Followers

Thursday, June 25, 2009

மீகாயில் (மைக்கேல் ஜாக்ஸன்) இறைவனடி சேர்ந்தார்!



உலகம் முழுவதும் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த மைக்கேல் ஜாக்ஸன் சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இறந்து விட்டதாக பிபிசியின் மூலம் அறிந்தேன். கடைசி காலங்களில் தனது அண்ணன் அப்துல் அஜீஸின்(ஜெராமைக் ஜாக்ஸன்) முயற்ச்சியால் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தான் தொடர்ந்து ஒரு முழு இஸ்லாமியனாக வாழ முயற்ச்சிக்கிறேன் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதய நோயால் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டவருக்கு அங்கேயே மரணமும் நிகழ்ந்து விட்டது.

'எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர இறைவன் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே!'
-குர்ஆன் 2:286

4 comments:

suvanappiriyan said...

அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதில், தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: ஜாக்சனின் உடல் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டது. அதாவது, எலும்புக் கூடாகத்தான் இருந்தது. போதைப் பொருட்களை அதிகளவில் உட்கொண்ட ஜாக்சன், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட்டுள்ளார். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நேரத்தில், மைக்கேல் ஜாக்சனின் வயிற்றில் உணவு எதுவும் இல்லை. மரணம் அடைவதற்கு முன், அவர் சாப்பிட்ட மாத்திரைகள் பாதி கரைந்த நிலையில் இருந்தன. மாத்திரைகளை சாப்பிட்ட பின், வலி நிவாரணி ஊசி ஒன்றையும் போட்டுக் கொண்டுள்ளார். அதுவே, அவரின் உயிருக்கு எமனாக அமைந்துவிட்டது. ஜாக்சனின் தலையில் முடியே இல்லை; வழுக்கையாகக் காணப்பட்டது. அவர் விக் அணிந்திருந்தார். அவரின் இடது காதுக்கு மேலேயுள்ள பகுதியில் காயத்தின் வடு காணப்பட்டது. அந்தப் பகுதியும் முற்றிலும் வழுக்கையாக இருந்தது.

கடந்த 1984ல், பெப்சி நிறுவன விளம்பரத்திற்கான சூட்டிங்கில் பங்கேற்றிருந்த போது, மைக்கேல் ஜாக்சனின் முடியில் தீப்பற்றியது. அந்த தீ விபத்தால், காதின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டு அங்கு முடி முளைக்காது போயிருக்கலாம். மாரடைப்பு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த மைக்கேல் ஜாக்சனை உயிர் பிழைக்க வைக்க, அவரின் நெஞ்சுப் பகுதியை பலமாக அமுக்கியதில், அவரின் விலா எலும்பு உடைந்துள்ளது. ஜாக்சனின் இதயத்திற்கு அருகே நான்கு ஊசிகள் போட்டதற்கான தழும்புகள் உள்ளன. கடைசி நேரத்தில் இதயத்தை இயக்க போடப்பட்ட அட்ரீனிலின் மருந்து ஊசிகளில் மூன்று, அவரின் இதயச் சுவர்களை ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்சனின் முழங்காலில் கன்றிப்போன காயங்கள் இருந்தன. அவரின் முதுகுப் பகுதியிலும் காயங்கள் காணப்பட்டன. முகத்தில் பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதால் ஏற்பட்ட வடுக்கள் அதிகளவில் இருந்தன; மூக்குத் தண்டைக் காணவில்லை. மொத்தத்தில் ஜாக்சனின் உடலை அவரின் ரசிகர்களும், குடும்பத்தினரும் முழுமையாக பார்த்திருந்தால், பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பர். அவரின் உடல் எலும்பும் தோலுமாகத்தான் இருந்தது. மரணம் அடைவதற்கு முன், சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் தான் அவர் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அவரின் உடல் முழுவதும் ஊசி போட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால், உடலே அவலட்சணமாக மாறியிருந்தது. பல ஆண்டுகளாக அவரின் உடல் சீர்கெட்டு வந்துள்ளது. மொத்தத்தில் அவர் தன்னைத் தானே அழித்துக் கொண்டுள்ளார் என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பத்திரிக்கைச் செய்தி

இறைவன் கொடுத்த இயற்கையான நிறத்தையும் உருவத்தையும் மாற்றப் புகுந்தால் முடிவு இப்படித்தான் இருக்கும். இறக்கும் நேரத்தில் அவர் வயிற்றில் வெறும் மாத்திரைகள் மாத்திரமே இருந்தது அதிர்ச்சி அளிக்கக் கூடியாத இருக்கிறது.

தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாகதான் தனது அண்ணனின் ஆலோசனையின் பேரில் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார் போல் இருக்கிறது. இன்று அவரின் அடக்கம் நடைபெறுவதாக செய்திகளில் பார்த்தேன். அவரின் உடல் அடக்கம் இஸ்லாமிய முறைப்படியா? அல்லது கிருத்தவ முறைப்படியா என்ற விபரம் தெரியவில்லை.

அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

suvanappiriyan said...

“லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 4 மணி நேர பயணத்தில், கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் நெவர்லேண்ட் பண்ணை வீட்டில் அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என, வெளியான தகவல்களை அவரின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அப்படியே நெவர்லேண்டில் இறுதிச் சடங்கு நடந்தாலும், அதை யாரும் பார்க்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இதுதவிர ஜாக்சனின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக வேறு பல முரண்பட்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. அவற்றை யும் அவரின் குடும்பத்தினர் உறுதி செய்யவில்லை.”

-பத்திரிக்கை செய்தி

உலக மக்களால் அன்போடு பார்க்கப்பட்ட ஒருவரின் இறுதிச் சடங்குகளை ஏன் மூடு மந்திரமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இறக்கும் போது அவர் இஸ்லாமியராக இருந்ததால் அவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதே அவருக்கு அவரின் குடும்பத்தவர் செய்யும் மரியாதையாகும்.

suvanappiriyan said...

ஒரு இசைக்கலைஞனுக்கு உலக மக்கள் எந்த அளவு மதிப்பு கொடுக்கின்றனர் என்பதை ஒரு வெப் சைட்டில் வந்த பின்னூட்டங்களை அப்படியே தருகிறேன்.

sahar983 (5 days ago
we love Michael you are the best you have make a good choice cheer alahuakbar

geirardo (5 days ago)
respect michael :(

YOU ARE NOT ALONE

God protect you, allahou akber
God is Great
lanaroxfairy (5 days ago)
we all loves you but ALLAH SWT LOVES YOU MORE...RIP MIKAEEL....

bluebeautifulguitar (5 days ago)
alhamdulillah MJ die in Islam.
Al-Fatihah.
He was dead on Friday, which was good for the muslim.

laddo91 (5 days ago
may Allah forgive all MICHAEL JACKSONs mistakes.inshallah he comes in paradise!!!!!! hamdulillah he was muslim,mashallah!!!!!

....
cdcl19 (5 days ago) Show Hide
0
Marked as spam
Reply
Mashaallah!
Michael Jackson is now in the
presence of Allah..

From: The Philippines

ulunknoriega (5 days ago)
alhamdulillah,, hes islam =)

pitlining (5 days ago)
Allah the Almighty..,look..michael passed away after he convert to Islam..And he passed away on FRIDAY night American timezone..betapa bertuahnya michael mninggal malam jumaat....

TheAliah129 (5 days ago)
mansha alaah lucky man

newmuslim101 (5 days ago)
Inna lillahi wa inna ilayhi raji'un. May Allah have Mercy on him and us all ameen... InshaAllah we meet in Jannah

RatedAO2009 (5 days ago)
Died as a new muslim...like a newly born baby who clean from sins....you're lucky...well GOD knows...

markierox (5 days ago)
well, if that was a sarcasm. i think you should shut your mouth and never make fun of Islam or of him being a muslim. because you're not better than him. now he's a MUSLIM!!! and we're all proud of him being a muslim!! although he's not a prophet. he's just a normal guy like any other person who becomes a very clever person (muslim).
i think thats none of your business. thats his choice! and he had chose the right path!. R.I.P Michael Jackson :)

fineartad (5 days ago)
Agreed~!!!!

MOHSENARI (5 days ago
You're just STULPID AND SILLY bigpal08 .... instand of u , Michael is in heaven NOW ... you should pray God to be in too when you'll die ... !
RIP MIkAEEL !!!! love u and love islam !

kunglao254 (5 days ago)
may allah forgive him and have mercy on his soul. he hade a good heart and alhamdoelilah that he died as a muslim.

Leekoodhk (4 days ago)
bigpal08: There will no prophet come for the mankind after PROPHET MOHAMMAD (PUBH)

6feetdownedge (5 days ago)
I think that Allah took his life for a good reason. Firt of all i am a muslim. now i think that Allah takes everyones lives for a reason and still even we all will die but if you have the faith in Allah you will not be afraid. when the angels come down to question you, if you have faith in Allah and you practice the 5 pillars of islam you will be confident. now the reason allah took away Micheal Jacksons life was because all his sins WENT WHEN HE CONVERTED AND ALLAH WANTED THAT NOT TO END.

4527319 (5 days ago
Masha Allah! hes a muslim aftr all! may his soul rest in peace=)
Such a popular figure seekd to the straight path! n succeeded! Al hamdhulilah!

descentkiller (5 days ago)
ALLAH KNOWS THE BEST!

Clausewitzz (5 days ago)
Lets hope he can now finally enjoy the life of peace he allways searched for.

I despise what the western media did to him personally last years.

mohamednajih10 (5 days ago)
We love you Michael Jackson
from all moroccan people =)

suvanappiriyan said...

மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி ஊர்வலத்தில் ஏதும் அசம்பாவிதம் நடந்து விடாமல் இருக்க இணையத்தின் மூலம் முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதியாம். மீறுபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.


மேலும் தனது இறுதி சடங்குகள் இஸ்லாமிய முறைப்படியே இருக்க வேண்டும் என்று தனது உயிலில் ஜாக்ஸன் குறிப்பிட்டுள்ளதாக தொலைக்காட்சி செய்தி சொல்கிறது. இது நம்பகமான செய்தியா என்று தெரியவில்லை.