Followers

Friday, June 19, 2009

'ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்' - கலைஞர்



”இங்கே மணமக்கள் வீற்றிருக்கும் காட்சியை நான் பார்க்கிறேன்; படித்தவர்களாக இருக்கின்றனர். ஒரு காலத்தில் இப்படிப்பட்ட சமூகங்களில் படித்தவர்களைப் பொறுக்கி எடுப்பதென்றால் கடினம்.தமிழகத்தில் ஈ.வெ.ரா., அண்ணாதுரையின் கருத்துக்கள், லட்சியங்கள் திராவிட இயக்கத்தினுடைய எண்ணங்கள் பரவத் துவங்கியது.

அன்று முதல் இன்று வரை அலைக்கழிக்கப்பட்ட சமுதாயம் விழிப்புற்று, "நாங்களும் மனிதர்கள் தான்; ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் தான்' என்ற துணிவும், நெஞ்சுறுதியும், திராவிட இயக்க தோற்றத்தால் ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.இங்கு கொங்கு வேளாளர், அருந்ததியர் சமூகப் பெயர்களைக் குறிப்பிடும்போது கையொலி எழுந்தது. அது கொங்குவேளாளர் சமூக கையொலியா, அருந்ததியர் சமூக கையொலியா என்று தெரியாது. யார் கை தட்டினாலும் ஒரே ஒலி தான்.

யாருடைய கையொலி என்று தரம்பிரிக்க முடியாது.அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு அறிவித்து சட்டமாக்கிய பெருமை தி.மு.க.,வுக்கு உண்டு. இது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான். என் உதவியாளர்களில் ஒருவரான நித்யா என்ற வாலிபர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். பி.காம்., வரை படித்தவர் எனும் போது பெருமையடைகிறேன்.

ஒரு காலத்தில், "நான் அய்யருக்கு சொந்தக்காரன்; அய்யங்காருக்கு வேண்டியவன்' என்பது பெருமையாக இருந்திருக்கலாம். அருந்ததியர் வீட்டுப் பையன் எனக்கு சினேகிதன் என்று சொல்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது”

தமிழக அரசின் துணை சபாநாயகர் துரைசாமியின் இளைய மகன் டாக்டர் பிரேம் குமார்-வீணா திருமணத்தை நடத்தி வாழ்த்துரை வழங்கும்போது நமது முதல்வர் உதிர்த்த முத்தே நாம் மேலே படித்தது.

நாத்திகத்திலேயே தனது அதிக நாளை கழித்த முதல்வர் தனது கடைசி காலங்களில் இறைவனை நோக்கியும் அவனது படைப்பாற்றலையும் சிலாகித்து பேச ஆரம்பித்துள்ளார். இது வியத்தகு மாற்றம். இது போன்ற மாற்றங்கள் மேலும் மேலும் நிகழ வேண்டும் என்பதே நம் அவா.

'இறைவனை வணங்குங்கள்: அவனுக்கு இணையாக எதையும் கருதாதீர்கள்: பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் இறைவன் நேசிக்க மாட்டான்.'
குர்ஆன்: 4:36

No comments: