Followers

Saturday, August 09, 2008

கிருஸ்ணரின் கோவர்த்தன மலையை இடிக்கும் பி.ஜே.பி அரசு!

சேது சமுத்திர திட்டம் தமிழகத்தை வளர்ச்சி அடையச் செய்யும் ஒரு திட்டம். இந்தத் திட்டத்தை முடக்குவதற்க்காக இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக சொலலி பி.ஜே.பி அரசியல் செய்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை பி.ஜே.பி அரசியல் ஆதாயத்திற்க்காக கெடுத்து வருகின்றது என்று சொன்னால் சில பேர் இதை நம்ப மறுத்தனர். இவர்களை நம்பச் செய்யும் வகையில் பி.ஜே.பி இப்போது நடந்து கொண்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோவர்த்தன மலை என்று ஒரு மலை உள்ளது. இந்த மலையை கிருஷணர் தனது விரலால் தூக்கி நிறுத்தியதாக இந்துக்கள் நம்புகின்றனர். சில புராணங்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யபபட்டுள்ளது. இந்துக்களால் மதிக்கப்படும் இந்த மலையைத்தான் பி.ஜே.பி அரசு இப்போது தகர்த்து வருகிறது. இராமர் எப்படி அவதாரமோ அது போன்ற ஒரு அவதாரம்தான் கிருஷணர். இராமர் பாலத்தை காப்பதற்க்காக பி.ஜே.பி போராடுகிறது என்றால் அதே அக்கறையை கோவர்த்தன மலையைக் காப்பதிலும் காட்ட வேண்டும். ஆனால் பி.ஜே.பி அரசு காட்டவில்லை. கனிம வளம் நிறைந்த அந்த மலையை தகர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ராஷட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பினால் அதற்க்கு பி.ஜே.பி யினர் பதில் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள். கோவர்த்தன மலையை தகர்த்தால் பி.ஜே.பிக்கு பணம் கிடைக்கும். இராமர் பாலம் பிரச்னையைக் கிளப்பினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும்.

அதனால்தான் பி.ஜே.பி இதைச் செய்து வருகிறதே தவிர பக்தியோ நல்லெண்ணமோ இதில் பி.ஜே.பி க்கு இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது பாலம் விவகாரத்தை கிளப்பி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தாலும் சரி, எதிலுமே பி.ஜே.பி க்கு சொந்த ஆதாயம் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் பி.ஜே.பி அதில் தலையிடும். இல்லையென்றால் நழுவிக் கொள்ளும். இதை தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலம் பி.ஜே.பி நிரூபித்திருக்கிறது. அதற்க்கு ஒரு சான்றுதான் கோவர்த்தன மலையை இடிக்கும் பி.ஜே.பி அரசின் செயல். இதை எல்லோரும் உணர்ந்தால் நாடு நலம் பெறும்.

நன்றி - உணர்வு

No comments: