Followers

Sunday, November 20, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? -பு(து)த்தக அறிமுகம்

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

1. இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
2. இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

அத போல் தீவிரவாதம் என்ற பிரச்சாரத்துக்குப் பின் தான் உலகம் இஸ்லாத்தின் பால் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்.

• ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதிக்கிறது.
• மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களூக்கு உரிமை வழங்கியுள்ளது
• விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
• பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சஉதந்திரத்தைப் பறிக்கிறது.
• வாரிரிசுரிமைசச் சட்டத்தில் ஆன்களூக்கு இரு மடங்கும் பெண்களூக்கு ஒரு மடங்கும் என பாரபட்சம் காட்டுகிறது.
• இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்ட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.
• கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குற்ப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைப்பது
• பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைலப் பறிக்கிறது.
• முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை
• முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
• என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள்அனைத்துக்கும் முழுமையாகவும், எந்த எதிர்க் கேள்வியும் கேட்க முடியாத வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.

முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

முஸ்லிமாலாதவரக்ளுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்

அறிமுகம்
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என்ற இந்த நூலில் பெண்கள் குறித்து எழுப்பப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது தவிர நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மட்டும் மற்றவர்களை விட அதிகமான பெண்களை மணந்தது ஏன் என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கான விளக்கத்தை 'நபிகள் நாயகம்(ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?' என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிட்டுள்ளோம்.

ஜிஸ்யா, முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தல், கஃபாவை வணங்குதல், திசையை வணங்குதல், சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் போன்ற மற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் விடையாக 'குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்ற தலைப்பில் தனி நூலை வெளியிட்டுள்ளோம்.

தத்துவ ரீதியாக இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக 'அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்' எனும் நூலில் விளக்கம் அளித்துள்ளோம். இந்த நான்கு நூல்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் பெறலாம்.

பதிப்புரை
நல்லவை எங்கே கிடைத்தாலும் அதைத் தேடிப் பெற்றுக் கொள்பவர்களாகவே பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர்.

குறிப்பாக ஆன்மீகத்தின் பால் மனிதர்களின் தேடுதல் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தேடியலையும் மக்களுக்கு நல்ல ஆன்மீக வழி தென்படுமானால் தயக்கமில்லாமல் அவ்வழியில் செல்ல அவர்கள் தயாராகவே உள்ளனர்.

அமைதியைத் தேடியலையும் மக்களின் பார்வையில் இஸ்லாம் சிறந்த வாழ்க்கை நெறியாகத் தென்படுகிறது. அதன் கொள்கைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன.

இதன் காரணமாக அவர்களை இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில கொள்கைகளும், கோட்பாடுகளும் தவறானவை; காலத்துக்கு ஒவ்வாதவை என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உரிய விதத்தில் தெளிவுபடுத்தினால் அவர்களை இஸ்லாம் முழுமையாக ஈர்க்கும்.

முஸ்லிமல்லாத மக்களின் இந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் தமிழில் தகுதியான நூல் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவு அடைகிறோம்.

இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்துத் தான் அவர்களுக்கு அதிகப்படியான சந்தேகங்கள் உள்ளன.

அந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் 'இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற இந்த நூல் ஏழாவது பதிப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
முந்தைய பதிப்புகளை விட மேலதிகமான விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்களை நீக்க இந்த நூல் பயன்பட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

இவன்,
நபீலா பதிப்பகம்

முன்னுரை

இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.

எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!

அதில் தலையிடுகிறது!

தக்க தீர்வையும் சொல்கிறது!

அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!

என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.

இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும், அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.

எனவே, இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.

ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்த பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.

மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.

முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்

21 comments:

VANJOOR said...

சுட்டியை சொடுக்கினால் தோன்றும் திரையில் open with என்ப‌தை தேர்வு செய்து ப‌டிக்க‌லாம்.

அல்ல‌து save file என்ப‌தை தேர்வு செய்து த‌ர‌விற‌க்க‌ம் செய்து சேமித்து கொள்ள‌லாம்.


--> இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? <--

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

.

UNMAIKAL said...

click to read.


>>>> பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே? <<<<

.

VANJOOR said...

மேலே நான் முதலில் கொடுத்துள்ள சுட்டி சரியாக இல்லை.

தயவு செய்து வாசகர்கள் கீழே கொடுத்துள்ள சுட்டிகளை பயன்படுத்துங்கள்.

சுட்டியை சொடுக்கினால் தோன்றும் திரையில் open with என்ப‌தை தேர்வு செய்து ப‌டிக்க‌லாம்.

அல்ல‌து save file என்ப‌தை தேர்வு செய்து த‌ர‌விற‌க்க‌ம் செய்து சேமித்து கொள்ள‌லாம்.

LINK 1. இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?


LINK 2. இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

rajan said...

http://www.newsonews.com/view.php?2bmM0e0dXO40ecBnB2b4E0e2d3M8s2c2BBB243Al3223CAI2

பெண்கள் கண்களையும் மறைத்து செல்ல வேண்டும்: சவுதியில் புதிய சட்டம் அறிமுகம்
[ திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011, 04:32.37 மு.ப GMT ]
ஆண்களை கவர்ந்து இழுக்கும் கண்களையும் இனி மறைத்து செல்ல சவுதி அரேபியாவில் புது சட்டம் வரவுள்ளது.

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. பெண்கள் கார் ஓட்ட கூடாது, பொது இடங்களுக்கு ஆண்கள் துணை இல்லாமல் செல்ல கூடாது என்று பெண்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

மேலும் பெண்கள் தலை முதல் கால்கள் வரை மறைக்கும் வகையில் பர்தா அணிந்து செல்வது கட்டாயம். இந்த விதிகளை மீறும் பெண்களுக்கு கசையடி உள்பட கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் மற்றவர்களை கவரும் வகையில் உள்ள கண்களையும் பெண்கள் மறைத்து செல்லும் வகையில் புது சட்டம் கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சவுதி அரேபிய நல்லொழுக்கம் மற்றும் குற்ற தடுப்பு கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஷேக் மோட்லேப் வெளியிட்டுள்ளார். அழகிய கண்கள் கொண்ட பெண்கள் பொது இடங்களில் செல்லும் போது ஆண்களால் கவரப்படுகிறார்கள். இதனால் சமூகத்தில் பிரச்னை ஏற்படுகிறது.

எனவே ஆண்களை கவரும் கண்களையும் மறைத்து செல்லும் வகையில் சட்டம் இயற்ற கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்த கமிட்டி கடந்த 1940ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொது இடங்களில் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் மீறுவதை தடுக்கும் பணியில் இந்த கமிட்டி ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.allvoices.com/contributed-news/10912744-saudi-arabia-the-sexy-eyes-is-a-crimecover-seductive-eyes

http://therearenosunglasses.wordpress.com/2011/11/19/saudi-men-are-helpless-against-beautiful-female-eyes-new-law-forces-women-to-hide-them/

suvanappiriyan said...

ராஜன்!

//பெண்கள் கண்களையும் மறைத்து செல்ல வேண்டும்: சவுதியில் புதிய சட்டம் அறிமுகம்//

1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்!" என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.
Volume :2 Book :25

இந்த ஹதீதின் மூலம் நபித்தோழர் பழ்ல் அவர்கள் அந்த இளம் பெண்ணை பார்க்கிறார். இதைக் கவனித்த நபியவர்கள் இளைஞரின் முகத்தை அந்த பெண்ணிடம் இருந்து திருப்புகிறார். அந்த இளம் பெண் முகத்தை திறந்ததனாலேயே அந்த இளைஞரின் கவனம் அந்த பெண்ணின் மீது சென்றது. அந்த பெண் முகத்தை திறந்திருந்தது தவறென்றால் அந்த கணமே அந்த பெண்ணுக்கு முகத்தை மூடச் சொல்லி முகமது நபி மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

முகத்தை மூடச் சொல்லி நேரிடையான குர்ஆன் வசனங்களும் இல்லை.

சவுதி அரேபியா இப்படி ஒரு சட்டத்தை இயற்றினால் அது அந்நாட்டின் சட்டமாகத்தான் கருத முடியும். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தை இந்த கட்டளை ஒன்றும் கட்டுப்படுத்தாது.

மேலும் சவுதி பெண்களை தவிர வெளி நாட்டு பெண்கள் அனைவருமே இன்று வரை முகத்தை திறந்து கொண்டுதான் வெளியில் வருகிறார்கள். எந்த தடையும் இல்லை.

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//தயவு செய்து வாசகர்கள் கீழே கொடுத்துள்ள சுட்டிகளை பயன்படுத்துங்கள்.//

வருகைக்கும் சுட்டியை தந்தமைக்கும் நன்றி!

naren said...

சுவனப்பிரியன்!!!
நூலின் விலை, அது என்னப் பதிப்பகம், எங்கே கிடைக்கின்றது என்று சொல்லாமல் ஒரு பு(து)த்தகம்???. அதையும் சேர்த்து விடுங்கள். பயனுள்ளதாக இருக்கும்.

naren said...

//அந்த பெண்ணுக்கு முகத்தை மூடச் சொல்லி முகமது நபி மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

முகத்தை மூடச் சொல்லி நேரிடையான குர்ஆன் வசனங்களும் இல்லை.//


//சவுதி அரேபியா இப்படி ஒரு சட்டத்தை இயற்றினால் அது அந்நாட்டின் சட்டமாகத்தான் கருத முடியும். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தை இந்த கட்டளை ஒன்றும் கட்டுப்படுத்தாது.//

என்னது சவுதி அரபியா முகமதுவின் வார்த்தைக்கும், செயலுக்கும் மீறி சட்டம் இயற்றி நடைமுறை படுத்துகிறார்களா???

தந்தை தாய் சொல்லை மீறினாலும் மீறுவார்கள் முகமதுவின் வார்த்தையை மீற மாட்டார்கள் என்று பெயர் எடுத்த சவுதி அரபியா, நம்ப முடியவில்லை.

சவுதி நாட்டு மார்க்க அறிஞ்சர்கள் அதற்கு சாதகமாக் எந்த அதீஸ் வசனங்கள் வைக்கின்றார்கள் எனப் பார்க்க வேண்டும்.....

suvanappiriyan said...

நரேன்!

//நூலின் விலை, அது என்னப் பதிப்பகம், எங்கே கிடைக்கின்றது என்று சொல்லாமல் ஒரு பு(து)த்தகம்???. அதையும் சேர்த்து விடுங்கள். பயனுள்ளதாக இருக்கும்.//

நபிலா பதிப்பகம் என்று கட்டுரையிலேயே வருகிறதே? பார்க்கவில்லையா? சென்னை மண்ணடியில் அங்கப்பன் நாயக்கன் தெருவில் இருக்கும் தௌஹீத் ஜமாத் தலைமையகத்தில் கிடைக்கும். பரவலாக இந்த புத்தகம் பல ஊர்களிலும் கிடைக்கிறது. போஸ்டிலும் அனுப்புவார்கள்.

//என்னது சவுதி அரபியா முகமதுவின் வார்த்தைக்கும், செயலுக்கும் மீறி சட்டம் இயற்றி நடைமுறை படுத்துகிறார்களா???//

வெளிநாட்டு மக்கள் அதிகம் பேர் மனைவியை பிரிந்து இரண்டு வருடம் வரை கூட சவுதியில் தனிமையில் இருக்கின்றனர். அழகிய முக தோற்றத்தை கொண்ட பெண்களை பார்க்கும் பொது அவர்களுக்கு உணர்வு மேலிட வாய்ப்பிருப்பதாலேயே சவுதி பெண்களின் முகத்தை மூடச் சொல்கிறோம் என்று முன்பு ஒரு முறை ஒரு சவுதி சொன்னது இபபொழுது எனக்கு ஞாபகம் வருகிறது. காரணம் இதுவாகவும் இருக்கலாம். குர்ஆனைக் காட்டி முகத்தை மூடச் சொல்ல எந்த சட்டமும் இல்லை. இது இந்த நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக இவர்கள் போடும் சட்டம் என்று புரிந்து கொண்டால் குழப்பம் வராது.

suvanappiriyan said...

நரேந்திர மோடியை சட்டம் நெருங்குகிறது.......

http://www.thehindu.com/news/national/article2647290.ece?homepage=true

VANJOOR said...

//சுவனப்பிரியன் said...நரேந்திர மோடியை சட்டம் நெருங்குகிறது.......//

PART 1.

நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கை பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் இஷ்ரத் ஜஹான்- எஸ்ஐடி அதிரடி அறிக்கை

அகமதாபாத்: அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டனர் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கை பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்துக் கூறிய குஜராத் காவல்துறை, இந்த நால்வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்த படையினர் என்றும் தெரிவித்தது.

ஆனால் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என்றும், இவர்களை போலி என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர் என்றும் கூறி இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர், பிரனீஷின் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையையும் அது நேரடியாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் கொல்லப்பட்டது நிஜமான என்கவுண்டரிலா அல்லது போலியான சம்பவமா என்பது குறித்து தனது இறுதி அறிக்கையை சமர்பபிக்குமாறு எஸ்ஐடிக்கு நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷா குமாரி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்

அதில் இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று மரணமடையவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார். இது என்கவுண்டர் மரணம் அல்ல, மாறாக கொலையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

PART 2 CONTINUED BELOW ……..

.

VANJOOR said...

PART 2.

//சுவனப்பிரியன் said...நரேந்திர மோடியை சட்டம் நெருங்குகிறது.......//

புது வழக்கு தொடர உத்தரவு

இதையடுத்து என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்பு கொண்ட அத்தனை போலீஸார் மீதும் 302வது செக்ஷன்படி புதிதாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முதல் தகவல் அறிக்கையை யார் பதிவு செய்வது, யார் இந்த வழக்கை புலனாய்வு செய்வது என்பது குறித்து உயர்நீதிமன்றம் விவாதித்து முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை மத்திய விசாரணை அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்குமாறும் குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனால் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு சிபிஐ வசம் செல்லும் என்று தெரிகிறது.

எஸ்ஐடியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விவரங்களை உயர்நீதிமன்றம் வெளியிடவில்லை.

அவை வெளியிடப்பட்டால் வழக்கு விசாரணையை அது பாதித்து விடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் அரசு மீது முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கடும் குற்றச்சாட்டு:

இந் நிலையில் முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் கூறுகையில், இஷ்ரத் ஜஹான் என்கவுண்டரில் மரணமடையவில்லை. அவர் முன்பே கொல்லப்பட்டு விட்டார்.

என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருந்தது
என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

2002ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது, குஜராத் உளவுப் பிரிவின் தலைவராக இருந்தவர் ஸ்ரீகுமார். பின்னர் அவர் டிஜிபியானார்.

அவர் கூறுகையில், குஜராத் அரசின் போக்கு தற்போது அம்பலமாகியுள்ளது.

இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று கொல்லப்படவில்லை என்ற வாதம் உண்மையாகியுள்ளது.


2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.

முன்பு ஒருமுறை அகமதாபாத்தில் ஸ்ரீகுமார் அளித்த பேட்டியின்போது, குஜராத் அரசு என்கவுண்டர் மூலம் கொலைகள் செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தது.

2002ம் ஆண்டு கலவரத்தின்போது நான் அப்போதைய தலைமைச் செயலாளர் சுப்பா ராவிடம் பேசியபோது, என்னிடம் அவர் கூறுகையில், நாம் சிலரையாவது கொலை செய்தால்தான், குஜராத் அரசின்கொள்கை என்ன என்பது அனைவருக்கும் வலிமையாக புரியும் என்றார்.


அதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன். அப்படிச் செய்தால், அது இந்திய அரசியல் சட்டம், 120 பி பிரிவின்படி அது சதிச் செயல் என்று அவருக்குச் சுட்டிக் காட்டினேன்.

ஆனால் குஜராத் அரசு என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை கொள்கையாகவை கடைப்பிடித்து வந்தது என்றார் அவர்.

SOURCE: http://tamil.oneindia.in/news/2011/11/21/ishrat-jahan-encounter-was-fake-sit-tells-gujarat-hc-aid0091.html

suvanappiriyan said...

திராவிடன்!

//மேல கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று ஆற அமர உட்கார்ந்து படித்துவிட்டு உங்களின் கேள்விகளை தொடுங்கள். சரி வர தெரியாம சும்மா சும்மா எதாவது கேக்கனும்னு சொல்லி கேக்க கூடாது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் உங்க கதை.//

நாமளும் எவ்வளவோ கரடியா கத்தினாலும் இந்த பாய்ங்கள நம்ம(கம்யூனிஷ) கூடாரத்துக்கு கொண்டு வர முடியலீயே! இந்துக்களிலும் கிறித்தவர்களிலும் ஓரளவு கூட்டத்தை திரட்டி விட்டோம். இந்த தவ்ஹீத் ஜமாத் வேறு முஸ்லிம்களை சிறந்த சிந்தனைவாதிகளாக மாற்றி வருகின்றார்களே. இவர்கள் இருக்கும் வரை நம்ம கம்யூனிஷ கடையை முஸ்லிம்கள் மத்தியில் விதைக்க முடியாது என்ற விரக்தியில் எழுதப்பட்டதே வினவின் தற்போதய கட்டுரை. வினவின் வயிற்றெறிச்சலை பதிவின் மூலமே தீர்த்துக் கொள்கிறது. பாவம்.... இருக்கும் ஒரே வழியையும் அடைத்து விடக் கூடாதல்லவா.....

இஸ்லாத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு மேற்கண்ட புத்தகத்தை படித்து வினவு தெளிவு பெறட்டும். நாம் நமது வழியான சாந்தியும சமாதானமுமான வழியிலேயே பயணிப்போம்.....

rajan said...

சுவனப்ப்ரியன்,

ஆண்கள் கண்களை தாழ்த்த வேண்டும் என்று குரான் வசனம் இருக்கிறதல்லவா ?
அப்படியானால், குரான் வசனப்படி நடக்காத அந்த ஆணுக்கு என்ன தண்டனை ?

rajan said...

சுவனப்ப்ரியன்,
//வெளிநாட்டு மக்கள் அதிகம் பேர் மனைவியை பிரிந்து இரண்டு வருடம் வரை கூட சவுதியில் தனிமையில் இருக்கின்றனர். அழகிய முக தோற்றத்தை கொண்ட பெண்களை பார்க்கும் பொது அவர்களுக்கு உணர்வு மேலிட வாய்ப்பிருப்பதாலேயே சவுதி பெண்களின் முகத்தை மூடச் சொல்கிறோம் என்று முன்பு ஒரு முறை ஒரு சவுதி சொன்னது இபபொழுது எனக்கு ஞாபகம் வருகிறது. காரணம் இதுவாகவும் இருக்கலாம். குர்ஆனைக் காட்டி முகத்தை மூடச் சொல்ல எந்த சட்டமும் இல்லை. இது இந்த நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக இவர்கள் போடும் சட்டம் என்று புரிந்து கொண்டால் குழப்பம் வராது.//

அப்ப சவூதி அரேபியர்கள் நல்லவர்கள், வெளிநாட்டினர்தான் காமப்பார்வை பார்ப்பவர்கள் இல்லையா ?

கொஞ்சம் மனசாட்சியுடன் ஹைதர் அலியின் இந்த பதிவை படித்து பாருங்கள், சவூதிக்கு சொம்பு தூக்குவதை நிறுத்துங்கள்.

http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_24.html

suvanappiriyan said...

ராஜன்!

//அப்ப சவூதி அரேபியர்கள் நல்லவர்கள், வெளிநாட்டினர்தான் காமப்பார்வை பார்ப்பவர்கள் இல்லையா ?

கொஞ்சம் மனசாட்சியுடன் ஹைதர் அலியின் இந்த பதிவை படித்து பாருங்கள், சவூதிக்கு சொம்பு தூக்குவதை நிறுத்துங்கள்.//

ஹைதர் அலியின் பதிவை நானும் பார்த்தேன். தவறு செய்பவர்கள் எல்லா நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கவே செய்கின்றனர். நம் நாட்டில் பெற்ற மகளோடு விபசாரம் செய்த கேரள நபரைப் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். சென்னையில் வசதி படைத்த மேட்டுக்குடியினர் ஒரு கிளப் வைத்துஅதன் அங்கத்தினர்கள் தங்களது மனைவியை மாற்றிக் கொள்வார்களாம். இதை இந்தியா டுடே கட்டுரையாகவே வெளியிட்டிருந்தது. இதைப் படித்தவுடன் 'இந்தியர்கள் அனைவருமே இப்படித்தான்' என்று ஒரு வெளிநாட்டவன் நினைப்பது எத்தனை பேதமையோ அதைத்தான் நீங்களும் செய்வது.

முதலில் ஆண் துணையில்லாமல் தனியாக வீட்டு வேலைக்கு வருவதை இஸ்லாம் தடை செய்கிறது. இது போன்ற தவறுகள் நிகழும் என்பதால்தான் இஸ்லாமும் தடை செய்கிறது. முதல் தடையை அனுமதித்ததால்தான் இரண்டாவது தவறு நிகழ காரணமானது. எனவே தவறு எதனால் நிகழ்கிறது என்பதை ஆராய்ந்து அதை களைய முற்பட வேண்டும்.

சவுதிக்கு சொம்பு தூக்கி எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. வேலை செய்கிறேன். சம்பளம் பெறுகிறேன். அவ்வளவே!

//ஆண்கள் கண்களை தாழ்த்த வேண்டும் என்று குரான் வசனம் இருக்கிறதல்லவா ?
அப்படியானால், குரான் வசனப்படி நடக்காத அந்த ஆணுக்கு என்ன தண்டனை ?//

இது போன்று பார்வைகள் அலை பாயும் போது உடன் அந்த ஆண் மகன் திருமணத்தை நாட வேண்டம் என்று இஸ்லாம் வழி காட்டுகிறது.

முதல் பார்வை தவறு அல்ல. இது எல்லோராலும் செய்யப்படுவது. இரண்டாவது முறையும் அந்த பெண்ணின் மீது பார்வையை செலுத்துவதையே இஸ்லாம் தடுக்கிறது. அதற்கு அந்த பெண் உடுத்தும் கவர்ச்சியான உடைகளும் காரணம். பார்வை போன்ற சிறு தவறுகள் நம்மையறியாமல் நேரும்போது 'சைத்தானின தீண்டுதலை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு கோருகிறேன்' என்று கூறி அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும். இதுதான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

1905. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்."
என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :30

6243. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளதை விடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை. 18
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

rajan said...

சுவனப்ப்ரியன்,

//நம் நாட்டில் பெற்ற மகளோடு விபசாரம் செய்த கேரள நபரைப் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். சென்னையில் வசதி படைத்த மேட்டுக்குடியினர் ஒரு கிளப் வைத்துஅதன் அங்கத்தினர்கள் தங்களது மனைவியை மாற்றிக் கொள்வார்களாம். இதை இந்தியா டுடே கட்டுரையாகவே வெளியிட்டிருந்தது.//

ஆனால் யாரும் ஓரிருவர்தான் இப்படி செய்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுவதில்லை.

rajan said...

சுவனப்பிரியன்,

நாம் இப்படி பார்ப்போம்,

* பெண் தன் கணவனுடன் வெளியே செல்ல குரான் அனுமதிக்கிறது.
* அந்தப்பெண் கண்கள் உட்பட முகத்தை மூடாமல் செல்ல குரான் அனுமதிக்கிறது (ஆனாலும் அவள் கண்களை மட்டும்தான் மூடவில்லை).
* குரான் அனுமதித்த வரம்பை மீறாமல் தன் கணவனுடன் சென்ற பெண்ணின் சுதந்திரத்தில், குரான் சட்டத்தை மீறி குறுக்கிட்ட அந்த ஆணுக்கு, மற்ற அனைத்து மதங்களை விட அதிக சுதந்திரம் பெண்ணுக்கு அளித்துள்ள இஸ்லாமிய சட்டப்படி என்ன தண்டனை ?

rajan said...

சுவனப்பிரியன்

//முதலில் ஆண் துணையில்லாமல் தனியாக வீட்டு வேலைக்கு வருவதை இஸ்லாம் தடை செய்கிறது. இது போன்ற தவறுகள் நிகழும் என்பதால்தான் இஸ்லாமும் தடை செய்கிறது. முதல் தடையை அனுமதித்ததால்தான் இரண்டாவது தவறு நிகழ காரணமானது. எனவே தவறு எதனால் நிகழ்கிறது என்பதை ஆராய்ந்து அதை களைய முற்பட வேண்டும்.//

அதாவது பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், அதை அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கவும் பிறகு இதுதான் அதிகபட்ச சுதந்திரம் என்று பாராட்டவும் வேண்டும். சரிதானே ?

UNMAIKAL said...

// rajan said...

அதாவது பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், அதை அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கவும் பிறகு இதுதான் அதிகபட்ச சுதந்திரம் என்று பாராட்டவும் வேண்டும். சரிதானே ? //

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

****
எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் இருக்கும் காலம் வரை..ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.
*****


**** ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. *****

.

வண்டு முருகன் said...

//உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.//
திரு சுவனப்ரியன் அவர்களே, பெண்களுக்கு சொத்துரிமை, விதவை திருமணம் இவற்றை குறித்து கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எத்தனை காலத்திற்கு இஸ்லாம் தான் செய்தது என்று கூறுவீர்கள். முகமதுவின் மனைவி கதீஜா பெரும் செல்வந்தராகவும் வணிகராகவும் இருந்தார். அவர் ஒரு கிறிஸ்தவ பெண். நீங்கள் சொல்வது போல் பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமல் இருந்திருந்தால் அவர் எப்படி பணக்கார பெண்மணியாக இருந்திருக்க முடியும். மேலும் விதவையான அவர் தன்னுடைய விருப்பத்தின் பேரில் முகமதுவை திருமணம் செய்து கொண்டார். எந்த எதிர்ப்பும் இல்லாமல். முகமது இஸ்லாமை அறிமுகபடுதுவதற்கு முன்னரே நடந்தவை இவை. பிறகு எப்படி இஸ்லாம் வழங்கி விட்டது என்று கூறுகிறீர்கள்.

//முதலில் ஆண் துணையில்லாமல் தனியாக வீட்டு வேலைக்கு வருவதை இஸ்லாம் தடை செய்கிறது. இது போன்ற தவறுகள் நிகழும் என்பதால்தான் இஸ்லாமும் தடை செய்கிறது. முதல் தடையை அனுமதித்ததால்தான் இரண்டாவது தவறு நிகழ காரணமானது.//

//தாலிபான்களின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி என்று யார் சொன்னது? இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்டது தாலிபான்களின் குற்றம்.//
இஸ்லாம் என்ற ஒன்று இருப்பதால்தானே தலிபான்களும் தீவிரவாதிகளும் அதன் கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு உருவாகிறார்கள். அல்லது உருவாக்கப்படுகிறார்கள். இஸ்லாம் என்ற ஒன்று இல்லை என்றால் இவை நடக்க வாய்ப்பு இல்லை அல்லவா! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

ஒரு விஷயம்
இந்த பீஜே என்பவர் இஸ்லாமிய அறிஞரா? இவரது பல நிகழ்சிகளை நான் எங்கள் குமரி மாவட்டத்தில் கேட்டிருக்கிறேன். தவறாக நினைக்கவேண்டாம் அப்போது எனக்கு தோன்றிய எண்ணம் 'மாம்பட்டை (ஒரு வகை மதுகசாயம்) அடித்துக்கொண்டு வசை மொழி பேசும் என் பக்கத்துக்கு வீட்டுக்காரன் இவரை விட நாகரீகமாக பேசுவானே என்பது தான். இவர் ஒரு இஸ்லாமிய அறிஞர் என்றால்.... உண்மையிலேயே உங்கள் மார்க்கம் இனிய மார்க்கம்தான்........................... உங்களுக்கு மட்டும்.

M. Jeya Prakash
Kanyakumari