Followers

Tuesday, October 31, 2006

துருக்கியில் இன்றும் பாதுகாக்கப்படும் நோவாவின் கப்பல்!

துருக்கியில் இன்றும் பாதுகாக்கப்படும் நோவாவின் கப்பல்!

இறைத் தூதர் நோவாவின் வரலாறு!

இறைவன் ஆதமிலிருந்து முகமது நபி வரை பல தூதர்களை மனிதர்களுக்கு வழி காட்டியாக அவ்வப்போது உலகுக்கு அனுப்பி வைத்தான். இது பற்றி குர்ஆன் கூறும்போது...

'நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த தூதர்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே! உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'
4 : 163 - குர்ஆன்

எல்லாத் தூதர்களைப் போலவே இவருக்கும் அவருடைய சமுதாயத்தவர் பல துன்பங்களைக் கொடுத்தனர்.

'நோவாவை அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே இறைவனை வணங்குங்கள். உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்க்குரியவன் வேறு யாருமில்லை. மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்.' என்று அவர் கூறினார்.
7 : 59
'நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழி கேட்டிலேயே காண்கிறோம்' என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர்.
7 : 60

'அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்றஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப் பட்டதுமில்லை.' என்றனர்.
'இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்.' என்றனர்.
23 : 24, 25 - குர்ஆன்

'என் சமுதாயமே! என்னிடம் எந்த வழி கேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்' என்று அவர் கூறினார்.
7 : 61
'என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை இறைவனிடமிருந்து அறிகிறேன்.'
7 : 62
'நீங்கள் இறைவனை அஞ்சவும் உங்களுக்கு அருள் செய்யப் படவும் உங்களை எச்சரிப்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?' என்றும் கூறினார்.
7 : 63

மேற் கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் அந்த மக்கள் நோவாவை நிராகரித்தது நமக்கு விளங்குகிறது.

நோவாவுடைய மனைவியையும், லோத்துடைய மனைவியையும் தன்னை மறுப்போருக்கு இறைவன் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் இறைவனிடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. 'இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்' என்று கூறப்பட்டது.
66 : 10 - குர்ஆன்.

இந்த வசனத்தின் மூலம் நபிமார்களின்மனைவியராக இருந்தும் தங்கள் கணவர்களின் போதனையை அந்த இரு பெண்களும் செவி மடுக்கவில்லை என்பதை அறிகிறோம். இதன் மூலம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து நபிமார்களின் மனைவியராய் இருந்தாலும் தூதர்களின் வழி நடக்கவில்லை என்றால் அவர்களும் நரகவாசிகளே என்பதை விளங்குகிறோம். இதில்குலப் பெருமையையும், குடும்ப பாரம்பரியத்தையும் காட்டி நாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்பவருக்கும் படிப்பினை உள்ளது. நல்லறங்கள் செய்யாதவர் தூதர்களின் மனைவியாய் இருந்தாலும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினை.

'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர். அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்' என்று அவர்கள் கூறினர்.
'அல்லாஹ் நாடினால் அவன்தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் அவனை வெல்ல முடியாது.' என்று அவர் கூறினார்
11 : 32,33 - குர்ஆன்.

அந்த மக்களே வரம்பு மீறி நோவாவிடம் 'இறைவனின் தண்டனையைக் கொண்டு வாரும்' என்றனர். எனவே 'இனி இந்த மக்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள்அழியும் நேரம் வந்து விட்டது என்று நோவாவிடம் கூறிய இறைவன் நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு கப்பலை தயார்படுத்த சொன்னான்.

'அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். 'நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்.' என்று அவர் கூறினார்.
11 : 38 - குர்ஆன்
'இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.' என்றும் கூறினார்.
11 : 39 - குர்ஆன்.

இறைவனின் வேதனை அந்த மக்களை சூழும் நேரமும் வந்தது.

'நமது கட்டளை வந்து தண்ணீர் பொங்கிய போது ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும் உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும் நம்பிக்கைக் கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்..'
11 : 40 - குர்ஆன்

இறைத் தூதர் நோவா மிகப் பெரிய கப்பலை செய்து அதில் அனைத்து ஜீவராசிகளில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியை இறைவனின் கட்டளைக்கொப்ப ஏற்றிக் கொண்டார். தன்னை நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களையும் அந்த கப்பலில்ஏற்றிக் கொண்டார். தன்னுடைய மகனையும் நம்பிக்கை கொள்ளுமாறும், கப்பலில் ஏறிக் கொள்ளும்படியும் உபதேசித்தார். அவனோ 'இறைவனின் கோபம் என்னை ஒன்றும் செய்யாது. நான் மலையின் மீது ஏறி தப்பித்துக் கொள்வேன்' என்று இறுமாப்போடு சொன்னான்.

'மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள். ஏக இறைவனை மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார்.
11 : 42 - குர்ஆன்

'ஒரு மலையின் மீது ஏறிக் கொள்வேன். அது என்னை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'இறைவன் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை.' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப் பட்டோரில் ஆகி விட்டான்.
11 : 43 - குர்ஆன்

ஒரு தூதரின் மகனாக இருந்தும் தன் தந்தையை இறைத் தூதர என விசுவாசம் கொள்ளாததால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விட்டான். குடும்ப பாரம்பரியத்தால் நான் சிறந்தவன் என்று சொல்லித் திரிபவர்களுக்கு பாடமாக மேற்கண்ட இறை வசனம் அமைந்துள்ளது.

'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞசிக் கொள். வானமே நீ நிறுத்து!' என்று கூறினோம். தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலையின் மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமானோர் எனவும் கூறப்பட்டது.
11 : 44

இந்த வெள்ளப் பிரளயமானது அதிகரித்து தண்ணீரின் அளவு மலைகளின் உயரத்திற்கு சென்றது. நோவா செய்த கப்பலும் தண்ணீரின் ஓட்டத்தோடு சென்று மலையின் மேல் நிலை கொண்டது.

இந்த மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் பதினாறாயிரம் அடியாகும். இதை அகிலத்தாருக்கு அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுகிறான்.

'நோவாவையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்கு சான்றாக்கினோம்.'
29 : 15 - குர்ஆன்.

இந்த வசனத்தின் மூலம் நோவாவின் கப்பல் இன்று வரைஅம்மலை மீது உள்ளது நமக்கு தெளிவாகிறது. இந்த மலை பனிப் பாறைகளால் அதிகம் சூழப் பட்டுள்ளது. தற்போது பூமியில் வெப்பம் அதிகரிப்பதால் வருங்காலத்தில் ஜூதி மலையின் மேல் படர்ந்திருக்கும் பனிப் பாறைகள் உருக ஆரம்பிக்கும். அந்த நாளில் இறைத் தூதர் நோவாவின் கப்பல் உலக மக்களின் பார்வைக்கு வரும். அப்படி கப்பல் வெளிப்படும் பட்சத்தில் அதனுள் நமக்கு பல்வேறு விபரங்கள் கிடைக்க சாத்தியம் உண்டு. அந்த கால மக்களின் வணக்கங்கள். நோவாவுக்கு அருளப்பட்ட வேதத்தின் உண்மை நிலை நமக்கு தெரிய வரலாம். அதே போல் தற்போது சர்ச்சையாகி இருக்கும் இந்துக்களின் வேதமான ரிக்,யஜூர்,சாம, அதர்வண வேதங்களின் உண்மை நிலை வரலாறு போன்றவை தெரிய வாய்ப்பிருக்கிறது. இதன் உண்மைகளை இறைவனே அறிவான்.

இந்த குர்ஆன் இறைவனின் வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

'முஹம்மதே! இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைபிடிப்பீராக! நம்மை அஞ்சுவோருக்கே நல்ல முடிவு உண்டு.'
11 : 49 - குர்ஆன்.

இது போன்ற செய்திகள் அன்றைய அரபு மக்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை காலமாகியும் இவை எல்லாம் நமக்கு புதிய செய்திகளாகவே தெரிகிறது. மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்? என்ற கேள்வி வருகிறதல்லவா?

குர்ஆன் இறை வேதம்தான். அது முகமது நபியின் வார்த்தை அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

25 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

பாக்டீரியாவிலயும் ஜோடியாத்தான் ஏத்துனாருங்களா?

கீழை முரசு said...
This comment has been removed by a blog administrator.
அரவிந்தன் நீலகண்டன் said...

மெசபடோமியா பிரதேசத்துடன் அன்றைய அராபிய பிரதேசத்திற்கு நல்ல தொடர்பிருந்தது, வியாபார தொடர்பும் இருந்தது. இந்த ஊழிக்கதை அராபியருக்கு தெரிந்திருக்கவே செய்தது. மேலும் தமது புனித வரலாற்றில் இத்தொன்மத்தை இணைத்துக்கொண்ட யூத மக்களும் அங்கு வாழ்ந்தனர். எனவே "இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை." என குரான் கூறியிருப்பது வெள்ள ஊழிக் காதையாக இருக்கும் பட்சத்தில் குரானில் தகவல் பிழை உள்ளதென்றே கருதவேண்டும். துருக்கியில் உள்ள மலையில் நோவாவின் பேழை ஒதுங்கியது என்பதும் ஆதாரமற்றதாகும். இது குறித்து பல மோசடிகள் வெளியாகியுள்ளன. ஊழி என்பதே சுமேரிய பிரதேசத்தில் நிகழ்ந்த வட்டார நிகழ்வாக இருக்கலாம். இதுவே பின்னாளில் தொன்மமாக உரு பெற்றிருக்கலாம் எனக் கருதுகிறார் ஐசாக் அஸிமாவ்.சுமேரிய தொன்மங்களுக்கும் விவிலிய பிரளய விவரணத்துக்கும் இருக்கும் இணைத்தன்மைகளை சுட்டிக்காட்டுகிறார் அஸிமாவ். பொதுவாக இந்த சுமேரிய பிரளயம் ஏற்பட்டதாக கருதப்படும் காலமான கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்தைய மூவாயிரத்தை (கிமு 3000-2700) ஒட்டிய எகிப்திய பதிவுகள் எதுவுமே இந்த பிரளயத்தைக் குறித்து கூறாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்திய வேத இலக்கியங்களில் உலகழிக்கும் பெரு ஊழி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. வேதத்தில் இல்லாததால் பொய் என்று சொல்ல வரவில்லை. மாறாக உலகளாவிய
அழிவென்றால் அது வேதத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவை குறித்த குறிப்பெதுவும் இல்லை என்பது உலகளாவிய ஊழி என்பது தொன்ம பெரிதுபடுத்தலே ஆகும்.
பிற்கால புராணங்களிலேயே உள்ளது. இதிகாசங்களில் துவாரகை அழிவு குறித்து குறிப்பு வருகிறது. அதுவும் கடல்கோள் என்பதாக இருக்கிறது. அதுவும் முழு உலகு சார்ந்த அழிவு
இல்லை. ஆக, நோவா, யுத்னபிஷ்டிம், மனு போன்ற கதாபாத்திரங்கள் தொடர்புடைய பெருஊழி என்பது தொன்ம உருவாக்கம் மற்றும் அதன் விரிவடைதலே ஆகும். 'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞசிக் கொள். வானமே நீ நிறுத்து!' என்று கூறினோம். தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலையின் மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமானோர் எனவும் கூறப்பட்டது. குரான் 11 : 44
மேற்கூறிய பதிவில் ஜுதி மலை துருக்கியில் உள்ள மலைத்தொடராக கூறப்பட்டுள்ளது. ஆனால் விக்கிபீடியா பதிவு முக்கிய விஷயங்களைக் கோடிட்டு காட்டுகிறது:
"ஜூதி மலைக்கு துருக்கியில் குடி-தாக்(Cudi-Dagh) என பெயர். இதற்கு துருக்கியில் 'மிக உயர்ந்த' அல்லது 'உயரங்கள்' என அராபியில் பொருள். கிழக்கு துருக்கியில் பல மக்களும் சில இஸ்லாமிய அறிஞர்களும் இதுவே அராரத் என கருதுகின்றனர். ஆனால் குடி-தாக் வான் ஏரிக்கு தெற்கே அமைந்துள்ளது. அதன் உயரம் 7700 அடி ஆகும். உள்ளூர் வாசிகள் இம்மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்துக்கு நோவாவின் பேழை மிதந்து சென்றது என கருதுகின்றனர். ...ஜுதி என்றும் ஒரு மலை உள்ளது. அராரத் என்றும் ஒரு மலை உள்ளது. இரண்டுமே விவிலிய விவரணத்தில் வரும் அராரத் (உரர்து) பகுதியில் அமைந்துள்ளன. பைபிளும் குரானும் ஒரே குரலில் பேழை வந்தமர்ந்த இடத்தைக் குறித்து பேசுவது சாத்தியமே. அராரத் மலையும் ஜுதி மலையும் ஒரே மலைதானா? சிலர் இவ்விரு பெயர்களையும் ஒன்று போல மாற்றி மாற்றி பயன்படுத்துவதை காணலாம்."
முகமதுவின் காலத்திற்கு முன்னரே அராரத் மலைத்தொடரும் நோவாவின் பேழையும் இணைத்து பேசப் பட்டுவிட்டன. சிரியா ஈராக் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் உள்ள ஜுதி மலைத்தொடர் அராபியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்க வழியில்லை. அத்துடன் ஏற்கனவே யூதேய-கிறிஸ்தவ வழக்காடல்களில் அராரட் மலையில் நோவாவின் பேழை குறித்து அறிந்தவராகவே முகமதுவும் இருந்திருப்பார். வலைப்பதிவு பின்வருமாறு வியப்படைகிறது.
மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்? என வியப்படைகிறது. ஆனால் வரைப்படத்தை பார்த்தால் இந்த வியப்பு அவசியமற்றதென்று புரியும்.
http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/mesopotamia.gif
இன்றைய துருக்கியின் சிரியா ஈராக் அருகேயுள்ள பகுதியில் மெசபடோ மிய நாகரிகத்தொட்டில் பிரதேசத்தின் அருகிலேயே இந்த பெரு வெள்ள ஊழி தொன்மத்தொடர்பான நில அமைப்புகள் அமைந்திருக்கின்றன என்பதனைக் காணலாம். இதில் விசேஷ இறைசெய்தி இறக்கம் எதுவும் தேவையில்லை. வட்டார கதைகளின் பரவுதலே போதுமானது. வானவர் கபிரியேல் தேவையில்லை சாதாரண மானுடத்தின் கதை சொல்லும் திறனே போதுமானது.இன்னமும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த ஜூதி என்கிற பெயரில் தெற்கரேபியாவில் ஒரு மலை இருப்பதுதான். துருக்கியில் இருக்கும் ஜூதி மலைக்கு 200 ஆண்டுகளாகவே அந்த பெயர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இஸ்லாமியர் வருவதற்கு முன்னரே கிறிஸ்தவ மடாலயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது (பார்க்க: http://www.islamonline.net/english/Science/2002/10/article07.shtml)
இம்மலைத்தொடரில் அவ்வப்போது ஏதாவது ஒரு சிகரத்தில் நோவாவின் பேழை அகப்பட்டதாக புரளி கிளம்புவதும் பின்னர் அது தவறு என நிரூபிக்கப்படுவதும் ஏறத்தாழ வழக்கமான நிகழ்வாயிற்று. வலைப்பதிவு குறிப்பிடும் மலை சிகரம் குறித்து (17,000 அடி ஏறத்தாழ 5,200 மீட்டர்கள்) நேஷனல் ஜியாகிராபிக் அண்மையில் சில தகவல்களை வெளிக்கொணர்ந்தது. அச்சிகரத்தில் பேழை இருப்பதாக 1989 இல் தன்னந்தனியாக இச்சிகரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்ட அகமது அலி அர்ஸ்லான் பேழைக்கு 200 அடி தூரத்தில் தான் சென்றதாகவும் அதனை புகைப்படம் எடுத்ததாகவும் கூறுகிறார். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மையை சந்தேகிக்கின்றனர். ஒரு பேழை குறித்து ஆராய்ச்சி செய்பவர் கூறுகிறார்: 'அகமது பெரிய வாய் சவடால் காரர் ஒரு சமயம் தன்னிடம் நோவாவின் பேழையின் 3000 புகைப்படங்கள் இருப்பதாகவும் திடீரென 5000 புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறுவார்' இந்த தேடலை இயக்குகிற மெக்கிவன் 2003 இல் ஏற்பட்ட வெப்பமேற்றத்தினால் பனி உருகியதால் கிடைத்த சில செயற்கைகோள் புகைப்படங்களை இதற்கு ஆதாரமாக கூறுகிறார். ஆனால் இந்த படங்களின் அடிப்படையில் தேடுவது அத்தனை புத்திசாலித்தனமானது அல்ல என்றே தோன்றுகிறது. "இதெல்லாம் வெறும் நம்பிக்கை அவ்வளவுதான்" என்கிறார் லாரன்ஸ் காலின்ஸ். கலிபோர்னிய பல்கலைக்கழக ஓய்வுபெற்ற நிலவியல் பேராசிரியரும் நிலவியல் புகைப்பட ஆராய்ச்சியாளருமான இவர் இவ்வாறு மனிதரால் உருவாக்கப்பட்டதாக தோன்றுகிற ரீதியில் புகைப்படம் எடுக்கப்பட்டவை அருகில் சென்று பார்க்கையில் அவ்வாறில்லதாதாகிவிடும் என சுட்டிக்காட்டுகிறார்.பொதுவாக நிலவியலாளர்கள்15000 அடி உயரத்தில் கப்பல் நிற்பதெல்லாம் இயலாத காரியம் என்றே கருதுகின்றனர். (நேஷனல் ஜியாகிராபிக் செய்தி செப்டம்பர், 2004)
http://news.nationalgeographic.com/news/2004/09/0920_040920_noahs_ark.html
இதற்கிடையே 2005 இல் காஸ்மோபோஸிக் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த அறிவியலாளர்கள் இந்த 'நோவா பேழை'யும் இயற்கை உருவாக்கமே என்பதனை அறிவித்துள்ளனர். (http://www.mosnews.com/news/2005/03/25/ararat.shtml)

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//பாக்டீரியாவிலயும் ஜோடியாத்தான் ஏத்துனாருங்களா?//

இந்த வெள்ளப் பிரளயம் என்பது நோவாவை நம்பாமல் இறைவன் விஷயத்தில் தர்க்கம் செய்ததனால் அந்த மக்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. நோவாவின் காலத்தில் அந்த மக்கள் பயன்படுத்திய கால்நடைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியை கப்பலில் ஏற்றிக் கொள்ளுமாறு இறைவன் பணிக்கிறான். அந்த காலத்து மக்கள் ஒரு செல் உயிரியான பாக்டீரியாக்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தற்கால கண்டு பிடிப்புகளான இந்த நுண்ணுயிரிகளின் தேவையும் அந்த மக்களுக்கு இருந்திருக்கவில்லை.

அடுத்து கடல் வாழ் உயிரினங்கள், நீரிலேயே எந்நேரமும் உயிர் வாழும் பாக்டீரியாக்கள் போன்றவை வெள்ளப் பிரளயத்தினால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகப் போவதில்லை. எனவே அவற்றை காப்பாற்ற வேண்டிய அவசியமும் அந்த மக்களுக்கு இருக்க வில்லை.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

சடையப்பா!

//இதில் நீர் அறிந்திருககவில்லை என்று மட்டும் இறைவன் கூறவில்லை மாறாக உமது சமுதாயத்தவரும் இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை என்று கூறுகின்றான்.//

தொடர்ந்து கருத்துக்களைச் சொல்லி வரும் சடையப்பாவுக்கு நன்றிகள்.

அரவிந்தன் நீலகண்டன் said...

//தற்கால கண்டு பிடிப்புகளான இந்த நுண்ணுயிரிகளின் தேவையும் அந்த மக்களுக்கு இருந்திருக்கவில்லை.// அதாவது அந்த காலத்து மனுசங்க தயிர் மோரெல்லாம் பயன்படுத்தலைங்களா? அப்படி பயன்படுத்தின நுண்ணுயிரியெல்லாம் கால்நடைங்களை கொன்ன மாதிரி கொன்னாருங்களா அல்லா? கொஞ்சூண்டு பாலை உரை ஊத்தி எடுத்துக்கிட்டாருங்களா நோவா? அதையும் ஜோடியா எடுத்துக்கிட்டாரா? இந்த பூச்சி புழுவெல்லாம் தலைவர் எடுத்துட்டாரா இல்லையா?

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள சுவனப்பிரியன்,

இதெல்லாம் ஏற்கனவே தூக்கியெறியப்பட்டுவிட்ட சில நூற்றாண்டுகள் பழமையான வாதங்கள். தொன்மங்களின் நேரடி வியாக்கியானங்கள் தவறானவை. மதங்கள் உயிரினங்களைப் போலவே பரிணமிப்பவைதாம். சமுதாய சூழலும் தனிமனித அழுத்தங்களும் தேடலும் கிடைத்த ஆன்மிக அனுபவங்களும் இணைந்து உருவானதே குரான். அந்த காலத்து அறிவின் ஆக்கத்துக்கு அப்பால் குரான் புறபிரபஞ்சம் குறித்து எதுவும் கூறிவிடவில்லை. இல்லை எனக்கூறி ஆயிரம் வியாக்கியானங்களை நீங்கள் முன்வைக்கலாம். ஏழு வானங்களை வளிமண்டல அடுக்குகள் என்றுகூட கூறப்பார்க்கலாம். அல்லது கருவின் வளர்ச்சி குறித்து ஆயிரம் முறை தவறென் நிரூபிக்கப்பட்ட விவகாரத்தை மூரின் முறுக்கோடு கூறலாம். சவுதி பிரச்சார இயந்திரத்தின் பணபலத்தின் பகட்டுக்கு அப்பால் இந்த பிரச்சாரத்தில் உண்மை இல்லை என்பது சிறிதே நீங்கள் சிந்தித்தால் உங்களுக்கே விளங்கும். யூதர்களை பாருங்கள். இஸ்ரேலில்தான் இன்றைக்கு நாம் பொறாமை படும்படியாக புவியில் உயிரினங்களின் பரிணாமம் குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். மோசஸ் எகிப்திலிருந்து தப்புவித்ததற்கு வரலாற்று ஆதாரமில்லை எனவும் அதனை அக-உருவகமாக எடுக்கவேண்டும் எனவும் ஒரு ரபாயே பிரசங்கம் செய்கிறார். உங்கள் சமுதாயத்திலும் இத்தகைய சிந்தனையாளர்கள் இல்லாமலில்லை. ஆனால் வேதத்திலிருந்து வாசகங்களைப் பிடுங்கி தவறாக மொழிபெயர்த்து திருகல் வேலை செய்து அதனை குரானுக்கு சான்றாக்கும் வேலைகள் நேர்மையானவை அல்ல. அவை நமது பகுத்தறிவின் மீது நாமே துப்புவது போல. நான் கூறியவற்றை சிறிதே நிதானமாக சிந்தியுங்கள்.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//தமது புனித வரலாற்றில் இத்தொன்மத்தை இணைத்துக்கொண்ட யூத மக்களும் அங்கு வாழ்ந்தனர். எனவே "இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை." என குரான் கூறியிருப்பது வெள்ள ஊழிக் காதையாக இருக்கும் பட்சத்தில் குரானில் தகவல் பிழை உள்ளதென்றே கருதவேண்டும்.//

//இந்திய வேத இலக்கியங்களில் உலகழிக்கும் பெரு ஊழி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. வேதத்தில் இல்லாததால் பொய் என்று சொல்ல வரவில்லை. மாறாக உலகளாவிய
அழிவென்றால் அது வேதத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவை குறித்த குறிப்பெதுவும் இல்லை என்பது உலகளாவிய ஊழி என்பது தொன்ம பெரிதுபடுத்தலே ஆகும்.
பிற்கால புராணங்களிலேயே உள்ளது.//

The Biblical description of the flood in Genesis chapter 6, 7 and 8 indicates that the deluge was universal and it destroyed every living thing on earth, except those present with Noah (pbuh) in the ark. The description suggests that the event took place 1656 years after the creation of Adam (pbuh) or 292 years before the birth of Abraham, at a time when Noah (pbuh) was 600 years old. Thus the flood may have occurred in the 21st or 22nd Century B.C.
This story of the flood, as given in the Bible, contradicts scientific evidence from archaelogical sources which indicate that the eleventh dynasty in Egypt and the third dynasty in Babylonia were in existence without any break in civilisation and in a manner totally unaffected by any major calamity which may have occurred in the 21st century B.C. This contradicts the Biblical story that the whole world had been immersed in the flood water. In contrast to this, the Qur’anic presentation of the story of Noah and the flood does not conflict with scientific evidence or archaeological data; firstly, the Qur’an does not indicate any specific date or year of the occurance of that event, and secondly, according to the Qur’an the flood was not a universal phenomenon which destroyed complete life on earth. In fact the Qur’an specifically mentions that the flood was a localised event only involving the people of Noah.
It is illogical to assume that Prophet Muhummad (pbuh) had borrowed the story of the flood from the Bible and corrected the mistakes before mentioning it in the Qur’an.
IRF.Net –Thanks Mr Zakhir Naik

இந்த பெரு வெள்ளம் என்பது உலகம் முழுவதும் என்றுதான் இதற்கு முந்தய வேதங்கள் கூறுகின்றன. குர்ஆன் நோவாவின் குறிப்பிட்ட அந்த சமுதாயத்திற்கு மட்டுமே வெள்ளப்பிரளம் ஏற்பட்டதாக கூறுகிறது. முந்தய வேதங்களைப் பார்த்து முகமது நபி குர்ஆனை உருவாக்கியிருந்தால் பைபிளில் ஏற்பட்ட தவறு குர்ஆனிலும் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உலகம் முழுவதும் இந்த ஜலப்பிரளயம் ஏற்பட்டதாக குர்ஆனில் எந்த குறிப்பும் இல்லை. குர்ஆன் கூறும் தகவலே இன்றைய வரலாற்று கண்டுபிடிப்புகளோடு மோதாமலும் இருக்கிறது. இது இறைவேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

அடுத்து அன்றைய அரபு மக்கள் இந்த வரலாற்று உண்மைகளையும் ஜீதி மலையில் இந்த கப்பல் இன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தையும் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகளை நீங்கள் தர வேண்டும். 'அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், யூதர்கள் வேதத்திலும் இருந்திருக்கலாம்' என்ற அனுமானங்களெல்லாம் வாதமாகாது.

//இதில் விசேஷ இறைசெய்தி இறக்கம் எதுவும் தேவையில்லை. வட்டார கதைகளின் பரவுதலே போதுமானது. வானவர் கபிரியேல் தேவையில்லை சாதாரண மானுடத்தின் கதை சொல்லும் திறனே போதுமானது.//

கதை சொல்வதில் எவ்வளவுதான் திறமையாளராக ஒருவர்இருந்தாலும் எங்காவது ஒரு இடத்தில் நிச்சயமாக உளறி இருப்பார். நான் இங்கு முகமதுநபி இறைத்தூதர்தான் என்று சொல்ல வருவது நோவாவின் ஜலப்பிரளயத்தை மட்டும் வைத்து அன்று. இது போன்று பல நூறு அறிவியல் உண்மைகள், வரலாற்றுச் சான்றுகள் (எகிபதிய மன்னன் பரோவா(பிரவுன்) உடல இன்றும் பாதுகாகக்ப்படுவது போன்ற)என்று எண்ணற்ற சான்றுகளை என்னால் காட்ட முடியும். பல பதிவுகளில் ஒவ்வொன்றாக விளக்கியும் இருக்கிறேன். இவை அனைத்தும் எழுதப் படிக்கத் தெரியாத சமூகத்தில் தோன்றிய முகமது நபிக்கு எவ்வாறு சொல்ல முடியும் என்ற கேள்விக்கு உங்களின் பதில் என்ன?

//நிலவியலாளர்கள்15000 அடி உயரத்தில் கப்பல் நிற்பதெல்லாம் இயலாத காரியம் என்றே கருதுகின்றனர்.//

உங்களுக்கும் எனக்கும் இயலாத காரியம். உங்களையும் என்னையும் படைத்த இறைவனுக்கு இது ஒன்றும் இயலாத காரியம் அல்ல. இத்தனை அடி உயரத்தில் நிறுத்தியிருக்கிறேன் என்றெல்லாம் இறைவன் குறிப்பிடவில்லை. இந்த பனிமலை உருகும் நாளில் இதற்கான பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அது வரை நாமும் பொறுப்போமே!

suvanappiriyan said...

அசலமோன்!

//அழகு பட உள்குத்து விட்டு இருக்கிறோம் என்ற மதப்பில் இருக்கிறார் நீலம்கண்டவர். அவருக்கு அவரே சந்தோஷப்பட்டால் சரி.//

அவர் உள் குத்து விட்டாலும் வெளிக் குத்து விட்டாலும் நம்மிடம் குர்ஆனும், முகமது நபியின் வழிகாட்டலும் இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

நாரத மகரிஷி!

//இந்த பதிவைப் படித்துப் புல்லரிக்கும் பேதைகள் உண்மையையும் தெரிந்து கொள்ளலாமே..

நாராயண, நாராயண!//

நாங்கள் உண்மையை தெளிவாக விளங்கியே இருக்கிறோம். இன்றைய அறிவியலோடு ஒத்துப் போகும் மார்க்கத்தையே நாங்கள் பெற்றுள்ளோம். பேதமையோடு கண்மூடித்தனமாக மதத்தை பின் பற்றுவது யார் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

நர்மினா!

//நீலகன்டா, …………..ஏத்தினங்களான்னு கேட்களியோ?//

சகோதரரே! அரவிந்தன் நீலகண்டன் எந்த சாதியாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அவர் வைக்கும் வாதங்களுக்கு அழகிய முறையில் பதில் சொல்வோம். எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

'விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீர்களாக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்: அவன் நேர் வழிப் பெற்றோரையும் அறிந்தவன்.'
16 : 125 - குர்ஆன்

suvanappiriyan said...

சடையப்பா!

//கணணுக்கு தெறிகின்ற மேற்சொன்னவற்றை மட்டுமே எடுத்துச் செல்கிறோம்.அதை விடுத்து இந்த பாக்டீரியாவை எங்கு வைததோம், அந்த பாக்டீரியாவை எங்கு வைத்தோம் என்றா தேடுகிறோம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அரவிந்தன் நீலகண்டன் said...

//கதை சொல்வதில் எவ்வளவுதான் திறமையாளராக ஒருவர்இருந்தாலும் எங்காவது ஒரு இடத்தில் நிச்சயமாக உளறி இருப்பார்.////நிலவியலாளர்கள்15000 அடி உயரத்தில் கப்பல் நிற்பதெல்லாம் இயலாத காரியம் என்றே கருதுகின்றனர்.// உங்களுக்கும் எனக்கும் இயலாத காரியம். உங்களையும் என்னையும் படைத்த இறைவனுக்கு இது ஒன்றும் இயலாத காரியம் அல்ல. இத்தனை அடி உயரத்தில் நிறுத்தியிருக்கிறேன் என்றெல்லாம் இறைவன் குறிப்பிடவில்லை. இந்த பனிமலை உருகும் நாளில் இதற்கான பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அது வரை நாமும் பொறுப்போமே!//

15000 அடி என்று குரான் கூறவில்லை என்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுதியதுதான் இது: "இந்த வெள்ளப் பிரளயமானது அதிகரித்து தண்ணீரின் அளவு மலைகளின் உயரத்திற்கு சென்றது. நோவா செய்த கப்பலும் தண்ணீரின் ஓட்டத்தோடு சென்று மலையின் மேல் நிலை கொண்டது. இந்த மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் பதினாறாயிரம் அடியாகும். இதை அகிலத்தாருக்கு அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுகிறான்."

ஜாகீர் நாயக்கின் லாஜிக் என்னவாக இருக்கிறது என பாருங்கள்: குரான் காலத்தைக் குறிப்பிடவில்லை என்பதால், வெளிப்படையாக ஊழி பிராந்திய ஊழியா அல்லது உலக ஊழியாக என கூறவில்லை என்பதால் குரானின் ஊழி அறிவுப்பூர்வமானது என்கிறார். இது தவறான வாதம். நோவாவின் காலம் குறித்து கூட குரானில் கூறப்படவில்லை. ஆனால் அவர் ஆயிரம் வருடங்களுக்கு ஐம்பது வருடங்கள் குறைவாக வாழ்ந்தார் என்கிறது குரான்.(குரான் [நூலாம்பூச்சி 29]:14) இதனை அக்காலத்தில் எப்படி பொருள் கொண்டிருப்பார்கள்? இன்றைக்கு நீங்கள் என்ன வியாக்கியானம் கொடுக்கப்போகிறீர்கள்? 950 வயது மனிதன், ஜூதி மலை அளவு நீர் மட்டம் உயருவதெல்லாம் கற்பனை அல்லாமல் வேறென்ன?
அல்ல இதெல்லாம் கற்பனை அல்ல ஆண்டவனின் சங்கல்பம் என்றால் பகுத்தறிவுக்கு விடை கொடுத்துவிட்டீர்கள் என்றல்லவா பொருள். பாரோ மன்னனின் உடல் என மம்மி ஒன்றை காட்டுகிற போலி ஆவணப்படத்தையும் உங்கள் 'பீஸ்' கண்காட்சியில் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். பிரமாதமான உண்மை கலப்பற்ற பிரச்சாரமே அன்றி வேறென்ன அது? யார் அந்த பாரோ சுவனப்பிரியன்? எத்தனாவது ராம்ஸே? சவூதி பிரச்சாரத்திற்கு அப்பால் எந்த மதிப்புடைய எகிப்தியலாளர் இதனை ஏற்றுக்கொள்கிறார்? இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களில் நூற்றுக்கு 90 சதவிகிதத்தினர் எகிப்திலிருந்து மக்கள் மீட்கப்பட்டதன் வரலாற்று உண்மையை கேள்விக்குள்ளாகும் காலம் இது. எதுவானாலும் அந்த பாரோ மன்னன் உடல் குறித்து தயை செய்து எழுதுங்கள். அத்துடன் ஏன் பாரோவின் பெயர் குரானில் குறிப்பிடபடவில்லை என்பதையும் கூறுங்கள்.

சரி மீண்டும் ஜூதி மலைக்கே வரலாம். நீங்கள் குறிப்பிடும் ஜூதி என்பது அராரத் மலைத் தொடரா அல்லது அதற்கு தெற்கே இருக்கும் ஜூதி மலையா?

//நீலகன்டா, …………..ஏத்தினங்களான்னு கேட்களியோ?//
'விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீர்களாக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்: அவன் நேர் வழிப் பெற்றோரையும் அறிந்தவன்.'
16 : 125 - குர்ஆன்

சுவனப்பிரியன் அப்படியே திட்டுபவர்களை திட்ட விடுங்களேன். 'அழகான வாதங்கள்' எல்லாம் நீங்கள் இறைமறை என கருதுபவை அளிக்கப்பட்ட நபர்களுக்குதான். நிச்சயமாக என்னைப்போன்ற காஃபீருக்கல்ல. என்னைப் பொறுத்தவரை நான் என்றென்றும் பெருமையுடன் காஃபீர்தான். இதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறேன். நான் அல்லாவை கடவுள் என்றோ முகமதுவை இறைத்தூதர் என்றோ குரான் உண்மை என்றோ ஏற்கவில்லை. மானுட ஆன்மீக தேடலின் வெளிப்பாடான சிலையை வணங்குவது அல்லா எனும் இனக்குழு ஆதிக்க கற்பனைக்கு அடிபணிவதைக் காட்டிலும் மேலானது என கருதுபவன் நான். உங்கள் வாதங்கள் அனைத்துமே இந்த நம்பிக்கை மானுடமனத்தின் பலவீனத்தில் வளரும் ஒரு மதம் என்பதையே எனக்கு உறுதி செய்கின்றன. வேலைகள் இருப்பதால் புதன்கிழமை இப்பதிவுகள் பக்கம் வருகிறேன்.

அரவிந்தன் நீலகண்டன்

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//தொன்மங்களின் நேரடி வியாக்கியானங்கள் தவறானவை. மதங்கள் உயிரினங்களைப் போலவே பரிணமிப்பவைதாம். சமுதாய சூழலும் தனிமனித அழுத்தங்களும் தேடலும் கிடைத்த ஆன்மிக அனுபவங்களும் இணைந்து உருவானதே குரான். அந்த காலத்து அறிவின் ஆக்கத்துக்கு அப்பால் குரான் புறபிரபஞ்சம் குறித்து எதுவும் கூறிவிடவில்லை.//

இவை எல்லாம் உங்களின் தனிப்பட்ட கருத்து. உங்கள் மத வேதங்களின் மேல் உள்ள நம்பிக்கையின்மையை குர்ஆனோடு ஒத்து நோக்குகிறீர்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையில் எல்லா காலத்துக்கும் ஒத்துவரும்ஒரு நூலை மனிதனால் எக்காலத்திலும் உருவாக்க முடியாது. அடுத்து இந்த குர்ஆன் உருவாக்கிய சமூகத்தால் விளைந்த நன்மைகளை சிறிது சிந்தித்து பாருங்கள். அன்றைய அரபுலகம் நம் நாட்டைவிட தீண்டாமையின் தாக்கம் அதிகம் இருந்தது. இன்றைய அரபுலகம் இஸ்லாத்தின் மூலம் அதே தீண்டாமையை ஒழித்து காட்டியதா இல்லையா? நம் நாட்டிலியே தீண்டாமையை ஒழிக்க ஒரே வழி தாழ்த்தப் பட்டவர் இஸ்லாமியராக மாறுவதுதான் என்பது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறதே!

//ஆனால் வேதத்திலிருந்து வாசகங்களைப் பிடுங்கி தவறாக மொழிபெயர்த்து திருகல் வேலை செய்து அதனை குரானுக்கு சான்றாக்கும் வேலைகள் நேர்மையானவை அல்ல. அவை நமது பகுத்தறிவின் மீது நாமே துப்புவது போல. நான் கூறியவற்றை சிறிதே நிதானமாக சிந்தியுங்கள்.//

நான் கொடுத்த மொழி பெயர்ப்பு சமஸ்கிரதம் அறிந்த பல அறிஞர்கள் குழுவாக அமர்ந்து ஆராய்ந்து வெளியிட்ட உண்மைகளாகும். இதற்காக ஒரு டிரஸ்டையே நிர்மாணித்து பல அறிய சேவைகளை ஜாகிர் நாயக் செய்து வருகிறார். எந்த இடத்தில்தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை வசன எண்ணைக் குறிப்பிட்டு சொன்னீர்களென்றால் தவறுகள் இருக்கும் பட்சத்தில் திருத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும.

suvanappiriyan said...

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். அவ்விதம் நான் அதனை படித்தறிய முற்பட்டபோது இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல, என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். முகமது நபியின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த அழியா அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் முகமது நபியின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றிக் கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.

Young India, Quoted in “The Light” , Lahore, 16th September 1924,
Mahatma Ghandhi.

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள சுவனப்பிரியன்,
இன்னமும் நான் கேட்ட கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிக்கவில்லை.
நீங்கள் பனி உருகி நோவாவின் பேழை தெரிவதாக கூறும் மலை துருக்கியில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஜூதி என பெயரிடப்பட்ட மலையா அல்லது அராரத் மலைத்தொடரா? எதனை குரான் குறிப்பிடுகிறது? நீங்கள் குறிப்பிடும் மகாத்மா காந்தியின் மேற்கோள் ஒரு ஹிந்து மனம் எவ்விதம் அனைத்து மதங்களிலும் நன்மையை தேடுகிறது என்பதனைக் காட்டுகிறது. மகாத்மா காந்தியின் முகமது மற்றும் குரான் குறித்த அறிதலை நீங்கள் ஏற்பீர்கள் என தோன்றவில்லை. ஏனெனில் அதே மகாத்மா காந்தி சிலை வணக்கத்தை மூடநம்பிக்கை என்று கூறுவது அகங்காரமும் அறியாமையையும் நிறைந்த பார்வையாகும் என கூறுகிறார் (மகாத்மா காந்தி கடிதம் நவம்பர் 29, 1932). முகமது சிலைவணக்கத்தை கண்டிப்பதை மகாத்மா ஒரு குறிப்பிட்ட சூழலில் ஏற்பட்ட நிகழ்வாக காண்கிறாரே அன்றி universal acceptability உடைய ஒரு நிகழ்வாக ஏற்க மறுக்கிறார். எனவே முகமதுவின் சிலைவணக்க மறுப்பை நீங்கள் முன்னிறுத்துகையில் அத்தகைய பார்வைக்கு மகாத்மா காந்தியின் பதில் தெள்ளத்தெளிவாக மேற்காணக் கிடைக்கிறது. மேலும் முகமதுவை இந்த அளவு பாராட்டிய மகாத்மா காந்தி கூட காஃபீர் என்றே உங்கள் மத பார்வையில் அறியப்படுவார் அல்லவா? இறுதிவரை ராம நாமத்தை கூறி இறந்த மகாத்மா காந்திக்கு மறுமையில் குரான் படி சுவனமா அல்லது நரகமா? மகாத்மா காந்தி இணை வைத்தவரா இல்லையா? இதனை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் உங்கள் திருமறை அத்தனை தெளிவாக ஒவ்வொரு விசயத்தையும் கூறியுள்ளதாக இருக்கும் பட்சத்தில் இதையும் தெளிவுப்படுத்தியிருக்க வேண்டுமே? நிற்க, இலா என்பதும் எல் என்பதும் இணைந்த வார்த்தைகள் ஜாகீர் நாயக் கூறுவது முழு தவறு. இலா என ஒரு தெய்வத்தை வேதம் கூறவே இல்லை. அது கூறும் தெய்வம் இளா. இது பெண் தெய்வம் ஆகும். இது ஒரு நதி தெய்வம். (இளா, பாரதி, சரஸ்வதி என வேதம் கூறும்: சரஸ்வதீ சாதயந்தீ தியம் இளா தேவீ பாரதீ...(ரிக் 2:3:8) இளாவே தாந்திரீகத்திலும் யோகத்திலும் இடகலை என்பதாக அறியப்படுகிறாள்.பாரதியும் அக்னியே என்று கூட வேதம் கூறுகிறது (ரிக். 2.1.11). திரு. ஜாகீர் நாயக் 'எல்' அல்லா ஆகியவற்றுடன் எள்ளளவும் தொடர்பற்ற இந்த 'இளா'வை (ஆங்கிலத்தில் இளாவும் இலாவும் Ela அல்லது Ila என்பதால்) வைத்து ஜல்லியடித்துள்ளார். அதனை நீங்களும் நம்பி எழுதியுள்ளீர்கள். உங்களை நான் குறை கூறவில்லை. ஆனால் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் மெக்கா இருப்பதாக எழுதியுள்ளது முற்றிலும் தவறானது. இந்த தவறான தகவல்களின் அடிப்படையில் ரிக்வேதம் கூறும் இளாவின் பிரதேசம் மெக்கா என நிரூபிக்க முயல்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. மேலும் மோனியர்-வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதியில் மெக்காவுக்கான சமஸ்கிருத பதம் அளிக்கப்பட்டுள்ளது நான்கு வேதங்களில் இருந்தும் அல்ல மாறாக மிகவும் காலத்தால் பிந்திய (குரானின் காலத்திற்கும் பிந்திய) இலக்கியத்தில் இருந்து. இதெல்லாம் எந்தவிதத்திலும் ஆதாரங்கள் என சாதாரண வரலாற்று இளங்கலை மாணவன் கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். You need a Noah's ark full of willing suspension of disbelief if you need to accept Zakir Nayak's 'scholarship'. :-)

அன்புடன் காஃபீர்
அரவிந்தன் நீலகண்டன்

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//பாரோ மன்னனின் உடல் என மம்மி ஒன்றை காட்டுகிற போலி ஆவணப்படத்தையும் உங்கள் 'பீஸ்' கண்காட்சியில் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். பிரமாதமான உண்மை கலப்பற்ற பிரச்சாரமே அன்றி வேறென்ன அது? யார் அந்த பாரோ சுவனப்பிரியன்? எத்தனாவது ராம்ஸே? சவூதி பிரச்சாரத்திற்கு அப்பால் எந்த மதிப்புடைய எகிப்தியலாளர் இதனை ஏற்றுக்கொள்கிறார்? இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களில் நூற்றுக்கு 90 சதவிகிதத்தினர் எகிப்திலிருந்து மக்கள் மீட்கப்பட்டதன் வரலாற்று உண்மையை கேள்விக்குள்ளாகும் காலம் இது. எதுவானாலும் அந்த பாரோ மன்னன் உடல் குறித்து தயை செய்து எழுதுங்கள். அத்துடன் ஏன் பாரோவின் பெயர் குரானில் குறிப்பிடபடவில்லை என்பதையும் கூறுங்கள். //

'இருவரும் பிர்அவுனிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்.அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்.'
20 : 43 - குர்ஆன்.

'உனக்குப் பின்வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன உடலை இன்று பாதுகாப்போம்' என்று கூறினோம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
10 : 92 - குர்ஆன்

இரண்டாம் ரமேஸஸ் என்ற பாரோ மன்னன் எகிப்தை ஆண்டு வந்தான். இவனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ரமேஸஸின் மகனான மெர்னெப்தா எகிப்தில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். அந்த மக்களுக்கு உதவுவதற்காகவும், மன்னனை நேர்வழிப் படுத்தவும் இறைவனால் தூதர் மோஸேயும் அவருக்குத் துணையாக அவரின் தம்பி ஹாரூனும் அனுப்பப் பட்டனர். மன்னனோ நேர்வழிப் பெறாமல் தூதர்கள்இருவரையும் கொல்வதற்கு ஆட்களைத் திரட்டிக் கொண்டு வரும் பொழுது எகிப்திலுள்ள சினாய் என்ற இடத்தில் கடல் பிளக்கப் பட்டு பிர்அவுன் மூழ்கடிக்கப் படுகிறான். அப்பொழுதுதான் மேலே குறிப்பிட்ட வசனம் இறங்கியது.

1898 ஆம் ஆண்டில் இந்த மெர்னெப்தா என்றும் பிர்அவுன் என்றும் அழைக்கப்படும் பாரோ அரசனின் உடலை எகிப்திலுள்ள அரசர்களின் பள்ளத்தாக்கிலிருந்து புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் பனிப்பாறைகளுக்கு இடையில் கண்டெடுத்தனர். இது பற்றி அதிக விபரங்களை 'எகிப்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வரும் உடல்' என்ற தலைப்பில்விரிவாக விளக்கி இருக்கிறேன்.

“வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நைல் ஆற்றங்கரையின் ஓரத்தில் லுக்ஸார் என்ற அழகிய சிற்றூர். இந்த லுக்ஸாரில் 'அரசர்களின் ஓடை' என்ற பெயரில் ஒரு பள்ளத் தாக்கு இருக்கிறது. அங்குள்ள தீபிஸ் என்ற பகுதியில் 1898 ஆம் ஆண்டு மம்மீஸ் (சடலங்கள்) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த லோனேட் என்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் அங்கிருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்தார்.அது உடனடியாக கெய்ரோவிலுள்ள ராயல் மியூஸியத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் பட்டது.”

பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவரான டாக்டர் மாரிஸ் புகைல் விடா முயற்சியுடன் செய்த ஆராய்ச்சிக்குப் பிறகு தனது முடிவை பின்வருமாறு வெளியிட்டார்:


1975 ஆம் ஆண்டில் டாக்டர் மாரிஸ் புகைல் அனுமதி பெற்ற பின் மற்ற மருத்துவர்களுடன் பிர்அவுனின் உடலை நன்றாக ஆய்வு செய்துஇந்த அரசன் ஒரு மாபெரும் அதிர்ச்சியுடன் வெள்ளத்தில் மூழ்கிய காரணத்தினால் தான் இறந்தான் என்ற அறிக்கையை வெளியிட்டார். இவ்வாறு குர்ஆனில் கூறப்பட்ட (உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஒரு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்) என்கிற இந்த வாசகம் நிறைவேற்றப்பட்டது. இந்த பாரோ அரசரின் பதனிடப்பட்ட உடல் எகிப்து நாட்டின் கெய்ரோ பொருட்காட்சி சாலையில் மக்களின் பார்வைக்காக இன்றும் வைக்கப்பட்டுள்ளது.

குர்ஆனின் இந்த வாசகம் கிறித்தவ மதத்தைச் சார்ந்தடாக்டர் மாரிஸ் புகைலை குர்ஆனை நன்றாக ஆராய வலியுறுத்தியது. இதற்குப் பிறகு அவர் 'பைபிளும், குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்' என்கிற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அது தமிழில் கூட மொழி பெயர்க்கப் பட்டு பல்லாயிரம் பிரதிகள் விற்பனையானது. மேலும் குர்ஆனை முகமது நபி தன் சொந்த முயற்ச்சியால் உருவாக்கியிருக்கவே முடியாது என்ற உண்மையை உணர்ந்து இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார்.


//நீங்கள் குறிப்பிடும் ஜூதி என்பது அராரத் மலைத் தொடரா அல்லது அதற்கு தெற்கே இருக்கும் ஜூதி மலையா?//

இறைவன் ஜூதி மலை என்று குர்ஆனில் குறிப்பிடுவதால் துருக்கியில் ஜூதி மலை என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த மலையைத்தான் ஆராய்ச்சியாளர்களும், குர்ஆனின் விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். மிகப் பெரும் மலைப் பிரதேசம் தற்போது பனிமலைகளால் சூழப்பட்டுள்ளது. அந்த பனிமலைகள் உருகும் போது மலை மேல் உள்ள கப்பல் நிச்சயம் உலகத்தாருக்கு வெளிக்காட்டப்படும். எப்பொழுது வெளிக்காட்டப் படும் என்பதை இறைவனே அறிவான்.

//என்னைப் பொறுத்தவரை நான் என்றென்றும் பெருமையுடன் காஃபீர்தான். இதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறேன். நான் அல்லாவை கடவுள் என்றோ முகமதுவை இறைத்தூதர் என்றோ குரான் உண்மை என்றோ ஏற்கவில்லை.// மானுட ஆன்மீக தேடலின் வெளிப்பாடான சிலையை வணங்குவது அல்லா எனும் இனக்குழு ஆதிக்க கற்பனைக்கு அடிபணிவதைக் காட்டிலும் மேலானது என கருதுபவன் நான்.//

உங்களைப் படைத்த இறைவன் உங்களைப் பார்த்துத்தான் இந்த வசனத்தில் பேசுகிறான்.

'யாருக்கு எதிராக இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டதோ அவர்கள் எந்தச் சான்று அவர்களிடம் வந்த போதும் துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணாதவரை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.'
10 : 96, 97 - குர்ஆன்

//மானுட ஆன்மீக தேடலின் வெளிப்பாடான சிலையை வணங்குவது அல்லா எனும் இனக்குழு ஆதிக்க கற்பனைக்கு அடிபணிவதைக் காட்டிலும் மேலானது என கருதுபவன் நான்.//

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

நீங்கள் சிலையை வணங்குபவராக இருந்தால் இந்துமதத்தின் வேதத்தின் கருத்துக்களைப் புறக்கணித்தவராக ஆகிறீர்கள். அல்லது இந்த வேதத்தின் கருத்துக்கள் பொய் என்று சொல்கிறீர்களா? இரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.

புனர் ஜென்மம் பற்றி...

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்


1)'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்


2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்


3) சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்


4). யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்


5). நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

உங்கள் மதமே நன்மை தீமைக்கேற்றவாறு சொர்க்கம் நரகம் உண்டு என்று கூறுகிறது. ஆனால் நீங்களோ புனர் ஜென்மத்தைப் பற்றிய நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்ற விளக்கத்தைத் தர முடியுமா?

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள சுவனப்பிரியன்,

ஏதோ தெரியாமல் சொல்லிவிட்டேன் ஜாகீர் நாயக் கும்பல் வேதத்தையும் உபநிடதங்களையும் அரைகுறையாக எடுத்து உருட்டி புரட்டி குரானை நியாயப்படுத்துவதாக. அதனை நிரூபிக்க நீங்கள் இவ்வளவுக்கு பாடுபடுவீர்கள் என நான் நினைக்கவில்லை. இந்த அளவுக்கு நான் கூறியதை நிரூபிக்க உதவுவதற்கு நன்றி. ஜாகீர் நாயக் எந்த அளவுக்கு நம்மை சிந்திக்க இயலாதவர்கள் என நினைக்கிறார் என்பதற்கு இது சான்று. ஒவ்வொரு உதாரணமாக சொல்ல நேரமில்லை. ஒன்றிரண்டை கூறுகிறேன்.

1.) 'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்' 10 : 16 : 5 - ரிக் வேதம் (இது ஜாகீர்-நாயக்-தனமான மொழிபெயர்ப்பு)

இதோ முழு சுலோகம்: மீண்டும் ஓ அக்னி நாங்கள் உன்னில் பலிகளுடன் அளித்திடும் அவரை முன்னோர்களிடம் அனுப்புவாயாக புதிய ஜீவனை அணிந்தபடி அவர் தமது சந்ததிகளை அதிகரிக்கட்டும். ஜாதவேதஸ் அவர் மீண்டும் ஒரு உடலை அடையட்டும். (ரிக் வேதம் 10:16:)

2) பகவத் கீதை: 'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி' (இது ஜாகீர்-நாயக்-தனமான மொழிபெயர்ப்பு)

இதோ முழு சுலோகம்: யோ மாமஜமனாதிம் ச வேத்தி லோகமஹேச்வரம் // அஸம் மூட: ஸ மர்த்யேஷூ சர்வ பாபை: ப்ரமுச்யதே
மாம்+அஜம்+அனாதிம் : (என்னை பிறவாதவன் என்றும் ஆதி இல்லாதவன் என்றும்)
யார் என்னை ஆதி இல்லாதவன் என்றும் பிறவாதவன் என்றும் உலகுக்குத் தலைவன் என்றும் அறிகிறவன் (வேத்தி) மானுடருள் மயக்கமில்லாதவன் (அஸம்மூட) அவன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுகிறான் (10:3)

கீதையின் செய்யுளின் பொருள் இதுதானே அன்றி தாங்கள் கூறியதல்ல. (சரி பிறந்த கிருஷ்ணன் தன்னை ஏன் பிறக்காதவனாக அறிய -நம்ப அல்ல: விசுவாசம் கொள்ள அல்ல: தன்னிடம் அச்சம் கொள்ள அல்ல: அறிந்திட-அறிவினால் அறிந்திட மட்டுமே- சொல்கிறார் என்றால் அதனை விளக்க சின்மயா மிஷன் நடத்தும் கீதை வகுப்புகளுக்கு செல்லலாம். நான் சுட்டிக்காட்ட விரும்பியதெல்லாம் உங்கள் மொழிபெயர்ப்பே தவறானது என்பதுதான்.) நல்ல காலமாக மஹேச்வரம் என்பதனை மெக்காவின் ஈஸ்வரன் அதாவது அல்லா என மொழி பெயர்க்காமைக்கு நன்றி.
அன்புடன் காஃபீர்

அரவிந்தன் நீலகண்டன்

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//முகமதுவை இந்த அளவு பாராட்டிய மகாத்மா காந்தி கூட காஃபீர் என்றே உங்கள் மத பார்வையில் அறியப்படுவார் அல்லவா? இறுதிவரை ராம நாமத்தை கூறி இறந்த மகாத்மா காந்திக்கு மறுமையில் குரான் படி சுவனமா அல்லது நரகமா? மகாத்மா காந்தி இணை வைத்தவரா இல்லையா? இதனை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் உங்கள் திருமறை அத்தனை தெளிவாக ஒவ்வொரு விசயத்தையும் கூறியுள்ளதாக இருக்கும் பட்சத்தில் இதையும் தெளிவுப்படுத்தியிருக்க வேண்டுமே?//

'எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.'
23 : 62 - குர்ஆன்

இந்த வசனத்தின் மூலம் நாம் அறிவது ஒரு மனிதன் சொர்க்கம் செல்வானா? நரகம் செல்வானா? என்பது அந்த மனிதனுக்கும் படைத்த இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயங்கள். காந்திஜி அவர்கள் நல்லறங்கள் செய்து இறந்திருந்தால் 'அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்' என்ற வசனத்தின் படி சொர்க்கம் செல்வார். வாழும் காலங்களில் தீய காரியங்களைச் செய்திருந்தால் அதற்கேற்ப நரகம் செல்வார். காந்திஜி அவருடைய செயல்களின்படி எங்காவது சென்று கொள்ளட்டும். இப்போது உயிரோடு இருக்கும் நீங்களும் நானும் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தான் பிரச்னையே!

//இறுதிவரை ராம நாமத்தை கூறி இறந்த மகாத்மா காந்தி//

காந்திஜி இறக்கும் போது என்ன சொன்னார் என்பதே பலரின் சர்ச்சைக்குள்ளானது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே!

//நிற்க, இலா என்பதும் எல் என்பதும் இணைந்த வார்த்தைகள் ஜாகீர் நாயக் கூறுவது முழு தவறு. இலா என ஒரு தெய்வத்தை வேதம் கூறவே இல்லை.//

இல், இல்லயஃ, இலா, இலாயா - சமஸ்கிரத சொல்லான இதன் பொருளானது 'வணக்கத்திற்குரிய' என்பதாகும். 'பாத்' என்பதுஇடத்தைக் குறிக்கும் சொல். 'இலாஸ்பாத்' என்றால் 'வணக்கத்திற்குரிய இடம்' என்றாகிறது. இதில் குறிப்பிட்ட கடவுள் பெயரை அவர் எங்கும் குறிப்பிடவில்லையே!அதை நீங்கள் சரஸ்வதி என்கிறீர்கள். அந்த கடவுளையே ஜாகிர் நாயக் அல்லாஹ் என்கிறார்.

Muse (# 01429798200730556938) said...

இன்றைய அறிவியலோடு ஒத்துப் போகும் மார்க்கத்தையே நாங்கள் பெற்றுள்ளோம்.

நோபல் பரிசு பெற்ற, அல்லது அதற்கிணையான அங்கீகாரம் பெற்ற அரேபிய அறிவியல் அறிஞர், அரபி விஞ்ஞானி ஒருவரின் பெயரை அறிய விரும்புகிறேன்.

அதேபோல கலை, இலக்கியத்தில் உலகத்தரம் வாய்ந்த அரேபியர்கள் யாரேனும் உள்ளனரா?

குரானில் தேடிப் பார்த்து கிடைக்காததால் தங்களிடம் தகவல் கேட்கிறேன்.

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//இளா என்பது தெய்வத்தின் அதுவும் பெண் தெய்வத்தின் பெயர். மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதியை பார்த்தால் கூட போதும்.//

There are various places of pilgrimage in Hinduism. One of the sacred places mentioned in
i. Rigved, Bk. 3 hymn 29 verse 4 is “Ilayspad, which is situated at Nabha prathvi.”
‘Ila’ means God or Allah, and ‘spad’ means place, therefore Ilaspad means place of God. Nabha means center and prathvi mean earth. Thus this verse of the Veda prescribes pilgrimage to a place of God situated at the center of the earth.

Sanskrit-English dictionary by M. Monier Williams (Edition 2002) states that Ilaspad is “Name of a Tirtha” i.e. place of Pilgrimage – however its location is not known.

இலா என்பது பெண் தெய்வம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஜாகிர் நாயக் கூறுவதோ இறைவன் என்ற பொதுவான பெயரைக் குறிப்பிடுகிறார். இருவரும் எடுத்தது ஒரே டிக்ஷனரியிலிருந்துதான். இதில் யார் சொல்வதை நம்புவது? பெண் தெய்வம் என்பது பகுத்தறிவுக்கு ஒத்து வரக் கூடியதாகவா இருக்கிறது?

இந்த ஒரு இடம் தான் பிரச்னை. விட்டு விடுவோம். மற்ற இடங்களில்ஒரே இறைவனைத்தான் வணங்கச் சொல்வதாக வரும் சுலோகங்கள் அனைத்தும் பிழை என்கிறீர்களா? பல தெய்வ வணக்கம் தவறு என்று வரும் சுலோகங்களும் தவறாக மொழி பெயர்க்கப் பட்டதாக சொல்கிறீர்களா?


//முழுக்க முழுக்க தொன்மமும் சடங்கும் இயைந்த மொழியில் கிளர்ந்தெழுந்த ஆவேச உள்ளொளி வெளிப்பாடே வேத சுலோகங்கள் ஆகும். எங்கோ மேலேயிருந்து இறங்கிய இறை கட்டளை அல்ல மாறாக உள்ளிருந்து வெளிஎழும்பிய ஞான வெளிப்பாடாகும்.//

சரி வேதங்களைக் கொடுத்தது இறைவன் அல்ல! என்றால் இந்த வேதங்களை உருவாக்கியது யார? எந்த ஒரு புத்தகத்துக்கும் ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் அல்லவா? குர்ஆனை இறைவனிடமிருந்து வாங்கி தந்தது முகமது நபி என்கிறேன் நான். உலக முஸ்லிம்கள்யாரிடம் கேட்டாலும் இந்த பதிலைத்தான் சொல்வார்கள். அதே போல் உங்கள் வேதத்தின் மூலம் யார்? எவரால் அருளப்பட்டது என்ற விபரத்தைத் தாருங்கள்.

//. மறுபிறவி எனக்கு தெரியாது ஆனால் மறுசுழலில் எனக்கு நம்பிக்கை உள்ளது.//

இந்து மதத்தைப் பற்றி இவ்வளவு விபரம் வைத்திருக்கும் நீங்கள் மறு பிறவியைப் பற்றி எனக்கு தெரியாது என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. சாதீயம் இந்து மதத்தில் இருப்பதற்கான மூலமே இந்த மறுபிறவித் தத்துவம் தான்.மறு பிறவிக் கொள்கை இந்து மதத்தில் இல்லாதது என்று ஒத்துக் கொண்டதற்கும் நன்றி.

//இத்தகைய ஒருவருக்கு உங்கள் மார்க்கத்தின் படி சுவனமா நரகமா என கூறமுடியாது என்றால், ஏன் குரானை இறுதி இறைவேதமென பிரச்சாரம் செய்கிறீர்கள்? //

நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பது உங்களின் மனதுக்குத்தானே தெரியும். ஒருக்கால் நல்லவன் போல் நீங்கள் நடிக்கலாம் அல்லவா?. இந்த உண்மைகளை இறைவனும் சம்பந்தப்பட்ட நபரும் தானே அறிய முடியும்? இந்த சாதாரண ஒரு விளக்கத்தையே நீங்கள்தான்கிளி பிள்ளைப் போல் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்.

//. கற்பனை சுவனங்களுக்காக//

“May all these streams of butter, with their banks of honey, flowing with distilled water, and milk and curds and water reach thee in domestic life enhancing thy pleasure. May thou acquire completely these things strengthening the soul in diverse ways.”
(Atharva Veda 4:34:6)

Atharva Veda Book 4 hymn 34 verse 6 (Ved Pra.)

“Having pools of clarified butter, stocks of sweet honey, and having exhilarating drinks for water, full of milk and curds, may all these streams flow to us in the world of happiness swelling sweetly. May our lakes full of lotuses be situated near us.”
(Atharva Veda 4:34:6)

உங்களின் வேதத்தில் சுவனம் சம்பந்தமாகஉள்ள இவை அனைத்தும் ஜாகிர் நாயக் கற்பனை செய்தது என்கிறீர்களா?

//. கற்பனை சுவனங்களுக்காக இவ்வுலக வாழ்க்கையை புனிதப் போர்களின் பெயரில் நரகாக்க வேண்டியதில்லை.//
அதையேதான் நானும் உங்களுக்கு சொல்கிறேன். ஒரு மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளர் நீங்கள் என்று அறிகிறேன். மக்களுக்காகவும் மதத்துக்காகவும் சேவை செய்ய வேண்டியதுதான். அந்த சேவை கிருபானந்த வாரியாரும், குன்றக்குடி அடிகளாரும் செய்த நற்பணிகள் போல் இருக்க வேண்டும். ராம கோபாலனின் பாணியைப் பின்பற்றி சகோதரர்கள் மத்தியில் பிளவு உண்டு பண்ணி குளிர்காய நினைக்காதீர்கள். படித்த விபரம்அறிந்த சிந்தனையாளரான நீங்கள் குன்றக்குடி அடிகளாரின் வழியையே பின்பற்ற வேண்டும் என்பது என் போன்றோரின்விருப்பம். 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற எண்ணம் கொண்டு நம் பாரத நாட்டை முன்னேற்றப் பாடுபடுவோம்.

சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

இறைவனை அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தரப்படும். அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் பொகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும்இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடத்திலிருந்து மன்னிப்பும் உண்டு.
47 : 15 - குர்ஆன்



இந்த சொர்க்கத்தை அடைய நாம் அனைவரும் முயற்ச்சிப்போம்.

தொடர்ந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

ம்யூஸ்!

//நோபல் பரிசு பெற்ற, அல்லது அதற்கிணையான அங்கீகாரம் பெற்ற அரேபிய அறிவியல் அறிஞர், அரபி விஞ்ஞானி ஒருவரின் பெயரை அறிய விரும்புகிறேன்.

அதேபோல கலை, இலக்கியத்தில் உலகத்தரம் வாய்ந்த அரேபியர்கள் யாரேனும் உள்ளனரா?//

எந்த சமூகத்தில் அக்கிரமங்களும் அராஜகங்களும் தலை விரித்தாடுகிறதோ அங்கு தான் இறைவேதமும், இறைத் தூதரும் அனுப்பப்படுவார்கள். முகமது நபி வாழ்ந்த காலம் 'அய்யாமுல் ஜாஹிலிய்யா' அதாவது 'அறியாமைக் காலம்'. பெண் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்டால் அவமானத்தால் ஒரு வாரத்துக்கு அந்த சமூகத்துக்கே அந்த மூடர்கள் வர மாட்டார்களாம். கஃபா வை சுற்றி இப்றாகீம், இஸ்மாயீல் போன்ற நபிமார்களின் சிலைகளையும் வைத்திருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு சிலை வீதம் முன்னூற்று அறுபத்தைந்து சிலைகளை கஃபாவை சுற்றி வைத்து வணங்கிவந்தனர். தீண்டாமைக் கொடுமை நம் நாட்டை விட அதிகமாக இருந்தது. இது போன்ற சமூகத்தில் பிறந்து வளர்ந்த முகமது நபி இறைவனிடமிருந்து கொண்டு வந்த குர்ஆன் தான் இனறு வரை உலக மக்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

“இன்றைய அறிவியலோடு ஒத்துப் போகும் மார்க்கத்தையே நாங்கள் பெற்றுள்ளோம்.”

என்று இஸ்லாத்தைத்தான் சொன்னேன்.

“இன்றைய அறிவியலோடு ஒத்துப் போகும் அரபியர்களை நாங்கள் பெற்றுள்ளோம்.”

என்று நான் சொல்லியிருந்தால் உங்கள் கேள்வி சரியாக பொருந்தி வரும். பொதுவாக அரபியர்கள் எந்த அளவு மூளை வளர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை அனுபவத்தில் கண்டு சில நேரம் எனக்குள் சிரித்துக் கொள்வது உண்டு.

இத்தகைள குருட்டு சமூகத்தில் பிறந்த ஒருவர் எவ்வாறு இது போன்ற ஒரு வேதத்தை இறைவன் அல்லாது உருவாக்கியிருக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும்எழுவதுஇயல்பே!

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//என்ன மாதிரிப்பட்ட சமாளிப்பு வேலை இது?
இளா என்பது தெய்வத்தின் அதுவும் பெண் தெய்வத்தின் பெயர். மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதியை பார்த்தால் கூட போதும். (வணக்கத்துக்குரிய அல்ல அதன் பொருள்: இளா என்றால் புனித நதியோட்டம். பசு, பூமித்தாய், வானாகி நிற்பவள். இப்பெயர் மேலும் மனுவின் மகளுக்கும், புதனின் மனைவிக்கும், அக்கினியின் அன்னைக்கும் பொருந்தும்)//

//1. இளா என்றால் God என்று தெளிவாக கூறுகிறார் ஜாகீர் நாயக். இல்லை Goddess என்றுதான் மோனியர் வில்லியம்ஸில் உள்ளது. மோனியர் வில்லியம்ஸ் என்ன திருவனந்தபுரம் சமஸ்கிருத கல்லூரி இளங்கலை மாணவி கூட இதனை தெளிவுபடுத்திட முடியும்.//

'இளா' என்றால் 'வணக்கத்திற்குரிய' என்றும் 'இறைவன்' என்றும் கூறப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியமைக்கு மறுப்பாக நீங்கள் கொடுத்த பின்னூட்டமே மேலே உள்ளவைகள். இரண்டாவது பின்னூட்டத்தில் God அல்ல Goddess என்று கூறுகிறீர்கள்.'மோனியர் வில்லியம்ஸின்' அகராதி என்னிடம் இல்லை. லிப்கோ டிக்ஷனரியில் Goddess -க்கு எப்படி தமிழ்ப் படுத்தியுள்ளார்கள் என்று பார்த்த பொழுது 'தெய்வீகத் தன்மையுள்ளதாக்கு' என்று தான் மொழி பெயர்த்திருக்கிறார்கள். 'தெய்வீகத் தன்மையுள்ளாக்குதல்' என்றால் அதன் பொருள் என்ன? எதை தெய்வம் என்கிறோமோ அந்த தெய்வத்துக்குள்ள அதீத சக்திகளைத்தான் தெய்வீகத் தன்மை என்போம். இவ்வாறு விளங்குவதை விட்டுவிட்டு”இளா என்றால் புனித நதியோட்டம். பசு, பூமித்தாய், வானாகி நிற்பவள். இப்பெயர் மேலும் மனுவின் மகளுக்கும், புதனின் மனைவிக்கும், அக்கினியின் அன்னைக்கும் பொருந்தும்” என்று எதை வைத்து பொருத்துகிறீர்கள்? 'இளா' எனபதற்கு ஜாகிர் நாயக் கொடுத்த விளக்கம் சரியா? அல்லது அரவிந்தன் நீலகண்டன் கொடுத்த விளக்கம் சரியா என்பதை பதிவை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

//வேத மந்திரங்கள் 'மந்திர த்ருஷ்டாக்கள்' அகக்கண்ணால் பார்த்த சத்தியங்களை தொகுத்தவை. அவற்றின் உண்மை அகபரிமாணங்கள் கொண்டவையே யன்றி வேறல்ல. மீனவ பெண்ணின் மைந்தரான வியாசரால் தொகுக்கப் பட்ட அந்த அகதரிசன மந்திரப் பாடல்கள் பல ரிஷிகளால்
உணரப்பட்டவை.//

நான் கேட்டது வேதங்களை தொகுத்தவர் வியாசரா? எனபதல்ல. இந்த வேதங்களை மொழிந்த அந்த ரிஷிகள் யார்?எந்த ரிஷியால் எந்த சுலோகம் சொல்லப் பட்டது? என்ற விபரத்தைக் கேட்டிருந்தேன். அதற்கும் உங்களிடமிருந்து பதில் இல்லை. இதன் முடிவையும் பதிவைப் படிப்பவர்களிடமே விட்டு விடுவோம்.

//வேத காலம் முதல் மறுபிறப்பு கோட்பாடு பாரத மண்ணில் இருந்து வந்துள்ளது என்பதற்கு வேத ஆதாரங்களே உள்ளன. //

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மறு பிறப்பு என்ற கோட்பாட்டுக்கு இந்து மத வேதங்களில் ஆதாரம் கேட்டிருந்தேன். இது வரை தரவில்லை. இதையும் பதிவைப் படிப்பவர்கள் முடிவுககே விட்டு விடுவோம்.

//. மறுபிறவி என்பதும் சாதீயமும் ஒன்றோடொன்று இணைந்தவை என்பது தவறானது. மறுபிறவிக் கோட்பாடு இல்லாத கிறிஸ்தவ ஐரோப்பாவிலும் சாதீயம்
இருந்திருக்கிறது. மேற்கில் காலனீய முதல்-உள்ளீடு மற்றும் காலனிய விரிவாதிக்கம் ஆகியவையே சாதீயத்தினை அற்றுப்போக செய்துள்ளதே அன்றி இறையியல் அல்ல. பாரதத்திலும்
இன்றைய தலித் சமுதாயத்தினர் பலரின் இன்றைய சுரண்டப்படு நிலைக்கு பிரிட்டிஷ் காலனிய காரணிகளை காட்ட இயலும்.//

தாழ்த்தப் பட்டவர்கள் இன்று அடிமையாய் இருப்பதற்கு பிரிட்டிஷார்தான் காரணம் என்கிறீர்களா? இயக்க வெறி எந்த அளவு உங்கள் கண்களை மறைக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். தாழ்த்தப் பட்டவர்கள் இன்று இழி நிலையை அடைந்ததற்கு இந்து மத வேதங்கள் காரணமா? அல்லது நீங்கள் சொல்வது போல் பிரிட்டிஷாரா என்பதனையும் பதிவை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுவோம்.


//தங்களுக்கு அளிக்கப்படும் பிற தகவல்களைப்போலவே இந்த தகவலும் பிழையானதுதான்.ஒரு சிறந்த பதவியை அளித்தமைக்கு நன்றி. (சொர்க்கத்தை விட எனக்கு சிறந்த பதவியாக படுவது இதுதான். உங்கள் எண்ணம் பலிக்கட்டும்)//

“நீங்கள் யார் மீதாவது மதிப்பும் பக்தியும் வைத்திருக்க, அவர் அந்த மதிப்புக்கும் பக்திக்கும் தகுதியில்லாதவர் என்று தெரியவந்தால் எப்படி நொருங்கிப் போவீர்கள். நான் உடைந்தே போனேன். அது கூட சின்ன வார்த்தை தான் இன்னும் சொல்லப் போனால் இரண்டு நாட்கள் சப்பிடவே முடியவில்லை. “ –Rajavanaj

ஆர்.எஸ்.எஸ ல் பல காலம் இருந்து தவறாக வழிகாட்டப்பட்ட ராஜாவனஜ் தற்போது திருந்தி இந்த இயக்கத்தைப் பற்றிய அனைத்து விபரங்களையும் ஒவ்வொரு பதிவாக போட்டு விளக்கி வருகிறார். ஆர்.எஸ.எஸ்ஸைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மையா? அல்லது ராஜவனஜ் சொல்வது உண்மையா என்பதை பதிவைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுவோம்.

//மேலும் நானும் இதரர்களும் சொர்க்கத்துக்கு வந்து இடக்கு மடக்கா கேள்வி கேட்டால் உங்களுக்கு ஆறாக ஓடுற ஐஸ்வாட்டர் தேவைப்படும். அது ஓடுகிற மாதிரி எந்த சொர்க்க
விவரணையும் இல்லை.//

சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்


சொர்க்கம் நரகத்தை மறுப்பவராக இருந்தால் அதர்வண வேதத்தில் வரும் சொர்க்கம் நரகத்தைப் பற்றிய வர்ணனைகளை நீங்கள் மறுக்கிறீர்களா? ஒரு மதத்தின் கொள்கைகளில் தனக்கு விருப்பமானதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை கண்டு கொள்ளாமல் விடுவது எந்த வகையான பக்தி? என்பதை விளக்க வேண்டியவராகவும் இருக்கிறீர்கள்.

இது பற்றிய முடிவையும் பதிவைப் படிப்பவர்களுக்கே விட்டு விடுவோம்.

பல வேலைகளுக்கு மத்தியிலும் பதிவுக்காக நேரம் ஒதுக்கி தொடர்ந்து பின்னூட்டம் அளித்து வந்த உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவோடு நின்று விடாது என் மற்ற பதிவுகளுக்கும் நேரம் கிடைக்கும் போது பார்வையிட்டு கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

நன்றி!

அரவிந்தன் நீலகண்டன் said...

ராஜாவன்ஷ் ஆர்.எஸ்.எஸ் இல் இருந்ததாக கூறுவதே ஐயத்துக்குரியது. (அப்படி இருந்தாலும் சிலகாலம்தான் அவருடைய வார்த்தைகளின் படி) அவருக்கு சங்கத்தை குறித்தோ அதில் பணியாற்றிய மூத்த தலைவர்கள் குறித்தோ எவ்வித அறிவும் இல்லை. உயர்ந்த பதவிகள் வகித்த/வகிக்கும் சங்கத்தின் தலித்/வனவாசி தலைவர்கள் இருப்பதை கூட அவர் அறியவில்லை. இப்படிப்பட்டவரை உங்கள் சாட்சியாக நீங்கள் அளிப்பது உங்கள் இதர சாட்சியங்களின் நிலைக்கு ஏற்றாற்போல உள்ளது.

சொர்க்க நரக வர்ணனைகள் எந்த மதமாக இருந்தாலும், மறையாக இருந்தாலும் ஆழ்மன வெளிப்பாடுகளே அன்றி புற உண்மைகள் அல்ல என்று எத்தனை முறை மீண்டும் மீண்டும் கூறுவது?

வேத மந்திரங்கள் ஒவ்வொரு ரிஷிகளாலும் பல்வேறு காலகட்டங்களில் (கிமு 4000 முதல் கிமு 1900 வரையாக) அருளப்பட்டு வியாசரால் தொகுக்கப்பட்டன.

தலித் வனவாசி இனங்கள் பலரின் இன்றைய சுரண்டப்படும் நிலைக்கு பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கம் நிச்சயமான ஒரு காரணம். பங்கி, பர்த்தி, காட்டு நாயக்கன்கள் என பல தலித் சமுதாயங்களில் இதனை நிதர்சனமாக காட்டமுடியும்.

மறுபிறவிக்கான ஆதாரங்கள் வேதங்களிலேயே உள்ளன. ஒரு தனி வலைப்பதிவுக்கான தொகுப்பாக உள்ளன. எனது புராணங்கள் வலைப்பதிவை கவனித்து வாருங்கள்.

அரவிந்தன் நீலகண்டன் said...

//Goddess -க்கு எப்படி தமிழ்ப் படுத்தியுள்ளார்கள் என்று பார்த்த பொழுது 'தெய்வீகத் தன்மையுள்ளதாக்கு' என்று தான் மொழி பெயர்த்திருக்கிறார்கள். //
நகைச்சுவை என்பது நல்ல விசயம்தான் ஆனால் இந்த அளவு வேண்டாமே.

Goddess
1 a female god
2 a woman greatly admired, as for her beauty
3 [also G-] a feminine deity proposed by some as having been worshiped from ancient times and as variously present as a goddess in many of the world's myths and religions: (இது வெப்ஸ்டர்)

Goddess: பெண் தெய்வம், ஆர்வக் காதலுக்குரிய பெண் (இது சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கில-தமிழ் அகராதி 1977)

//பல வேலைகளுக்கு மத்தியிலும் பதிவுக்காக நேரம் ஒதுக்கி தொடர்ந்து பின்னூட்டம் அளித்து வந்த உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவோடு நின்று விடாது என் மற்ற பதிவுகளுக்கும் நேரம் கிடைக்கும் போது பார்வையிட்டு கருத்துக்களையும் தெரிவியுங்கள்.//

நீங்க வேற! உங்க ஆபிஸ்ல ice water scarcity வந்திடப்போகுது!