'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, June 29, 2009
சிலைகள் வைக்க மட்டும் ரூ. ஆயிரம் கோடியா?:
உ.பி., மாநில முதல்வராக இருப்பவர் மாயாவதி. இவர், கடந்த 25ம் தேதி லக்னோ நகரின் பல இடங்களில், தன் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் சிலைகளையும் திறந்து வைத்தார். சிலைகள் திறக்கப்படுமென, அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இவற்றை திறந்து வைத்தார். இந்தச் சிலைகளுக்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் செலவிடப்பட்டது. இதை எதிர்த்து ரவிகாந்த் என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், அவர் கூறியிருந்ததாவது: லக்னோ நகரின் பல இடங்களில், மாயாவதி தன் சிலைகளை நிறுவியுள்ளார். அது மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் சட்ட மேதை அம்பேத்கரின் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தையும் நிறுவியுள்ளார். இதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதற்காக மாயாவதி, இவ்வளவு அரசுப் பணத்தை வீணடித்துள்ளார். உ.பி., மாநில கலாசாரத் துறையின் பட்ஜெட்டில், 90 சதவீதம் சிலைகள் வைப்பதற்காக செலவிடப்பட்டுள்ளது.
யானைச் சிலைகள்: லக்னோவில் 15 மீட்டர் சுற்றளவில் 60 யானைச் சிலைகளை நிறுவியுள்ளார். இதற்காகவும், அவரின் சிலைகளை நிறுவவும் மட்டும் 52.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறிய செயல். சிலைகள் அமைப்பதற்காக அரசு பணத்தை மாயாவதி செலவிட்டது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். சிலை வைப்பதற்கு கோர்ட் தடை விதித்து விடக்கூடாது என்பதற்காகவும், சிலைகள் வைப்பதை எதிர்த்து வரும் 3ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அறிவித்ததாலும், அரைகுறையாகக் கட்டப்பட்ட பல சிலைகளையும் கடந்த 25ம் தேதி அவர் திறந்து வைத்துள்ளார்.
பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அல்லது உருவங்களை பெரிய அளவில் நிறுவக்கூடாது என, கடந்த ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயாவதி சார்பில் உ.பி., மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில அட்வகேட் ஜெனரலுமான எஸ்.சி.மிஸ்ரா ஆஜரானார். உ.பி., மாநில அரசு சார்பில் ஆஜரான வி.வி.லலித் கூறியதாவது: சிலைகள் வைப்பதற்காக மாயாவதி செலவிட்ட அனைத்து தொகைகளுக்கும் மாநில சட்டசபை அனுமதி அளித்துள்ளது என்றார்.
இதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சிலைகள் வைக்க அரசு பணத்தை ஏராளமான அளவில் செலவிட்டது தொடர்பாக, முதல்வர் மாயாவதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். நான்கு வாரங்களுக்குள் நோட்டீசிற்கு அவர் பதில் அளிக்க வேண்டும். மேலும், உ.பி., அரசு, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். உ.பி., மாநிலத்தில் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 5.9 கோடி பேர், தங்களின் ஜீவனத்தை நடத்த முடியாமல் போராடி வருகின்றனர். மேலும், குழந்தைகள் இறப்பு வீதமும் உ.பி., மாநிலத்தில் அதிகளவில் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சிலைகள் வைப்பதற்காக பல 100 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டதை நியாயப்படுத்த முடியாது. பொது வாழ்வில் உள்ளவர்கள், பொதுமக்களின் பணத்தை முறையாகச் செலவிட வேண்டும். அந்தப் பணத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.
சிதம்பரம் கண்டனம்: சிலைகள் வைப்பதற்காக முதல்வர் மாயாவதி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, தன் சிலையையும், தன் கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தையும் மாயாவதி நிறுவியுள்ளதால் என்ன பயன்? இந்திய அரசியலில் இதை விட வெட்கப்படத்தக்க விஷயம் வேறு இருக்குமா என்ன?
சிலைகள் வைக்க செலவிட்ட 1,000 கோடி ரூபாயை, ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், கல்வி அறிவை மேம்படுத்தவும் செலவிட்டிருக்கலாம் என்றார்.
-பத்திரிக்கைச் செய்தி
இது போன்ற கோமாளிகளை எல்லாம் முதல்மந்திரியாக ஆக்கும் இந்த மக்களை சொல்ல வேண்டும். இந்தியாவிலேயே கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியுள்ள ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் நமது அரசியல் அமைப்பின் மீதே கோபம் வருகிறது.
அரசு பணம் எந்த அளவு விரயமாக்கப்பட்டதோ அத்தனையையும் மாயாவதியின் சொத்திலிருந்து எடுத்து கோர்ட் சமன் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற கேடுகெட்ட அரசியல்வாதிகள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பின்னால் மாயாவதியும் ஒரு தெய்வமாக்கப்படலாம். யார் கண்டது? :-))
Thursday, June 25, 2009
மீகாயில் (மைக்கேல் ஜாக்ஸன்) இறைவனடி சேர்ந்தார்!
உலகம் முழுவதும் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த மைக்கேல் ஜாக்ஸன் சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இறந்து விட்டதாக பிபிசியின் மூலம் அறிந்தேன். கடைசி காலங்களில் தனது அண்ணன் அப்துல் அஜீஸின்(ஜெராமைக் ஜாக்ஸன்) முயற்ச்சியால் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தான் தொடர்ந்து ஒரு முழு இஸ்லாமியனாக வாழ முயற்ச்சிக்கிறேன் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதய நோயால் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டவருக்கு அங்கேயே மரணமும் நிகழ்ந்து விட்டது.
'எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர இறைவன் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே!'
-குர்ஆன் 2:286
Wednesday, June 24, 2009
வட்டியில்லா வங்கியை அரசு அறிமுகப்படுத்துமா?
திண்டுக்கல்: வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும், என ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை தெரிவித்தார். வட்டியில்லா இஸ்லாமிய வங்கி ஒருங்கிணைப்பு குழுவின் 2வது மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.
கண்காட்சியை திறந்து வைத்து நீதிபதி அக்பர் அலி பேசியதாவது:
வட்டியில்லாமல் கடன் கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன். சில வெளிநாடுகளில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுகிறது.விரைவில் இந்தியாவிலும் செயல்பாட்டிற்கு வரும். வட்டி வசூலிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஒரு நீதிபதியாக இருப்பதால் சாதாரண மக்களை விட அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. வரும் வழக்குகளை விசாரிக்கும் போது கடன்பட்டவர்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டேன். ஒரு காசுகூட வட்டியை குறைக்க மாட்டேன் என கல் நெஞ்சத்துடன் பேசுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதிக வட்டி வாங்க கூடாது என்ற நடைமுறை சட்டத்தில் உள்ளது.
நீதிபதியாக எங்களுக்கு சில அதிகாரங்களை அரசு கொடுத்துள்ளது. அதில், நாங்கள் நியாயத்தின் அடிப்படையில் வட்டியை குறைத்து நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்க முடியும். கந்துவட்டி ஒழிப்பு தண்டனை சட்டமும் நடைமுறையில் உள்ளது. நிதி நிறுவனங்கள் தரும் அதிக வட்டியை நம்பி பெரும் பணத்தை இழந்தவர்களும் உள்ளனர். இப்படி பணத்தை இழந்தவர்களுக்கு வசூலித்து கொடுக்க தனி கோர்ட் உள்ளது. இது தவிர, வட்டி தொல்லையில் இருந்து மக்களை காக்க நிறைய குற்றவியல் நடைமுறை சட்டங்களும் உள்ளன. இவ்வளவு சட்டங்களை தாண்டியும் வட்டி கொடுமைகள் செய்கிறது. சில மனிதர்களுக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இறைவன் கொடுத்தாலும், மனிதர்கள் தங்களுக்கு கிடைத்ததை சமமாக பங்கிட வேண்டும். தன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கணக்கு பார்ப்பதை விட,இருப்பதை மற்றவர்களுடன் பங்கிடும் நல்ல எண்ணம் வேண்டும். செலவினங்களை கூட தர்மமாக செய்ய வேண்டும். வட்டி வாங்க வேண்டாம் என்ற இஸ்லாம் சமூகத்தின் உயர்ந்த அறிவுரையை எல்லோரும் வரவேற்கின்றனர். "கடன் வாங்கியவர்கள் திரும்ப கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை, விட்டு விடு' என்ற இஸ்லாம் உபதேசம் எனக்கு மிகவும் பிடித்தது. இவ்வாறு பேசினார்.
-பத்திரிக்கை செய்தி
இந்த வட்டியினால் சீரழிந்த குடும்பங்கள் அனேகம் உண்டு. எனவே தான் இஸ்லாம் இந்த வட்டியின் பக்கம் நெருங்கக் கூட தடை விதிக்கிறது. இனி குர்ஆன் இடும் கட்டளைகளைப் பார்ப்போம்.
வட்டியை உண்போர் மறுமை நாளில் சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்கு காரணம். இறைவன் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்து விட்டான்.
குர்ஆன்: 2:275
இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான்.
குர்ஆன் 2:276
நம்பிக்கை கொண்டோரே! இறைவனை அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.
அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் இறைவனிடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர்ப்பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
குர்ஆன் 2: 278,279
மேற்கண்ட வசனங்கள் வட்டி வாங்குவதை எந்த அளவு கண்டிக்கிறது என்பதை விளங்கலாம். இதில் மத வித்தியாசம் எல்லாம் இல்லாமல் எங்கும் நீக்கமற இந்த கொடுமை நிறைந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை.
முகமது நபி வருகைக்கு முன் அரபு நாடுகளில் வட்டித் தொழில் அனைவரிடத்திலும் தாராளமாக புழக்கத்தில் இருந்தது.
வட்டியை தடை செய்த முகமது நபி இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்கு கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும்தான் வாங்க வேண்டும்: ஏற்கெனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும் கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்.
'தம்மிடம் இருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும்' என்ற கொள்கையின் காரணமாக தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதலில் தள்ளுபடி செய்தார்.
'எனது பெரிய தந்தையிடம் வட்டிக்கு கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது' என்று அறிவிப்பும் செய்கிறார். நஷ்டம் ஏற்பட்டாலும் எந்த சட்டமும் முதலில் தம் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள இவரல்லவோ ஒப்பற்ற தலைவர்.
வட்டியின் கொடுமையிலிருந்து நாமும் நமது குடும்பமும் விலகி இருக்கும் சூழலை இறைவன் நம் அனைவருக்கும் தர வேண்டும் என்று கூறி இப்பதிவை முடிக்கிறேன்.
Sunday, June 21, 2009
செவ்வாய் கிரகத்தில் ஏரி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான மற்றொரு ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்குள்ள வாயுவின் தன்மை, உயிரினங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, அமெரிக்கா சில விண்கலங்களை அங்கு அனுப்பியது. இதில், ஒரு விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், சமீபத்தில் நாசா விண்வெளி மையத் துக்கு கிடைத்துள்ளது.நீர் ஓடியதால் ஏற்பட்ட பள்ளம் ஒன்று படம் எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த பள்ளம், 30 மைல் தூரத்துக்கு இருக்குமென விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.
ஆயிரத்து 500 அடி ஆழ ஏரியாகவும் இருந்திருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை பனிக்கட்டியாக மாறி விடுகிறது அல்லது ஆவியாகி விடுகிறது.எனவே, செவ்வாய் கிரகத்தில் எந்த இடத்திலாவது உயிரினங்கள் இருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் கடலும், ஆறும், ஏரிகளும் இருந்திருக்கின்றன. ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த நீர்நிலைகள் மறைந்து போயுள்ளன. அதற்கான காரணத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
-நன்றி தினமலர்
இந்த செய்தி சம்பந்தமாக நான் முன்பு இட்ட பதிவையும் மேலதிக விபரத்திற்க்காக மீள் பதிவு செய்கிறேன்.
'பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175
"பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்." குர்ஆன் 7;10
இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!
சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.
எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.
Friday, June 19, 2009
'ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்' - கலைஞர்
”இங்கே மணமக்கள் வீற்றிருக்கும் காட்சியை நான் பார்க்கிறேன்; படித்தவர்களாக இருக்கின்றனர். ஒரு காலத்தில் இப்படிப்பட்ட சமூகங்களில் படித்தவர்களைப் பொறுக்கி எடுப்பதென்றால் கடினம்.தமிழகத்தில் ஈ.வெ.ரா., அண்ணாதுரையின் கருத்துக்கள், லட்சியங்கள் திராவிட இயக்கத்தினுடைய எண்ணங்கள் பரவத் துவங்கியது.
அன்று முதல் இன்று வரை அலைக்கழிக்கப்பட்ட சமுதாயம் விழிப்புற்று, "நாங்களும் மனிதர்கள் தான்; ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் தான்' என்ற துணிவும், நெஞ்சுறுதியும், திராவிட இயக்க தோற்றத்தால் ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.இங்கு கொங்கு வேளாளர், அருந்ததியர் சமூகப் பெயர்களைக் குறிப்பிடும்போது கையொலி எழுந்தது. அது கொங்குவேளாளர் சமூக கையொலியா, அருந்ததியர் சமூக கையொலியா என்று தெரியாது. யார் கை தட்டினாலும் ஒரே ஒலி தான்.
யாருடைய கையொலி என்று தரம்பிரிக்க முடியாது.அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு அறிவித்து சட்டமாக்கிய பெருமை தி.மு.க.,வுக்கு உண்டு. இது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான். என் உதவியாளர்களில் ஒருவரான நித்யா என்ற வாலிபர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். பி.காம்., வரை படித்தவர் எனும் போது பெருமையடைகிறேன்.
ஒரு காலத்தில், "நான் அய்யருக்கு சொந்தக்காரன்; அய்யங்காருக்கு வேண்டியவன்' என்பது பெருமையாக இருந்திருக்கலாம். அருந்ததியர் வீட்டுப் பையன் எனக்கு சினேகிதன் என்று சொல்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது”
தமிழக அரசின் துணை சபாநாயகர் துரைசாமியின் இளைய மகன் டாக்டர் பிரேம் குமார்-வீணா திருமணத்தை நடத்தி வாழ்த்துரை வழங்கும்போது நமது முதல்வர் உதிர்த்த முத்தே நாம் மேலே படித்தது.
நாத்திகத்திலேயே தனது அதிக நாளை கழித்த முதல்வர் தனது கடைசி காலங்களில் இறைவனை நோக்கியும் அவனது படைப்பாற்றலையும் சிலாகித்து பேச ஆரம்பித்துள்ளார். இது வியத்தகு மாற்றம். இது போன்ற மாற்றங்கள் மேலும் மேலும் நிகழ வேண்டும் என்பதே நம் அவா.
'இறைவனை வணங்குங்கள்: அவனுக்கு இணையாக எதையும் கருதாதீர்கள்: பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் இறைவன் நேசிக்க மாட்டான்.'
குர்ஆன்: 4:36
Wednesday, June 17, 2009
எங்கோ படித்த புதுக் கவிதைகள்!
எங்கோ படித்த புதுக் கவிதைகள்!
ரசித்த கவிதைகள்!
‘நான்கு வேளை சாப்பாடு
அளவில்லா நொறுக்குத் தீனி
நாலு காலு ஜீவன்கள்
ஆடு, மாடு, என்று உள்ளே தள்ளி,
நிலை தடுமாறி விழும்வரை
பட்டை அடித்து நீராவி இஞ்ஜின்
கணக்கா புகை விட்டு
நெஞ்சுவரை வயிறு பெருக்கினால்
நல் இதயம் எங்கே கிட்டும்?’
இயற்கை கொடுத்ததெல்லாம்இயல்பாய் கொடுத்திடமனசில்லாமல்போயிடுச்சு
தண்ணீரோ தாய்பாலோதடைபோட்டு நிறுத்தியாச்சு
கள்ளமில்லா பயிரும் வயிரும் காய்ஞ்சுதான் போச்சு
மரத்தயெல்லம்வெட்டியாச்சுமாடிவீடும் கட்டியாச்சு
தொல்லுலகில்நல்லோர் இருந்தும்எப்படி பெய்யும் மழை?
காவிரி
காவிரியைக் கடக்க
ஓடம் தேவையிலலை...- இனி
ஒட்டகம் போதும்
-------------------------------
கால காலமாய.....
காலிலே சலங்கை பூட்டி
கோவிலிலே ஆட விட்டீர்கள்
முதுகிலே சூடு வைத்து
அந்தப் புரத்திற்குள்
அனுப்பினீர்கள்!
உப்பில்லா உணவு கொடுத்து
மூலையிலே அமர்த்தினீர்கள்
சந்தேகம் வந்தபோதெல்லாம்
நெருப்பிலே இறக்கினீர்கள்
இப்போது.....
வேலைக்கு அனுப்பிவிட்டு
வேவு பார்க்கிறீர்கள்!
--------------------------------
பல்லவி
குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய்
குடங்களோடு அலைந்தோம்...
எங்கள் துயரம் தீர்க்க
எம்.எல.ஏ வைத் தேடினோம்
தொலை பேசியில்
எப்போது கேட்டாலும்
கிடைத்த பதில்...
'தூங்குகிறார்...'
'குளித்துக் கொண்டிருக்கிறார்....'
----------------------------------
மாற்று
கிராமத்து
வீடுகளில் கூட
ஹார்லிக்ஸ்,
காம்ப்ளான்
பாட்டில்கள்...
ஒன்றில் உப்பும்
இன்னொன்றில்
ஊறுகாயுமாக!
-----------------------------
அவதாரம்
வேலு நாச்சியாராய்
குதிரை மீது ஏறி வந்தேன்
இராணி மங்கம்மாளாய்
வீரவாள் சுழற்றினேன்
ஜான்ஸி ராணியாய்
எதிரிகளைப் பந்தாடினேன்...
குக்கர் சத்தம் கேட்டது
சமயலறைக்குள்
ஓடினேன்!
---------------------------
நன்றி
பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.
இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்...
கைப்பிள்ளையின்
கால் கொலுசை
தடவியபடி!
-------------------------
விநாயகர்
வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்
நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்
மருத்துவ மனையில்
வினை தீர்க்கும் விநாயகர்
வழியோரங்களில்
வழிவிடும் பிள்ளையார்
குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்
அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்
நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

Saturday, June 13, 2009
மொழி வெறி நமக்கு தேவைதானா?
மொழி வெறி நமக்கு தேவைதானா?
கேள்வி: நான் 3 வருடம் முன்பு திருமணம் முடித்தேன். நான் தமிழ் முஸ்லிம். என் மனைவி உருது முஸ்லிம். நான் தற்போது சவூதியில் உள்ளேன். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. என் குழந்தையிடம் நான் தமிழில் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் மனைவி என் குழந்தைக்கு உருது மொழியை கற்றுக் கொடுத்து வருவதால், என் குழந்தை தமிழில் பேசுவதை தவிர்த்து வருகிறாள். என் குடும்பத்தார் என் குழந்தையிடம் தமிழில் பேசலாம் என்று ஆசைப்பட்டு பேசினால், என் மனைவி அதைத் தடுக்கிறாள். நீங்கள் உருது மொழியில்தான் குழந்தையிடம் பேச வேண்டும் என்று கூறுகிறாள். எனக்கு என் குழந்தை இரண்டு மொழிகளிலும் பேச வேண்டும் என்று ஆசை. ஆனால் என் மனைவி தமிழ் மொழி கூடாது, உருது மொழியில்தான் குழந்தை பேச வேண்டும் என்று தமிழ் மொழியை மறுக்கிறாள். இதனால் எங்களுக்கிடையே சண்டை முற்றி வருகிறது. இந்த மொழி பிரச்னை தீர ஒரு நல்ல ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-வாசகர்
வழக்கறிஞரின் பதில்: உலகத்தில் உள்ள எந்த மொழியும் மற்ற மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. எல்லாம் சமம்தான். ஆனால் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றிருந்தால் அது அந்த நபருக்கு பல வகைகளில் உதவியாக இருக்கும்.
நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்வதால் உங்கள் வீட்டில் நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் உங்கள் குழந்தை தமிழ் மொழியை நிச்சயம் கற்றுக் கொள்ளும். உங்கள் குழந்தை உருது மொழியையும் கூடுதலாக கற்றுக் கொள்வது அதற்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.
ஆனால் இதனை வைத்து நீங்கள் உங்கள் குடும்பத்தில் பிரச்னையை உருவாக்க நினைக்க வேண்டாம். நீங்களும் உங்கள் மனைவியும் குழந்தையின் நலன் கருதித்தான் மொழி விஷயத்தில் சண்டையிடுகிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலிருந்து நன்கு புரிகிறது.
உங்கள் சண்டையானது குழந்தையின் மன வளர்ச்சியை பாதித்து விடக் கூடாது. நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இதில் நீதி மன்றம் தலையிடுவதற்கு ஏதுமில்லை.
-நன்றி உணர்வு வார இதழ்.
இது ஒரு புறம் இருக்க நான் மொழி சம்பந்தமாக முன்பு இட்ட பதிவை மேலதிக விபரமாக மீள் பதிவு செய்கிறேன்.
மொழி வெறி நமக்கு தேவைதானா?
'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22
மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.
குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.
உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.
பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு ஏன் தமிழில் கொடுப்பதில்லை?
ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் 'அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் 'அதான்' அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.
முஸ்லிம்கள் அரபியில் மட்டுமே தங்கள் பெயர்களை வைக்கிறார்களே ஏன்?
இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சாந்தி, அன்பு, அறிவழகன், முத்து போன்ற அழகிய பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் முருகன், ராமன், கணபதி என்று உருவம் வைத்து வணங்கும் தெய்வங்களின் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை செய்கிறது.
உதாரணத்திற்கு குமார் என்ற நண்பர் பழைய பெயரிலேயே முஸ்லிம் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை முதலில் சந்திப்பவர்கள் 'குமார் சௌகரியமா?' என்று விசாரித்தவுடன் மனதுக்குள் இவர் செட்டியாரா, கவுண்டரா, தேவரா, நாடாரா, தலித்தா, பிராமணரா? என்ற எண்ணம் ஓடும். சாதி நம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப் போய் இருக்கிறது. அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது. எனவே தான் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அரபியிலேயே பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.
இப்றாகிம், மூஸா போன்ற பெயர்கள் அரபு பெயர்கள் அல்ல. இதை இன்றும் முஸ்லிம்கள் வைப்பதன் மூலம் அரபி அல்லாத பெயர்களை வைப்பதற்கு தடை இல்லை என்று அறியலாம். அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.
முனாப், முத்தலீப் போன்றவை அன்றைய அரபிகள் வணங்கி வந்த தெய்வங்களின் பெயர்கள். அப்துல் முனாப் என்றால் முனாபின் அடிமை என்று தமிழில் பொருள் வரும். 'அப்துல் முகமது' என்றால் முகமதின் அடிமை என்று பொருள் வரும் முகமது நபி இறைவனின் தூதர் தானே ஒழிய நாம் அவருக்கு அடிமைகள் அல்ல. அதே போல் அல்லாபிச்சை, மைதீன்பிச்சை என்று தன்னை இழிவு படுத்திக் கொள்வது போல் தோற்றமளிக்கும் பெயர்களையும் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை இழிவுபடுத்தும்படி வைக்கும் பெயர்களை மாற்றிக் கொள்ளும் படி முகமது நபி கட்டளை இட்டுள்ளார்.
என்னோடு ஒன்றாக வேலை பார்க்கும் ஹைதராபாத்தியுடன் ஒரு முறை மொழி சம்பந்தமாக சர்ச்சை வந்தது. 'இந்துக்களின் மொழி தமிழ் மொழி. நாங்கள் பேசும் உருது மொழி இஸ்லாமியருக்கு சொந்தமான மொழி' என்று ஏதோ மிகப் பெரிய தத்துவத்தை உதிர்ப்பது போல் பேசினான்.
'மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரையும் வேதங்களையும் அனுப்பியிருக்கிறேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுவது உனக்குத் தெரியுமா?' - சுவனப்பிரியன்
'ஆமாம். நானும் படித்திருக்கிறேன்' - ஹைதராபாதி
'உருது மொழி எப்போது உருவானது?' - சுவனப்பிரியன்.
'மொகலாயர்கள் காலத்தில்' - ஹைதராபாதி
'அப்படியானால் உருது மொழிக்கு வேதமோ தூதரோ வந்திருக்கிறார்களா?' -சுவனப்பிரியன்
'அதெப்படி! முகமது நபிதான் கடைசி நபியாயிற்றே! அவருக்கு பிறகுநபி வர முடியாதே!' - ஹைதராபாதி
'ஆதி மொழியான தமிழுக்கு வேதமும், தூதரும் இறைவனிடமிருந்து வந்திருக்கிறார்கள். உன் மொழியான உருதுக்கு அத்தகைய சிறப்பு ஏதும் இல்லை. அப்படியானால் நாம் இருவர் பேசும் தாய் மொழிகளில் யாருடைய மொழி சிறந்த மொழி?' - சுவனப்பிரியன்
இந்த கேள்விக்கு இன்று வரை அவனிடமிருந்து பதில் வரவில்லை. மொழிகளையும் நிறங்களையும் வைத்து உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் மனப் பாங்கு என்று மாறுமோ தெரியவில்லை.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4
மேலும் முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.
'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.
மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.
இறைவனே மிக அறிந்தவன்
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Wednesday, June 10, 2009
ஆரிய திராவிட பிரச்னை எப்போது ஒழியும்?
இன்றைய தினத்தில் இணையத்தில் இருந்து எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஆரிய திராவிட பிரச்னை ஏதாவது ஒரு வகையில் எழுந்து கொண்டே இருக்கிறது. பிராமணர்களே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என்று கூறுவதற்க்கென்றே தமிழ் ஓவியா, விடாது கருப்பு போன்ற வலைப்பதிவர்கள் பதிவுகளை எழுதித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை சாடி கோவிக்கண்ணன் போன்ற வலைப்பதிவர்கள் பல பதிவுகளை எழுதி விட்டனர்.
'எதற்க்கெடுத்தாலும் பிராமணர்களையே ஏன் குறை கூறுகிறீர்கள்? நான் பிராமணன் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். முடிந்தால் நீங்களும் நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டியதுதானே!' என்று டோண்டு ராகவன் போன்ற பல பதிவர்கள் பல பதிவுகளையும் எழுதி விட்டனர். இந்த பிரச்னை என்றுதான் தீரும்?
எல்லா மக்களுக்கும் படிப்பும், அரசு வேலையும் கிடைத்து விட்டால் பொருளாதார உயர்வு கிடைத்து விடும். அப்போது இந்த சாதி வித்தியாசம் தானாக மறைந்து விடும் என்பது பலரின் அபிப்ராயம். ஆனால் நடைமுறையிலோ நிலைமை தலை கீழாக இருக்கிறது. படித்தவர்கள் நிறைந்த இந்த இணையத் தளங்களில்தான் சாதிச் சண்டையின் உக்கிரத்தையே பார்க்க முடிகிறது. அதே போல் பத்திரிக்கைகளில் வரும் 'மணமேடை' யில்தான் இந்த நாட்டில் உள்ள ஜாதிகளையும் அதன் உட்பிரிவுகளையும் விலாவாரியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அமெரிக்கா சென்ற ஒரு பிராமணர் அங்கு ஒரு தலித் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 'திருமணம் செய்து கொண்டு விட்டாய். ஓ.கே. ஆனால் நம் ரத்தத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் ஒரு கரு வளரக் கூடாது. குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ளாதே' என்று பிராமணரின் குடும்பத்தவர் தடை போட அதை அமுல் படுத்தகிறார். இதை தெரிந்து கொண்ட அந்த பெண் 'வன் கொடுமை' சட்டத்தில் போலீஸில் புகார் செய்ய அந்த பிராமணரை உள்ளே தள்ளுகிறது போலீஸ். சட்டத்துக்கு பயந்த அந்த பிராமணர் 'இனி நாங்கள் ஒற்றுமையாக இருந்து குழந்தை பெற்றுக் கொள்கிறோம்' என்று போலீஸூக்கு எழுதிக் கொடுத்து விட்டு தற்போது மனைவியோடு அமெரிக்கா பயணம் ஆகியுள்ளார் அந்த படித்த மேதை. இதை நான் இங்கு குறிப்பிட காரணம் நம் சமூகத்தில் சாதி எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளவே!
சாதியை ஒழிப்பதற்காக இந்து மதம், இஸ்லாமிய மதம் இரண்டையும் கலந்து உருவாக்கிய சீக்கிய மதத்தையும் சாதிப்பேய் விட்டு வைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட சீக்கியர்கள் குருத்வாராவில் நுழைந்ததை காரணம் காட்டி இரண்டு பேரை கொலை செய்ததை நாம் இரண்டு வாரம் முன்பு செய்திகளில் பார்த்தோம். பஞ்சாபே இரண்டு நாட்கள் பற்றி எறிந்தது.
இலங்கையையும் எடுத்துக் கொள்வோம். மலையக மக்களுக்கும் யாழ்ப்பாண மக்களுக்கும் உயர்வு தாழ்வு கற்ப்பிக்கப்படுகிறது. மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்று பட்ட இவர்களுக்குள்ளும் சாதிப்பாகுபாடு.
இதற்க்கெல்லாம் விடிவே கிடையாதா? அடுத்த தலைமுறையிலாவது இந்த மக்கள் தலைநிமிர்ந்து வாழ முடியாதா? என்ற கேள்விகளுக்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கூறும் வழிமுறையை கீழே பார்ப்போம்:
"தோழர்களே!
எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.
இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.
இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.
ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.
இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.
இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.
இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.
இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.
ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.
இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.
அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.
சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.
சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!
எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?"
- கடவுள் மறுப்பிலேயே தனது காலத்தை கழித்த பெரியாரையும் கவர்ந்த இந்த இஸ்லாத்தின் தனித் தன்மையை என்னவென்று சொல்வது!
'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.'
-குர்ஆன் 2:185

Monday, June 08, 2009
ஆகாய விமானமும், பறவைகளும் - சில விளக்கங்கள்
'ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? இறைவனைத் தவிர யாரும் அவற்றை அந்தரத்தில் நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 16:79
'அவர்களுக்கு மேலே பறவைகள் சிறகுகளை விரித்தும் மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.'
-குர்ஆன் 67:19
பூமி தன்னைத்தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத்தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்த பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்க்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.
வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்த பறவைகள் மீது மோத வேண்டும்.
பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை இருப்பதால் அந்த பறவையை பூமி சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின் பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன் பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்த பூமி வேகமாக சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது. பூமியில் மோதி செத்து விடும்.
இதனாலேயே 'வசப்படுத்தப்பட்ட' என்ற வார்த்தையை குர்ஆன் பயன்படுத்துகிறது.
இதே வசனத்தை தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களோடு பொறுத்திப் பார்ப்போம்.
இரண்டு விமானங்கள் முறையே ஒன்று டில்லியில் இருந்து ஹாங்காக்கிற்கும் மற்றொன்று ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கும் ஒரே வேகத்தில் ஒரே நேரத்தில் பறந்தால் அவை ஒரே நேரத்தில் தரை இறங்குமா? இக் கேள்விக்கு 'ஆம்' என்றே அனைவரும் பதில் சொல்வார்கள். அதைத் தொடர்ந்து 'எவ்வாறு' என்று மற்றொரு கேள்வியை எழுப்பினால் 'அவ்விரு விமானங்களும் பறக்கும் தூரமும் பறக்கும் வேகமும் ஒன்றாக இருப்பதால் அவை இரண்டும் ஒரே நேரத்திலேயே தரை இறங்கும்' என்று பதில் கூறப்படும். இந்த பதில் முறையான பதிலாகாது. குறை உடைய பதிலாகும்.
பூமியின் மீது மேற் கொள்ளப்படும் பயணமாக இருந்திருந்தால் இந்தப் பதில் போதுமானதே. ஏனென்றால் பூமி சுழன்ற போதிலும் பூமியின் மீது செய்யப்படும் பயணங்களை அது பாதிப்பதில்லை. ஆயினும் விமானங்கள் தரையை விட்டு கிளம்பியவுடன் பூமியுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. எனவே பூமியின் சுழற்ச்சி விமானப் பயணத்தை பாதிக்க வேண்டும்.
உதாரணமாக டில்லி விமானம் ஹாங்காக்கை நோக்கி மணிக்கு 650 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதே நேரத்தில் பூமியின் சுழற்ச்சி விமானம் செல்லும் அதே திசையில் டில்லியை சுழற்றுகிறது. இப்போது விமானம் பறக்கும் அதே வேகத்தில் பூமியும் சுழலுவதாக இருந்தால் டில்லி விமானம் எப்போதுமே டில்லியின் வான் பரப்பில் எங்கும் நகராமல் அந்தரத்தில் நின்றிருக்கும். இதிலிருந்து விண்ணில் பறக்கும் ஒருவர் கிழக்குத் திசையில் பறப்பதாக இருந்தால் பூமி சுழலும் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்க வேண்டும் என்றும் அப்போது மட்டுமே அவர் போக வேண்டிய இலக்கை எளிதாக அடைய முடியும் என்பதையும் அறியலாம்.
ஆனால் உண்மை என்னவெனில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1675 கிலோ மீட்டர் என்பதாகும். இந்த நிலையில் டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறப்பதாக இருந்தால் ஹாங்காங்கை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியும்? கீழ்க் கண்டவாறு இதை நாம் கணக்கிடலாம்.
விமானப் பயணங்களின் விபரீத விந்தைகள்:
பூமியின் சுழற்சி வேகம் 1675 கிலோ மீட்டர்கள். ஆயினும் விமானத்தை முந்தும் போது அதனுடைய சார்பியல் (relative speed) வேகம் (1675-650) 1025 கிலோமீட்டர்-மணி என்பதாகும். இதிலிருந்து டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறந்த போதும் அந்த விமானத்தால் டில்லியிருந்து முன்னேறிச் செல்ல முடியாமல் டில்லியிருந்து 1025 கிலோ மீட்டர் பின்வாங்கிச் செல்ல நேரிட்டது என்பதைப் பார்த்தோம். இதை மற்றொரு விதத்தில் கூறுவதாக இருந்தால் டில்லி விமானம் புறப்படுவதற்கு முன்னர் ஹாங்காங்கிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்ததோ அதைவிட 1025 கிலோ மீட்டர் அதிக தூரத்துக்கு விமானம் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும்.
இப்போது ஹாங்காங் விமானத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். இந்த விமானம் ஹாங்காங்கிலிருந்து டில்லி நோக்கிப் பறக்கிறது. வேறு விதத்தில் கூறினால் பூமி சுழலும் திசைக்கு எதிர் திசையில் ஹாங்காங் விமானம் பறக்கிறது. எனவே இந்த விமானம் டில்லியை நோக்கி ஒரு மணி நேரத்தில் 650 கிலோ மீட்டர் முன்னேறிய போது டில்லியானது அதே நேரத்திற்குள் 1675 கிலோ மீட்டர் தூரம் அந்த விமானத்தை நோக்கி முன்னேறுகிறது. எனவே இந்த விமானத்தின் சார்பியல் வேகம் இப்போது (650 +1675) மணிக்கு 2325 கிலோ மீட்டர்களாகும். பூகோளத்தின் சுழற்ச்சியால் இப்படிப்பட்ட விபரீத விளைவுகள் உள்ளபடியே ஏற்படுவதாக இருந்தால் ஹாங்காங் விமானம் 100 நிமிடத்தில் டில்லியை அடைய நேர்ந்திருக்கும்.
அதே நேரத்திலேயே டில்லி விமானமும் தரை இறங்குவதாக இருந்திருந்தால் அந்த விமானம் ஹாங்காக்கில் தரை இறங்கி இறக்க முடியாது. அந்த விமானம் தரை இறங்கிய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5500 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஹாங்காங் இருந்திருக்கும். இப்படிப்பட்ட விபரீத விந்தை நடைபெறுமாயின் டில்லி விமானம் 39 மணி நேரம் கழிந்த பிறகே ஹாங்காங்கை அடைய முடியும். எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கும் இந்த முடிவு? ஆனால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நமது விமான பயணத்திற்கு ஏற்படுகிறதா? இல்லவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் பூமி சுழலவில்லை என்பது இதன் பொருளாகுமா? அதுவும் இல்லை.
பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருவதற்காக நகர்ந்து செல்கிறதோ அந்த திசையில் பறக்கும் விமானங்கள் பூமியின் மீது மோதி நொறுங்கிப் போக வேண்டும். இதைப் போல் பூமி எந்தத் திசையில் நகர்கிறதோ அந்த திசையில் பறக்கும் விமானங்கள் ஒரு சில வினாடிகள் பூமியிலிருந்து தவறிப் போக வேண்டும். பூகோளத்தின் சூரியவலம் இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தோற்றுவிக்குமாயின் இந்த பூமியில் நமக்கு விமானப் பயணம் சாத்தியமாகுமா? ஆனால் நாம் இவ்விதப் பிரச்னைகள் ஏதுமின்றி விமானப் பயணங்களை சுலமாக நடததிக் கொண்டிருக்கிறோம்.
இதே போல் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பூமியின் சுழற்ச்சியாலும் அதன் நகர்வாலும் அதன் மீது பறக்கும் பறவைகளுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்துள்ளோம். பூமியின் ஈர்ப்பு விசையானது காற்று மண்டலத்திலும் பரவி இருப்பதால் பூமி காற்று மண்டலத்தையும் தன்னுடன் இணைத்தவாறே சுழல்கிறது. மேலும் சூரியனையும் சுற்றி வருகிறது. எனவே காற்று மண்டலத்தின் மிக பலம் வாய்ந்த கீழடுக்களில் பறக்கும் பறவைகளானாலும் விமானங்களானாலும் அவைகளின் நகர்வு (பறத்தல்) பூமியின் மீது ஓடும் வாகனங்களைப் போன்று பூமியுடன் பிணைக்கப்பட்டதைப் போன்று நடைபெறுகின்றன.
பூமியின் ஈர்ப்பாற்றல் அதன் மீது பறக்கும் பொருட்களை நேரிடையாக ஈர்ப்பதுடன் அவை பறக்கும் இடத்தையும் காற்று மண்டலத்தையும் பூமியுடன் பிணைத்திருக்கும் விதத்தில் அவைகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பூமியின் மீது பறப்பவைகள் பூமியின் சுழற்சி மற்றும் அதன் நகர்வு போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை இறைவன் தாமே செய்த காரணத்தால் இப்பறவைகளை பூமியின் சுழற்சியாலும் நகர்வாலும் ஏற்பட இருந்த இடையூறுகளில் இருந்து இறைவன் தாமே தடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது மிகப் பொருத்தமான அதே நேரத்தில் மிக சீரியஸான நினைவூட்டல் என்பதும் இந்த வசனங்களிலிருந்து நன்கு விளங்க முடிகிறது.
'ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? இறைவனைத் தவிர யாரும் அவற்றை அந்தரத்தில் நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 16:79
'அவர்களுக்கு மேலே பறவைகள் சிறகுகளை விரித்தும் மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.'
-குர்ஆன் 67:19
தகவல் உதவி
'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்'
வானியலைப் பற்றி இன்னும் மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Tuesday, June 02, 2009
புனித மெக்கா பள்ளியின் இமாம்கள்!
புனித மக்கா பள்ளியில் ஒரு முஸ்லிம் தொழுவது பல நன்மைகளை அள்ளித் தரும் ஒரு நிகழ்வு. அந்த பள்ளியில் தலைவராக நின்று தொழ வைப்பவர் உண்மையிலேயே பாக்கியம் செய்தவராகத்தான் இருக்க வெண்டும். நண்பர் அனுப்பிய மெயிலை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.
Haram al-Sharif and the famous Mosque imams hold a place at the hearts of millions of Muslims. And because many people asks which Imams lead their prayers
I would like to introduce the permanent imams and Abstract of each
The number of permanent Imams are 6 and they are divided on this scenario, Five (One for each prayer) and one of them is standby.
1- صلاة الفجر Morning Fajr Prayer
الشيخ الدكتور : سعود بن ابراهيم بن محمد آل شريم القحطاني
Dr. Sheikh: Saud bin Ibrahim bin Mohammed Al-Qahtani Shureim
Age: 40
Place of Birth: Riyadh - Shaqra
Position: Former judge + teacher in the Holy Mosque in Makkah + Graduate Studies Department, Faculty of Sharia, or the University of Um-AlQura
The date of appointment in the Haram: 1414 H
Has a large herd of camels which he spends some of the time
And is written to explain the uniformity and messages of Imam Muhammad bin Abdul Wahhab in the Holy Mosque in Makkah
And well known for his Poetry and the kind words
Except for one day early in the month and is the dawn of Friday Isalih
Dr. Sheikh: Saleh bin Abdullah bin Humaid Mohammed Al-Khaldi
Age: 57
Place of Birth: Buraidah
Job title: Chairman of the Shura Council + member of the senior scientists
The date of appointment in the Haram: 1404 H
And interested in the interpretation of the Qur’an.
2- صلاة الظهر Zuhr prayer
الشيخ الدكتور : صالح بن محمد آل طالب
Dr. Sheikh: Saleh Bin Mohammed Al-Talib
Age: 33
The date of appointment in the Haram: 1423 H
3- صلاة العصر Asr Prayer
الشيخ الدكتور : أسامة بن عبد الله بن عبد الغني خياط
Dr. Sheikh: Osama Bin Abdullah Bin Abdul-Ghani Khayat
Age: 51
Place of Birth: Makkah
Occupation: Teacher at the Haram + member of the Shura Council previously
The date of appointment in the Haram: 1418 e
Known for his strong rhetoric Aizelzl hearts
4- صلاة المغرب Maghrib Prayer
الشيخ الدكتور : عبد الرحمن بن عبد العزيز بن عبد الله آل سديس العنزي
Dr. Sheikh: Abdul Rahman bin Abdul-Aziz bin Abdullah Al al-Sudais
Age: 44
Place of Birth: El Bakeereya in Qassim
Job title: Assistant Professor, Faculty of Shariah at the University or villages
The date of appointment in the Haram: 1404 e before the age of 22, and Omar Sheikh then age 22
5- صلاة العشاء ISHA Prayer
الشيخ : محمد بن عبدالله آل عثمان السبيّل من قضاعة من قحطان
Sheikh: Mohammed bin Abdullah Al-Othman
Age: 81
Place of Birth: El Bakeereya in Qassim
Job title: President-General of the affairs of the Holy Mosque in Makkah and the holy former civil + member of the senior scientists
The date of appointment in Al-Haram: 1385 e before the age of 41 ..
Known and the knowledge of his fatwa, which left to the directory of the book, and may Allah year-old ... Amen
Rotate the evening prayers, sometimes the way with Sheikh Sheikh / Salih Bin Mohammed Al-called
Sheikh Saleh bin Humaid, the Imam of the reserve in order to move to Riyadh, as most of the month to the Shura Council's responsibility to come to Makkah and once a month to the Friday sermon
الشيخ المؤذن علي أحمد ملا
Muezzin muezzin's 17, a muezzin for each two assumptions in the week, the sheikh is muezzins
Bilal Sheikh Ali Ahmad Mulla
Aged about 65 years

நாத்திகம் இஸ்லாமியரிடத்தில் அதிகம் இல்லை ஏன்?
நாத்திகம் இஸ்லாமியரிடத்தில் அதிகம் இல்லை ஏன்?
இன்று உலகம் முழுவதும் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் கூத்துகளை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அனைத்து மதத்திலும் ஆன்மீகத் தலைவர்கள் இறைவனின் வாரிசு என்று அறிமுகப்படுத்தப்பட்டு மனிதர்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர்கள் என்ற நிலையில் வைத்துப் பார்க்கிறோம். சில நாட்களில் அந்த மகான்களின் சுய ரூபம் தெரிய வரும் போது அந்த மதத்தின் மீதே வெறுப்புற்று நாத்திகத்தின் பக்கம் பலரும் சென்று விடுகின்றனர். இது இந்து, இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம் என்று எல்லா மதத்துக்கும் பொருந்தும். பல இடங்களில் நாத்திகம் வளர்வதற்கு இதுவே முதற்காரணம்.
இது போன்று மதத்தின் பெயரால் தனி மனிதர்கள் வயிறு வளர்க்கக் கூடாது என்ற நோக்கிலேயே பல சட்டங்களை முகமது நபி வகுத்துச் சென்றுள்ளார். தான் ஒரு சாதாரண மனிதன்தான்: இறை செய்தி ஒன்றைத் தவிர வேறு சிறப்பு எனக்கு இல்லை என்று பல முறை முகமது அந்த மக்களின் முன்னால் கருத்தைப் பதிய வைத்து சென்றுள்ளார். குர்ஆனும் பல இடங்களில் இதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அவற்றில் சில வசனங்களை கீழே பார்ப்போம்.
'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப்பட்டுள்ளேன். முஸ்லிம்களில் நான் முதலானவன்' என்றும் முகம்மதே (அந்த மக்களுக்கு) கூறுவீராக.
குர்ஆன் 6:162
'இறைவன் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்த தீங்கும் எனக்கு ஏற்ப்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும் நற்செய்தி கூறுபவனாகுமே இருக்கிறேன்' என்று முகம்மதே கூறுவீராக.
குர்ஆன் 7:188
இந்த வசனங்களின் மூலம் இறைவன் அல்லாது தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை முகமது நபி உலக மக்களுக்கு அறிவிக்கிறார். முகமது நபி ஆன்மீகத்தின் பெயரால் தனது வருவாயை பெருக்கிக் கொள்ள நினைத்திருந்தால் மேற்கண்ட வசனங்களை மக்களுக்கு அறிவிக்காமல் மறைத்திருக்கவும் முடியும். முகமது நபியாலேயே எதுவும் செய்ய முடியாத போது நம் நட்டில் நாகூர் தர்காவில் அடக்கப்பட்டிருக்கும் இறந்து விட்ட ஒரு மகானால் என்ன செய்து விட முடியும் என்று பலரும் சிந்திப்பதில்லை.
இறைவனே மிக அறிந்தவன்.

Subscribe to:
Posts (Atom)