Followers

Sunday, July 30, 2006

எகிப்தில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் உடல்

எகிப்தில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் உடல்

'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்' என்று கூறினோம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

குர்ஆன் 10 : 92

எகிப்து நாட்டில் பிர்அவுன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.தனது தேசத்தின் சிறுபான்மையினமான யாகூப் நபியின் வழித் தோன்றல்களான இஸ்ரவேலர்களை கொத்தடிமைகளை விடக் கேவலமாக நடத்தி வந்தான். அவர்களுக்குப் பிறக்கும் ஆண் வாரிசுகளையெல்லாம் தயவு தாட்சண்யம் இன்றி இனப் படுகொலை செய்து கொண்டிருந்த காலக் கட்டம் அது.

அந்தக் காலகட்டத்தில்தான் மோஸே(மூசா) பிறக்கிறார். இறைவனின் உத்தரவுப்படி பாதுகாப்பான ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் விடப் பட்ட அந்தக் குழந்தையை பிர்அவுனின் குடும்ப த்தைச் சேர்ந்த ஒருவர் கண்டெடுத்து நேராக பிர்அவுனிடம் கொண்டு செல்லவும் உடனடியாக அந்தக் குழந்தையைக் கொன்று போடுமாறு கர்ஜித்தான் பிர்அவுன்.

ஆனால் பிர்அவுனின் மனைவி ஆசியா அந்தக் குழந்தையின் மீது மிகவும் பரிவு காட்டினார். தன் கணவனிடம் 'என் கண்களுக்கும் உங்கள் கண்களுக்கும் குளிர்சிசியாக இருக்கக் கூடிய இக் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள்.இதை நம்முடைய குழந்தையாகவே நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம், அல்லது ஏதாவது ஒரு வகையில் வருங்காலத்தில் இக் குழந்தை நமக்குப் பயன் படலாம்.' என்ற கோரிக்கையை வைத்தார்.

மனைவியின் ஆசையைத் தட்டிக் கழிக்க முடியாத பிர்அவுன் ஆசியாவைப் பார்த்து இப்படிக் கூறினான்.'இந்தக் குழந்தை உன் கண்ணுக்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்கட்டும்.இந்தக் குழந்தையின் மூலம் கண்குளிர்ச்சி கிடைத்திடும் என்றால் அது எனக்கு வேண்டவே வேண்டாம்.'

இவ்வாறு ஆசியா அவர்கள் தன் சொந்த மகனைப் போல் மூசாவை வளர்க்க ஆரம்பித்தார்கள்.வருடங்கள் விரைந்து உருண்டோடின. காலத்தின் கோலங்களும் வேகமாக உருமாறிக் கொணடிருந்தன.இறைவன் மூசாவை தன்னுடைய தூதராக தெரிவு செய்து கொண்டான். மேலும் மூசாவின் வேண்டுகோளுக்கினங்க அவரின் அண்ணன் ஹாரூனையும் இறைவன் தூதராக்கினான்.

அண்ணனும் தம்பியுமான இவ்விரண்டு இறைத்தூதர்களும் பிர்அவுனிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். ஒரே இறைவனை வணங்குமாறும் போதித்தனர். அதற்கு பிர்அவுன் 'நான்தான் எகிப்து வாழ் மக்களின் ரட்சகன்.நைல் நதி கூட என் கட்டளைப் படிதான் ஓடுகிறது. விரும்பினால் தண்ணீரை திறந்து விடுவேன். விரும்பாவிட்டால் தண்ணீரை மூடி விடுவேன்.அப்படியானால் நான்தானே இறைவன்' என்று உளறினான்.

அடுத்து சூன்யக்காரர்களோடு மூசாவை போட்டியிட சொன்னான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.

இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.தன் மனைவியே தனக்கு எதிரானதைக் கண்டு மிகவும் கோபமுற்ற பிர்அவுன் ஆசியாவை மிகவும் துன்பப் படுத்துகிறான்.'இறைவா! இந்த அக்கிரமக்கார பிர்அவுனிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தார். அவர் செய்த பிரார்த்தனையை இறைவன் குர்ஆனிலேயே சொல்லிக் காட்டுகிறான்.

'என் இறைவா! எனக்கொரு வீட்டை சொர்க்கத்தில் எழுப்புவாயாக!பிர்அவுனிடமிருந்தும் அவனது சித்ரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக!அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக' என்று பிர்அவுனின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

குர்ஆன் 66 : 11

மன்னரின் மனைவி என்ற அந்தஸ்து போகிறது. போவதுமில்லாமல் கொடுமை வேறு நடக்கிறது. சிறு குழந்தைகளையே கொன்றொழித்தவன் தன் மனைவியை எந்த அளவு கொடுமை படுத்தியிருப்பான் என்று விவரிக்கத் தேவையில்லை. அத்தனையும் இழந்து 'என் இறைவனே போதுமானவன்' என்று உறுதியுடன் இருக்கிறார். இந்த உறுதியை பார்த்த இறைவன் முஸ்லிம்களுக்கு உதாரணமாக அந்த பெண்மணியை தேர்வு செய்கிறான்.

அதோடு மூசா நபிக்கும் மிகவும் தொல்லைக் கொடுக்கிறான். இந்த கொடுமைகளைக் கண்டு பொறுக்காத மூசாவும் ஹாரூனும் 'பிர்அவுனின் கொடுமைகளுக்குத் தக்க தண்டனை கொடுப்பாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தித்தனர்.

'ஃபிர்அவுன் தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும் அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில் ஃபிர்அவுன் அப்பூமியில் வலிமையுள்ளவன். வரம்பு மீறுபவன்.' - குர்ஆன் 10 :83

மேற்கண்ட வசனத்தின் மூலம் மோசே (மூஸா) யைப் பின்பற்றியவர்கள் சொற்பமானவர்கள் என்று அறிய முடிகிறது.

'எங்கள் இறைவா! ஃபிர்அவுனுக்கும் அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் அளித்திருக்கிறாய்.எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே இது பயன் படுகிறது. அவர்களின் செல்வங்களை அழித்து அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கைக் கொள்ள மாட்டார்கள்.' என்று மூஸா கூறினார். - குர்ஆன் 10 :88

இந்த இருவரின் பிரார்த்தனையையும் ஏற்றுக் கொண்ட இறைவன் மூஸாவையும் அவரை பின் பற்றியவர்களையும் கடலை நோக்கி செல்லுமாறு கட்டளை இடுகிறான். இறைவனின் சக்தியால் கடல் பிளக்கப் பட்டு வழி உண்டாகிறது. இதைத்தான் 'டென் கம்மேண்ட்ஸ்' என்ற ஆங்கில திரைப் படத்தில் பார்த்தோம்.கடலில் தென்பட்ட வழியில் மூஸாவும் அவரைப் பின் பற்றியவர்களும் தப்புகிறார்கள். முஸ்லிம்களைக் கொல்வதற்காக ஃபிர்அவுனும் அவனது பட்டாளமும் கடலில் தென் பட்ட வழியில் நுழைகிறார்கள்.

'இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம்.ஃபிர்அவுனும் அவனது படையினரும் அக்கிரமமாகவும் அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது 'இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை என நம்புகிறேன்: நான் முஸ்லிம்' என்று கூறினான்.' -குர்ஆன் 10 :91

மூஸாவைப் பின் தொடர்ந்த ஃபிர்அவுன் கடலில் மூழ்கடிக்கப் படுகிறான்.கடலில் மூழ்கும் நிலையில் 'நான் முஸ்லிமாகிறேன்' என்று ஓலமிட்டான். இறக்கும் தருவாயில் நம்பிக்கைக் கொண்டால் அதை இறைவன் ஏற்க மாட்டான் என்று பின் வரும் வசனம் விளக்குகிறது.

'இப்போது தானா நம்புவாய்? குழப்பம் செய்பவனாக இருந்தாய் : இதற்கு முன் பாவம் செய்தாய்:

-குர்ஆன் 10 :92

'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் என்று கூறினோம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.' -குர்ஆன் 10 :92

அநியாயக்காரர்களின் முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக ஃபிர்அவுனின் உடலை பாதுகாப்பேன் என்று இறைவன் கூறுகிறான். அப்படியானால் அந்த உடல் எங்கே?

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நைல் ஆற்றங்கரையின் ஓரத்தில் லுக்ஸார் என்ற அழகிய சிற்றூர். இந்த லுக்ஸாரில் 'அரசர்களின் ஓடை' என்ற பெயரில் ஒரு பள்ளத் தாக்கு இருக்கிறது. அங்குள்ள தீபிஸ் என்ற பகுதியில் 1898 ஆம் ஆண்டு மம்மீஸ் (சடலங்கள்) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த லோனேட் என்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் அங்கிருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்தார்.அது உடனடியாக கெய்ரோவிலுள்ள ராயல் மியூஸியத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் பட்டது.

அந்த சடலம் கண்டெடுக்கப் பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. இப்போது அந்த சடலம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் எகிப்திய அரசப் பரம்பரையில் வந்த யாரோ ஒரு பாரோ மன்னனின் சடலம்தான் அது எனவும் இன்றைய அராய்ச்சியாளர்கள் அனைவருமே பெரும்பாலும் ஒத்துக் கொண்டு விட்டனர்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் மியூஸியத்தில் பார்வையாளர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த பழம் பெரும் சடலம் குர்ஆன் கூறும் ஃபிர்அவுனின் உடலே! முகமது நபியின் காலத்திலேயே இந்த உடல் வெளிப் பட்டிருக்குமானால் யுக முடிவு நாள் வரை அந்த உடலை பாதுகாக்கும் வசதி அந்த மக்களிடத்தில் இல்லை, உடலும் அழுகிப் போய் விடும். எனவே தான் விஞ்ஞானம் வளர்ந்த இந்நாளில் இறைவன் அந்த உடலை வெளிப்படுத்துகிறான். எகிப்து சென்றவர்கள் அந்த உடலை நேரிலேயே பார்க்கலாம். 'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி யிலும் நாம் பார்த்திருக்கலாம்.

குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

20 comments:

அபூ ஸாலிஹா said...

வரலாற்று அற்புதத்தை அழகிய நடையில் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!

"பாதூக்கப்பட்டு.." என்றுள்ள தலைப்பை பாதுகாக்கப்பட்டு என்று மாற்றிவிட்டால் இன்னும் அழகு சேர்ந்துவிடும்!

Plan For Nagore said...

where i can get that CD "quran kuurum aththachi".

சுவனப்பிரியன் said...

எகிப்து

முதல் வருகைக்கு நன்றி நாகூராரே!

என்ன திட்டம் நாகூருக்காக வைத்திருக்கிறீர்கள்? உள்ளூர் மக்களின் உதவியுடன் எதிர்ப்பில்லாமல் அங்கு இருக்கும் தர்ஹாவை இடித்து விட்டு பெண்களுக்கான கல்விக் கூடமும் நூலகமும் வைக்க பாடுபடுங்கள். இறைவனை சந்தோஷப் படுத்தக் கூடியவிஷயங்களில் இதுவும் ஒன்று. தற்போது நாகூருக்கு உடனடி தேவை இது தான்.

//where i can get that CD "quran kuurum aththachi".//

'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி மலையாள மொழியில் முதலில் வந்தது. பிறகு நம்மவர்கள் அதை மொழி மாற்றம் செய்து தமிழில் வெளியிட்டுள்ளார்கள். மீடியா வேல்ட், அல்லது அருகிலிருக்கும் தௌஹீது சகோதரர்களிடம் தொடர்பு கொண்டால் இந்த சிடி பற்றிய விபரங்கள் கிடைக்கும்.

சுவனப்பிரியன் said...

வருகைக்கு நன்றி அபூ சாலிஹா!

பாராட்டுக்கு நன்றி! நீங்கள் சுட்டிக் காட்டிய பிறகு தான் நானே தலைப்பை மீண்டும் பார்த்தேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தற்போது திருத்தி விட்டேன். யுனிகோட் டைப்பிங்கில் சில நேரங்களில் இது போன்ற தவறுகள் நம்மையறியாமல் நடந்து விடுகிறது.

திருவடியான் said...

பிர் அவுன் எனப்படும் PAROH, பிரமிடுகளில் ஒன்றைக் கட்டியவன். இன்றளவும் உலகமே பிரமிடு எப்படித்தான் கட்டப்பட்டிருக்கும் என்று ஊகங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு அக்காலத்தில் விஞ்ஞானத்தில் வளர அல்லாஹ் பிர்அவுனுக்கு அறிவை அளித்திருந்தான். இறுமாப்பெய்திய பிர்அவுன் தன்னை இறைவனாக வணங்கும்படி அனைவருக்கும் உத்தரவிட்டான்.

தான் இறந்த பிறகு தன் உடலைப் பாதுகாப்பதற்காக ஒரு பிரமிடை பிரமாண்டமாகக் கட்டிய அந்த பிர்அவுனுக்கு ஆண்டவன் அளித்த பரிசு என்ன தெரியுமா? அவன் உடல் அந்த பிரமிடுக்குள் இல்லாமல் போகச் செய்ததுதான். ஆராய்ச்சியாளர்கள் அவ்வளவு பெரிய பிரமிடுக்குள் மம்மி இல்லாது போன காரணம் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயினர், இஸ்லாமிய அறிஞர்கள் தான் அந்த விளக்கத்தை குர்ஆனின் மூலம் எடுத்துக் காட்டினர். இறைவன் அவனது உடலை யார் கண்ணிற்கும் அறியா வண்ணம் மண்ணிற்குள் புதைத்து வைத்தான். அதைப்பற்றித்தான் தாங்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வலைக்குடில் மிக்க பயனுள்ளதாக இருக்கிறது.

Vajra said...

circular logic என்றால் என்ன என்று தேடிப் பார்க்கவும்...கிணற்றிலிருந்து வெளியில் வந்து விடலாம்...

சுவனப்பிரியன் said...

திருவடியான்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

திருவடியான் said...

திரு வஜ்ரா சங்கர் அவர்களே, நீங்கள் குறிப்பிட்ட Circular Logic பற்றிப் படித்தேன். பொத்தாம்பொதுவாக நான் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. அதற்கு நம்முன் கண்கூடான ஆதாரம் இருக்கும்போது அதை நம்ப மாட்டேன் என்று சொல்வது, உங்களின் அறியாமையையோ அல்லது பிடிவாதத்தையோ காட்டுகிறது. உங்கள் (மனக்)கண்ணில் அணிந்திருக்கும் அந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். என்றாலும் எனக்கு இருக்கின்ற கருத்துச் சுதந்திரம் உங்களுக்கும் இருக்கிறது, ஆனால் அது அடுத்தவரை புண்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

asalamone said...

மாற்று மத நண்பர்களுக்கும் அறியும் வண்ணம் எளிமையாக சொல்லி இருப்பது நன்று.
மேல் விளக்கம் வேண்டும் அன்பர்கள் குரான் பார்த்து படிக்கவும் இப்பொழுது எல்லா இஸ்லாமிய புக் டிப்போ களில் குரான் எளிதாக வாங்கவும் முடியும்.

அன்பன்
அசலம் ஒன்

agner said...

//அந்த சடலம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் எகிப்திய அரசப் பரம்பரையில் வந்த யாரோ ஒரு பாரோ மன்னனின் சடலம்தான் அது எனவும் இன்றைய அராய்ச்சியாளர்கள் அனைவருமே பெரும்பாலும் ஒத்துக் கொண்டு விட்டனர்//

மம்மி(mummy)யின் வயது 3000 ஆண்டுகள் என்றால் உங்கள் மதத்தின் வயது என்ன?இஸ்லாம் உருவாகி 1400 ஆண்டுகள்தான் ஆகிறது.மீதம் 1600 ஆண்டுகள் இஸ்லாம் என்ன செய்துக்கொண்டுருந்தது?இன்னும் நல்லா காதுலே பூ சுத்துங்க...

எகிப்து மன்னர்கள் இறந்தபின் அவர்களின் உடலை பாடம் செய்யும் முறை பண்டையகாலத்தில் இருந்தது.பிறகு அந்த உடலை பிரமிடுக்குள் வைத்துவிடுவர்.எகிப்தின் தட்பவெட்ப நிலைமையின் காரணமாக இந்த மம்மிகள் 3000-4000 ஆண்டுகள்வரை அழுக்காமல் இருந்தது.மனித உடல் மட்டும் இல்லாமல் பூனை,கழுகு போன்ற மிருங்கள் கூட இப்படி செய்யப்பட்டது.இதுகூட அல்லாதான் செய்தாரா?

சுவனப்பிரியன் said...

அசலம் ஒன்!

//மாற்று மத நண்பர்களுக்கும் அறியும் வண்ணம் எளிமையாக சொல்லி இருப்பது நன்று.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப்பிரியன் said...

திருவடியான்!

// எனக்கு இருக்கின்ற கருத்துச் சுதந்திரம் உங்களுக்கும் இருக்கிறது, ஆனால் அது அடுத்தவரை புண்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.//
வருகைக்கும் வஜ்ராவுக்கு கொடுத்த ஆலோசனைக்கும் நன்றி!

Muse (# 5279076) said...

சுவனப்பிரியன்,

என்ன திட்டம் நாகூருக்காக வைத்திருக்கிறீர்கள்? உள்ளூர் மக்களின் உதவியுடன் எதிர்ப்பில்லாமல் அங்கு இருக்கும் தர்ஹாவை இடித்து விட்டு பெண்களுக்கான கல்விக் கூடமும் நூலகமும் வைக்க பாடுபடுங்கள். ...

தர்ஹாவை இடிக்க வேண்டும் என்று ஒரு நல்ல இஸ்லாமியராகிய தாங்கள் கூறலாமா? இறைவனின் வழிபாட்டுத்தலம் அல்லவா அது? என் நண்பர் ரமேஷ் அங்கே போய் இறையை வழிபட்டு வந்ததாகச் சொன்னபோது அவர்மேல் மரியாதையும், தர்ஹாவின் மேல் பக்தியும் எனக்கு ஏற்பட்டது. அந்த புனித ஸ்தலம் அகப்பற்றப்படவேண்டும் என்று தாங்கள் கூறுவதற்கும் நியாயமான காரணங்கள் இருக்கும். தயவுசெய்து எனக்குச் சொல்வீர்களா?

Muse (# 5279076) said...

சுவனப்பிரியன்,

என்ன திட்டம் நாகூருக்காக வைத்திருக்கிறீர்கள்? உள்ளூர் மக்களின் உதவியுடன் எதிர்ப்பில்லாமல் அங்கு இருக்கும் தர்ஹாவை இடித்து விட்டு பெண்களுக்கான கல்விக் கூடமும் நூலகமும் வைக்க பாடுபடுங்கள். ...

தர்ஹாவை இடிக்க வேண்டும் என்று ஒரு நல்ல இஸ்லாமியராகிய தாங்கள் கூறலாமா? இறைவனின் வழிபாட்டுத்தலம் அல்லவா அது? என் நண்பர் ரமேஷ் அங்கே போய் இறையை வழிபட்டு வந்ததாகச் சொன்னபோது அவர்மேல் மரியாதையும், தர்ஹாவின் மேல் பக்தியும் எனக்கு ஏற்பட்டது. அந்த புனித ஸ்தலம் அகப்பற்றப்படவேண்டும் என்று தாங்கள் கூறுவதற்கும் நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும். தயவுசெய்து எனக்குச் சொல்வீர்களா?

சுவனப்பிரியன் said...

ஆக்னர்!

//மம்மி(mummy)யின் வயது 3000 ஆண்டுகள் என்றால் உங்கள் மதத்தின் வயது என்ன?இஸ்லாம் உருவாகி 1400 ஆண்டுகள்தான் ஆகிறது.மீதம் 1600 ஆண்டுகள் இஸ்லாம் என்ன செய்துக்கொண்டுருந்தது?இன்னும் நல்லா காதுலே பூ சுத்துங்க...//

என்ன ஆக்னர். எல்.கே.ஜி கேள்விகளை எல்லாம் இப்பவந்து கேட்டுகிட்டு. ஆதாமிலிருந்து நோவா, ஆப்ரஹாம், மோஸே, ஏசு, முகமது நபி என்று அனைத்து தூதுவர்களும் போதித்தது ஒரே மார்க்கம் தான். அந்தந்த தூதர்கள் இறந்தவுடன் அவர்கள் சொன்ன கருத்துகளும் மாறிவிடும். பிறகு மக்களை நேர்வழிப் படுத்த இறைவன் வேறொரு தூதுவரை அனுப்புவான்.

இந்த குர்ஆன் முந்தய வேதங்களிலும், இப்றாகீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.
87 : 18, 19 - குர்ஆன்

முகமது நபி தனது போதனையில.....

'தூதர்கள் என்னும் நீண்ட சங்கிலித் தொடரில் எனக்குள்ள தொடர்பு ஒரு அரண்மனைக்கு ஒப்பானதாகும். அந்த அரண்மனை மிக நேர்த்தியான முறையில் கட்டப் பட்டுள்ளது. அதில் எல்லாமே பூர்த்தியடைந்து விட்டன. ஒரே ஒரு செங்கல் தான் வைக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. அந்த காலியிடத்தை நான் நிரப்பி விட்டேன். கட்டிடமும் பரி பூரணமாகி விட்டது. தூதுத்துவமும் இத்துடன் முடிவடைந்து விட்டது.'

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

சிறு பிள்ளைக்கும் விளங்கும் வகையில் முகமது நபி அழகான உதாரணத்தின் மூலம் உங்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார். நான் பதிலளிக்க அவசியமே இல்லாமல் போய் விட்டது.

// பூனை,கழுகு போன்ற மிருங்கள் கூட இப்படி செய்யப்பட்டது.இதுகூட அல்லாதான் செய்தாரா?//

இப்போது மியூஸியத்தில் பாதுகாக்கப் பட்டு வைக்கப் பட்டிருக்கும் மன்னனின் உடல் பாடம் செய்து வைக்கப் பட்ட உடல் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பிரவுன் என்ற அரசன் இறைவனால் மூழ்கடிக்கப் படுகிறான். மூழ்கடிக்கப் பட்ட உடல் கரையோரம் ஒதுங்கி பனிப் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறது. கடல் நீரினுள் உள்ள உப்பும், பனிக் கட்டிகளும் அந்த உடலை போன நூற்றாண்டு வரை கெடாமல் காத்து வந்தன. குளிர் சாதன வசதிகள் ஏற்பட்டு விட்ட இன்றைய காலத்தில் மக்களுக்கு விளக்குவதற்காக இறைவன் அந்த உடலை நாம் வாழும் காலத்தில் வெளியாக்குகிறான். இதைத்தான் நானும் விளக்கியிருக்கிறேன்.எகிப்து போனீர்கள் என்றால் அந்த உடலை நீங்களும் நேரிலேயே பார்க்கலாம்.

சுவனப்பிரியன் said...

ம்யூஸ்!

//இறைவனின் வழிபாட்டுத்தலம் அல்லவா அது?//

அது இறைவனின் வழிபாட்டுத் தலம் என்று நீங்கள் நினைத்திருப்பது முதலில் தவறு. ஷாஹீல் ஹமீது என்ற மார்க்க பெரியவர் நாகூரில் தங்கி மக்களுக்கு மத போதனை செய்து வந்தார். அவர் இறந்தவுடன் அவரின் சமாதியின் மேல் கட்டிடத்தை உண்டாக்கி அதை தர்ஹாவாக்கி விட்டார்கள். இது போல் சமாதிக்கு மேல் கட்டிடம் எழுப்புவதை முகமது நபி கடுமையாக கண்டித்திருக்கிறார். தன்னுடைய சமாதிக்கு மேலும் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது என்று இறப்பதற்து இரண்டொரு நாள் முன்பு மக்களுக்கு போதனையும் செய்தார். தன் மருமகன் அலியிடம் 'தரை மட்டத்துக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் சமாதிகளை இடித்து தரை மட்டமாக்குவாயாக' என்று கட்டளை இட்டார். அதன் படி அன்று சவூதி அரேபியாவில் இருந்த தர்ஹாக்கள் அனைத்தும் இடித்து தரை மட்டமாக்கப் பட்டன. முகமது நபியின் அடக்க ஸ்தலம் வெறும் மண்ணால்தான் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மதீனா நகர் சென்றவர்கள் இதனை நேரிலேயே பார்க்கலாம். அரபு நாடுகள் எங்கும் ஒரு தர்ஹாவைக் கூட நாம் பார்க்க முடியாது.

இந்த தர்ஹா விவகாரங்களெல்லாம் மத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் ஒரு சில புரோகிதர்களின் ஏற்பாடு. அந்த பெரியவர் அணிந்திருந்த செருப்பை ஒரு பெட்டியில் வைத்து அதை போகிறவர் தலையில் வைத்து நூறு இருநூறு என்று பணத்தை கறந்து விடுவார்கள் அங்குள்ள புரோகித அயோக்கியர்கள். முகமது நபி 'தான் வரும்போது தமக்கு மரியாதை செலுத்தும் முகமாக யாரும் எழுந்திருக்க வேண்டாம்' என்று தன் தோழர்களிடம் சொல்லியிருக்கிறார். மனிதன் தன்மானத்தோடு இருக்கவேண்டும், யாரும் யார் காலிலும் விழக் கூடாது என்றெல்லாம் உபதேசித்திருக்க இந்த மானங் கெட்ட புரோகிதர்கள் செருப்பை தலையில் வைத்து காசு பார்க்கிறார்களே இது தான் இஸ்லாமா? அங்கு நடக்கக் கூடிய பல கூத்துகளையும் வரிசையாக பட்டியலே போடலாம்.

//தர்ஹாவை இடிக்க வேண்டும் என்று ஒரு நல்ல இஸ்லாமியராகிய தாங்கள் கூறலாமா?//

நல்ல இஸ்லாமியராக இருப்பதால் தான் தர்ஹாவை இடிக்கச் சொல்லுகிறேன்.

'படைத்த இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக்் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலகீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
29 : 41 -குர்ஆன்

'இணை கற்ப்பிப்போர் படைத்த இறைவனையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிமார்களையும், ஏசுவையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளை இடப் பட்டனர். படைத்த அந்த இறைவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை.'
9 : 31 - குர்ஆன்

'படைத்த இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கின்றீர்கனோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.'
7 : 197 - குர்ஆன்

Muse (# 5279076) said...

சுவனப்பிரியன்,

தகவலுக்கு நன்றிகள். குரானிலிருந்து அழகாய் மேற்கோள் கொடுத்து விளங்க வைத்தீர்கள்.

ஆனால், அதே குரானில் இறைவனுக்கு இணைவைப்பவர்களையும் மதித்து அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு, நமது நம்பிக்கை நமக்கு என்று மற்ற நம்பிக்கையாளரையும் மதிக்கவேண்டும் என்றிருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அப்படி இருக்கும்போது நமது நம்பிக்கையிலிருந்து மாறுபடுபவர்களின் தர்ஹாவை இடிப்பதோ, அவர்கள் அங்கனம் வழிபடக்கூடாது என்று சொல்வதோ குரானுக்கு எதிராகிவிடாதா?

Muse (# 5279076) said...

சுவனப்பிரியன்,

தங்களுக்கு வேலைப்பளு அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். வழக்கமாக, தங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் தாங்கள் என்னுடைய இந்தக் கேள்விக்கும் பதிலளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் என்னிடம் உண்டு.

ஒருவேளை இதற்கு சற்று விளக்கமாக பதிலளிக்க தாங்கள் கருதியிருக்கலாம். தாங்கள் மற்ற பதிவுகளில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத்தில் கொஞ்சம் இதற்கும் ஒதுக்குங்களேன்.

இல்லாவிட்டால், அகில உலக சோம்பேறிகள் சங்கத்தின் தலைவர், செக்கரட்டரி, பொருளாளர், தொண்டர் என்கிற முறையில் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நான் உண்ணாவிரதம் இருப்பேன் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

Anonymous said...

எகிப்திய ஃபாரோவின் உடலும் இஸ்லாமிய பிரச்சாரமும்

http://arvindneela.blogspot.com/2007/06/blog-post_19.html

அரவிந்தன் நீலகண்டன் said...

Suvanapriyan Check this out on the real history - not some prophetic fantasy:
http://arvindneela.blogspot.com/2007/06/blog-post_19.html