சவுதி அரேபிய சிறுமிகள் படும் துயரம்.
எங்கள் கம்பெனியின் ஷோ ரூம்களுக்கு குடும்பத்தோடு வரும் பல சவுதி நாட்டவரைப் பார்த்திருக்கிறேன். கணவனின் வயது 65 இருக்கும். மனைவியின் வயதோ இருபதும் பதினெட்டுமாக இருக்கும். அந்த பெண் எப்படி சம்மதிக்கிறாள்? குடும்பத்தவர் எப்படி இந்த திருமணத்தை அனுமதிக்கிறார்கள்? என்று என்னுள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வதுண்டு. அரபு நாட்டுப் பெண்களின் அழகைப் பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகும் நிறமும் கொண்ட இந்த பெண்களை 70 வயது கிழவனுக்கு மணமுடித்துக் கொடுத்தால் பார்க்கும் நம்மைப் போன்றவர்களின் மனது என்ன பாடுபடும்? நமக்கே இந்த அளவு வருத்தம் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் மனது என்ன பாடுபடும் என்று எனக்குள்ளே கேட்டுக் கொள்வதுண்டு.
இந்த திருமணங்கள் அனைத்தும் பெற்றோர்களின் பணத்தாசையால் ஏற்படுகிறது என்பதுதான் இதன் உச்சகட்ட கொடுமை. முன்பெல்லாம் சவுதிகள் சிக்கனத்தை கடைபிடித்தார்கள். ஆனால் இன்று விரும்புவது ஆடம்பரத்தை. அமெரிக்க கலாச்சார தாக்கத்தினால் வரவுக்கு மீறிய ஆடம்பர செலவுகளுக்கு அடிமையாகி விட்டனர் சவுதிகள். இந்த செலவுகளையும் தான் பெற்ற கடன்களையும் அடைக்க ஏதாவது ஒரு பணக்கார கிழ ஷேக்கிடம் தன் மகளை திருமணம் என்ற பெயரில் விற்று விடுகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றும் அரிதாக நடந்த இந்த கொடுமை தற்போது பரவலாக நடைபெறுவது அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு சவுதி அரசாங்கமும் இது போன்ற திருமணங்களை தற்போது தடை செய்து வருகிறது.
சவுதி பெண்கள் கல்வி அறிவு பெறுவதில் தற்போது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் வேலைக்குச் செல்வதும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலை மேலும் அதிகரிக்குமானால் இது போன்ற பொறுத்தமற்ற திருமணங்கள் குறைய வாய்ப்புண்டு. இது சம்பந்தமாக அரப் நியுஸில் வந்த செய்தியையும் கீழே தருகிறேன்.
27 August 2008 –Arab News
THERE have been several cases reported recently of young girls, some as young as seven or eight, being married off by their parents to men in their 50s, 60s or even older. In some instances, parents are literally selling their daughters to older men purely for financial reasons —- to settle debts or to gain a substantial dowry for their own use.
The practice is repugnant. Young girls are being treated as potential sex slaves, commodities to be bought and sold at whim to satisfy the lusts of old men. It has to be stopped. The Grand Mufti has spoken against it and so too has the Saudi Human Rights Commission (HRC). Only this week, the head of the commission, Turki Al-Sudairi, called on the Saudi authorities to put an end to these marriages.
15 comments:
ஒரு இனத்தவரினதும் மதத்திவரினதும் சரி, மார்க்கங்களை மனிதன் மதிக்கும் முன், அந்த மார்க்கத்தாரின் வாழ்வியல் முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களே குறிப்பிட்ட சாரர் மீதான மதிப்பை மரியாதையை உண்டுப்பன்னுகின்றது.
மார்க்கம் எனும் மடமை வகுத்த வழிகளால் இதுப் போன்ற நிகழ்வுகள் அராபிய தேசங்களில் நிகழ்வது புதிதல்ல.
இவற்றை மதவாத கண்ணோட்டத்திற்கு அப்பால் மனித அறிவுடன் மனசாட்சியுடன் பாருங்கள். மடமையின் செயல்பாடுகளை.
அங்கு இல்லை என்றால் மற்ற நாடுகளில் கிடைக்கும் பெண்களுக்காக ஓடுவார்கள்,வறுமை தலைவிடித்தாடும் ஊர்கள் தான் அதிகமாக இருக்கே!!
எங்கும் கல்யாணம் பண்ணமுடியாது என்ற நிலை வந்தால் ஒருவேளை குறையக்கூடும்.
Comments by Shaikh ibn Baz who was the Grand Mufti of Saudi Arabia - i.e. the top scholar of Islam:
“I advise the young ladies not to refuse a man because of his older age. Even if he be ten, twenty or thirty years older, this is not a valid excuse. THE PROPHET (PEACE BE UPON HIM) MARRIED AISHA WHEN HE WAS FIFTY-THREE YEARS OLD AND SHE WAS NINE YEARS OLD. Older age is not harmful. There is no problem if the woman is older than the man and there is no problem if the man is older than the woman. The Prophet (peace be upon him) married Khadijah when she was forty years old and he was twenty-five years old, before he received his first revelation. That is, she was fifteen years older than him (may Allah be pleased with her). AND AISHA WAS MARRIED WHEN SHE WAS A YOUNG LADY OF SIX OR SEVEN YEARS AND THE PROPHET (PEACE BE UPON HIM) CONSUMMATED THE MARRIAGE WHEN SHE WAS NINE YEARS OLD AND HE WAS FIFTY-THREE YEARS OLD. Many of those who talk on the radio or television and speak against having disparaging ages between husband and wife are wrong. It is not permissible for them to say such things. Instead, what must be done, is the woman must look at the prospective husband and, if he be pious and appropriate, she must agree to him even if he is older than her. Similarly, the man must try to marry a woman who is pious and virtuous, even if she is older than him, especially if she is still less than mid life. In any case, age should not be taken as an excuse. It should also not be considered a shortcoming, as long as the man is pious or the woman is pious. May Allah make the affairs good for everyone!”
சுவனப்பிரியன்,
ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு இந்த கொடுமைகளை வெளிப்படையாக எழுதி மனம் வருந்துவது வியப்பளிக்கிறது. கொடுமைகளைத் தட்டிக்கேட்க முடியாவிட்டாலும் சுட்டிக் காட்ட இஸ்லாமிய பெருமக்கள் முன்வரவேண்டும். வெறுமனே மதப் புகழ்பாடாமல், உதாரணமாக வாழ்பவர்களால் தான் மதத்துக்கு பெருமை. இது எந்த மதத்துக்கும் பொருந்தும் கருத்துதான்.
உங்கள் செயல் பாராட்டத்தக்கது.
இவ்வளவு வயது வித்தியாசத்தில் மணம் செய்துகொண்டால், வயசு பொண்ணுக்கு கொடுக்கவேண்டிய உடல் சுகத்தை எப்போ எப்படிய்யா கொடுப்பான்? இயற்கையின் அதயாவசிய தேவையான அப்பெண்ணின் பாலுணர்வுக்கு அவள் மற்ற ஆண்களிடம் உறவு கொள்ளக் கூடாது என பர்தா மற்றும் கடுமையான சட்டங்களை கொண்டுவந்து அவர்களை முடக்கி மனிதனின் அடிப்படை இலவச சுகத்தைக்கூட அனுப்விக்க விடாம செய்துடறாங்க.
பாவம் இது போன்ற பெண்கள்.
:((
இதே போன்று இன்னொரு செய்தியையும் செய்தித்தாள்களில் படித்தேன். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வண்டிகள் ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு இளம் வயது பெண்ணின் பெற்றோர் விபத்தில் சிக்கியபோது அந்த இளம்பெண் காரில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளார்.
தடை விதிகளை மீறி அந்த பெண் காரை ஓட்டியது பரபரப்பாகியுள்ளது. சட்டம் தன் கடமையை செய்துவிடுமோ என்ற அச்சம் அதிகமாய் உள்ளது :(
கொடுமை.
சட்டம் வந்தது வரவேற்கப்பட வேண்டியது.
ஒலிம்பிக்ஸில் சவுதி ப்ரதமரின் இரண்டு புதல்விகள் கலந்துக்கிட்டாங்கன்னு பாத்தேன். நல்ல முன்னேற்றம்.
காசி பாரதி, வடுவூர் குமார், அனானி, கோவிக் கண்ணன், மாசிலா, சென்ஷி Surveysan - பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நாளை பதிலளிக்கிறேன். நன்றி.
கோவி கண்ணன்!
//ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு இந்த கொடுமைகளை வெளிப்படையாக எழுதி மனம் வருந்துவது வியப்பளிக்கிறது.//
தவறு நம்மவர்களே செய்தாலும் அதை தட்டிக் கேட்கும் மனப்பாங்கு எல்லோருக்கும் வர வேண்டும். இஸ்லாம் அனுமதித்த ஒரு செயலை இது போன்ற ஒரு சிலர் துஷ்பிரயோகம் செய்வதால்தான் பலராலும் இந்த சட்டம் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகிறது.
காசி பாரதி!
//மார்க்கம் எனும் மடமை வகுத்த வழிகளால் இதுப் போன்ற நிகழ்வுகள் அராபிய தேசங்களில் நிகழ்வது புதிதல்ல.//
உங்கள் வாதம் தவறு. மார்க்கம் சொன்னதை சரியாக விளங்கிக் கொள்ளாததால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. எனவே தான் அரசும் தற்போது தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
//இவற்றை மதவாத கண்ணோட்டத்திற்கு அப்பால் மனித அறிவுடன் மனசாட்சியுடன் பாருங்கள். மடமையின் செயல்பாடுகளை.//
அதற்குதான் இந்த பதிவே!
வடுவூர் குமார்!
//அங்கு இல்லை என்றால் மற்ற நாடுகளில் கிடைக்கும் பெண்களுக்காக ஓடுவார்கள்,வறுமை தலைவிடித்தாடும் ஊர்கள் தான் அதிகமாக இருக்கே!!//
விபச்சாரத்தில் ஈடுபடாமல் திருமணம் என்ற பந்தத்தில் செயல்பட்டுக் கொள்ளட்டும். ஆனால் அது அந்தப் பெண்ணின் முழு சம்மதத்தைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதே நம் அவா! இதில் வயது வித்தியாசத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சாட்டிங்கில் யாரோடு உரையாடினீர்கள் என்பதை கோவிக் கண்ணன் கண்டுபிடித்து விட்டாரா? :-)
மாசிலா!
//இயற்கையின் அதயாவசிய தேவையான அப்பெண்ணின் பாலுணர்வுக்கு அவள் மற்ற ஆண்களிடம் உறவு கொள்ளக் கூடாது என பர்தா மற்றும் கடுமையான சட்டங்களை கொண்டுவந்து அவர்களை முடக்கி மனிதனின் அடிப்படை இலவச சுகத்தைக்கூட அனுப்விக்க விடாம செய்துடறாங்க.//
திருமணம் என்ற பந்தத்தையும் தாண்டி ஆண் பெண் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல வருகிறீர்களா? இதை இஸ்லாம் என்ன உலகின் எந்த நாகரீகமடைந்த சமூகமும் ஒத்துக் கொள்ளாது. இதிலும் முடிவில் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.
அனானி!
//There is no problem if the woman is older than the man and there is no problem if the man is older than the woman.//
வயது வித்தியாசத்தை பெரிதுபடுத்தாமல் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் சம்மதித்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால் அது அவர்களின் விருப்பம். ஆனால் பெண் எதிர்ப்பு சொல்ல முடியாத சூழலை உருவாக்கி தகப்பன் தன் வறுமையை போக்கிக் கொள்ள இது போன்ற சந்தர்ப்பங்களை பயன் படுத்துவதைதான் இங்கு நாம் விமர்சிக்கிறோம்.
சர்வேசன்!
//ஒலிம்பிக்ஸில் சவுதி ப்ரதமரின் இரண்டு புதல்விகள் கலந்துக்கிட்டாங்கன்னு பாத்தேன். நல்ல முன்னேற்றம்.//
சவுதியில் பிரதமர் என்ற ஒரு பதவியே இல்லை. இங்கு நடப்பது மன்னராட்சி. ஒருக்கால் நீங்கள் குறிப்பிடும் அரபு நாடு கத்தாராக இருக்கலாம்.
கோவிக் கண்ணன்!
//ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது.//
இஸ்லாமிய நம்பிக்கைகளை அழகிய முறையில் விளக்கியிருக்கிறீர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களின் (தமிழர்களின்) வழியாக இருந்தது. பிறகு வந்த கலாச்சார படையெடுப்பால் பல தெய்வ வணக்கத்திற்க்கு மாற்றப் பட்டோம்.
இன்றுதான் சவுதியிலும் ரமலான் ஆரம்பம் ஆகிறது. வேலை நேரங்கள் முற்றிலுமாக மாறுபடும். இரவு 8 அல்லது 9க்கு வேலை தொடங்கி நடு நிசி 2 அல்லது 3 க்கு வேலை முடியும். 4 மணிக்கு நோன்பு வைப்பதற்காக சாப்பாடு. பிறகு தொழுகை. அதன் பிறகு ஒரு நீண்ட தூக்கம். நோன்பின் களைப்பே தெரியாத அளவுக்கு சவுதி ஆட்சியாளர்கள் வேலை நேரத்தை மாற்றி அமைத்திருப்பது பாராட்டத்தக்கது.
நண்பர்கள் அனைவருக்கும் ரமளான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment