Followers

Saturday, March 30, 2013

முஸ்லிம் சிறுமிகளின் கால்களை கழுவிய போப் பிரான்சிஸ்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வெள்ளியை அனுசரிக்கிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும் முன்பு தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூறும் வியாழன் வழிபாடு வாடிகன் நகரத்தில் நேற்று நடைபெற்றது.வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி போப் ஆண்டவர் முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாக பொறுப்பேற்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதுவரையிலான மரபுகளை தகர்த்தெறிந்தார்.

வழக்கத்திற்கு மாறாக, அவர் ரோம் நகரில் உள்ள கசல்டெல் மர்மோ என்ற சிறார்கள் சீர்திருத்த பள்ளி சிறைக்கு சென்றார். அங்கு 12 இளம் சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டார். அவர்களில் முஸ்லிம் சிறுமிகளும் அடங்குவர். இதுவரை போப் ஆண்டவர் பெண்களின் கால்களை கழுவி முத்தமிட்டது இல்லை.

இதுகுறித்து அவர் கூறும் போது,

"எனது மனசாட்சிபடி மதகுருவின் கடமையை நான் செய்தேன். நான் உங்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன்." என்றார்.

இந்த நிகழ்ச்சி வாடிகன் சிட்டி ரேடியோவில் மட்டும் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக மற்ற டெலிவிஷன் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

While popes have for centuries washed the feet of the faithful on the day before Good Friday, never before had a pontiff washed the feet of a woman. That one of the female inmates at the prison in Rome was also a Serbian Muslim was also a break with tradition.

“There is no better way to show his service for the smallest, for the least fortunate,” said Gaetano Greco, a local chaplain.

washed the feet of 12 inmates aged 14 to 21, among them the two women, the second of whom was an Italian Catholic. Mr Greco said he hoped the ritual would be “a positive sign in their lives”.

Catholic traditionalists are likely to be riled by the inclusion of women in the ceremony because of the belief that all of Jesus’ disciples were male.

http://www.telegraph.co.uk/news/religion/the-pope/9960168/Pope-washes-feet-of-young-Muslim-woman-prisoner-in-unprecedented-twist-on-Maundy-Thursday.html

http://www.jaffnamuslim.com/2013/03/2_5808.html

-----------------------------------------------------------

05/03/2013 பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் இன்று முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

நன்றி வீரகேசரி

-----------------------------------------------------------

"தீன் இலாஹி" என்ற தனது புதிய கொள்கையை மக்கள் மீது தினித்த முகலாய மன்னர் அக்பர், தலைப்பாகையை கையில் ஏந்தியவர்களாக தனது காலில் விழுந்து தன்னை வணங்க வேண்டும் என்று அந்த கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஆணைபிறப்பித்தார். அவ்வாறு காலில் விழும் அவர்களுக்கு தனது உருவப்படத்தை பரிசாக அளித்தார். இவ்வாறு ஒரு சர்வாதிகாரியாக விளங்கிய அக்பர் இன்னொரு ஃபிர்அவ்னாக தன்னை கற்பனை செய்து கொண்டார் என்றுதானே விளங்குகிறது.
வாரத்தில் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை வணக்கம் செலுத்தினால் போதும் என்றும் போதனை(?) செய்து வந்தார் அந்த அக்பர் பேரரசர்.


மேலும் அக்பர் தனது கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இட்ட கட்டளைகள்:
1. பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும்.
2. பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
3. இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ செய்யலாம்.
4. எரிக்கும் போதோ புதைக்கும் போதோ தலை கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.
5. இறைச்சிக் கடைக்காரர், மீனவர்கள், பறவைகளைப் பிடிப்பவர் ஆகியோரின் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.


இந்த கொள்கையை உடைய முகலாய மன்னர் அக்பர் எவ்வாறு முஸ்லிமாக இருக்க முடியும் என்று வாசகர்களே! சிந்தித்துப்பாருங்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகப்பெரும் செல்வாக்கு மிக்க தன்னிகரற்ற ஆட்சித் தலைவராக திகழ்ந்தார்கள். அந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு நபித்தோழர் தங்களது காலில் விழுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்ட போது அதனை கடுமையாக எதிர்த்து, அது போல் எந்த மனிதருக்கும் காலில் விழக் கூடாது என்று ஆணை பிறபித்தார்கள். தான் வரும் போது அமர்ந்திருக்கும் யாரும் தனது வருகைக்காக எழுந்திருக்கவும் கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும்தான். அவர் கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள எந்த ஒரு முஸ்லிமும் அவன் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் தனது காலில் விழுந்து தன்னை வணங்க வேண்டும் என்று கூற அனுமதியில்லை. அவ்வாறு செய்பவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி நரக வாசிகளில் ஒருவனாகிவிடுவான்.


وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْأِسْلامِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ (آل عمران)


"இன்னும் இஸ்லாமல்லாத ஒன்றை மார்க்கமாக எவராவது தேடினால், அப்போழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படமாட்டாது, மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்" (அல் குர்ஆன்: 3:85)


இஸ்லாமிய மார்க்கமல்லாத ஒரு வழியினை தனது மார்க்கமாக ஆக்கிக் கொண்டவன் இறைவனிடத்தில் ஏற்புடையவன் அல்ல, மறுமையில் மிகப்பெரும் நஷ்டத்திற்குள்ளாவன் என்று குர்ஆன் கூறுகிறது.

நேர்மையாகவும், நீதி தவறாமலும் ஆட்சி செய்து வந்த முகலாய மன்னர் ஒளரங்கசீப் அவர்களையும், மன்னர் திப்பு சுல்தான் அவர்களையும் பற்றி வரலாறு எழுதியவர்கள், அவதூறான செய்திகளையும், இல்லாத பொல்லாத தகவல்களையும் எழுதி வைத்துள்ளார்கள். அவர்கள் தீவிரவாதிகள், இந்துகளுக்கு எதிரானவர்கள் என்ற நச்சு சிந்தனையை இள உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்து-முஸ்லிம் விரோதம் வளர்ந்து வேரூன்ற வேண்டும் என்று கருதிவருகிறார்கள் சங்பரிவாரங்கள். அவர்களது சூழ்ச்சிகளை அவர்களுக்கே எதிராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு இந்துகளால் திரித்து எழுதி வைக்கப்பட்ட வரலாறுகளை படித்த இஸ்லாமிய அறிவு ஞானம் சிறிது கூட இல்லாத பல முஸ்லிம்கள், அக்பர் ஒரு சிறந்த முஸ்லிம் என்று கருதிக் கொணடு அவர் கண்ட புதிய மார்க்கமான "தீன் இலாஹி" என்ற வார்த்தையை தங்களது கடிதங்களில், முக்கிய விஷயங்களில் எழுதி வருகிறார்கள். இது இஸ்லாத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இஸ்லாத்தை விட்டே வெளியேற்றும் செயல் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு செய்து வருபவர்கள் அல்லாஹ்வை அஞ்சி அந்த பழக்கத்தை கை விட்டுவிட்டு, இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.ஆதார நூல்:

Indian Affairs, Hostory Of Akbar, Period of 1526 Year.

6 comments:

சுவனப் பிரியன் said...

தங்கமணி!

//குரானை பாதுகாக்க தெரிந்த உங்கள் இறைவனுக்கு அதனை விட முக்கியமாக நீங்கள் கருதும் ஹதீஸ்களை பாதுகாக்க தெரியவில்லையே. எப்படி தொழுவது, எப்படி விரலை ஆட்டுவது, எப்படி அகட்டி உக்காருவது என்று உங்களது சடங்குகள் எல்லாமே ஹதீஸ்களிதானே இருக்கின்றன.//

நான் முன்பே கூறியது போல் எல்லாம் தெளிவாகவே இருந்தது. இஸ்லாத்தின் வளர்ச்சியை பொருக்காத யூதர்கள் முஸ்லிமாக மாறுவதாக நடித்து பல பொய்களை முகமது நபியின் பெயரால் இட்டு கட்டி அதனை பதிந்தும் விட்டனர். பிறகு வந்த மார்க்க மேதைகள் அதனை சரி கண்டு தற்போது தெளிவான நிலைக்கு வந்து விட்டனர். இந்த தெளிவை அடையாதவர்கள் தான் இன்றும் தர்ஹாக்கள் மற்ற மூடப் பழக்கங்களில் விழுந்து சர்ச்சையும் செய்து கொண்டுள்ளார்கள். முன்பு தமிழகத்தில் இஸ்லாமியரின் நிலையும் தற்போது தெளிவடைந்த பிறகு உள்ள நிலையையும் நீங்களே நன்றாக உணருவீர்கள். இன்னும் சில ஆண்டுகளில் மேலும் முன்னேற்றங்கள் கிடைக்கும்.

இந்த பிரிவுகள் கூட பின்னால் ஏற்படும் என்பதை முகமது நபி முன் கூட்டியே கூறியுள்ளதையும் பார்க்கவும். இதுவும் கூட இவர் இறை தூதர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.

‘நிச்சயமாக உங்களுக்கு முன்னால் இருந்த வேதம் கொடுக்கப்பட்டவர்கள் 72 பிரிவுகளாக பிரிந்தனர். இந்த சமூகம் 73 ஆக பிரியும். அதில் 72 நரகம் செல்லும். ஒன்று சுவனம் செல்லும். 'சுவனம் செல்லும் அந்த ஒரு கூட்டம் யார் யாரசூலல்லாஹ்' என்று தோழர்கள் வினவினர். 'நானும் எனது தோழர்களும் இன்று எவ்வாறு மார்க்கத்தைப் பேணுகிறோமோ அவ்வாறு பேணும் நபர்களே சொர்க்கத்தை அடையும் அந்த கூட்டம்.' என்று நபியவர்கள் மறு மொழி பகர்ந்தார்கள்.
(ஆதார நூல்: ஸூனன் அபூதாவூத் – 4580, ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).

‘எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு, நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம், அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்
குர்ஆன் (அத்தியாயம் 4 ஸுரத்துந்நிஸா 115 வது வசனம்).

‘அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! (உங்களுடைய தலைவருக்கு) கட்டுப்படுங்கள்! அவர் அபிஷீனிய அடிமையாக இருப்பினும் சரியே! எனக்குப்பின் யார் வாழ்கிறாரோ, அவர் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பார். எனவே எனது வழிமுறையையும், நேர்வழி நடந்த எனது கலீபாக்களின் வழிமுறையையும் உங்கள் கடைவாய்ப் பற்களால் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் நூதனமான விஷயங்களைப் பற்றி நான் உங்களுக்கு எச்சரிக்கைச் செய்கிறேன். நூதனமாக விஷயங்கள் யாவும் ‘பித்ஆ’ வாகும். ‘பித்அத்’ துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).

jaisankar jaganathan said...

ஆபிரகாமிய மதங்களே டுபாக்கூர் மதங்கள். இதுல ஒருத்தர் மட்டும் தப்பு பண்ணிட்டாராம்

Anonymous said...

நரேந்திரமோடி-

மற்றும்மோறு

நாடகம்அபலம்..**


புதுடெல்லி, மார்ச் 30-
அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபர்கள் குழு சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தது. அவர்கள் குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்கள்.
இந்த குழுவில் தொழில்அதிபர்கள் தவிர அமெரிக்க எம்.பி.க்களும் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினார்கள். அப்போது அவர்கள் குஜராத்தின் தொழில் வளம் பற்றியும் குஜராத் அரசின் திட்டங்கள் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டனர். அப்போது நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் தொழில் தொடங்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க தொழில் அதிபர்கள் நரேந்திர மோடியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அது பத்திரிகைகளிலும் வெளியானது.
இதற்கிடையே அமெரிக்க தொழில் அதிபர்களும், எம்.பி.க்களும் இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் இதற்காக அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 62 ஆயிரம் முதல் ரூ. 8 1/2 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சிகாகோவில் உள்ள இந்திய அமெரிக்க நிறுவனம் ஒன்றுதான் இவர்களை அழைத்து வந்துள்ளது. அவர்கள் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று குறிப்பிட்ட பெரிய தொழில் அதிபர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
அதில் குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம், உத்தரபிர தேசம், பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயண திட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
தாஜ்மகால், ரந்தம் போர் புலிகள் சரணாலயம், ஜெய்ப்பூர்ராம்பாக் அரண்மனை, உதய்ப்பூர் ஏரி அரண்மனை, பஞ்சாப் பெற்கோவில் ஆகியவற்றை சுற்றிப் பார்க்கலாம்.
மும்பையில் இந்தி சினிமா நட்சத்திரங்களுடன் சந்திப்பு மற்றும் பஞ்சாப் முதல்- மந்திரி பிரகாஷ் சிங்பாதல், குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியுடன் சந்திப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக இவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஷலாப் குமார் பாரதீய ஜனதாவுக்கு நெருக்கமனாவர் என்று கூறப்படுகிறது. அவர்தான் இந்திய சுற்றுப்பயணத்தில் நரேந்திர மோடியை சந்திக்கலாம் என்று அழைத்து வந்துள்ளார்.
ஆனால் இந்த தகவலை வெளிநாட்டினருக்கான பாரதீய ஜனதா ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜாலி மறுத்துள்ளார். இவரும் குழுவுடன் இந்தியா வந்திருந்தார். அவர் கூறுகையில், இந்த குழுவின் அனைத்து செலவுகளையும் சிகாகோ இந்திய அமெரிக்க நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்றார்.
இந்த சந்திப்புக்கு பின் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அமெரிக்க முன்னாள் சபாநாயகர் நெவ்ட் கிங்கி ரிச்சுடன் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்.
சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வரும் ஷலாப்குமார் கூறும்போது, இதில் நாங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை. சட்டப்படிதான் எல்லா ஏற்பாடுகளும் செய்தோம் என்று கூறினார்.
நரேந்திர மோடியை சந்திக்க அமெரிக்க தொழில் அதிபர்களிடம் நிதி வசூல் செய்ததற்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநில தலைவர் அர்ஜுன்மோத்வாடியா கூறுகையில், ''நரேந்திர மோடியின் ஏமாற்று வேலை அம்பலமாகியுள்ளது. அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார்.
நரேந்திர மோடியை சந்தித்தவர்கள் எல்லாம் பெரிய தொழில்அதிபர்கள் கிடையாது. பகுதி நேர தொழில் அதிபர்கள். அமெரிக்காவையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார.

எமதுநன்றிகள் மாலைமலர்
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 30, 11:36 AM IST

சுவனப் பிரியன் said...

//ஆபிரகாமிய மதங்களே டுபாக்கூர் மதங்கள். இதுல ஒருத்தர் மட்டும் தப்பு பண்ணிட்டாராம் //

இந்து மதமும் ஆபிரஹாமிய மதத்தின் ஒரு பிரிவுதான் என்று ஒரு ஆராய்ச்சி சொல்வது தெரியுமோ! :-) நோவா(நூஹ்) தான் உங்களுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்பதை இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நலமோ!

மதங்கள் அனைத்தும் டுபாக்கூர் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். இஸ்லாத்தையும் மதம் என்ற போர்வைக்குள் அடக்கியதால் தான் தர்ஹாக்களும், மூடப் பழக்கங்களும் இஸ்லாத்துக்குள்ளும் நுழைந்து விட்டன.

இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். மதமல்ல.

jaisankar jaganathan said...

//இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். மதமல்ல.
//

என்ன மார்க்கமோ. என் கழுத்தை வெட்டாமலிருந்தால் சரி

jaisankar jaganathan said...

// நோவா(நூஹ்) தான் உங்களுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்பதை இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நலமோ!//

நோவா பேழையின் கதை எனக்கும் தெரியும். அது சத்தியவிரதன் என்னும் சோழ மன்னனின் கதை என்று புராணத்தில் இருக்கிறது.