Followers

Monday, August 18, 2008

கிழக்கு கடற்கரை சாலையில் விடுதலை சிறுத்தைகள் ரகளை

மாமல்லபுரம் : கல்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கும் முஸ்லிம்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.ஐ.இ உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது; போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஓட்டல் வைத்துள்ளனர்.

நேற்று சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் மற்றும் புதுச்சேரியிலிருந்து விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சென்னை நோக்கிச் சென்றனர். பகல் 2.30 மணிக்கு புதுப்பட்டினத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஓட்டல்களில் இரண்டு வேன்களில் வந்த அவர்கள்இ சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் பாஷா(45) என்பவரை கத்தியால் குத்தினர். அதை தடுக்க முயன்ற அவரது மகன் நசீர் மற்றும் ஊழியரையும் தாக்கினர். சத்தம் கேட்டுஇ எதிரே குளிர்பானக் கடையில் பணிபுரியும் புதுப் பட்டினத்தைச் சேர்ந்த ஜெய்லானி (22)இ காஜா(19) ஆகியோர் ஓடி வந்தனர். அவர்களையும் உருட்டுக் கட்டையால் தாக்கினர். தலையில் காயமடைந்த இருவரும் சுருண்டு விழுந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து அப்பகுதி முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் வந்த வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கடைகள் மூடப்பட்டன. ஓட்டலில் தகராறு செய்தவர்கள்இ தப்பித்தால் போதும் என வாகனங்களை விட்டுவிட்டு ஓடினர். அவ்வழியே வாகனங்களில் வந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை நிறுத்திஇ தகவலைத் தெரிவித்தனர்.

அவ்வழியே வந்த அரசு பஸ்கள்இ தனியார் வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். 50க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண் ணாடிகள் நொறுக்கப்பட்டன. மேலும்இ புதுப்பட்டினம் நோக்கி உருட்டுக்கட்டைஇ கத்தி போன்ற ஆயுதங்களுடன் சாலையில் நடந்து சென்றனர். வழியில் தென்படுபவர்களை எல்லாம் தாக்கினர். அதைக் கண்டு மக்கள் தலைதெறிக்க ஓடினர். அதேபோல்இ புதுப்பட்டினம் வரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரைத் தாக்க முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர்.இதனால்இ அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார்இ புதுச்சேரியிலிருந்து வந்த வாகனங்களை காத்தான்கடை சோதனைச் சாவடியிலிருந்து செய்யூர்இ மதுராந்தகம் வழியே திருப்பிவிட்டனர்.

புதுச்சேரியிலிருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள்இ காத்தமடை சோதனைச் சாவடி வழியே புதுப் பட்டினம் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்த கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன்இ எஸ்.ஐ.இ ரமேஷ்இ ஏட்டுகள் வேல்முருகன்இ பலராமன்இ மோகன் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். புதுப்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஓர் அணியாகவும்இ விடுதலைச் சிறுத்தைகள் ஓர் அணியாகவும் திரண்டனர். போர்க்களத்தில் நிற்பது போல் இரு தரப்பினரும் 300 அடி இடைவெளியில் நேருக்கு நேர் நின்றனர். போலீசார்இ இரு தரப்பினருக்கும் நடுவில் நின்றுஇ மோதலைத் தடுக்க முயன்றனர். குறைந்த அளவிலே போலீசார் இருந்ததால் பதட்டம் நீடித்தது. சிறிது நேரத்தில் செங்கல்பட்டு சரக போலீஸ் டி.ஐ.ஜி.இ துரைராஜ்இ காஞ்சிபுரம் எஸ்.பி.இ பெரியய்யாஇ திருவள்ளூர் எஸ்.பி.இ செந்தாமரைக்கண்ணன்இ விழுப்புரம் எஸ்.பி.இ அமல்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் வந்தனர். மோதலுக்குத் தயாராக நின்ற இரு தரப்பினரையும் துப்பாக்கியைக் காட்டியபடி விரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலைஇ போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தப்பியோடிய விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வாயலூர் சோதனைச்சாவடி அருகே மயிலாடுதுறையிலிருந்து வந்த அரசு விரைவு பஸ் கண்ணாடியை உடைத்தனர். பின் பஸ்சை கொளுத்த முயன்றனர். போலீசார் வந்துவிட்டதால்இ அங்கிருந்தும் தப்பியோடினர். விடுதலைச் சிறுத்தைகள் மாற்று வழியே கல்பாக்கம் டவுன்ஷிப்பிற்குள் சென்று கடைகளை அடித்து நொறுக்கினர். உடனேஇ கிழக்கு கடற்கரைச் சாலையில் குவிந்திருந்த முஸ்லிம்கள் அங்கு ஓடினர். அதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றது. உடனடியாக கல்பாக்கம் டவுன்ஷிப் கேட் மூடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இச்சம்பவத்தால் நேற்று பகல் 2.30 மணியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கல்பட்டு வழியே திருப்பிவிடப்பட்டன. இரவு வரை கிழக்கு கடற்கரைச் சாலை வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உளவுத்துறை அலட்சியம்? : கிழக்கு கடற்கரைச் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் நடத்திய வன்முறைக்கு உளவுத்துறை போலீசாரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காகஇ வாகனங்களில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியே நேற்று சென்றனர். பெரும்பாலான வாகனங்களில் கத்திஇ கோடரிஇ கற்கள்இ உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்கள் இருந்தன. அரசியல் கட்சி விழாக்களுக்கு அதிக அளவில் தொண்டர்கள் செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால்இ கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் நேற்று ஈடுபடவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதும்இ அதற்கு தொண்டர்கள் திரள்வதும் உளவுத்துறை போலீசாருக்கு முன்கூட்டியே தெரியாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சித்ரா பவுர்ணமியை ஒட்டி இன்னொரு அமைப்பு வழக்கமாக மாமல்லபுரத்தில் நடத்தும் மாநாட்டுப் பாதையிலும் இதேபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பது வழக்கம். இப்படி முன்னுதாரணங்கள் இருந்தும்இ வழிநெடுக உரிய பாதுகாப்பு போட உளவுத்துறை உயரதிகாரிகள் உத்தரவிடாதது ஏன்? எனஇ கடைசி நேரத்தில் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். உள்ளூர் போலீசார்இ சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி ஆயுதங்களைப் பறிமுதல் செய்திருந்தால்இ மோதலை தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்

No comments: