Followers

Tuesday, June 02, 2009

நாத்திகம் இஸ்லாமியரிடத்தில் அதிகம் இல்லை ஏன்?

நாத்திகம் இஸ்லாமியரிடத்தில் அதிகம் இல்லை ஏன்?

இன்று உலகம் முழுவதும் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் கூத்துகளை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அனைத்து மதத்திலும் ஆன்மீகத் தலைவர்கள் இறைவனின் வாரிசு என்று அறிமுகப்படுத்தப்பட்டு மனிதர்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர்கள் என்ற நிலையில் வைத்துப் பார்க்கிறோம். சில நாட்களில் அந்த மகான்களின் சுய ரூபம் தெரிய வரும் போது அந்த மதத்தின் மீதே வெறுப்புற்று நாத்திகத்தின் பக்கம் பலரும் சென்று விடுகின்றனர். இது இந்து, இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம் என்று எல்லா மதத்துக்கும் பொருந்தும். பல இடங்களில் நாத்திகம் வளர்வதற்கு இதுவே முதற்காரணம்.

இது போன்று மதத்தின் பெயரால் தனி மனிதர்கள் வயிறு வளர்க்கக் கூடாது என்ற நோக்கிலேயே பல சட்டங்களை முகமது நபி வகுத்துச் சென்றுள்ளார். தான் ஒரு சாதாரண மனிதன்தான்: இறை செய்தி ஒன்றைத் தவிர வேறு சிறப்பு எனக்கு இல்லை என்று பல முறை முகமது அந்த மக்களின் முன்னால் கருத்தைப் பதிய வைத்து சென்றுள்ளார். குர்ஆனும் பல இடங்களில் இதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அவற்றில் சில வசனங்களை கீழே பார்ப்போம்.

'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப்பட்டுள்ளேன். முஸ்லிம்களில் நான் முதலானவன்' என்றும் முகம்மதே (அந்த மக்களுக்கு) கூறுவீராக.
குர்ஆன் 6:162

'இறைவன் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்த தீங்கும் எனக்கு ஏற்ப்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும் நற்செய்தி கூறுபவனாகுமே இருக்கிறேன்' என்று முகம்மதே கூறுவீராக.
குர்ஆன் 7:188

இந்த வசனங்களின் மூலம் இறைவன் அல்லாது தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை முகமது நபி உலக மக்களுக்கு அறிவிக்கிறார். முகமது நபி ஆன்மீகத்தின் பெயரால் தனது வருவாயை பெருக்கிக் கொள்ள நினைத்திருந்தால் மேற்கண்ட வசனங்களை மக்களுக்கு அறிவிக்காமல் மறைத்திருக்கவும் முடியும். முகமது நபியாலேயே எதுவும் செய்ய முடியாத போது நம் நட்டில் நாகூர் தர்காவில் அடக்கப்பட்டிருக்கும் இறந்து விட்ட ஒரு மகானால் என்ன செய்து விட முடியும் என்று பலரும் சிந்திப்பதில்லை.

இறைவனே மிக அறிந்தவன்.

7 comments:

ரங்குடு said...

நாத்திகம் ஏன்? அடுத்த மதத்தைப் பின் பற்றினாலே அவர்கள் எல்லோரும் 'திம்மிகள்', வரி கட்ட வேண்டியவர்கள் என்று சட்டம் போட்டது இசுலாம்.

அடுத்ததாக, எவரும் இசுலாத்திற்கு மதம் மாறலாம், ஆனால், அங்கேயிருந்து வேறு மதம் போக அனுமதி யில்லை.

இசுலாம் என்பது ஒரு வழிப் பாதை. அதற்கு மாற்று வழி நினைத்தால் பின் விளைவுகள் கடினமாக இருக்கும்.

அதனால் தான், இசுலாத்தில் நாத்திகம் இல்லை. மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

சல்மான் ருஷ்டி வாங்கிக் கட்டிக் கொண்டது போறாதா?

சாமானியர்களுக்கு பட்வா எல்லாம் தேவையில்லை.

suvanappiriyan said...

ரங்குடு!

//நாத்திகம் ஏன்? அடுத்த மதத்தைப் பின் பற்றினாலே அவர்கள் எல்லோரும் 'திம்மிகள்', வரி கட்ட வேண்டியவர்கள் என்று சட்டம் போட்டது இசுலாம்.//

ஜிஸ்யா வரி பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஜகாத் அதாவது ஏழை வரி தனது வருமானத்தில் 2.5 சதவீதம் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாகக் கொடுக்க வேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இருந்திருந்தால் இதை கட்டாயமாக வசூலிப்பார்கள். இந்த பணம் அரசு முலமாக பல வறியவருக்கும் சென்றடையும். இதை முஸ்லிம் அல்லாதவரிடம் வசூலித்தால் மதக்கடமையை மற்றவர்கள் மேல் கட்டாயமாக திணித்ததாகி விடும். முஸ்லிம்கள் ஒரு குறிப்பிட்ட சதம் வரியாக செலுத்தும் போது முஸ்லிம் அல்லாதவர்கள் வரி செலுத்தாமல் இருந்தால் அவர்களை ஒதுக்கியதாக ஆகிவிடும். அவர்களும் அரசு செலவுகளில் பங்கு கொள்ள அவர்களிடமும் ஒரு குறிப்பிட்டத் தொகையை வசூலிப்பதே நியாயமாகும். இதைத்தான் ஜிஸ்யா வரி என்கிறோம். ஒளரங்கஜேப் வசூலித்ததும் இந்த வரிதான்.

//அடுத்ததாக, எவரும் இசுலாத்திற்கு மதம் மாறலாம், ஆனால், அங்கேயிருந்து வேறு மதம் போக அனுமதி யில்லை.

இசுலாம் என்பது ஒரு வழிப் பாதை. அதற்கு மாற்று வழி நினைத்தால் பின் விளைவுகள் கடினமாக இருக்கும்.//

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.'
-குர்ஆன் 2:256

எனவே யாரும் எங்கும் கட்டாயப்படுத்த முடியாது.

//சல்மான் ருஷ்டி வாங்கிக் கட்டிக் கொண்டது போறாதா?//

விவாதத்துக்கு அழைத்திருந்தால் முஸ்லிம்கள் அவரிடம் அழகிய முறையில் விவாதித்திருப்பார்கள். ஆனால் மலிவான விளம்பரத்திற்காக குர்ஆனின் பெயரால் பொய்களை சொன்னதுதான் பலரையும் கோபப்பட வைத்தது.

Gokul said...

// இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.'
-குர்ஆன் 2:256//

அப்படி என்றால் (பெரும்பான்மையான) இஸ்லாமிய நாடுகளில் மத மாற்றத்திற்கு அனுமதி இல்லையே ஏன்? அங்கு வேறு எந்த மதப்பிரச்சாரமும் நடத்த அனுமதி இல்லையே ஏன்?

இஸ்லாம் அமெரிக்காவில் மிகவேகமாக வளர்ந்து வரும் மதம் என்று சொல்லும் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் , அந்த சுதந்திரத்தை (அமெரிக்க அதன் மக்களுக்கு கொடுக்கும் மதம் மாறும் சுதந்திரத்தை) தங்கள் நாடு ஏன் கொடுக்கவில்லை என்று சொல்வார்களா?

Anonymous said...

Maybe you can explain this too.
Didn't Aurangazeb imprison his father? Didn't he also serve his elder brother's head on a plate to
him. Somehow history as we were
taught potray him as an absolutely
cruel human being. Correct me if I am wrong.

suvanappiriyan said...

//Maybe you can explain this too.
Didn't Aurangazeb imprison his father?//

வரலாறுகளில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம்.

அசோகரின் தந்தை பிந்து சாரருக்கு பதினாறு மனைவியர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் மொத்தம் நூற்றி ஒன்று.

அசோகர் ஆட்சிப் பொறுப்பை பிடிக்கும் போது தம் உடன் பிறந்தோரில் ஒருவனைத் தவிர எஞ்சிய தொண்ணூற்றொன்பது பேரையும் கொன்று விட்டார் என்று சிங்கள பௌத்த நூலான 'வம்சத்தபகாசினி' அறிவிக்கிறது. இதனை வரலாற்று ஆசிரியர் ரொமிலாதாப்பர் தனது 'அசோகர்' என்ற நூலில் பக்கம் 26ல் தெரிவிக்கிறார். எனவே அந்த காலங்களில் இதெல்லாம் சாதாரண நிகழ்வே!

சாஜஹான் நோய்வாய்பட்ட நிலையில் அவரின் நான்கு புதல்வர்களும் தங்களுடைய வாள் வலிமையை நிலைநிறுத்திட முயன்றனர். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு கிரீடம். தோல்வியைத் தழுவுபவர்கள் உயிரிழந்தாக வேண்டும். சிம்மாசனம் அல்லது சிரசாசனம் என்பதையும் நன்றாகவே அவர்கள் உணர்ந்திருந்தார்கள். மேலும் தனது மகன்களில் ஒளரங்கஜேப்பை ஆரம்பத்திலிருந்தே வெறுத்து வந்தார் சாஜஹான். தான் ஏமாந்தால் தனது தலைக்கு ஆபத்து என்பதாலேயே தனது தந்தையை சிறை வைக்கும் கட்டாயத்துக்கு ஒளரங்கஜேப் தள்ளப்பட்டார்.

“But he must have known that the accession of any of his brothers meant death or captivity for himself, and his mind must soon have been made up. In self- defence he was bound to make his bid for power”
-Stanley Lane-pool “Aurang zip” page 39

//Correct me if I am wrong. //

நம் பாடப் புத்தகங்களில் சொல்லப்பட்ட ஒருதலைப்பட்சமான வரலாறுகளை படித்ததை வைத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். உண்மை வரலாறுகளை படித்தீர்கள் என்றால் பல மாற்றங்கள் உங்கள் எண்ணத்தில் வரும்.

suvanappiriyan said...

கோகுல்!

//அப்படி என்றால் (பெரும்பான்மையான) இஸ்லாமிய நாடுகளில் மத மாற்றத்திற்கு அனுமதி இல்லையே ஏன்? அங்கு வேறு எந்த மதப்பிரச்சாரமும் நடத்த அனுமதி இல்லையே ஏன்?//

ஒரு மதத்தை பின்பற்றுவது அவரவர் சொந்த விருப்பம். இதில் எவரும் சட்டம் போட்டு கட்டாயப்படுத்த முடியாது. முகமது நபிக்கு பிறகு எத்தனையோ பேர் மதமும் மாறியிருக்கிறார்கள். அவர்களை எந்த சட்டமும் ஒன்றும் செய்யவில்லை.

மேலும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வசிப்பவர் அனைவரும் முஸ்லிம்களே! வேறு மத பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது என்பது அந்த மக்களின் விருப்பம். ஒருக்கால் இஸ்லாமிய சட்டங்கள் பிடிக்காமல் போய் அந்த மக்கள் மாற்ற நினைத்தால் யார்தான் தடுக்க முடியும்?

//இஸ்லாம் அமெரிக்காவில் மிகவேகமாக வளர்ந்து வரும் மதம் என்று சொல்லும் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் , அந்த சுதந்திரத்தை (அமெரிக்க அதன் மக்களுக்கு கொடுக்கும் மதம் மாறும் சுதந்திரத்தை) தங்கள் நாடு ஏன் கொடுக்கவில்லை என்று சொல்வார்களா?//

ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மக்கள் ஏன் மாறுகிறார்கள்? தங்களின் பூர்வீக மதத்தில் உள்ள குறைபாடுகளால் வெறுப்புற்று வேறொரு மதத்தை நாடுகிறார்கள். அமெரிக்காவில் அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்லாத்தை விட ஒரு சிறந்த வாழ்க்கை முறையை வேறொரு மார்க்கத்தில் காண்பியுங்கள். இதைவிட புதிய மார்க்கம் சிறப்பாக இருந்தால் விரும்பியவர் மாறி விட்டுப் போகட்டும்! ஒரு மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது என்பது தனி மனித சுதந்திரம். இதில் அரசோ மற்ற எவருமோ தலையிட முடியாது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

VIZHIVAZHI said...

புரதப் பொருளின் இருத்தலின் பாங்கே உயிர் எனறு காரல் மார்க்ஸ் மிகவும் எளிமையாக கூரியிருக்கிறார் பரதப்பொருளை உடம்பு ஏற்றுக்கொள்ள இயலாத நிலை சடலம் அவ்வளவு தான் உயிருக்கான விளக்கம்