“Dead Sea” யும மனிதர்களின் ஓரினச் சேர்க்கையும!
ஓரினச் சேர்க்கையைப் பற்றிய குர்ஆனின் கட்டளை!
'லூத்தையும் தூதராக அனுப்பினோம். 'உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.
7 : 80 - குர்ஆன்.
'நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கின்றீர்கள்.'என்றும் கூறினார்.
7 : 81
லோத் என்ற இறைத் தூதர் அனுப்பப்பட்ட சமுதாயத்தில் தான் முதன் முதலாக ஓரினக் சேர்க்கை ஆரம்பமானது. இந்த சமுகத்து மக்களை திருத்துவதற்காகவே இந்த இறைத்தூதர் இறைவனால் அனுப்பப் பட்டார்.
'இப்றாகீமை லூத் நம்பினார்.'
29 : 26 - குர்ஆன்
இதன் மூலம் ஆப்ரஹாமின் காலமும், தூதர் லோத்துடைய காலமும் ஒன்றாக வருவதை அறிகிறோம். இரண்டு தூதர்களும் சந்தித்தும் இருக்கிறார்கள்.
நோவாவுடைய மனைவியையும், லோத்துடைய மனைவியையும் தன்னை மறுப்போருக்கு இறைவன் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் இறைவனிடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. 'இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்' என்று கூறப்பட்டது.
66 : 10 - குர்ஆன்.
இந்த வசனத்தின் மூலம் நபிமார்களின்மனைவியராக இருந்தும் தங்கள் கணவர்களின் போதனையை அந்த இரு பெண்களும் செவி மடுக்கவில்லை என்பதை அறிகிறோம். இதன் மூலம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து நபிமார்களின் மனைவியராய் இருந்தாலும் தூதர்களின் வழி நடக்கவில்லை என்றால் அவர்களும் நரகவாசிகளே என்பதை விளங்குகிறோம். இதில்குலப் பெருமையையும், குடும்ப பாரம்பரியத்தையும் காட்டி நாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்பவருக்கும் படிப்பினை உள்ளது. நல்லறங்கள் செய்யாதவர் தூதர்களின் மனைவியாய் இருந்தாலும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினை.
'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.' என்றும் கூறினார்.
'லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!'என்று அவர்கள் கூறினார்கள்.
'உங்கள் செயலை நான் வெறுப்பவனே!' என்று அவர் கூறினார்.
'என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.
26 : 165,166,167,168,169 - குர்ஆன்.
தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. 'இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்' என்றும் அந்த மக்கள் கூறினர்.
'உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'என்று அவர் கூறினார்.
'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'என்றனர்.
11 : 80,81 - குர்ஆன்.
லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.
'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்
இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் 'பஹ்ரல் மௌத்' என்று சொல்வார்கள்
இறைவனின் சாபத்திற்குள்ளான இந்த ஊர் இன்று வரை மனிதர்கள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக இருக்கிறது. இந்த கடல் பரப்பின் தண்ணீரை நீங்கள் வாயில் வைத்து ருசி பார்த்தால் உலகில் நீங்கள் இதுவரை அனுபவிக்காத உவர்ப்புத் தன்மையை உங்கள் நாக்கு உணருவதை அறியலாம். மற்ற கடல்களை விட இந்த கடல் தண்ணீர் உவர்ப்பில் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த இடத்தை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க ஆசைப்பட்டு இறங்கினால் அவர்களின் உடல் தண்ணீருக்குள் செல்லாமல் மிதப்பதை நாம் ஆச்சரியத்தோடு பார்க்க முடியும். காற்றடைத்த ட்யூப் எவ்வாறு மூழ்காமல் மிதக்கிறதோ அதே போல் நீங்களும் தண்ணீரில் மிதப்பீர்கள். மற்ற கடல்களின் நீரின் அடர்த்தியை விட பல மடங்கு உப்பின் அடர்த்தி இங்கு அதிகமிருப்பதால்தான் உங்களால் இங்கு மிதக்க முடிகிறது. இப்படி சுற்றுலாப் பயணிகள் மிதக்கும் காட்சியை கேரள நண்பர்கள் மலையாளத்தில் வெளியிட்ட 'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி யிலும் நாம் அதிசயத்தோடு பார்க்கலாம்.
'நமது பிடியைப் பற்றி அந்த மக்களை லோத் எச்சரித்தார். அந்த மக்கள் அவரின் எச்சரிக்கையை சந்தேகித்தனர்.
'அவருடைய விருந்தினரை தீய காரியத்திற்கு (ஓரினச் சேர்க்கைக்கு) அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும் எச்சரிக்கையையும் சுவையுங்கள் என்றோம்'
அதிகாலை நேரத்தில் நிலையான வேதனை அவர்களைப் பிடித்தது.
'எனது வேதனையையும் எச்சரிக்கையையும் சுவையுங்கள்' என்று கூறப்பட்டது.
'இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?'
54 : 36,37,38,39,40 - குர்ஆன்.
தன்னுடைய எச்சரிக்கையையும், வேதனையையும் மக்கள் விளங்க வேண்டும்என்பதற்காக அந்த ஊரை அத்தாட்சியாக இறைவன் விட்டு வைத்திருக்கிறான். ஆனால் நாமோ ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்ந்து திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கலாமா? என்ற விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எந்த ஒரு தவறும் மனிதனின் கண்களுக்கு அழகாகவே தெரியும். இந்த தவறுகளில் ஈடுபடும் மக்களை கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து மக்களை நேர்வழிப்படுத்த வேண்டிய அரசாங்கம் இந்த பழக்கத்தை அங்கீகரிக்கலாமா? என்று நினைப்பது எத்தகைய மடத்தனம்!
இது போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களை மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க சிகிச்சை அளிக்க முயற்ச்சிக்க வேண்டும். இதனால்ஏற்படும் பின்விளைவான எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்களைப் பற்றிய பிரச்சாரம் அவர்களை சென்று அடைய வேண்டும். ஓரினப்் புணர்ச்சி அதிகரித்தால் சமூகத்தில் நாம் காலகாலமாக கட்டிக் காத்த தந்தை, தாய், சகோதரி,சகோதரன், குழந்தைகள் போன்ற உறவுகள் எல்லாம் சிதறி சின்னாபின்னமாகி விடும் அபாயம் உள்ளது. மதங்களை எல்லாம் கடந்து இந்த கொடுமையை தடுக்க நாம் அனைவரும் முயற்ச்சிக்க வேண்டும் என்று கூறி இப்பதிவை முடிக்கிறேன்.
இணைய நண்பர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களையும், தீபாவளி வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன். இந்த நன்னாளில் இந்தியர்களிடையே பிளவை உண்டு பண்ணி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் சமூக விரோதிகளை ஒதுக்கி, சமூக நல்லிணக்கம்மலர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
19 comments:
அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்
சபிக்க பட்ட ஊர் ஜோர்டான் தான் என்பதற்க்கு ஆதார சுட்டி (அ)ஹதீஸ் தரமுடியுமா..?
//'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு...//
பெண் அடிமைக்கு இதுவும் ஒரு காரணமா? Dead Sea உருவாக புவியியல்காரணம் அனேகமானோருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன் .... (உங்களை தவிர..?)
இந்தியர்களிடையே பிளவுக்கும் இச் சட்டத்துக்கும் தொடர்பில்லை, காலத்துக்கு தேவையானது, மற்றும் அவசியமானதும் கூட..
//ஊர் இன்றும் ஜோர்டானில் // Dead Sea பலஸ்தீனா, ஈஸ்றேல் மற்றும் ஜோர்டானுக்கு எல்லையாய் இருக்கின்றது!!.
உங்களுக்கும் ஈகைத் திருநாள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்.
சுவனப் பிரியன், இறைனேசன், நல்லடியார் மற்றும் ஏனைய இஸ்லாமிய பதிவர் நண்பர்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துக்கள் !
பின்னூட்டம் இடுபவர்கள் நான்கு நாட்கள் பொறுக்க வேண்டுகிறேன். விடுமுறை கழிந்து வழக்கம் போல் சந்தித்துக் கொள்வோம்.
//இது போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களை மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க சிகிச்சை அளிக்க முயற்ச்சிக்க வேண்டும்.//
இது உங்கள் சொந்தக் கருத்தா? அப்படியெனில், மனநல மருத்துவரிடம் போகவேண்டியது அவர்கள் அல்ல. ஓரினச்சேர்க்கையை ஒரு நோய் என்ற அளவுக்குக் கற்பனை செய்யவேண்டாம் - தனிமனித விருப்பம் அது. இரண்டு பேருக்கிடையிலான வாழ்வு சம்பந்தப்பட்ட முடிவுகளில் அரசாங்கத்தின் முஷ்டியை நுழைக்கச்சொல்லும் உங்கள் கருத்துக்களுக்கும், கருச்சிதைவே தவறு என்று பெண்களின் உறுப்புக்குள் அமெரிக்க அரசாங்கத்தின் முஷ்டியை நுழைக்கமுயலும் பிற்போக்குவாதக் கிறிஸ்துவர்களின் கருத்துக்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
//இதனால்ஏற்படும் பின்விளைவான எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்களைப் பற்றிய பிரச்சாரம் அவர்களை சென்று அடைய வேண்டும்.//
ஆண் பெண்ணுக்கிடையில் நிகழும் உறவு மூலம் எய்ட்ஸ் வராதா என்ன? பாதுகாப்பற்ற உடலுறவையும் ஓரினச்சேர்க்கையையும் போட்டுக் குழப்பவேண்டாம்.
நோநோ!
//பெண் அடிமைக்கு இதுவும் ஒரு காரணமா?//
இதில் பெண் அடிமைத்தனம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.
'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைப் படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. இறைவனிடம் அவனது அருளை வேண்டுங்கள். இறைவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.'
4 : 32 - குர்ஆன்.
//Dead Sea உருவாக புவியியல்காரணம் அனேகமானோருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன் .... (உங்களை தவிர..?)//
புவியியல் காரணத்தை விளக்குங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.
//இந்தியர்களிடையே பிளவுக்கும் இச் சட்டத்துக்கும் தொடர்பில்லை,//
பதிவின் தலைப்பை ஒட்டி நான் அந்த கருத்தை சொல்லவில்லை. இரண்டு மதங்களின் பண்டிகையும் ஒரு சேர வருகிற இந்நாளில் அமைதி ஏற்படட்டும் என்ற கருத்தில் தான் சொன்னேன்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
கோவிக் கண்ணன்!
//நண்பர்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துக்கள் !//
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சின்னபுள்ள!
உங்களுக்கும் நண்பர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
நான் ஜோர்டான் நாட்டை சபிக்கப் பட்ட நாடாக சொல்லவில்லை. தூதர் லூத் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டுமே தூதராக அனுப்ப் பட்டார். சாக்கடல் அமைந்திருக்கும் குறிப்பிட்ட அந்த பிரதேசமே இறைவனின் சாபத்திற்குள்ளான பகுதி என்று அறிய முடிகிறது. இறைவனே மிக அறிந்தவன்.
சன்னாசி!
//அப்படியெனில், மனநல மருத்துவரிடம் போகவேண்டியது அவர்கள் அல்ல.//
அப்படியானால் மன நல மருத்துவரிடம் போக வேண்டியது நீங்களா? :-)
ஒரு மனிதன் பலரோடு சேர்ந்து சிரித்தும் பேசிக் கொண்டும் இருந்தால் அது இயற்கை! அதே மனிதன் தனிமையில் செல்லும் போது சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் சென்றால் அவனை எங்கு கொண்டு போய் விடுகிறோம்? அதே போல் இறைவன் (அல்லது உங்கள் பார்வையில் இயற்கை)மனிதனைப் படைத்து அவன் இன்பம் அடைவதற்கு ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் படைத்திருக்கிறான். இதனால் அந்த மனிதனுக்கு மன அமைதியும் சந்ததி பெருக்கமும் ஏற்படுகிறது. இது பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் கடை பிடித்து வரும் வழக்கம். இந்த வழக்கம் நிறுத்தப்பட்டு நம் முன்னோர்கள் ஓரினப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தால் இன்று நானும் நீங்களும் கணிணியின் முன்னால் உட்கார்ந்திருக்க மாட்டோம். மனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களினாலும் இயற்கைக்கு மாற்றமாக உறவு வைத்துக் கொள்ளும் அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்களை திருத்துவது மருத்துவர்களின், சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா?
//- தனிமனித விருப்பம் அது. இரண்டு பேருக்கிடையிலான வாழ்வு சம்பந்தப்பட்ட முடிவுகளில் அரசாங்கத்தின் முஷ்டியை நுழைக்கச்சொல்லும் உங்கள் கருத்துக்களுக்கும், கருச்சிதைவே தவறு என்று பெண்களின் உறுப்புக்குள் அமெரிக்க அரசாங்கத்தின் முஷ்டியை நுழைக்கமுயலும் பிற்போக்குவாதக் கிறிஸ்துவர்களின் கருத்துக்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.//
தவறிழைக்கும் தன் குழந்தைகளை கண்டிக்கும் பெற்றோரைப் பார்த்து 'ஏன் அவர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கிறீர்கள்?' என்று நாம் கேட்பதில்லை. கண்டிப்பதன் காரணம் தன் மக்களை நேர்வழிப் படுத்த வேண்டும் என்ற விருப்பம் தான். அதே போல் தன் மக்கள் தவறிழைக்கும் போது கண்டிக்க வேண்டியதும் ஒரு அரசின் கடமையல்லவா?
//பாதுகாப்பற்ற உடலுறவையும் ஓரினச்சேர்க்கையையும் போட்டுக் குழப்பவேண்டாம்.//
எய்ட்ஸ் உருவானதன் மூல காரணமே ஓரினச் சேர்க்கைதான். அதில் பாதிப்படைந்த ஆண் ஒரு பெண்ணோடு சேரும்போது அவளுக்கும் அந்த நோய் பரவி, மற்றவர்களுக்கும் அந்த நோயைப் பரப்பும் காரணியாகிறாள். உங்கள் வாதப்படி பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம்தான் எய்ட்ஸ் வரும். ஓரினப் புணர்ச்சியினால் வராது என்கிறீர்களா?
சன்னாசி!
//இது உங்கள் சொந்தக் கருத்தா? அப்படியெனில், மனநல மருத்துவரிடம் போகவேண்டியது அவர்கள் அல்ல. ஓரினச்சேர்க்கையை ஒரு நோய் என்ற அளவுக்குக் கற்பனை செய்யவேண்டாம் - தனிமனித விருப்பம் அது.//
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பாவம், மாபெரும் தவறு என்ற மத ரீதியான பார்வைக்கு அழுத்தம் சேர்ப்பது போல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவ உலகமும் ஓரினச் சேர்க்கை தவறானது என்று சொன்னதுடன் இது ஒரு நோய் என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக 'கிராஃப்ட் எபிங்' என்னும் செக்ஸூவாலஜிஸ்ட் 1886-ல் மருத்துவ பாட நூல் ஒன்றை எழுதினார். இதில் 'ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன் குறைபாடு) என்றும் இத்தகைய புணர்ச்சியில் ஈடுபடுவது நரம்புத் தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழுதியிருந்தார். அப்போது இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மன நோயாகவே கருதியது.
டாக்டர் நாராயண ரெட்டி
ஜீனியர் விகடன்
26-03-2006
எனவே மனநோய் என்று ஓரினச் சேர்க்கையை நான் குறிப்பிட்டது என் சொந்தக் கருத்தல்ல: அது மருத்துவர்களின் முடிவு என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
//
சன்னாசி said...
இது உங்கள் சொந்தக் கருத்தா? அப்படியெனில், மனநல மருத்துவரிடம் போகவேண்டியது அவர்கள் அல்ல. ஓரினச்சேர்க்கையை ஒரு நோய் என்ற அளவுக்குக் கற்பனை செய்யவேண்டாம் - தனிமனித விருப்பம் அது.
//
ஐயா சன்னாசி அவர்களே
விலங்குகளிடத்திலும் இன்னும் பிணத்தை கூட உறவு கொள்ளகூடியவர்கள் இருக்கிறாகள்
இதுவும் தனிமனித விருப்பமா..???
கருத்துக்களைப் பதித்த சடையப்பா, சின்னபுள்ள ஆகியோருக்கு நன்றிகள் .
//ஆனால் என்ன இதன் பிறகு அந்த 8 க்கும் 10 க்கும் இடையில் உள்ள பாதிக்கப்பட்ட ஆள் விவேக் படத்தில் வருவதுபோல் எங்களுக்கு என்று ஒரு கக்கூஸ் உண்டா?//
சடையப்பா: பொதுவில் வரையறுக்கப்பட்ட ஆண்/பெண் வரையறைகளுக்கு அப்பால் இருப்பவர்களை இப்படி 8க்கும் 10க்கும் இடையில் இருப்பவர்கள் என்று கிண்டலடிக்கிறீர்களே, 80 கோடி குல்லா போடாதவர்கள் மத்தியில், முஸ்லீம்கள் மேல் துவேஷத்தை வளர்த்துக்கொண்டு அலைபவர்கள் அனைவரும் சேர்ந்துகொண்டு குல்லா போட்டுக்கொண்டு அலையும் முஸ்லீம்கள் என்று இதேமாதிரி முஸ்லீம்களின் பழக்கவழக்கத்தையோ, அல்லேலூயாக்கள் என்று கிறிஸ்தவர்களையோ நக்கலடித்தால் என்ன சொல்வீர்கள் அப்போது? கேவலமான செயல் இல்லை அது? சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் இடமுண்டு - உங்களுக்கோ எனக்கோ உவப்பானவர்களுக்கு மட்டுமல்ல. விவேக் காமெடியையெல்லாம் இங்கே கொண்டுவருகிறீர்களே, கக்கூஸ் போவதற்கு உங்கள் பாஷையிலேயே, 8க்கும் 10க்கும் இடையில் இருந்தால் என்ன சிக்கல்? உங்களையும் என்னையும் மாதிரி முன்னமிருக்கும் துளையில் மூத்திரம் போகிறது, பின்னிருக்கும் துளையில் மலம் போகிறது - நமது கக்கூஸில் அவர்களை அனுமதிக்குமளவு பெருந்தன்மை இருந்தாலே போதுமானது.
சுவனப்பிரியன்:
//அதே போல் இறைவன் (அல்லது உங்கள் பார்வையில் இயற்கை)மனிதனைப் படைத்து அவன் இன்பம் அடைவதற்கு ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் படைத்திருக்கிறான்.//
சுவனப்பிரியன்: Parthenogenesis என்னவென்றால் என்னவென்று தேடிப் பார்க்கவும். பாலூட்டிகளில் மட்டுமே parthenogenesis சாத்தியமில்லை என்று சற்றுக் காலம் முன்பு வரை சொல்லிக்கொண்டிருந்தார்கள், சமீபத்தில் ஜப்பானில் முதன்முறையாக தந்தையற்ற parthenogenetic பாலூட்டி (எலி) யை முதலில் உருவாக்கினர். காப்பிரைட் பிரச்சினைகளால் கட்டுரையை இங்கே நேரடியாகத் தரமுடியாது, வேண்டுமானால் (Nature. 2004 Apr 22;428(6985):860-4) மேற்கொண்டு படித்துக்கொள்ளவும். Bi-parental reproduction எந்த அடிப்படையில் நடக்கிறது என்பதை அறிவியல் கேள்விக்கிடமில்லாத வகையில் நிரூபித்துள்ளது - படித்துப் பார்க்கப் பொறுமை இருந்தால் சொல்லுங்கள், மேலும் தகவல்களைத் தரமுடியும். எதிர்காலத்தில் மனிதர்களிலும் single-parental offsprings சாத்தியமாகலாம். அனுமதிக்கவேண்டுமா இல்லையா என்பது அறம் என்று ஒவ்வொருவரும் கருதிக்கொள்வது பொறுத்த விஷயம். ஏதோ முஸ்லீம் என்பதால் உங்கள் கருத்தைக் குத்திக்காட்டுகிறேன் என்று ஒற்றைப்படையாகக் கருதாமல், சகிப்புத்தன்மை என்ற தளத்தில் இதை சிந்தித்துப் பாருங்கள் - மனிதன் நேர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வையும் retrospectiveஆக கடந்தகாலத்துள் தேடமுயல்வது பிரச்னையில்தான் போய் முடியும்.
//நம் முன்னோர்கள் ஓரினப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தால் இன்று நானும் நீங்களும் கணிணியின் முன்னால் உட்கார்ந்திருக்க மாட்டோம்.//
இந்தப் பிரச்னையை எந்தத் தளத்தில் அணுகுகிறீர்களென்பது உங்களுக்குத்தான் வெளிச்சம்! ஓரினச்சேர்க்கையாளர்கள் அனைவரும் புத்தி மந்தமானவர்கள் என்பது உங்கள் கணிப்பு போல - எனக்குத் தெரிந்த, என் நண்பர்களாக இருக்கும் ஒன்றிரண்டு ஓரினச்சேர்க்கையாளர்கள் புத்திசாலித்தனத்திலும் சமூகப் பழக்கவழக்க நாகரிகத்திலும் என்னைவிட எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல - தற்கால விளக்கத் தலையணைகளான Guns, Germs and Steel, Collapseலிருந்து நீட்சே வரை பேசத்தெரிந்த என் தோழியான ஒரு பெண் உண்மையில் பார்த்தால், கணிப்பொறியில் தட்டத்தெரிந்த என்னைவிட புத்திசாலித்தனத்தில், திறமையில், பழக்கவழக்கத்தில் எத்தனையோ படிகள் மேலே இருக்கிறாள் என்பதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை! ஓரினச்சேர்க்கையாளர்கள் பி.ஹெச்.டி படிக்கிறார்கள், மருத்துவர்களாக இருக்கிறார்கள், ஓவியர்களாக இருக்கிறார்கள் - தங்களது ஒவ்வொரு சலுகையையும் போராடிப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பவர்கள் - வெறுமனே அவர்களை உடலுறவுக்கு அலையும் திருகிய புத்திகொண்டவர்கள் என்று ஒற்றைப்படையாகச் சித்திரிக்காதீர்கள். என் நோக்கம் அவர்கள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்று துதிபாடுவது அல்ல - நம்மைப்போன்றவர்களே அவர்களும் என்று குறிப்பிடுவது மட்டுமே.
சின்னபுள்ள:
//விலங்குகளிடத்திலும் இன்னும் பிணத்தை கூட உறவு கொள்ளகூடியவர்கள் இருக்கிறாகள்//
உடலுறவில் பரஸ்பர சம்மதம் என்ற ஒன்று இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறீர்கள். மிருகம் சம்மதம் என்று சொன்னது என்று சொல்லி மிருகத்தைப் புணர்பவனை அரசாங்கம் இந்திய பீனல் கோடு 377ன் படி ஜெயிலில் தூக்கிப் போடும். மேலும், மிருகங்களால் சம்மதத்தைத் தெரிவிக்க இயலாது போலவே, பிணங்களாலும் சம்மதம் தெரிவிக்க இயலாது என்றே நினைக்கிறேன் ;-), ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலோ பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையிலோ ஆணுக்கும் ஆணுக்குமிடையிலோ சம்மதமிருந்து உறவுகொள்வது தவறு எனமுடியாது - எனவே, மரத்தை உறவுகொண்டால் சரியா டிராக்டரை உறவுகொண்டால் சரியா, டவுன்பஸ்ஸை உறவுகொண்டால் சரியா என்று கேட்பதை விட்டுவிட்டு பொருத்தமாகக் கேட்டால் பதில் சொல்ல முயல்கிறேன். நன்றி.
சன்னாசி!
//80 கோடி குல்லா போடாதவர்கள் மத்தியில், முஸ்லீம்கள் மேல் துவேஷத்தை வளர்த்துக்கொண்டு அலைபவர்கள் அனைவரும் சேர்ந்துகொண்டு குல்லா போட்டுக்கொண்டு அலையும் முஸ்லீம்கள் என்று இதேமாதிரி முஸ்லீம்களின் பழக்கவழக்கத்தையோ,//
குல்லா போடுவது முஸ்லிம்களின் பழக்கம் அல்ல. அது துருக்கியர்களின் பழக்கம். முன்பு துருக்கியர்கள் உலகம் முழுவதும் ஆட்சி செய்ததால் அவர்களின் பழக்கம் முஸ்லிம்களையும் தொற்றிக் கொண்டது. குர்ஆனிலோ முகமது நபியின்வழி காட்டுதலிலோ தொப்பி ஒரு கடமையாக எங்கும் கூறப்படவில்லை. நம் பக்கத்து நாடான நேபாளிகளும் தொப்பி அணியக் கூடியவர்களே! ஒரு விளக்கத்துக்காக இதைக் குறிப்பிட்டேன்.
//கக்கூஸ் போவதற்கு உங்கள் பாஷையிலேயே, 8க்கும் 10க்கும் இடையில் இருந்தால் என்ன சிக்கல்?//
இது போன்று பாதிப்புக்குள்ளான நபர்களை வித்தியாசமாக பார்ப்பதிலும கிண்டலடிப்பதிலும் எனக்கும் உடன்பாடு இல்லை. அவர்களையும்சக மனிதர்களைப் போல் நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம். அதே நேரம் பெண்களைப் போல் ஆண்களும் ஆண்களைப் போல் பெண்களும் நடக்கும் பட்சத்தில் ஆரம்பத்திலேயே அவர்களை கண்காணித்து நேர் வழிப் படுத்த வேண்டும் என்பதில்எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
எங்கள் கிராமத்தில் ஒரு வறிய குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு இது போன்ற ஒரு பிரச்னை. அவர்கள்வீட்டில் ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காததால் பம்பாய் நகருக்கு ஓடி விட்டான். வயதுக்கு வந்த இரண்டு சகோதரிகள். கஷ்டப் பட்டு அந்த பெண்களை உறவினர்கள் நல்ல இடத்தில் திருமணம் செய்வித்தார்கள். பம்பாய் ஓடியவன் அங்கு அரவாணிகளோடு சேர்ந்து கொண்டான். விபரம் தெரிந்து யாரும் அழைக்க பம்பாய் சென்றால் நம்மவர்களைப் பார்த்து விட்டு ஓடி விடுவான். இப்படியே இருபதுவருடம் ஓடியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனாகவே திரும்பி எங்கள் ஊருக்குவந்தான். பம்பாயிலிருந்து அவன் கூடவே கொண்டு வந்தது எய்ட்ஸையும் சேர்த்துதான். அவனது சகோதரிகள் ஒரு வாரம் மருத்துவ சிகிச்சைக் கொடுத்தார்கள். நோய்முற்றி விட்டதால் ஊருக்கு வந்த ஒரு வாரத்தில் நாற்பது வயதிலேயே மரணமடைந்து விட்டான். வாழ வேண்டிய வயதில் இன்றுஅவன் நம்மிடம் இல்லை.
//இந்தப் பிரச்னையை எந்தத் தளத்தில் அணுகுகிறீர்களென்பது உங்களுக்குத்தான் வெளிச்சம்! ஓரினச்சேர்க்கையாளர்கள் அனைவரும் புத்தி மந்தமானவர்கள் என்பது உங்கள் கணிப்பு போல -//
நான் சொல்ல வந்ததை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம் முன்னோர்கள் ஓரினப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தால் நீங்களும் நானும் உருவாகாமல் போயிருப்போம். அதாவது இனப்பெருக்கம் தடைபட்டுப் போயிருக்கும் என்று சொல்ல வந்தேன்.
வாய்ப்பு கிடைக்கும் போது தவறிழைக்க மனித மனம் தூண்டும். அந்த வாய்ப்புகளின் வாசல்களை அடைத்துவிட்டால் மனித மனம் இது போன்ற இயற்க்கைக்கு மாற்றமான தவறுகளை நாடாது. நூறு கொலை செய்தவன் கூட அந்த கொலைகளை நியாயப்படுத்தி பேச முடியும். எனவே தனி மனித சுதந்திரத்தை விட அந்த தனி மனிதனால் சமூக பாதிப்பு ஏற்படாது தடுக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
கலக்கறீங்க சுவனப்பிரியன்... தொடர்க உமது பணி... Keep it up...
சன்னாசி அவர்(ள்)களுக்கு... அப்படி என்னத்தங்க கண்டுட்டீங்க நீங்க பெண்ணிடம் இல்லாததை ஆண்களிடம் (அல்லது ஆணிடம் இல்லாத்தை பெண்களிடம்) ... கொஞ்சம் விளக்குங்களேன்...
I wish not concur on it. I think polite post. Particularly the title-deed attracted me to review the whole story.
Good dispatch and this enter helped me alot in my college assignement. Thank you for your information.
Brim over I acquiesce in but I contemplate the collection should secure more info then it has.
Post a Comment