மனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்!
'மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'
75 : 3, 4 - குர்ஆன்
அன்றைய அரபுகள் 'இறந்ததற்கு பின்பு திரும்பவும் எழுப்பப் படுவோமா? எலும்புகள் மக்கி மண்ணான பிறகு எவ்வாறு நம்மை இறைவன் உயிர்ப்பிப்பான்?' என்றெல்லாம் முகமது நபியிடம் சந்தேகத்தோடு கேட்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.
விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன?இதை விட முக்கியமான பகுதிகள்எல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் இறைவன் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?
மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.
ஏன் என்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். இதனால் தான் இன்று மேலை நாடுகளில் பேங்கிலிருந்து பணம் எடுக்க ரேகைகளை உபயோகப் படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் காவல் துறையிலிருந்து நீதி மன்றம் வரை விரல் ரேகைகளையே பயன் படுத்துகிறோம்.
ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்ப கொண்டு வந்து விடுவோம். நமக்கு மக்கிப் போன எலும்புகளை ஒன்றாக்கி திரும்பவும் உயிர்ப்பிப்பது பெரிய காரியம் அல்ல என்ற உண்மையை இறைவன் விளக்குகிறான்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
7 comments:
just an FYI
//ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். //
தவறு!
Eye Scans Becoming the Future of Identification
http://www.voanews.com/english/archive/2005-02/2005-02-18-voa68.cfm?CFID=25141118&CFTOKEN=35565780
In the blink of an eye - biometric identification
http://www.cambridgenetwork.co.uk/POOLED/ARTICLES/BF_NEWSART/VIEW.ASP?Q=BF_NEWSART_89636
http://www.google.co.in/search?hl=en&q=eye+biometric+identification&btnG=Search&meta=
மேலும் முடியில் இருந்து DNA ஆராய்சிமூலமும் பல குற்றவாளிகள் (Unique identification) கண்டறியப்பட்டுள்ளனர்.
அந்தக்காலத்தில் கைரேகை...இப்போது...கண்
இதுவும் முடிவல்ல..அறிவியலில் நாளை எது வேண்டுமானாலும் வரலாம்.
கல்வெட்டு!
//மேலும் முடியில் இருந்து DNA ஆராய்சிமூலமும் பல குற்றவாளிகள் (Unique identification) கண்டறியப்பட்டுள்ளனர்.
அந்தக்காலத்தில் கைரேகை...இப்போது...கண்
இதுவும் முடிவல்ல..அறிவியலில் நாளை எது வேண்டுமானாலும் வரலாம்.//
தங்களின் வருகைக்கும் ஆதாரங்களுக்கும் நன்றி! கண்களின் உதவி கொண்டும், முடியின் உதவி கொண்டும் குற்றவாளிகளையும் மனிதர்களையும் இனம் காண முடியும் என்ற புதிய தகவலை எனக்குத் தந்திருக்கிறீர்கள். நான் இது வரை கைரேகை மட்டும் தான் மனிதர்களை வித்தியாசப் படுத்தும் என்று நினைத்திருந்ததால் கை ரேகையை மட்டும் குறிப்பிட்டிருந்தேன்.
'மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'
75 : 3, 4 - குர்ஆன்
இங்கு இறைவன் 'மக்கிப் போன எலும்புகளை பிறகு உயிர்ப்பிப்பானா இறைவன்?' என்று கேட்டதற்கு 'எலும்புகள் என்ன? விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்' என்று மனிதர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்.விரல் நுனிகள் என்ற இந்த வார்த்தையை மேலும் எளிதாக விளக்கவே நான் மேலதிகமாக விளக்கம் கொடுத்தேன். ரேகைகள் மட்டுமல்லாது தற்போது முடிகளும், கண்களும் சேர்ந்துள்ளது என்ற தகவலைத் தந்துள்ளீர்கள்.
இதனால் நீங்கள் புதிதாக கொடுத்த தகவலுக்கும் இறைவன் கூறும் தகவலுக்கும் முரண் ஏதும் இல்லை என்றும் கூறிக் கொள்கிறேன்.
சுவனப்பிரியன் உங்கள் நம்பிக்கைகளை நான் விமர்சிக்கவில்லை.அறிவியல் வளர்ச்சி பற்றி மட்டுமே நான் கண்டதைச் சொன்னேன்.
மேலும் DNA முடியில் இருந்து மட்டுமல்ல பலவற்றில் இருந்து எடுக்கப்படலாம்.
தடய அறிவியல் துறை பல முறைகளைக் கண்டுபிடித்துக் கொண்டே உள்ளது.
நியமத்!
//assalamu alaikkum brother good article//
சாந்தியும் சமாதானமும் உங்களுக்கும் உண்டாகட்டுமாக! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கல்வெட்டு!
//சுவனப்பிரியன் உங்கள் நம்பிக்கைகளை நான் விமர்சிக்கவில்லை.அறிவியல் வளர்ச்சி பற்றி மட்டுமே நான் கண்டதைச் சொன்னேன்.//
நீங்கள் விமரிசித்ததாக நான் சொல்லவில்லை. மற்றவர்கள் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் மேலதிகமாக விளக்கினேன். மேலும் அறிவியலையும் அதன் வளர்ச்சியையும் ஊக்கப் படுத்துவதாகவே குர்ஆனில் பல வசனங்கள் வருகிறது. என் பதிவுகளிலும் தொடர்ந்து அப்படி வரும் வசனங்களை எழுதியும் வருகிறேன். நன்றி.
அதெப்படி விரல் நுனிகளுக்கு விரல் ரேகைகள் என்று விளக்கம் கொடுக்கிறீர்கள்.தமிழைப்போல விரல் நுனிகளையும் விரல் ரேகைகளையும் தனித்துக்கூறுவதற்கு அரபியில் வேறு சொற்கள் இல்லையா?நுனிகள் என்றால் ரேகையா?விளக்கம் கூறவும்?
செந்தமிழ்ச் செல்வன்!
//அதெப்படி விரல் நுனிகளுக்கு விரல் ரேகைகள் என்று விளக்கம் கொடுக்கிறீர்கள்.தமிழைப்போல விரல் நுனிகளையும் விரல் ரேகைகளையும் தனித்துக்கூறுவதற்கு அரபியில் வேறு சொற்கள் இல்லையா?நுனிகள் என்றால் ரேகையா?விளக்கம் கூறவும்?//
உடலில் எத்தனையோ பகுதிகள் இருக்க குறிப்பிட்டு 'விரல் நுனிகளையும் நாம் திரும்ப கொண்டுவந்து விடுவோம்' என்று கூறுவது விரல் நுனிகளுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது என்பதை இறைவன் விளக்குகிறான்.. அது மனிதனுக்கு மனிதன் வேறுபடக் கூடியது என்பதையும் நாம் இன்று விளங்குகிறோம் அல்லவா? எனவே தான் கையெழுத்து போட்டாலும் விரல் நுனிகளை பத்திரங்களில் பதிந்து கொள்கிறோம்.
எனவே இங்கு விரல் நுனிகள் என்று இறைவன் கூறுவது அந்த விரல் நுனியில் உள்ள ரேகைகளின் முக்கியத்துவத்தைக் கொண்டே என்பதை விளங்குகிறோம்.
Post a Comment