Followers

Saturday, August 16, 2008

மாயாவதி தன் சிலைகளை அகற்றுவாரா?

இறந்தவர்களுக்கு சிலை வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். உயிரோடு இருக்கும் மாயாவதி தனக்குத் தானே சிலைகளை மாநிலம் முழுவதும் நிறுவி வரும் கொடுமையை என்னவென்று சொல்வது! அம்பேத்கார் சிலைக்கும் தேவர் சிலைக்கும் சிலர் செருப்பு மாலை இட்டதால் எத்தனை அப்பாவி உயிர்களை பறி கொடுத்தோம். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு முதல்வர் இப்படி ஒரு மூடத்தனத்தை செய்வது மடமையல்லவா? இதை பல பேர் சுட்டிக் காட்டியும் எவருக்கும் மதிப்புக் கொடுக்காமல் மேலும் பல சிலைகளை மாநிலம் முழுக்க நிறுவப் போகிறாராம்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முலாயம் சிங் யாதவ் 'மாயாவதி தனக்கு வைத்துள்ள சிலைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 50,60 புல்டோசர்களை வைத்து மாநிலம் முழுவதும் உள்ள மாயாவதியின் அனைத்து சிலைகளையும் ஒரே நேரத்தில் இடித்து தகர்த்து தரைமட்டமாக்குவோம்' என்று அறிவித்துள்ளார். மக்களின் வரிப் பணத்தில் இது போன்ற சிலைகளை நிறுவுவதும் மற்றொரு ஆட்சி வந்து சிலைகளை உடைப்பதும் கேலிக் கூத்தாக இருக்கிறதல்லவா? சாமான்ய மனிதன் உணவுக்கும் உடைக்கும் அன்றாடம் அல்லாடிக் கொண்டிருக்கிறான். இந்த திமிர் பிடித்த அரசியல் வாதிகள் தங்களின் செல்வாக்குக்காக மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க காரைக்குடியைச் சேர்ந்த சிவலிங்கம், இராமன் என்ற இரு பி.ஜே.பி தொண்டர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலையை உடைத்து கலவர நெருப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் காவல் துறையினர் சரியான முறையில் புலனாய்வு செய்து பி.ஜே.பி யைச் சேர்ந்த சதிகாரர்கள் இருவரையும் கைது செய்து கலவர நெருப்பை அணைத்து விட்டனர். சதிகாரர்களுக்கு பின்னணியில் பி.ஜே.பி யின் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா இருப்பதாக சொல்லப்படுகிறது.

கருத்தோடு மோதலாம், கொள்கையோடு மோதலாம்! அதை விடுத்து சிலைகளை உடைத்து கலவரம் ஏற்ப்படுத்தி அதில் கட்சியை வளர்ப்பதுதான் நியாயவான்களின் செயலா? இது போன்ற தகிடுதத்தங்கள் வட நாட்டில் வேண்டுமானால் போனியாகலாம். தென்னாட்டு மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளார்கள் என்று ராஜாக்கள் உணர்ந்து கொண்டால் சரி!

5 comments:

Anonymous said...

சிந்திக்க வைத்த பதிவு!

Anonymous said...

//இது ஒரு புறம் இருக்க காரைக்குடியைச் சேர்ந்த சிவலிங்கம், இராமன் என்ற இரு பி.ஜே.பி தொண்டர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலையை உடைத்து கலவர நெருப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் காவல் துறையினர் சரியான முறையில் புலனாய்வு செய்து பி.ஜே.பி யைச் சேர்ந்த சதிகாரர்கள் இருவரையும் கைது செய்து கலவர நெருப்பை அணைத்து விட்டனர். சதிகாரர்களுக்கு பின்னணியில் பி.ஜே.பி யின் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா இருப்பதாக சொல்லப்படுகிறது.

கருத்தோடு மோதலாம், கொள்கையோடு மோதலாம்! அதை விடுத்து சிலைகளை உடைத்து கலவரம் ஏற்ப்படுத்தி அதில் கட்சியை வளர்ப்பதுதான் நியாயவான்களின் செயலா? இது போன்ற தகிடுதத்தங்கள் வட நாட்டில் வேண்டுமானால் போனியாகலாம். தென்னாட்டு மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளார்கள் என்று ராஜாக்கள் உணர்ந்து கொண்டால் சரி! //

தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே?

suvanappiriyan said...

//தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே?//

வாங்க அனானி தம்பி!

சம்பந்தம் இல்லீங்களா? சிலைகள் இருக்கப் போய்தானே அதை உடைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே உள்ள சிலைகளால் உருண்ட தலைகள் எத்தனை? இனியும் இது போன்ற சிலைக் கலாச்சாரம் நமக்கு தேவைதானா என்பதை அழுத்தமாக சொல்வதற்க்காகத்தான் பி.ஜே.பி யின் செயலைச் சுட்டிக்காட்டினேன். இறந்தவர்களின் சிலையே இந்தப் பாடுபடும்போது உயிருடன் உள்ள தலைவரின் சிலைக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் பலியாகும் உயிர்கள் எத்தனை! இதை அரசாங்கமே முன்னின்று நடத்துவது கேலிக் கூத்தல்லவா!

vijayaragavan said...

I hope you expect a world without BJP,RSS, etal, and most importantly nonmuslims.
Check the meaning of the slogan you ve kept in the header, that is a paradox.
Not commenting on Kuran, but its a misinterpretation.
Boomi'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது' - குர்ஆன் - 17 :37
------------------
You can not get the real meaning until you are unbiased. So before commenting on the Many-God and other facts or whatever, try getting knowledge about that.
Appreciate your stability, you seem to be a cool-headed person. you quoted Gita for one god and in the same Gita why there are many god theory (or practice) question is answered.
No way is wrong until you reach the destination without troubling others.
Depends on geography religions formulated the way of living, understand that, as there are difference in it across the world, so as the religious practices.

Do not be a hypocrite.
The so called God created all means, then he should have created all the religion, if something foolish in that then God is the source of that.

The one who knows will not speak, we (myself and you) have not known HIM, hence we do speak. Until we stop speaking we wont experience HIM.

Remember, all these are just your and mine thoughts on other things, as you say, we are not the ultimate intellectuals like HIM. As these are covered with Emotional background, this wont be the ultimate truth.
Thinking about all these will certainly wont allow us to reach GOD.
With love and affection,
Vijayaragavan S

suvanappiriyan said...

விஜய்!

//I hope you expect a world without BJP,RSS, etal, and most importantly nonmuslims.//

மாற்றி சொல்கிறீர்கள். முஸ்லிம்கள் இல்லாமல் அவர்களால் அரசியல் பண்ண முடியாது என்பதுதான் உண்மை.

//No way is wrong until you reach the destination without troubling others.//

இதையேதான் நானும் சொல்கிறேன்.

//The so called God created all means, then he should have created all the religion, if something foolish in that then God is the source of that.//

மனிதர்கள் இறை வழியிலிருந்து தவறும்போது அவர்களை நேர்வழிப் படுத்துவதற்க்காக அவ்வப்போது தூதுவர்களை இறைவன் அனுப்புகிறான். ஆனால் அந்த தூதுவர்களையே நாம் கடவுளாக்கி விடுகின்றோம். உதாரணத்திற்கு ஏசு நாதர் ஒரு தூதுவர். இதை அவரே பைபிளில் கூறுகிறார். ஆனால் அவர் இன்று கடவுளுக்கு சமமாக வைத்து பார்க்கப் படுகிறார் அல்லவா! இந்தியாவில் உருவான கடவுள்கள் அனைவரும் இது போன்று வந்தவையே! எனவே மனிதன் செய்யும் தவறுக்கு இறைவன் மீது பழி போட முடியாது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி