4) இணையம்
5) நண்பர்கள்
6) ஆன்மீகம்

எனக்குப் பிடித்த ஆறு இடங்கள்!

1) நான் பிறந்த மண்
2) மெக்காவில் இருக்கும் கஃபா
3) தொங்கு பாலம் (மலேசியா)
4) ஊட்டி, கொடைக்கானல்
5) பெங்களூர், மைசூர்
6) குற்றாலம்

எனக்கு பிடித்த ஆறு ஆசிரியர்கள்

1) சரோஜினி டீச்சர்
2) மீனாட்ஷி டீச்சர்
3) நஜீர் அகமது (கணக்கு)
4) ராமலிங்கம் (என்சி.சி)
5) சுலைமான் (உடற்பயிற்சி)
6) திருநாவுக்கரசு (தமிழ்)

எனக்குப் பிடித்த ஆறு தலைவர்கள்

1) காந்தி
2) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
3) பெரியார்
4) அம்பேத்கார்
5) யாசிர் அராபத்
6) முல்லா உமர்

முல்லா உமரை சேர்த்தது ஆச்சரியமாக இருக்கலாம். உசாமா பின் லாடனை தரச் சொல்லி புஷ் கேட்கிறார். இல்லை என்றால் கூட்டணி படைகளோடு சேர்ந்து ஆப்கானிஷ்தானின் ஆட்சியை அகற்றுவோம் என்றும் மிரட்டல் விடப் படுகிறது. அதற்கு முல்லா உமர் கொடுத்த பதில் 'இரட்டை கோபுரத்தை தகர்த்தது பின் லேடன் ஆட்கள்தான் என்பதற்குஆதாரத்தைக் கொடுங்கள். நாங்கள் பின் லேடனை ஒப்படைக்கிறோம்' என்பது. ஆனால் அமெரிக்காவோ மௌனம் சாதித்தது.இன்று வரை செப்டம்பர் 11 நிகழ்வுக்கு யார் காரணம் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் தான் அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்காவை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்ப நினைத்த இஸ்ரேலின் சதி என்ற வாதத்தையும் நாம் மறுக்க முடியாது. ஏனெனில் அன்றைய தினம் இரட்டை கோபுரத்தில் வேலை செய்து வந்து 5000 இஸ்ரேலியர் அன்று விடுப்பு எடுத்தது இந்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்குகிறது. தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்று தெரிந்திருந்தும் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த ஒருவரை அநியாயமாக ஒப்படைப்பதற்கு முல்லா உமர் மசியவில்லை. எதிர்ப் பார்த்தது போல் ஆட்சியையும் இழந்தார். இன்று காடுகளில் வாழ்க்கையை ஓட்டுகிறார். எனவே தான் என் மதிப்பில் முல்லா உமர் உயர்ந்து நிற்கிறார். அதேசமயம் தாலிபான்கள் பெயரில் அப்பாவிகள் கொல்லப் படுவதை எதிர்ப்பதில் முதல் ஆள் நான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நான் அடிக்கடி பார்வையிடும் ஆறு வலைப் பதிவுகள்

1) காசி
2) தங்கமணி
3) முத்து தமிழினி
4) நல்லடியார்
5) ரோசா வசந்த்
6) மோகன்தாஸ்

இது அல்லாமல் இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகள் இருக்கின்றன. குறிப்பாக அப்துல் குத்தூஸ், கால்கரி சிவா, ம்யூஸ், வஹ்ஹாபி, விடாது கருப்பு, கோவி கண்ணன், மஹேஸ் சிறில் அலெக்ஸ்டோண்டு ராகவன் போன்ற வர்களைச் சொல்லலாம். அனைத்தையும் படிப்பேன். ஆனால் அதிகமாக பின்னூட்டம் இடுவதில்லை. காரணம் என் வேலை. அடுத்து வேலையினால் எழுந்த களைப்பு. திரு கோவிக் கண்ணன் தனது பதிவில் நாகூர் தர்காவைப் பற்றி கேட்டிருந்ததற்கு பதில் எழுதுவோம் என்று நினைத்து இன்று வரை அதற்கு நேரம் கிடைக்காமல் தள்ளிப் போடுகிறேன். எனவே அதிகம் பின்னூட்டம் இடாததை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

எனக்குப் பிடித்த ஆறு திரைப் படங்கள்
(தமிழனாக பிறந்து விட்டு இந்தத் துறையை தொடாமல் இருந்தால் எப்படி? அதான் ஹி...ஹி....ஹி)

1) கௌரவம்
2) சலங்கை ஒலி
3) சிந்து பைரவி
4) வேதம் புதிது
5) இந்தியன்
6) டைட்டானிக்

கௌரவம் படத்தில் ரஜினிகாந்தாகவும், கண்ணனாகவும் நடித்து இரு வேடங்களையும் செய்தது ஒருவர் தான் என்பதை நம்புவது சற்று கடினமாகவே இருக்கும். பிறவிக் கலைஞனான சிவாஜியை நம் நாடு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

எனக்குப் பிடித்த ஆறு பாடல்கள்

1) ஏழு ஸ்வரங்களுக்குள் (வாணி ஜெயராம்)
2) ஏ... துன்யா... (ஹிந்தி முகமது ரஃபி)
3) சின்னப் பயலே.. சின்னப் பயலே! (டி.எம்.எஸ்)
4) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (டி.எம்.எஸ்)
5) என்ன சொல்லப் போகிறாய் (சங்கர் மகா தேவன்)
6) கொடியிலே மல்லிகைப பூ (ஜெயச் சந்திரன்)

படிக்கும் காலங்களில் பாட நேரம் போக மற்ற நேரங்களில் என்னைச் சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். டெஸ்கின் மேல் நான் தாளம் அடித்து பாடுவதைக் கேட்கத்தான். ஏசுதாஸின் பாடல்களை தாளம் தப்பாமல் பாடி நண்பர்களிடம் பாராட்டுப் பெறுவது வழக்கம்.

எனக்குப் பிடித்த ஆறு இசைக் கலைஞர்கள்

1) ஏ.ஆர்.ரஹ்மான்
2) இளையராஜா
3) கே.ஜே. ஏசுதாஸ்
4) ஹரிஹரன்
5) நுஸ்ரத் பதே அலி கான்
6) பங்கஜ்தாஸ் (கஜல்)

இன்றும் ஆச்சரியத்தோடு பார்க்கும் ஆறு விஷயங்கள்!

1)சூரியனும்,பூமியும், மற்ற பிற கோள்களும் ஒன்றோடொன்று மோதாமல் அதனதன் பாதையில் சுழன்று வருவது.
2)கையடக்கம் உள்ள ஒரு பொருளில் கோடிக்கணக்கான செய்திகளை சேமித்து வைக்கும் கணிணியின் சூட்சுமம்.
3)மேலே பருந்து வட்டமடித்தவுடன் தன் குஞ்சுகளை தன் இறக்கைக்குள் ஒளித்து வைக்கும் கோழி போன்ற பறவையினங்களின் தாய்மைத்துவம்.
4)நம் கண் முன்னே பல கோடீஸ்வரர்கள் இறந்தவுடன் ஆறடி மண்ணுக்குள் புதைக்கப் பட்டும், மனிதன் பணம் சேர்ப்பதற்கு இலஞ்சம், கொலை, கொள்ளை போன்ற வழிகளை நாடுவது.
5)செல்வந்தனை புதைத்த மறுநாளே அவன் விட்டுச் சென்ற சொத்துக்களுக்காக அடிதடியில் இறங்கும் சொந்த பந்தங்கள்.
6) மனிதனின் உடல் உறுப்புக்களை அவன் தேவைக்கேற்ப அதனதன் இடத்தில் பொருத்திய அந்த இறைவனின் படைப்பாற்றலை. உதாரணத்திற்கு நாம் சாப்பிட உபயோகிக்கும் வாய்ப் பகுதி முதுகுக்குப் பின்னால் இருந்திருந்தால் அல்லது பரிணாமத் தத்துவத்தின்படி கைகளே இல்லாமல் பரிணாமம் அடைந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

19 comments:

கோவி.கண்ணன் said...

//அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டேன்.//
எனது அழைப்பை ஏற்று ஆறு போட்ட திரு சுவனப்பிரியன் அவர்களே நன்றி
தயிர் சாதம் - ஊறுகாய்
//
வடுமாங்காய் ?
//ஏழு ஸ்வரங்களுக்குள் (வாணி ஜெயராம்)//
இனிய பாடல் - எனக்கும் மிகவும் பிடிக்கும்
//1) கௌரவம்
2) சலங்கை ஒலி
3) சிந்து பைரவி
4) வேதம் புதிது
5) இந்தியன்
6) டைட்டானிக்//
அருமையான படங்கள் ஐயா
//4)நம் கண் முன்னே பல கோடீஸ்வரர்கள் இறந்தவுடன் ஆறடி மண்ணுக்குள் புதைக்கப் பட்டும், மனிதன் பணம் சேர்ப்பதற்கு இலஞ்சம், //
இதற்காக உங்களைப் பாராட்டியே வேண்டும். நல்ல ஆன்மிக சிந்தனையாளன், சக மனிதர்களை நேசிப்பவர் மட்டுமே இப்படி எழுத முடியும்.

உங்கள் ஆறு ஆன்மிக படகு மிதக்கும் ஆறாக உள்ளது. கூடவே மனதுக்கு இனிய செய்திகள் உங்களை மென்மையான மனம் படைத்தவராக காட்டுகிறது.

நன்றி திரு சுவனப்பிரியன் அவர்களே

suvanappiriyan said...

என்னை அழைத்து விட்டீர்கள்! உங்களை நானும் அழைக்க வேண்டாமா? எனவே கீழே தரப்படும் அனைத்து வலைப் பதிவாளர்களையும் என் வலைப் பதிவிற்கும்,என் வீட்டிற்கும் அன்போடு அழைக்கிறேன்.சைவப் பிரியர்களுக்கு சைவ சாப்பாடும், அசைவப் பிரியர்களுக்கு அசைவச் சாப்பாடும் தருவதற்கு நான் ரெடி!

அழைப்பை ஏற்று வருவதற்கு நீங்க ரெடியா?

தங்கமணி, சிறில் அலெக்ஸ், கால்கரி சிவா, ம்யூஸ், சங்கர், நல்லடியார், கோவிக் கண்ணன், அப்துல் குத்தூஸ், முத்து தமிழினி, சமுத்ரா, வஹ்ஹாபி, அபு முஹை, மதி கந்தசாமி, மாயவரத்தான், சம்மட்டி, டோண்டு ராகவன், ஜெயஸ்ரீ, நேசகுமார், கனகவேலன்!,தருமி,விடாது கருப்பு,வெங்காயம், புலிப் பாண்டி, அனுராக்,ஆசாத், அப்துல் மாலிக், ஜாபர் அலி, சங்கர் நாராயணன், அபூ சுஹைமா, மனக் குமுறல், தெக்கிட்டான், மயூரன்,ஸ்ரீநிவாஸ், கீதா சாம்பசிவம்,நிலவு நண்பன்,ஜெயராமன்,ரோசா வசந்த்,இலவச கொத்தனார், கைப்புள்ள,பாஸ்டன் பாலா,மோகன்தாஸ்

ஞாபகத்தில் இருந்த பெயர்கள் அனைத்தையும் எழுதி விட்டேன்.விடு பட்டவர்களும் இந்த பட்டியலில் சேர்ந்து கொள்வார்களாக!

உங்கள் அனைவரையும் அன்போடு என் வீட்டிற்கும் வலைப் பதிவிற்கும் அழைக்கிறேன். கருத்து மோதல்கள் கோபங்கள் கொஞ்சம் தணிய வாய்ப்பு இருக்கிறதல்லவா?

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

suvanappiriyan said...

திரு கோவிக் கண்ணன்!

தயிர் சாதத்தோடு ஊறுகாய் மேலும் வடுமாங்காய் என்றால் சொல்லவே வேண்டாம். அதிகமான வெயில் நேரங்களில் இங்கு சவூதியில் மதியம் தயிர் சாதம்தான் என்னுடைய பிரியமான உணவு. கூடுதலாக மீன் பொறியலும், அல்லது கோழி பொறியலும் இருந்தால் கேட்கவே வேண்டாம்.

கவிதைகளும், கதைகளும் அழகாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.

தருமி said...

அழைப்புக்கு நன்றி

சல்மான் said...

// முல்லா உமர் கொடுத்த பதில் 'இரட்டை கோபுரத்தை தகர்த்தது பின் லேடன் ஆட்கள்தான் என்பதற்குஆதாரத்தைக் கொடுங்கள். நாங்கள் பின் லேடனை ஒப்படைக்கிறோம்' என்பது//

முல்லா உமரின் தாடி மறைத்து விட்டதால், அவர் என்ன கேட்டார் என சரியாக தெரியாமல் போய் விட்டது என புஷ் புலம்புவதாக கேள்வி. நேற்றைக்கு, சிஎன்என், விஸ்கன்சின் பல்கலைகழக பயிற்சியாளர் கெவின் பேரட்டை பேட்டி எடுத்தபோது, 'டிக்செய்னி' தலைமையில் ஒரு அமெரிக்க குழு முன்னின்று 9/11 யை அரசியல் காரணங்களுக்கு அரங்கேற்றியது என சொன்னது இப்பொது அமெரிக்காவில் புயல் கிளப்புகிறது.
டிக்செய்னி குறிபார்த்து சுட கூட தெரியாதவர் என 'பீடி கேட்பவர்' இங்கு வந்து சொல்ல அழைக்கிறேன்.

அதை தவிர்த்து, பெண்களை அடக்கி துன்புறுத்தியதாக சொல்லப்படுகின்ற தலிபான் தலைவரிடத்தில் பிடிக்கும் வகையில் என்ன உள்ளது என்பது என் கேள்வி

suvanappiriyan said...

அழைப்பை ஏற்றமைக்கு நன்றி திரு தருமி அவர்களே! இன்னும் இரண்டு மாதத்தில் தமிழகம் வரும் போது உங்களோடு தொடர்பு கொள்கிறேன். அவசியம் என் வீட்டுக்கு குடும்பத்தோடு வாருங்கள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

திரு சல்மான்!

//அதை தவிர்த்து, பெண்களை அடக்கி துன்புறுத்தியதாக சொல்லப்படுகின்ற தலிபான் தலைவரிடத்தில் பிடிக்கும் வகையில் என்ன உள்ளது என்பது என் கேள்வி //
பெண்களை அடக்கி துன்புறுத்தியவர் முல்லா உமர் என்று எதில் படித்தீர்கள்? சவூதியில் டாக்ஸி டிரைவர்களாகவும், தொழிலதிபர்களாகவும பணிபுரியும் ஆபகானியர் பத்து பேரிடம் முல்லா உமரைப் பற்றிய கருத்துக்களைக் கேட்டேன். இதில் ஒன்பது பேர் முல்லா உமருக்கு ஆதரவாகவும் ஒருவர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்களை கீழே தொகுத்துத் தருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

1) பெண்களின் கைகளையும், முகங்களையும் தவிர மற்ற பாகங்களை மறைத்துக் கொள்ளும்படி சட்டம் இயற்றினார. இஸ்லாம் சொல்வதால்.

2) ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை பிரித்து ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தனித் தனி கல்லூரிகளை அமைத்தார். இதுவும் இஸ்லாத்தின் கட்டளையே!

3) பெண்கள் கார் போன்ற வாகனங்களை தனியாக ஓட்டுவதற்கு தடை விதித்தார். அது பல தவறுகளுக்கு வழி வகுக்கிறது என்பதால்.

4) பாமியான் புத்தர் சிலைகளை புணரமைப்பதற்கு ஐ.நா வில் பணம் ஒதுக்குவதாக அறிக்கை வந்தது. அதற்கு பதில் அளித்த முல்லா உமர் 'புத்த மதத்தை பின் பற்றுவோர் இங்கு இல்லை. இந்த சிலைகளுக்கு செலவழிக்கும் பணத்தை நாட்டை புணரமைப்பதற்கும், மக்களின் கல்வி மேம்பாட்டிற்கும் ஒதுக்குங்கள்' என்று கேட்டார். அதற்கு ஐ.நா மறுத்து விட்டது. இதனால் கோபமுற்ற உமர் அவற்றை இடிக்க உத்தரவிட்டார்.
சாப்பாட்டுக்கே திண்டாட்டத்தில் இருக்கும் ஒரு நாட்டில் சிலைகளை சரி செய்வதற்காக பல கோடி டாலர்களை ஒதுக்குவது ஏற்புடைய செயலா?

5)கஞ்சா ஆப்கனில் விளைவிப்பதற்கு முதலீடு செய்தவர்கள் அமெரிக்க யூத பண முதலைகள். கஞ்சாவை மொத்தமாக அடிமாட்டு விலைக்கு வாங்கி உலகம் முழுவதும் போதைப் பொருளை விநியோகித்து கொள்ளை லாபம் ஈட்டினர் இந்த யூத முதலாளிகள். முல்லா உமர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் கஞ்சா பயிரிட தடை விதித்தார். விளைந்த பயிர்களை அழிக்கவும் செய்தார். இது பொறுக்காத அமெரிக்க யூத முதலாளிகள் தாலிபான்களை கவிழ்க்க திட்டமிட்டனர். இதற்கு பயன் பட்டது தான் செப்டம்பர் 11 - இரட்டை கோபுர தாக்கு - உசாமா பின் லாடன்

6)இஸ்லாம் உருவப் படங்களை தடுத்தது என்பதற்காக இதுவரை தன்னை புகைப் படமே எடுத்துக் கொள்ளவில்லை. நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் தவிர வேறு யாருக்கும் அவருடைய முகத் தோற்றம் துல்லியமாக தெரியாது.

7) ஆண்களை தாடி வைக்கும் படி கட்டாயப் படுத்தினார். இதுவும் இஸ்லாம் சொன்னதால் தான். அவருடைய ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தோம். இது பொறுக்காத அமெரிக்கா முல்லா உமரை ஆடசியிலிருந்து வீழ்த்தி விட்டு ஒரு பொம்மை அரசை வைத்துள்ளது. ஆனால் அமெரிக்கர்கள் வெற்றி பெறப் போவதில்லை.


இவையெல்லாம் அந்த ஆப்கானியரிடத்தில் நான் சேகரித்த செய்திகள். ஆப்கானிஷ:தானத்தில் செய்தி ஸ்தாபனம் என்று ஒன்றும் உருப்படியாக இல்லை. எல்லாம் அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ளது. அவர்கள் ஆட்டை கழுதை என்றால் அதையே உலகமும் நம்பும். நம் நாட்டு பத்திரிக்கைகளின் நிலையும் அதுதான்.

நேற்று கூட உசாமா பின் லேடனின் ஒரு வீடியோ கேசட்டை அல் ஜஜீரா ஒலிபரப்பியது. கத்தாரில் பல ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் உள்ளது. சிறிய நாடான கத்தாரில் ஒரு ஆள் வந்து வீடியோ கேசட்டை தொலைக் காடசி நிலையத்தில் கொடுத்து விட்டு செல்கிறானாம். அதை அமெரிக்க ராணுவமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதாம். ஒரு தடவை இரு தடவை அல்ல. பல முறைஇதுபோல் கேசட் நாடகம் அவ்வப்போது அமெரிக்கர்களால் நடத்தப்படும். இது எல்லாம் உலக மக்களின் காதுகளில் பூ சுற்றுவதற்காக.

இது அல்லாமல் நான் முன்பே சொன்னது போல் தன் ஆட்சி பறி போகும் என்று தெரிந்தும் உசாமாவை அமெரிக்கர்களின் கைகளில் அநியாயமாக ஒப்படைக்காமல் இருந்தது. எதிரி எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும் அநியாயத்துக்கு அடி பணியாமல் நெஞ்சை நிமிர்த்தி நினறது தான் எனக்கு அவரை தேர்ந்தெடுக்க தூண்டியது.

அப்துல் குத்தூஸ் said...

அழைத்தமைக்கு நன்றி. அல்லாஹ் உங்களுக்கு எல்லா நலனும் தருவானாக.

சல்மான் said...

சுவனப்பிரியன்,

தகவலுக்கு நன்றி. இதில் சில விமர்சனங்களும், கேள்விகளும் உள்ளன. அதை கேட்கலாம் என எண்ணுகையில், இஸ்ரேலே என் சொர்க்க பூமி + ரோல் மாடல், மோடி வகைரயாக்களே என்னை ரட்சிப்பவர்கள் என்றெல்லாம் பிதற்றும் அளவு இங்கு உரிமையுள்ளதால், முல்லா உமரை ஆதரிக்கும் உங்களுடைய நிலைப்பாடு அவ்வளவு விமர்சனத்துக்கு உரியதல்ல என எண்ணம் வருகிறது. ஆகவே இத்துடன் முடிக்கிறேன்

நல்லடியார் said...

சுவனப்பிரியன்,

உங்களின் ஆறு பற்றிய பதிவில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! 1) நீங்கள் அடிக்கடி பார்வையிடும் பதிவுகளில் என்பதிவும் இருப்பது. 2) சாப்பிட அழைத்தது.

தமீஸ் ரொட்டியை பாயாவுடன் கலந்து அடிப்பீர்களா? ஜீரகப் பொடி கலந்த -ஃபூல் + ஆலிவ் எண்ணையில் புரட்டித் தந்தால் குறைந்தது ரெண்டு முழு தமீஸ் எனக்குத் தேவைப்படும்.

அப்புறம் சாப்பிட அழைத்திருக்கும் நபர்கள் லிஸ்டைப் பார்த்தால் உண்மையில் சாப்பிடத்தான் அழைத்தீர்களா? :-))) என்று சந்தேகம் வருது. (குரோதமில்லை. மனதில் பட்டதைச் சொன்னேன்)

நேரம் கிடைக்கும் போது தனி மெயிலிடுங்கள் nalladiyar அட் gmail டாட் com

அன்புடன்,

suvanappiriyan said...

திரு அப்துல் குத்தூஸ்!

வாழ்த்துக்கும் அழைப்பை ஏற்றமைக்கும் நன்றி! நம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும் சமாதானத்தையும் தந்தருள பிரார்த்திக்கிறேன். இறைவன் நாட்டமிருப்பின் தமிழகம் வரும் போது தெரிவிக்கிறேன். அவசியம் உங்களை சந்திக்கிறேன். அவ்வப்போது வேலையின் பளுவால் பதில் சொல்ல சிரமப் படும்போது பல தடவை நீங்கள் வந்து எனக்கு பதிலில் உதவி செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

திரு சல்மான்!

//இதில் சில விமர்சனங்களும், கேள்விகளும் உள்ளன.//

உண்மைதான்! எனக்கும் தாலிபான்கள் விஷயத்தில் பல கேள்விகளும் விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அழகிய இலகுவான எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய இஸ்லாத்தை இவர்கள் சில நேரங்களில் தவறாக விளங்கிக் கொண்டு மூர்க்கத் தனமாகவும் செயல் படுகிறார்கள். சில நேரங்களில் வேலை தேடிப் போனவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து சித்ரவதை செய்வது கொலை செய்வது போன்ற விஷயங்களில் எல்லாம் இவர்களை முற்றாக வெறுக்கிறேன். (ஆனால் சூரிய நாராயணராவின் கொலை தாலிபான்களால் செய்யப் படவில்லை என்றும், தாலிபான்களிடமிருந்து அவரை உயிரோடு மீட்டுச் சென்றது பாகிஸ்தானிய ராணுவம் என்றும் அவர்களே திட்டமிட்டு கொலை செய்து பழியை தாலிபான்கள் மேல் போட்டதாகவும் ஆசியாநெட் செய்தியில் பார்த்தேன். இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்றும் தெரியவில்லை.) குர்ஆனின் உண்மையான ஏவல்களுக்கு மாற்றமாக இவர்கள் செய்யும் எந்த செயலையும் நானும் கண்டிக்கிறேன் என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் அவர்களைப் பற்றிய உண்மையான செய்திகள் உலகுக்கு கிடைக்காமல் இருக்க அங்கு அமர்ந்திருக்கும் அமெரிக்க காட்டுமிராண்டிகள் தங்களால் ஆன அனைத்து செயல்களையும் செய்து வருகிறார்கள். இது தான் அங்கு பிரச்னையே தற்போது. அமெரிக்க சனியன்கள் காலடி பதித்த எந்த நாடுதான் சுபிட்சமாக இருக்கிறது?

ரவி said...

////அன்றைய தினம் இரட்டை கோபுரத்தில் வேலை செய்து வந்து 5000 இஸ்ரேலியர் அன்று விடுப்பு எடுத்தது இந்த சந்தேகத்தை மேலும்////

மெய்யாலுமா ?

suvanappiriyan said...

திரு நல்லடியார்!

//அப்புறம் சாப்பிட அழைத்திருக்கும் நபர்கள் லிஸ்டைப் பார்த்தால் உண்மையில் சாப்பிடத்தான் அழைத்தீர்களா? :-))) என்று சந்தேகம் வருது.//

என்ன நல்லடியார் இப்படி கேட்டுட்டீங்க! உண்மையிலேயே சந்தோஷத்தோடு தான் அனைவரையும் கூப்பிட்டிருக்கிறேன்.நேசகுமாரையும் லிஸ்டில் சேர்த்திருப்பதால் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஒரு வகையில் நேச குமாரை நான் பாராட்டுவேன். சாதாரண முஸ்லிம் தெரிந்திருக்க வேண்டியதை விட அதிகமாகவே இஸ்லாத்தைப் பற்றி தெரிந்திருக்கிறார்.தனிப்பட்ட முறையில் யாராலும் பாதிப்பு அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். எனவே தான் எதற்கெடுத்தாலும் இஸ்லாத்தை கையிலெடுக்கிறார். அதிகமாக இஸ்லாத்தை எதிர்த்தவர்கள் தான் நொடிப் பொழுதில் இஸ்லாமியர்களாக மாறியதை நாம் வரலாறுகளில் பார்க்கிறோம். எனவே தான் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். நான் தமிழகம் வரும் போது முடிந்தவரை அனைவரையும் சந்திக்கவும் முயற்ச்சிக்கிறேன்.

suvanappiriyan said...

திரு செந்தமிழ் ரவி!

//மெய்யாலுமா?//

இது சம்பந்தமான ஒரு ஆர்ட்டிக்கிள் அரப் நியூஸில் தெளிவாக வந்துள்ளது.பல வருடங்களுக்கு முன் படித்ததால் தேதி ஞாபகம் இல்லை. அப்படி கிடைத்தால் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதைப் படிக்கும் நண்பர்கள் மேலதிக விபரம் கிடைத்தால் தெரிவிக்கவும்.

suvanappiriyan said...

திரு பரம பிதா!

//நல்ல விஷயம்தானே. அப்றம் ஏம்பா பாய்ங்கல்லாம் அவராண்டே கடுப்பாகீரீங்க..?//

நல்ல விஷயம்தான்! இஸ்லாத்தை நன்கு விளங்கியும் இருக்கிறார். ஆனால் அதை மற்றவர்களுக்கு விளக்கும் போது தெரிந்து கொண்டே குதர்க்கமாக தவறான விளக்கத்தைக் கொடுக்கிறார். உதாரணத்திற்கு

'உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டபன்.'
'போர்க் களத்தில் சந்திக்கும் பொது அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் உங்களை வெளியெற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்.'

-குர்ஆன் 2: 190,191

இந்த வசனம் போர்க் களத்தில் எதிரிகளைப் பார்த்து சொல்லப் பட்டது. இந்த வசனத்தில் வரும் 'அவர்களைக் கொல்லுங்கள்' என்ற ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு 'பார்த்தீர்களா? குர்ஆன் இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறது' என்ற பொய்யை நெஞ்சறிந்து மற்ற இந்து நண்பர்களிடம் பரப்புவார். இது போன்று பல சம்பவங்கள். இதைப் பார்க்கும் ஒரு சில இஸ்லாமியர் இதனால் அவர் மேல் கோபப் படுகின்றனர். வேறொன்றுமில்லை.

suvanappiriyan said...

பரம்ஸ்!

//இன்னும் புரியிலயேப்பா. நல்ல விஷயங்களை மாற்றி சொல்லுவதில் அவருக்கு என்ன ஆர்வம்.//

இது கூட புரியலையா? இஸ்லாத்தின் நல்ல கருத்துக்கள் பலரிடமும் சென்றால், பலரும் விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள். பிறகு தீண்டத்தகாதவர் என்று யாரை ஒதுக்கி வைப்பது? இப்படி புழுதி வாரி துர்ற்றினால் தான் இஸ்லாத்தின் வளர்ச்சியை கொஞ்சமாவது மட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கைதான் அவருக்கு. (ஆனால் அவரின் நம்பிக்கையில் வெற்றிப் பெறப் போவதில்லை என்பது வேறு விஷயம்)

//அது இருக்கட்டும். இஸ்லாம் பற்றி இவர் சொன்னால் கண்டிக்க வேண்டும் என சொல்லும் நீங்கள், இந்து சமயத்தையும் இந்துக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் விடாகருப்பு எ பொட்டி, திராவிடகுடிதாங்கி குரூப் தலைவர், இன்னபிற அடிப்பொடிகளை ஏன் கண்டிப்பதில்லை?//

இஸ்லாம் பற்றி எழக்கூடிய விமர்சனங்களுக்கு இஸ்லாமியனான நான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். மற்றபடி விடாது கருப்பு போன்ற வலைப் பதிவர்கள் இந்து மதத்தைத் தாக்கி எழுதினால் அதற்கு நீங்களோ அல்லது சம்பந்தப் பட்டவர்களோ தான் பதில் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் லக்கிலுக் எழுதிய ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. தனது பதிவில் சிறு வயதில் சங்கரமடம் நடத்தும் பள்ளியில் பிராமண ஆசிரியரிகளாலும், மாணவர்களாலும் தான் எவ்வாறெல்லாம் அவமானப் படுத்தப் பட்டேன் என்று வருத்தப் பட்டு எழுதியிருந்தார். இதனால் தான் தனக்கு உயர் ஜாதி இந்துக்களைக் கண்டால் பிடிக்கவில்லை என்றும் எழுதியிருந்தார். இது போல் ஒவ்வொரு வலைப் பதிவரும் தங்கள் வாழ்க்கையில் பட்ட அவமானங்களை தீர்த்துக் கொள்ளும் வடிகாலாக இந்த வலைப் பதிவுகளை பயன் படுத்துகிறார்கள்.மேல் ஜாதியினர் தங்களின் பிராமணிய மோகத்தை விட்டு விட்டால் அவர்களும் தங்களின் ஒரு சார்பு சாடல் எழுத்துக்களை விட்டு விடுவார்கள்.எனவே இந்த பிரச்னை இரு சாராரும் முடிவெடுக்க வேண்டிய பிரச்னை. இதில் முஸ்லிமான நான் என்ன செய்ய முடியும்?

Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

அழைப்பிற்கு நன்றி. கண்டிப்பாக வருகிறேன்.

தாங்கள் பெங்களூர் வந்தால் எனது வீட்டில் தங்களோடு உணவருந்த ஆசை.

>>> 'டிக்செய்னி' தலைமையில் ஒரு அமெரிக்க குழு முன்னின்று 9/11 யை அரசியல் காரணங்களுக்கு அரங்கேற்றியது என சொன்னது இப்பொது அமெரிக்காவில் புயல் கிளப்புகிறது <<<

நேஷனல் ஜியோகரஃபிக் சேனலில் இரட்டை கோபுரத் தாக்குதல் பற்றிய பல்வேறு கோணங்களை காண்பித்தார்கள். இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்தைத் தவிர, வேறு பல காறணங்களும் இருக்கலாம் என்பது அதன் கருத்தாக அமைந்தது. மற்ற காரணங்களுக்கான ஆதாரங்களும் சம அளவு பலமுள்ளவையே.

இருப்பினும் இது போன்ற தாக்குதல்களை வரவேற்கும் ஒஸாமாவை அமெரிக்கர்கள் அழிக்க நினைப்பது என்னளவில் வரவேற்பையே பெறுகிறது.

suvanappiriyan said...

ம்யூஸ்!

//அழைப்பிற்கு நன்றி. கண்டிப்பாக வருகிறேன்.//

அழைப்பை ஏற்றமைக்கு நன்றி. தமிழகம் வரும்போது அவசியம் உங்களோடு தொடர்பு கொள்கிறேன். படிக்கும் காலங்களில் பெங்களூர், மைசூர் சுற்றுலா வந்துள்ளேன். அழகிய பூங்கா நகரம்.

//இருப்பினும் இது போன்ற தாக்குதல்களை வரவேற்கும் ஒஸாமாவை அமெரிக்கர்கள் அழிக்க நினைப்பது என்னளவில் வரவேற்பையே பெறுகிறது.//
உஸாமா அமெரிக்காவை ஏன் எதிரியாக நினைக்கிறார்? சவூதி, குவைத், ஈராக், பஹ்ரைன் என்று அனைத்து வளைகுடா நாடுகளிலும் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் அமெரிக்க துருப்புகளை நிறுத்தி அந்நாட்டு பொருளாதாரத்தை சுரண்டுகின்றனர்.இவர்களுக்கு சம்பளமாக கோடிக்கணக்கான டாலர்கள் ஒவ்வொரு மாதமும் வளைகுடா நாடுகள் தர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.. தங்கள் நாட்டு பொருள்களையே இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தை அந்நாட்டு அரசுகளுக்கு கொடுக்கின்றனர். அமெரிக்கர்ளை எதிர்த்தால் அந்த அரசுகளையே சூழ்ச்சிகளால் மாற்றி விடுகிறார்கள். சதாமுக்கு நேர்ந்த கதியை நாமும் பார்த்தோம். இதனால் உள்ளூர் அரபுகளுக்கு பல விதங்களிலும் நெருக்கடி. இதனால் எல்லாம் வெறுப்புற்றுத்தான் அரபுகள் உஸாமாவை ஆதரிக்கின்றனர். நம் முன்னோர்களில் பிரிட்டிஷாரை விரட்ட ஆயுதம் எடுத்தவர்களை நாம் தியாகிகள் என்று போற்றவில்லையா? இன்று அரபு நாடுகளுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் அப்பாவிகளை இலக்காக்கி அராஜகத்தில் உசாமா இறங்கினால் அவரை எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். உஸாமா என்ன! இது போன்ற அராஜகத்தில் யார் இறங்கினாலும் அவர்கள் மனித குலஎதிரிகளே!