Followers

Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Friday, December 11, 2015

அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி!



புனித குர்ஆன் சகிதமாக சென்ற டிசம்பர் 2015 10 ஆம் தேதி அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். நியூயார்க்கில் அமைந்துள்ள ப்ரூக்ளின் மாகாணத்தின் நீதி மன்ற வளாகத்தில் இந்நிகழ்வானது விமரிசையாக நடைபெற்றது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Tuesday, October 06, 2015

'அமெரிக்க விசாவை ரத்தாக்கி விடுவேன்' - ஒபாமா (கற்பனை)



'ஒரு முஸ்லிமை மாட்டுக்காக கொன்ற தாத்ரி சம்பவத்தை கண்டித்து அறிக்கை விடாமல் இனியும் மவுனம் காத்தால் மறுபடியும் அமெரிக்கா வருவதற்கான விசாவை ரத்து செய்து விடுவேன்'

ஒபாமா கண்டிப்பு!

Saturday, September 26, 2015

சேகர் ஆமர் - குவாண்டானோமோ சிறையிலிருந்து விடுதலை!



ஆப்கனை பூர்வீகமாக கொண்ட சேகர் ஆமர் குடும்பத்தோடு லண்டன் குடியுரிமையில் வாழ்ந்து வந்தார். தனது செல்வத்தை தனது பூர்விக நாடான ஆப்கனுக்கு செலவிட தீர்மானித்தார். குண்டு வெடிப்புகளால் சிதைந்த தனது ஊரை செப்பனிட குடும்பத்தோடு 2001 ல் ஆப்கன் நோக்கி பயணமானார். பொது சேவை செய்தால் அது அமெரிக்கர்களுக்கு பிடிக்காதல்லவா? எனவே தாலிபான்களுக்கு உதவினார் என்ற பொய் காரணத்தை ஜோடித்து குவாண்டனோமோ சிறையில் ஆமரை அடைத்தது அமெரிக்கா.

ஆனால் விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமானது. ஜார்ஜ்புஷ் இரண்டு முறை ஆமரை விடுதலையாக்க உத்தரவிட்டார். பராக் ஒபாமாவும் இவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அனால் இந்த உத்தரவுகள் குவாண்டனோமோ நிர்வாகிகளால் தள்ளி போடப்பட்டது. 13 வருட போராட்டத்துக்குப் பிறகு தற்போது விடுதலையாகிறார் சேகர் ஆமர். தொலைந்து போன இவரது 13 வருட வாழ்வை அமெரிக்காவால் திருப்பி தந்து விட முடியுமா?

இவரைப் போன்று வல்லரசுகளாலும் இந்துத்வாக்களாலும் பொய் வழக்கு போட்டு ஜோடிக்கப்பட்டு விசாரணக் கைதிகளாகவே காலம் தள்ளும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்கள் விடுதலையாக நாமும் பிரார்த்திப்போமாக! அவர்களும் தங்கள் மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்வை சுவைக்கும் சூழலை இறைவன் ஏற்படுத்திக் கொடுப்பானாக!

முதல் படம் சிறைவாசத்துக்கு முன்பு: இரண்டாவது படம் சிறைவாசத்தக்குப் பின்: சிறை வாழ்க்கை ஒருவனின் தோற்றத்தை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது?

#shakeraamer

தகவல் உதவி
பிபிசி.காம்
25-09-2015


Wednesday, September 16, 2015

கடிகாரம் செய்த சிறுவனை விலங்கிட்ட அமெரிக்க போலீஸார்!





14 வயதான அஹமத் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரு பள்ளியில் படித்து வந்தான். அறிவியல் கண்டு பிடிப்புகளில் அதிக ஆர்வம் உடைய அவன் விட்டிலேயே தனது சொந்த முயற்சியில் ஒரு கடிகாரத்தை செய்துள்ளான். ஆர்வ மிகுதியால் அதனை தனது வகுப்பு ஆசிரியர்களிடம் காட்ட பள்ளிக்கும் எடுத்து வந்துள்ளான். இதனை பார்த்த ஆசிரியர் பயந்து போய் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவலர்கள் மாணவன் அஹமதை பள்ளி வளாகத்திலேயே கை விலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவன் அஹமத் அதிர்ச்சியில் உறைந்தே போனான். 14 வயது இளைஞனை பலரின் முன்னிலையில் கை விலங்கிட்டு அழைத்துச் செல்வது எவ்வளவு பெரிய கொடுமை. காரணம் அவனது பெயர் அஹமத். அவன் ஒரு முஸ்லிம்.

இந்த செய்தி அமெரிக்கா மற்றும் உலகெங்கும் பரவவே பலரும் அஹமதுக்கு ஆதரவாக களமிறங்கினர். #IStandWithAhmed என்ற பெயரில் ஹேஸ் டேக் உருவாக்கி அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் அனைத்து மக்களும் சிறுவனுக்கு ஆதரவாக களமிறங்கினர். முடிவில் சிறுவன் விடுவிக்கப்பட்டான். இன்று விடுவிக்கப்பட்டாலும் அந்த சிறுவனின் மனதில் இந்த செயல் மாறாத வடுவை எற்படுத்தியிருக்கும் அல்லவா?

'Cool clock, Ahmed. Want to bring it to the White House? We should inspire more kids like you to like science. It's what makes America great.'

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனது ட்விட்டர் தளத்தில் அஹ்மதை வெள்ளை மாளிகைக்கு கடிகாரத்தோடு வரவேற்றுள்ளார்.

ஒரு முஸ்லிமாக இந்த உலகத்தில் வாழ்வது எந்த அளவு சிரமமான காரியம் என்பதை அஹமதின் இந்த கைது நமக்கு விளக்குகிறது. இந்த உலகம் இன்று அஹமதையும் அவன் சார்ந்த மார்க்கத்தையும் ஏசலாம்: இழிவுபடுத்தலாம்: குர்ஆனில் இறைவன் கூறுவது போல் :இந்த உலகம் உண்மையான இறை விசுவாசிகளுக்கு ஒரு பரிசோதனைக் கூடம்' என்ற வாக்கியம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

எத்தனை சோதனைகள் அவச் சொற்கள் வந்தாலும் இறை நம்பிக்கையை மட்டும் ஒரு முஸ்லிம் விட்டு விட மாட்டான் என்பதை உரக்கச் சொல்வோம் இந்த உலகுக்கு!

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு இறை நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” என்று நாம் ஆறுதல் கூறினோம்.

குர்ஆன் 2:214



தகவல் உதவி
கார்டியன்
16-09-2015

Saturday, September 12, 2015

பாலஸ்தீன் கொடி இனி ஐநாவில் பறக்கும்!





193 உறுப்பினர்களில் 119 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாலஸ்தீன் கொடியை ஐநாவில் பறக்க விட அனுமதி பெறப்பட்டது. வழக்கமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இவர்களோடு சேர்த்து எட்டு ஐரோப்பிய நாடுகளும் எதிராக வாக்களித்தன. ஆனால் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன் பக்கம் நின்றதால் வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்தது. ஃப்ரான்ஸ் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.

'இந்த முயற்சியானது வருங்காலத்தில் ஐநாவில் முழு அங்கீகாரத்துடன் தனது கோரிக்கைகளை பாலஸ்தீன் வைக்க மிக ஏதுவாக இருக்கும். இது அதற்கான முதல் படி' என்கிறார் பாலஸ்தீன் பிரதமர் ரமி ஹம்துல்லா.

ஐநாவின் அமெரிக்க தூதர் தனது கருத்தாக சொல்லும் போது 'கொடி பறந்து விடுவதாலேயே இஸ்ரேலிய மக்களும் பாலஸ்தீன மக்களும் ஒற்றுமையாகி விட மாட்டார்கள்' என்று சொல்லியுள்ளார். இவர்களுக்கு அமைதி என்பதே உலகில் இருக்கக் கூடாது. எந்த குடி கெட்டாலும் அதில் தனது நாடு சுரண்டி கொழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலைபவர்கள் இந்த அமெரிக்கர்கள். இந்த அரசியல் சூழ்ச்சிகள் ஒரு நாள் அமெரிக்காவுக்கு எதிராகவே திரும்பக் கூடும். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை. நம் காலத்திலேயே அமெரிக்காவுக்கு தக்க பாடத்தை இறைவன் புகட்டுவானாக!

தகவல் உதவி
கார்டியன்


Sunday, September 06, 2015

ஐஎஸ் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான் - சிரிய தூதர்



சிவில் யுத்தம் காரணமாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற சர்வாதிகார தீவிரவாதம் எழுச்சியுற்றது. இந்நிலையில் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் சார்பாக இந்தியா வந்துள்ள தூதர் ரியாத் கமெல் அப்பாஸ், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ரியாத் கமல் அப்பாஸ்: அது இந்தியாவின் முடிவைப் பொறுத்தது. ஆனால் பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

கேள்வி: உங்கள் பார்வையில், ஐ.எஸ். அமைப்பு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக சில ஆண்டுகளில் உருவெடுத்தது எப்படி?

ரியாத் கமல் அப்பாஸ்: ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்? ஏன்? என்பதை கூறுங்கள். அமெரிக்காதான் அல்கய்தாவை உருவாக்கியது என்பது தெளிவு. அரபு நாடுகளின் உதவியுடன், ஆப்கனில் சோவியத் யூனியனை முறியடிக்க அல் கய்தாவை உருவாக்கினர். அமெரிக்கர்கள் ஆப்கானில் படையெடுத்த போது நிறைய சவப்பெட்டிகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் போருக்குப் பிறகு ராணுவ வீரரை தரையில் பயன்படுத்துவதன் வியர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். எனவே பிற நாடுகளில் அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதே சிறந்தது என்று அமெரிக்கா நினைத்தது. இப்படியாகத்தான் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

தற்போது ஐ.எஸ். மிகவும் பலமாக உள்ளது. ஏன் அவர்கள் வலுவாக உள்ளனர், புறச்சக்திகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்கா சீரியசாக சண்டையிடவில்லை என்பதே. ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா தோற்கடிக்க விரும்பவில்லை. அவர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இராக்கி குர்திஸ்தானில் உள்ள எர்பிலை ஐ.எஸ். தாக்கியவுடன் அமெரிக்கா உடனே சிகப்பு கோடு இட்டது. அதனை கடக்காதீர்கள் என்று ஐ.எஸ் அமைப்பை எச்சரித்தது. இதனையடுத்து சிரியாவின் மேற்குப் பகுதியிலும் ஐ.எஸ். விரிவு படுத்தியது.

கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிராக போர் என்ற துருக்கியின் சமீபத்திய அறிவிப்பு பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: இது சும்மா ஒரு கேம் பிளான். பொதுமக்களிடத்தில் கருத்தை உருவாக்க செய்யப்படும் தந்திரம். ஐ.எஸ். விரிவாக்கத்தில் துருக்கியின் பங்கு இருப்பதற்கான சாட்சியங்கள் எங்களிடம் உள்ளன. மொசூலில் துருக்கிய தூதரகத்திலிருந்து ஐ.எஸ். அமைப்பு சிலரை பிடித்தது, ஆனால் உடனடியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கூறுகிறேன், துருக்கிக்கும் ஐ.எஸ்.க்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது என்று. ஐ.எஸ். க்கு எதிராக போர் என்ற பெயரில் அவர்கள் உண்மையில் குர்திஷ் மக்களை எதிர்த்தே போரிடுகிறது துருக்கி.

கேள்வி: சரி இதற்கு தீர்வுதான் என்ன?

பதில்: சிரியா மக்களுக்கு ஒரு புறம் அரசு உள்ளது, மறுபுறம் ஐ.எஸ். மற்றும் அல் நுசுரா பயங்கரவாத அமைப்பு. இந்த இரண்டுதான் மக்களின் தெரிவாக உள்ளது.

ஆனால் தீர்வு எளிதானதே. பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். எல்லைகளை மூடுங்கள், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றுங்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்

07-09-2015

Friday, August 28, 2015

குவான்டோனோமோ சிறைக் கொடுமை ஒரு அதிகாரியை மாற்றியது!



டெர்ரி ஹோல்ட் ப்ரோக் முன்பு கியுபாவின் குவாண்டோனோமோ சிறையில் அதிகாரியாக பணி புரிந்துள்ளார். அங்குள்ள கைதிகள் அனைவரும் அமெரிக்க அரசால் பொய் வழக்கு போட்டு கொண்டு வரப்பட்டவர்கள். பெரும்பான்மை கைதிகள் அனைவரும் இஸ்லாமியர்களே! அமெரிக்கா அத்து மீறி நுழைந்த நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் சுதந்திர வேட்கையால் சிறிய போராட்டம் நடத்தினாலும் அவர்களை கைது செய்து குவாண்டானோமோ கொண்டு வந்து விடுவார்கள். பெரும்பாலானவர்கள் அப்பாவிகள். இஸ்ரேலியர் மற்றும் அமெரிக்கர்களின் கூட்டு சதியினால் இங்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

சிறையில் அடைபட்டுள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழக் கூடியவர்கள். இந்த கைதிகள் தொழும் அழகையும் இவர்களின் பேசும் பண்பையும் கண்டு நெகிழ்ந்து போன அதிகாரி டெர்ரிக்கு இஸ்லாத்தின் மேல் இனம் புரியாத ஈர்ப்பு வந்துள்ளது. இந்த அதிகாரி குர்ஆனை படிக்கிறார். இஸ்லாமிய சட்டங்களை ஆய்வு செய்கிறார். முடிவில் இறை மார்க்கமான இஸ்லாத்தை 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுக் கொள்கிறார். அது முதல் அங்கு அடைப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுவிக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை விரும்பாத சக ஊழியர்கள் இவரை கொலை செய்ய பலமுறை முயன்றார்களாம்.

'குவாண்டனோமாவில் அடைபட்டுள்ள இஸ்லாமியர்கள் மிகவும் துரதிஷ்டவாசிகள். நிம்மதியாக தொழ அனுமதிப்பதில்லை. இசையை தொடர்ந்து கேட்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிக குளிரூட்டப்பட்ட அறைகளில் பல மணி அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இதை எல்லாம் நேரில் கண்டு தூக்கம் வராமல் பல முறை சிரமப்பட்டேன். இதனால் போதை மருந்தும் உட் கொண்டேன். மன நிம்மதி இழந்து தவித்தேன். இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் எனது அனைத்து தீய பழக்கங்களும் என்னை விட்டு அகன்று விட்டது. குவாண்டனோமாவில் அடைபட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதே எனது லட்சியம். என்னால் முடிந்த வரை இதற்காக முயற்சிப்பேன்.

குர்ஆன் உலகிலேயே மிகவும் இலகுவாக எவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு இறை வேதமாகும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதனை மிக இலகுவாக சொல்லிச் செல்கிறது குர்ஆன். இந்த அதிசயம் நம் கண் முன்னே நடந்து வருகிறது' என்று நெகிழ்வோடு தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் டெர்ரி ஹோல்ட் ப்ரூக். தற்போது சிகரெட், மது, மங்கை, போதை வஸ்துகள் என்று அனைத்தையும் விட்டு தூரமாகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா குவாண்டானோமோ சிறையை மூடி விடுவதாக தனது தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். நம் நாட்டு அரசியல் வாதியின் வாக்குறுதி போல் இன்று வரை அது நிறைவேறாமல் உள்ளது. டெர்ரி ஹோல்ட் ப்ரூக் குவான்டானோமோ சிறை வாசிகளுக்காக தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நன்கொடைகளும் வசூலித்து அவர்களின் விடுதலைக்காக பாடுபட்டு வருகிறார். சிறை வாசிகள் சீக்கிரம் விடுதலையாக நாமும் பிரார்த்திப்போம்.



தகவல் உதவி
நியூயார்க் டெய்லி நியூஸ்

http://www.nydailynews.com/news/national/gitmo-guard-converts-islam-demands-release-detainees-article-1.1357918

Sunday, July 12, 2015

அமெரிக்காவில் சர்ச் கட்ட நிதியுதவி செய்த முஸ்லிம்கள்!




கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் வெள்ளையின மக்களுக்கும் கருப்பின மக்களுக்கும் இன மோதல் வெடித்ததை நாம் படித்திருக்கலாம். பல உயிர்கள் இதில் பலியாயின. அதோடு வெள்ளையின குண்டர்கள் எட்டுக்கும் மேற்பட்ட கருப்பினத்தவருக்கு சொந்தமான சர்ச்களை எரித்து விட்டனர். இன்று வரை அது சரி செய்யப்படாமல் இருந்தது.

இதனை கண்ணுற்ற மூன்று இஸ்லாமிய அமைப்பகள் சர்ச்களை கட்டித்தர முடிவு செய்தன. அந்த அமைப்பின் பெயர்கள் முறையே Ummah Wide, Muslim Anti-Racism Collaborative and Arab American Association of New York: இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து ஜூலை இரண்டிலிருந்து ஜூலை 18 வரை நன்கொடைகளை வசூலிக்கத் திட்டமிட்டன. இது வரை இந்த தன்னார்வ அமைப்புகள் 28953 யுஎஸ் டாலரை 600 நபர்களிடமிருந்து நன்கொடையாக வசூலித்துள்ளன. 30000 அமெரிக்க டாலரை இலக்காக வைத்துள்ளனர்.

இந்த அமைப்பினர் கூறும் போது 'ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் இறை வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். இந்த கருப்பின மக்கள் உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடைந்துள்ளனர். அந்த மக்களின் சோர்வை போக்க எங்களால் ஆன சிறிய முயற்சியே இது' என்று கூறுகின்றனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
10-07-2015

இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறது. மாற்று மத நண்பர்களை சகோதரர்களாக பாவிக்கச் சொல்கிறது. அவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளச் சொல்கிறது. கலீபா உமர் அவரது ஆட்சிக் காலத்தில் கிருத்தவ பயணக் கூட்டத்தை பள்ளி வாசலில் தங்க வைத்தார்கள். அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அனுமதி தந்தார்கள்.

ஆனால் நம் நாட்டில் பாரம்பரிய சின்னமான பாபரி மசூதியை கற்பனை பாத்திரமான ராமன் அங்குதான் அவதரித்தான் என்று பொய் கூறி இடித்து விட்டு அங்கு ராமர் கோவில் கட்டப் போகிறோம் என்று கிளம்பியுள்ளது ஒரு சிறு கூட்டம்.

எரிந்த சர்ச்களை கட்டித் தர பண வசூல் செய்யும் முஸ்லிம்கள் எங்கே? பாபரி மசூதியை இடித்து விட்டு அங்கு ராம ஜென்ம பூமி கட்டப் போகிறோம் என்று கூக்குரலிடும் இந்துத்வாவாதிகள் எங்கே?

Wednesday, July 08, 2015

இஃப்தார் உணவு வழங்கலில் அமெரிக்க மாணவர்கள்!



அமெரிக்காவில் கல்லூரியில் பாடங்கள் பயின்று வரும் சவுதி மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க ரமலானுக்கு கூட்டாக சவுதி வருகை புரிந்தனர். மாலை நேரங்களில் நோன்பு திறப்பவர்களுக்கு உணவுகளை இலவசமாக வழங்கும் பணியில் தாங்களாகவே முன் வந்து சேவையில் ஈடுபட்டனர். ஏழைகளுக்கு உணவு உடை போன்றவற்றையும் இலவசமாக வழங்கினர்.

நம் நாட்டு கல்லூரி மாணவர்களும் இதனை பின்பற்றலாமே!

தகவல் உதவி
சவுதி கெஜட்
07-07-2015

Monday, June 22, 2015

அமெரிக்காவில் நிற வெறி! சர்சில் புகுந்து 8 பேர் சுட்டுக் கொலை!





அமெரிக்காவின் சவுத் கரோலினாவில் உள்ள எமானுவேல் ஆப்ரிக்கன் சர்சில் புகுந்து கண்மூடித்தனமாக வெள்ளை இன இளைஞன் சுட்டதில் 9 பேர் இறந்துள்ளனர். டெய்லான் ரூஃப் என்ற வெள்ளை நிற இளைஞன் இந்த காரியத்தை செய்துள்ளான். நிற வெறியால் இந்த கொடூர கொலைகள் நடந்துள்ளது. இந்த வன்முறை வெறியாட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். சொந்தங்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பெயரும் வயதும்

Cynthia Hurd, 54

Rev Clementa Pinckney, 41

Rev Sharonda Coleman-Singleton, 45

Tywanza Sanders, 26

Ethel Lance, 70

Rev Depayne Middleton-Doctor, 49

Susie Jackson, 87

Rev Daniel Simmons Sr, 74

Myra Thompson, 59

தகவல் உதவி
பிபிசி
21-06-2015

கொலையை அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையின் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு நீதியைக் கொண்டு உதவி செய்யப் பட்டவராவார்.
(அல்-குர்ஆன் 17:33)

Monday, June 08, 2015

இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் தொடரும் சாதி வெறி!







கருப்பின பதின்ம வயது குழுவொன்றை வெள்ளையின காவல்துறை அதிகாரி கையாண்ட விதம் குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் பணியிலிருந்து அகற்றப்பட்டுளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில், பெரும்பாலும் கருப்பின பதின்ம வயதினர் கொண்ட குழுவொன்றை வெள்ளையின காவல்துறை அதிகாரி கையாண்ட விதம் குறித்த கானொளி இணையதளத்தில் வெளியானதை அடுத்து அவர் பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ள அந்த காவல்துறை அதிகாரி, இரண்டு சிறுவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதும், 14 வயது சிறுமியொருவரை கீழே தள்ளி அமுக்கிப் பிடிப்பதும் அந்தக் கானொளியில் தெரிகிறது.

அங்குள்ள நீச்சல்க்குளம் ஒன்றில் இந்தக் குழுவினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக உள்ளூர்வாசிகளிடமிருந்து காவல்துறையினருக்கு வந்த முறைப்பாட்டை அடுத்தே அங்கு காவல்துறையினர் விரைந்தனர்.

நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக மெக்கின்னி பகுதியின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனும் பதற்றங்கள் மேலோங்கி வரும் வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுளது.

தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தனக்கு கவலையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று டெக்ஸாஸ் மேயர் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
08-06-2015

படிப்பிலும் நாகரிகத்திலும் நாங்களே முதல் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் அன்று முதல் இன்று வரை சரிசமமாக நடத்தப்படுவதில்லை. அந்த வேகம் இன்று ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் உடன் பற்றிக் கொள்கிறது.

உலகத்தை நாங்களே ஆளப் பிறந்தவர்கள் என்று பாலஸ்தீனிலும், ஈராக்கிலும், சிரியாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும் மூக்கை நுழைத்து அந்த நாடுகளை துவம்சம் செய்யும் ஒபாமாவே! உனது நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி விட்டு பிறகு வளைகுடா பக்கம் உனது பார்வையை செலுத்து. போராட்டம் மேலும் விரிவடைவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

Saturday, April 25, 2015

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி புனித மெக்காவில்!



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மெக்காவுக்கு வருகை புரிந்தார். மெக்காவில் உள்ள நஸீம் ஏரியாவில் நடந்து வரும் நபிகள் நாயகத்தின் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மெக்கா வந்திருந்தார் சாரா உமர். இது பற்றி அவர் பேட்டியளிக்கும் போது...

"இஸ்லாம் அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு சிலர் இஸ்லாம் என்றாலே வன்முறை மார்க்கம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சவுதி அரேபிய அரசு இஸ்லாத்தின் உன்னதமான கொள்கைகளை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்காவையும் மதினாவையும் விரிவுபடுத்தும் மிகப் பெரும் பணியை செய்து வரும் சவுதி அரசை பாராட்டுகிறேன். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதற்காக மிகவும் மகிழ்கிறேன். இதே போன்ற கண்காட்சிகளை மற்ற நாடுகளுக்கும் சவுதி அரசு விரிவுபடுத்தி இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை களைய முயலவேண்டும். இந்த கண்காட்சியில் பங்கு பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன்" என்றார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டார் சாரா உமர். இவரது மகன் சயீத் ஒபாமாவோடு இந்த பயணத்தை மேற்கொண்டார். பேரன் மூஸா ஒபாமாவும் சேர்ந்து வந்திருந்தார். அனைவரும் புனித உம்ரா பயணத்தையும் மேற்கொண்டனர்.

இவர்களைப் போன்றே பராக் ஒபாமாவும் தூய இஸ்லாத்தை விளங்கிக் கொள்வாராக! உலகில் அமைதியை நிலை நாட்ட தன்னால் ஆன முயற்சிகளை எடுப்பாராக!

தகவல் உதவி
அரப் நியூஸ்
22-04-2015

Wednesday, March 18, 2015

அமெரிக்காவின் டொமினிக் எஸ்லே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.





'பல விஷயங்கள் எனது வாழ்வில் நடந்து விட்டன. எனது 22 வருட கால வாழ்வை வீணாக இழந்து விட்டேன். இன்று சொர்க்கத்துக்கு செல்லும் வழியை அறிந்து கொண்டேன்.. அல்லாஹூ அக்பர்'

-டொமினிக் எஸ்லே தனது ட்விட்டர் தளத்தில்....

"Many things happened in my life, and I've been lost for 22 yrs. Today I've found my guidance to paradise. #AllahuAkbar"

https://twitter.com/DominiqueEasley/status/576475323182678017

அமெரிக்காவின் பிரபல விளையாட்டு வீரர் டொமினிக் எஸ்லே சென்ற வாரம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். வழக்கமாக இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆதரவையும், வசவுகளையும் சரமாரியாக கொடுத்து வருகின்றனர். எதைப் பற்றியும் கவலைபடாமல் டொமினிக் தனது வாழ்வியலை இஸ்லாமாக ஆக்கிக் கொண்டார். அவரது வாழ்வு சிறப்பாக அமைய நாமும் நமது பிரார்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

Tuesday, March 17, 2015

பொய்யன் ஐஎஸ்ஐஎஸ் பக்தாதியின் அடுத்த பல்டி!

ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு அமெரிக்காவின் கைக்கூலி என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸின் தலைவன் பக்தாதி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளான். அது என்ன அறிக்கை?

'நபிகள் நாயகம் எனது கனவில் தோன்றி 'மசூல் நகரத்திலிருந்து வெளியேறி விடு' என்று சொன்னார். எனவே போராளிகள் தாக்குதலை கைவிட்டு மசூல் நகரத்திலிருந்து வெளியேறவும்' என்ற அறிக்கையே அது.

இவனைப் பொறுத்த வரையில் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதனை செயல்படுத்தக் கூடியவன். தற்போது ஆயுத வியாபாரம் முடிந்து விட்டது. பெட்ரோல் வளங்களையும் கொள்ளையடித்தாகி விட்டது. இனி ஐஎஸ்ஐஎஸ் அவசியமில்லை என்ற முடீவுக்கு அவர்கள் வந்ததாலேயே திடீரென்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பார்வையில் நபிகள் நாயகத்தை யாரெல்லாம் நேரில் கண்டார்களோ அவர்கள் தான் கனவிலும் காண முடியும். நபிகள் நாயகத்தின் காலத்திய ஆட்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. நபிகள் நாயகம் எந்த தோற்றத்தில் இருப்பார்கள் என்ற அறிவும் இவனுக்கு கிடையாது. ஆக திட்டமிட்டு பொய் சொல்கிறான். இஸ்லாத்தை நன்கு விளங்கியிவர்கள் இவனது காமெடியை கேட்டு சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். பொய்களை அதிக நாட்கள் மூடி வைக்க முடியாது என்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் ஒரு சிறந்த உதாரணம். அதன் தலைவன் பக்தாதியும் ஒரு நல்ல உதாரணம்.

--------------------------------------------------

Mosul- Head of ISIS Abu-Baker Al-Baghdadi has claimed that he dreamt of Prophet Mohammed (pbuh) who asked him to evacuate Mosul, Al-Sharq.com reported yesterday.

He claimed that the Prophet asked him to leave the province with all of his men without fighting.

Local Iraqi sources in Mosul reported that ISIS militias would withdraw from the city upon receiving orders from their leader Al-Baghdadi.

The Kurdish Democratic Party's electronic site reported that "Baghdadi ordered his fighters to withdraw from the city following a dream that he met Prophet Mohammed (pbuh), who ordered him to leave Mosul."

No date was given for the departure.

Courtesy Middle East Moniter

http://nation.com.pk/international/16-Mar-2015/prophet-muhammad-ordered-me-to-leave-mosul-al-baghdadi

Wednesday, March 04, 2015

ஹீரோ என்றால் இந்த இளைஞனைச் சொல்லலாம்!

ஹீரோ என்றால் இந்த இளைஞனைச் சொல்லலாம்!





இரவு நேர நைட் கிளப்பில் அதிக நேரம் நண்பர்களோடு செலவழித்த ஒரு இள மங்கை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். கிளாஸ்கோவில் உள்ள கெல்வின்குரோ பூங்கா அருகில் இந்த பெண் சென்று கொண்டிருந்தாள். இந்த பெண் தனியாக செல்வதைப் பார்த்த ஒரு முரடன் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளான். இனி அந்த பெண் சொல்வதைக் கேட்போம்....

'நான் அந்த முரடனிடமிருந்து தப்பிக்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. எனது வாயை அவனது கைகளைக் கொண்டு மூடினான். திமிறிக் கொண்டு 'உதவி' என்று வேகமாக கத்தினேன். உடனே சிறிது தூரத்தில் இருந்து ஒரு இளைஞன் தனது நாய்க் குட்டியோடு ஓடி வந்தான். பலம் கொண்ட மட்டும் அந்த முரடனை இந்த இளைஞன் எட்டி உதைத்தான். இளைஞனின் வீரத்துக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாத அந்த முரடன் என்னை விட்டு விட்டு ஓடி விட்டான். எனது உடை பாதிக்கு மேல் கிழிந்து விட்டது. அந்த இளைஞன் தனது கோட்டை எனக்கு கொடுத்து 'பத்திரமாக வீடு போய் சேருங்கள்' என்று அனுப்பி வைத்தான். "போலீஸில் புகார் செய்யலாம்" என்று அந்த இளைஞன் சொன்னான். ஆனால் எனது வீட்டுக்கு தெரிந்தால் பெரும் பிரச்னையாகி விடும் என்று இத்தோடு இதனை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டேன். அப்துல்லா ஓன் என்ற இந்த இளைஞனை என் வாழ் நாளில் மறக்க முடியாது. என்னை பொருத்த வரை இவன் ஒரு ஹீரோ' என்கிறாள் அந்த பெண்.

இது பற்றி அப்துல்லா ஓனிடம் கேட்ட பொழுது 'நான் ஒரு ஹீரோவாக வேண்டும் என்ற நினைப்பில் இந்த காரியத்தை செய்யவில்லை. ஒரு மனிதன் ஆபத்தான நேரத்தில் இன்னொரு மனிதனுக்கு செய்த ஒரு உதவியாகவே பார்க்கிறேன். இது எனது கடமை. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருக்கா விட்டால் அந்த பெண் பெரிதும் பாதிப்படைந்திருப்பாள். சில நேரம் இறந்து கூட போயிருக்கலாம். அது போன்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் வலிய நான் சென்றேன்.' என்கிறார்.

அப்துல்லா ஓன் பிறந்தது லிபியாவின் திரிபோலி நகரில். கடந்த 13 வருடங்களாக கிளாஸ்கோவில் வசித்து வருகிறார்.

http://www.dailyrecord.co.uk/news/scottish-news/brave-jogger-dubbed-hero-after-3822487

Tuesday, March 03, 2015

புயலால் பாதிப்படைந்த அமெரிக்காவில் சவுதி மாணவர்கள்!



சூறாவளிக் காற்றானது வருடா வருடம் அமெரிக்காவை பயமுறுத்திக் கொண்டிருக்கும். 10 வருடங்களுக்கு முன் கத்ரீனா புயலால் லூசியானா மாநிலத்தில் ஏற்பட்ட இழப்பு மட்டும் 108 மில்லியன் டாலராகும். 2013 சாண்டி புயல் 24 பேரை பலி கொண்டது. அதே வருடத்தில் மூர் மற்றும் ஒகாலஹாமா மாநிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. டோரோண்டோவில் உள்ள பள்ளியில் புயல் தாக்கி 10 குழந்தைகள் இறந்தனர். குடியிருப்பு பகுதிகளும் பலத்த சேதமடைந்தது. இதனை சரி செய்ய 2 பில்லியன் டாலர் தேவைப்பட்டது. இதனை பொது மக்களிடமிருந்து வசூலிக்க முடிவெடுத்தனர்.

ஒகலாஹாமாவில் படித்து வந்த எட்டு சவுதி மாணவர்கள் Habitat (ஹபிடாட்) தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு இணைந்து பொது நலப் பணிகள் செய்ய ஆசைப்பட்டனர். இது பற்றி மெக்கானிகல் இன்ஜினீயரிங்க் படித்து வரும் சவுதி மாணவர் மெஹ்மூத் சொல்கிறார் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு மூர் மாநில மக்கள் நலனுக்காக ஒரு சர்ச் மூலம் நன்கொடை வசூலிக்க முடிவெடுத்தோம். எட்டு பேர் கொண்ட எங்கள் குழு வேலைகளை பகுதி பகுதிகளாக பிரித்துக் கொண்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று தேவையான உதவிகளை செய்து கொடுத்தது. வீட்டுக்கு வண்ணம் பூசுவது, உடைந்த வீடுகளை சரி பண்ணுவது, ஜன்னல்களை சரி செய்து அதற்கு கதவுகளை போடுவது, என்று அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தோம். இந்த வருடமும் இந்த பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

பழுதடைந்த ஒரு வீட்டின் உரிமையாளரான ஜெனட் ஹோட்ஸன் தனது வீட்டை சரி செய்வது சவுதி கல்லூரி மாணவர்கள் என்ற செய்தி கேட்டு ஆச்சரியத்தோடு எங்களை பார்த்தார். எங்களோடு சந்தோஷமாக பேசியும் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இவ்வாறு பொது நல சேவையின் மூலம் பாதிப்படைந்த மக்களுக்கு ஒரு உத்வேகத்தை நம்மால் கொடுக்க முடிகிறது. நமக்கும் மன நிறைவு கிடைக்கிறது' என்கிறார்.

கல்லூரி மாணவர்கள் என்றால் தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, டிஸ்கொதேக்கு போவது, கண்ட பெண்களோடு சுற்றுவது என்பது பெரும்பாலும் எழுதப்படாத விதியாகி விட்டது. அதனை மாற்றி அதுவும் அமெரிக்கா போன்ற நவ நாகரிக நாட்டில் பொது நல சேவையை தங்கள் பொழுது போக்காக கையிலெடுத்திருக்கும் சவுதி கல்லூரி மாணவர்களை பாராட்டுவோம்.

தகவல் உதவி:
சவுதி கெஜட்
28-02-2015

தொழுவது, நோன்பு வைப்பது, ஹஜ் செய்வது மாத்திரமே இறைப் பணி என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். ஏழைகளுக்கு உதவுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் கூட இறைப் பணியிலேயே சேரும் என்பதை பலரும் உணர்வதில்லை. கிருத்தவ நண்பர்கள் ஈடுபடும் பொது நலப் பணிகள் போல் இஸ்லாமியர்களும் பொது நல சேவையில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். இதனை இறைவன் மிகவும் விரும்புகிறான். நம்மால் ஒருவர் நலம் பெற்று நம்மை பார்த்து வாழ்த்துவது இருக்கிறதே அதற்கு இறைவனிடம் மிகப் பெரிய கூலி உண்டு.


"புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது இறைவனின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், வானவர்களின் மீதும், வேதத்தின் மீதும், இறைத் தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்வதாகும்: தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தலாகும்: இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் இவையே புண்ணியமாகும்."

குர்ஆன் : 2:177

Friday, February 20, 2015

ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அதிபர்





ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அதிபர்

செசன்ய அதிபர் ரம்ஜான் கதிரோவ் பத்திரிக்கைக்கு பரபரப்பான பேட்டியைக் கொடுத்துள்ளார். ரஷ்ய செய்தி ஸ்தாபனமான டாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அதிபர் ரம்ஜான் கதிரோவ் சொன்னதாக வந்துள்ளதாவது:

'நான் உலக மக்கள் அனைவரிடத்தும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை இஸ்லாமியர் என்று சொல்லாதீர்கள். அவர்கள் சாத்தான்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் எந்த வகையிலாவது பணம் பண்ண வேண்டும் என்பதே. மேற்குலக நாடுகளின் கட்டளைக்கு கீழ்படிந்து இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்துவதே அவர்களுக்கு இடப்பட்ட பணி. தங்கள் பணியை இன்று வரை கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மறைமுகமாக மேற்குலக நாடுகளால் தாராளமாக தரப்படுகின்றன. ஆயுதங்கள், உடைகள், நவீன சாதனங்கள் எல்லாம் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கின்றன? யாரை திருப்பதிபடுத்த இவர்களின் இந்த வெறியாட்டம்?

கல்லூரிகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்திலும் இந்த கொடியவர்களின் உண்மை முகத்தைப் பற்றிய தெளிவினை விளக்கி பாடம் எடுக்க வேண்டும். இளைஞர்களின் மத்தியில் இந்த சாத்தான்களின் கொடூர குணம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் இணைய தொடர்பு உள்ளது. இந்த தொடர்பின் மூலம் இந்த கொடியவர்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது. இஸ்லாம் இதனை முஸ்லிம்களுக்கு கற்றுத் தரவில்லை என்ற உண்மையை எடுத்துச் செல்ல வேண்டும். இது நம் அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட கடமையாக நினைத்து செயலில் இறங்க வேண்டும்' என்று காட்டமாக அறிக்கை விட்டுள்ளார்.

தரகவல் உதவி:
மொராக்கன் டைம்ஸ்
22-10-2014

Wednesday, February 11, 2015

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் சுட்டு கொலை!







அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் இன்று நடந்துள்ளது. பரகத் வயது 23, அவரது மனைவி யூசுர் சாலிஹா வயது 21, தங்கை ரிஜான் அபு சாலிஹா வயது 19 இந்த மூன்று இளம் தளிர்களை வீட்டீன் உள்ளே வந்து தலையில் சுட்டு கொன்றிருக்கிறான் ஒரு கொடியவன். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். 46 வயதான ஸ்டிபன் ஹீக்ஸ் என்று போலிஸாரால் அறியப்பட்டுள்ளான்.

இந்த மூன்று பாலஸ்தீனியர்களுமே எப்போதும் சமூக சேவைகளில் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இந்த குடும்பம் பொது மக்களுக்கு சாரிட்டி மூலம் உணவு விநியோகத்திலும் அதிகம் ஈடுபடும். பாலஸ்தீனிலும் ஒரு மருத்துவ மனையை நிர்வகிக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

பரகத் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து அமெரிக்க பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார்.அவரது மனைவியும் கல்லூரியில் படித்து வரும் மாணவி. இரண்டு மாதம் முன்பு தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. வாழ வேண்டிய இந்த இளம் குருத்துகளை பாவிகள் அழித்து விட்டனர்.

இவர் நடத்தி வரும் சமூக வலை தளம் ட்விட்டரில் ஒரு வாரம் முன்பு அவர் பதிந்த ஒரு செய்தி:

'பாலஸ்தீனியர்களை கொல்வோம்' என்று ஒரு சாராரும் 'யூதர்களை கொல்வோம்' என்று ஒரு சாராரும் அவரவர் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இது மிகவும் தவறான அணுகு முறை. இது போன்ற கொலைகளால் எந்த பிரச்னையும் தீரப் போவதில்லை.' என்று ட்விட் செய்துள்ளார்.

இவர்கள் சமூக சேவை செய்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. இவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த மூன்று பேரையும் கொல்வதற்கு இது போதும் இஸ்ரேலியர்களுக்கு.

வாழ வேண்டிய இளம் தளிர்கள் இன்று கருகி விட்டன. இவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய நாமும் பிரார்திப்போம்.

தகவல் உதவி
INDEPENDENT.CO/NEWS
11-02-2015