Followers

Wednesday, March 20, 2013

சவுதியின் தபூக் நகரில் மற்றுமோர் மனிதநேயச்சேவை!...

சவுதியின் தபூக் நகரில் மற்றுமோர் மனிதநேயச்சேவை!...
=======================================
இறைவனின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 01/03/2013 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டைச் சேர்ந்த சபேஸன் முத்துசாமி என்ற சகோதரர் அவரது [கபில்] முதலாளியால் கடுமையாக தாக்கப்பட்டு, அவரின் ஒரு காதின் செவில் கிழிக்கப்பட்ட நிலையில் கிளை நிர்வாகிகளை அணுகி :- தான் சவுதி – தபூக் வந்த 3 மாதமாக சம்பளம் தறாமல் தனது முதலாளியால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்ணீர் வழிய சொல்லிக்காட்டினார்.சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் இந்திய தூதரக உதவியுடன் உடனடியாக அவரை தபூக் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடந்தவைகளையெல்லாம் எடுத்துக்கூறி, காவலர்களுடைய உதவியுடன் அவரை மருத்துவமணைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளிக்கப்பட்டார்.

மேலும் தபூக் போலிஸ் அவரது [கபில்] முதலாளியை உடனடியாக பிடித்துவந்து சிறையில் அடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்….!!

மேலும் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் தபூக் போலிஸ் உதவியுடன் அவரை தபூக் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்று, நீதிபதியிடம் இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் ஆதாரத்துடன் எடுத்துக்கூறி, நீதிவழங்கும்படி கோரினார்.

அல்லாஹ்வை அஞ்சிய அந்த நீதிபதி அவருக்கு 3 மாதசம்பளம்- 3000. நஷ்டஈடு- 1500, ஏர்டிக்கட்டுக்கு- 1500. ஆகமொத்தம்SR.6000 பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவேண்டுமென அவரது [கபில்] முதலாளிக்கு உத்தரவிட்டார்.

பிறகு சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் அவரது [கபில்] முதலாளியிடமிருந்து 6000 SR, பாஸ்போர்ட், டிக்கட் அனைத்தையும் பெற்று அவரை கடந்த -15/03/2013 அன்று தாயகம் அனுப்பிவைத்தார்.

அனைத்துப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!...
-----------------------------------------------------------------------------------
“அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லீம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?” [உலகப்பொதுமறை – திருக்குர்ஆன்41:33]

தபூக்கில் நான் இரண்டரை வருடம் வேலை செய்துள்ளேன். அந்த நேரத்தில் சகோதரர் அப்துல் அஜீஸோடு சேர்ந்து பல முறை அழைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளேன். மாற்று மத சகோதரர்களை அன்போடு அவர்களின் குறைகளை கவனிப்பதிலாகட்டும், அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதிலாகட்டும் அனைத்திலும் எந்த குறையும் இல்லாமல் சகோ அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் ஒரு குழுவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்த்துள்ளேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

மேலும் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக அனைத்து மட்டத்திலும் ஏற்றுக் கொண்டவர்கள் மாற்று மதத்தவர்களோடு சகஜமாக பழக மாட்டார்கள் என்ற வாதம் பலரால் வைக்கப்படுகிறது. அந்த வாதம் தவறு என்பதை இது போன்ற நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.

சபேசன் முத்துசாமி என்பவர் மாற்று மதத்தை சேர்ந்த ஒரு சகோதரர். அவரது முதலாளியான சவுதி நாட்டவரோ ஒரு முஸ்லிம். இங்கு முஸ்லிம் தவறாக நடக்கிறார். இந்துவான முத்துசாமி சரியாக நடக்கிறார். முத்துசாமியின் பக்கம் நியாயம் இருக்கிறது. எனவே இங்கு அனைத்து சகோதரர்களும் நியாயத்தின் பக்கம் நின்று இந்த சகோதரருக்கு நீதி கிடைக்க அரும்பாடு பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் அந்நாட்டு பிரஜை ஒருவரை சம்பள பிரச்னைக்காகவும் அடித்ததற்காகவும் சிறையில் அடைக்க வைப்பது என்பது எவ்வளவு பெரிய ஆபத்தான வேலை என்பதை நாம் அறியாதவர்களல்ல. இருந்தும் இஸ்லாம் நீதியின் பக்கம் முஸ்லிம்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் முன் பின் தெரியாத முத்துசாமிக்காக நமது சகோதரர்கள் களத்தில் இறங்கி இன்று அந்த நபருக்கு நியாயம் கிடைக்க பாடுபட்டுள்ளனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். எல்லா புகழும் இறைவனுக்கே!

இதுதான் இஸ்லாம்.

11 comments:

sulthan mydeen said...

Good...

நஷ்ட ஈடு ரொம்ப கம்மியா இருக்கு ...

இது போதாது .. உயர்த்திக் கொடுக்கணும் ...

Anonymous said...

மெய் சிலிர்க்க வைக்கிறது !

Anonymous said...

மெய் சிலிர்க்க வைக்கிறது

notifierman said...

மெய் சிலிர்க்க வைக்கிறது

சுவனப் பிரியன் said...

சகோ சுல்தான் மைதீன்!

//நஷ்ட ஈடு ரொம்ப கம்மியா இருக்கு ...

இது போதாது .. உயர்த்திக் கொடுக்கணும் ...//

கம்மிதான். இருந்தாலும் ஒன்றுமே இல்லாமல் நிர்கதியாக நாட்டுக்கு திரும்புவதை விட செலவு செய்த பணமாவது அவருக்கு கிடைத்ததே என்ற திருப்தி நமக்கு உள்ளது. நம்மால் இயன்றதை செய்துள்ளோம்.

சுவனப் பிரியன் said...

நோடிஃபையர் மேன்!

//மெய் சிலிர்க்க வைக்கிறது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

திரு கிருஷ்ண குமார் பவுத்தம் இந்து மதத்தால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரத்தை கேட்டிருந்தார். சில வற்றை தருகிறேன். மற்றவைகளை அந்த பதிவில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

வழக்கம் போல் திண்ணை நிர்வாகம் இதனையும் சாமர்த்தியமாக வெளியிடாது. ஆனால் இதனை எனது பதிவிலே மீள் பிரசுரம் செய்வேன்.

மாநாடு,ஹர்ஷ வர்தனரால், கன்னோசியில் கூட்டப் பட்டது! அந்த மாநாட்டுக்கு வரும்போது ஹர்ஷவர்த்தனரைக் கொலை செய்துவிட வேண்டும் என்று பிராமணர்கள் சதித் திட்டம் தீட்டிக் கொண்டு, மக்களோடு மக்களாக மாநாட்டிற்கு வந்தனர்! மாநாட்டின் மிகப் பெரிய, பவுத்த கோபுரத்துடன் அமைக்கப் பட்டு இருந்த பந்தலுக்கு தீவைத்தனர்! பதறி,துடித்து தீயை அணைக்க ஹர்ஷ வர்த்தனர் செய்த ஏற்பாடுகள் வீணாகி,பந்தல் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது!

மறுநாள், அங்குவந்து சேதத்தை, ஒரு பழைய பவுத்த
ஸ்துபியின் மீது ஏறி, பார்வையிட்டு விட்டு,கீழே இறங்கிய ஹர்ஷ வர்தனரை, "பைராஹி" என்ற பிராமணன்,மறைவிலிருந்து திடீர் என்று கத்தியுடன் பாய்ந்து, கொலை செய்ய முயன்றான்! மாவீரரான ஹர்ஷ வர்த்தனர், அந்த கொலைகாரனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டதுடன், அவனைப் பிடித்து தனது பாதுகாவலர்களிடமும் ஒப்படைத்தார்!அவனிடம் நடத்திய விசாரணையில், அவனோடு,சேர்ந்து ஐநூறு பிராமணர்களும் ஹர்ஷ வர்த்தனரைக் கொல்ல வந்தது,தெரிந்தது!

"ஹிந்து ஏகாதிபத்தியத்தின் பயங்கரம்"- The Menace of Hindu Imperialisam}

"வேதமும் விஞ்ஞானமும் " - ஆசிரியர் எஸ். டி. விவேகி

http://generationneeds.blogspot.com/2012/02/blog-post_20.html

நம் தமிழ் நாட்டில் சமணர்களை கழுவில் ஏற்றி கொன்ற கதையும் தனியாக உள்ளது.


Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

இந்தியாவின் தஞ்சாவூர், திருச்சி மற்றும் சென்னை ஆகியவற்றில் வைத்து பௌத்த பிக்குமார்கள் தாக்கப்பட்டதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் இடம்பெற இடமளிக்கக்கூடாது என்றும் இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.

இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு புதன்கிழமை(20) கொழும்பு கொம்பனித்தெரு நிப்பன் ஹோட்டலில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.றியாழ், செயலாளர் அப்துல் றாசிக், துணைத்தலைவர் பர்ஸான், துணைச் செயலாளர் றஸ்மின் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் விளக்கமளிக்கையில் இந்தியாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தை மையமாக வைத்து இலங்கையில் உள்ள பௌத்த இனவாத அமைப்பான பொதுபல சேனா உண்மைக்கு புறப்பான போலித்தகவல்களை தங்களது ஊடக அறிக்கையில் வெளியிட்டு உள்ளனர்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு பினனணியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளதாகவும் இவர்கள்தான் பொதுமக்களை பிக்குமார்களுக்கு எதிராக தூண்டுவதாகவும் இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அதரவான அமைப்பினர் என்றும் அறிக்கை விடுத்துள்ளனர். அஅத்தோடு இலங்கையில் செயற்படும் ஏகத்துவ பிரச்சார அமைப்பாகிய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இது குறித்த தகவல்களை வழங்குவதால் இவ்வமைப்பை இலங்கையில் உடனடியாக அரசு தடை செய்யவேண்டும் எனவும் தங்கள் அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் இவ்வூடக அறிக்கையினை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. ஏனெனில் நடந்த சம்பவம் குறித்த தகவல்கள் இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் தெளிவாக வந்திருக்கும் நிலையிலும் யார் இத்தாக்குதலுக்குப் பின்னணியில் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவாக நிரூபணம் அஅனதற்குப்பிறகும் அப்பட்டமான அவதூறுச் செய்திகளை பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பு அறிக்கைகளாக அறிவித்துள்ளமை இவர்களின் உண்மை முகத்தை உலகத்திறகே தோல் உரித்துக் காட்ட போதுமான சான்றுகளாகும்.

உண்மையில் நடந்தது என்ன?


நன்றி : jaffnamuslim.com

Anonymous said...

உண்மையில் நடந்தது என்ன?

கடந்த 16.03.2013 அன்று டெல்லியிலுள்ள தொல்லியல் ஆராய்ச்சி மையத்தில் பயின்றுவரும் சீனா, தாய்லாந்து, பர்மா, இலங்கை மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 19 மாணவர்கள் தொல்லியல்துறை ஆய்வுப்பணிக்காக தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்தபோது தாக்கப்பட்டனர். இத்தாக்குதலில் தமிழ் தேச பொதுவுடமை கட்சி தலைமை செயற்குழ உறுப்பினர் பழனி ராஜேந்திரன், தஞ்சை நகர செயலாளர் இராசு முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னணி துணைத்தலைவர் கே.செந்தில் குமரன், நாம் தமிழர் கட்சி ஒரங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, விடுதலை தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்;ந்த அருள் மாசிலாமணி, ம.தி.மு.க கட்சி குழுவினர் உட்பட பலர் ஈடுபட்டனர். இவர்கள் 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 18.03.2013 அன்று உடதலவின்னே வஹீத தேரர் 16 யாத்திரிகர்களுடன் புத்தகாயவிலிருந்து திரும்பும்போது நாம் தமிழர் கட்சி அதரவாளர்களினால் சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நாட்டில் இடம்பெற்ற பிக்குமார்களுக்கு எதிரான இவ்விரு தாக்குதல்களுக்கு பின்னணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ், மற்றும் இந்து அமைப்புக்களே சம்பந்தப்பட்டுள்ளனர் என்று இந்திய பத்திரிகைகளே தெளிவாக தகுந்த சான்றுகளுடன் அறிக்கை விட்டிருக்கும்போது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் விதமாய் பொதுபல சேனா இப்பிரச்சினையோடு எள்முனையளவும் சம்பந்தமில்லாத தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்அத்தையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்அதையும் தொடர்புபடுத்தியிருப்பதானது பொதுபல சேனாவின் வடிகட்டிய முட்டாள் தனத்தையும், உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெளிவாக இருக்கும்போது போலியான செய்திகளை இட்டுக்கட்டி மக்களிடம் பரப்;பி இனமுரண்பாடுகளை தோற்றுவிக்க முயலும் நரித்தனத்தையும் பட்டவர்த்தனமாய் வெளிகாட்டி நிற்கிறது.

பிக்குமார்களை தாக்கிய விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களை கண்டிப்பதை விட்டுவிட்டு விடுதலைப் புலிகளை பகிரங்கமாய் எதிர்த்து குரல்கொடுத்து வரும் தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத், மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்டோரை பொதுபல சேனா கண்டித்திருப்பதிலிருந்து, பொதுபல சேனா அமைப்பினர் ஆகிய இவர்கள் தான் டுவுவுநு என்ற பயங்கரவாத அமைப்பை பாதுகாத்து வளர்க்க எத்தணிக்கின்றனர் என்பது தெட்டதெளிவாய் பளிச்சிடுகிறது. அத்தோடு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது குற்றம் சுமத்தி சுட்டுவிரல் நீட்ட எதுவொன்றும் இல்லாத நிலையில் போலிகளை சோடித்;து எம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஆசைப்படும் பொதுபல சேனாவின் முதுகெழும்பற்ற கோழைத்தனத்தையும் துகிலுரித்துக் காட்டுகிறது.

உலகறிந்த மகா உண்மையினைக்கூட மொத்;தமாய் தங்கள் திரிபுவாதங்களால் திசை திருப்புவதற்கு எப்படி பொதுபல சேனா பகீரத பிரயத்தனம் எடுக்கிறதோ, இதேபோன்று தான் இதற்கு முன்னும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள், ஹலால், ஹிஜாப், பள்ளிவாசல்களில் தீவிரவாத பயிற்சி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல் உள்ளிட்ட இவர்களின் ஏனைய குற்றச் சாட்டுக்கள் ஆகும். இவை அனைத்தும் அடிப்படையற்ற அண்டப்புளுகுகள் ஆகும் என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

சகவாழ்வுடன் பயணிக்கும் இலங்கையின் அமைதிச் சூழலை தங்கள் இனவாதத்தை கக்கும் திரிபுவாதங்களால் சிதைத்து, மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்க நினைக்;கும் பொதுபல அடஙசேனா என்ற அமைப்பு இந்நாட்டின் அமைதிக்கு வேட்டு வைக்கும் பயங்கரவாத அமைப்பாகும். எனவே இப்பயங்கரவாத அமைப்பை உடடினடியாக தடைசெய்யுமாறு இலங்கை அரசுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கிறது. பொதுபல சேனா என்ற தீவிரவாத அமைப்பின் குட்டுதல்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் அடங்கிப்போகமாட்டாது என்பதையும், பறிக்கப்படும் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காய் இறுதிவரை களத்தில் நின்று ஜனநாயக வழிகளில் போராடும் என்பதையும் இலங்கை வாழ் மக்களுக்கு இத்தால் அறிவித்துக் கொள்கின்றது.

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
நன்றி : jaffnamuslim.com

Anonymous said...

நாட்டில் இஸ்லாமிய உடைகள் அணிவோர் தொகை அதிகரிப்பு


சஹீத் அஹமட் ,ஏ.அப்துல்லாஹ். எம். அம்ஹர் : நாட்டில் இஸ்லாமிய உடைகள் அணிவோர் தொகை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் பெரும்பாலனவர்கள் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்ட விதத்தில் உடையணிவது வழக்கமாக இருந்த போதும் . தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஹபாயா , ஹிஜாப் ,நிகாப் ஆகிவற்றுக்கு எதிரான அத்துமீறல்கள் , ஹபாயா , நிகாக்குக்கு எதிரான மோசமான மதவெறி ,இனவெறி அமைப்புக்களின் பிரசாரங்கள் ஆகியவற்றின் பின்னர் . மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பல்கலை கழகங்களில் இந்த மாற்றத்தை தெளிவாக அவதானிக்கக் கூடியாதவுள்ளதாக பல்கலை கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர் , அதேவேளை உயர்தர மாணவர்கள் மத்தியிலும் இந்த அதிகரிப்பை அவதானிக்கக் முடிகிறது குறிப்பாக கொழும்பு ,கண்டி நகரங்களில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தனியார் வகுப்புக்கு வரும் மாணவியர்கள் மத்தியில் இது அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.

அண்மையில் கொழும்பு கோட்டை மத்திய ரயில் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவிகள் நான்கு பேரின் அயாயக்களை இழுத்த சம்பவத்தின் பின்னர் குறித்த சட்டக் கல்லூரியின் இஸ்லாமிய உடையை முழுஅளவில் அணியாத மாணவிகளும் தற்போது இஸ்லாமிய முறையிலான உடைகளை அணிந்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைகாலமாக நாட்டில் பல பகுதிகளில் ஹபாயா , ஹிஜாப் ,நிகாப் அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது . இதற்கு பெளத்த கடுபோக்கு மற்றும் சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்களின் விசம பிரசாரம் பிரதான தூண்டும் காரணியாக இருப்பதாக சுட்டிக் காட்டப் படுகிறது .

அண்மையில் , கொழும்பு மாவாட்டத்தின் கொழும்பு கோட்டை , பொரல , தெஹிவல , கொட்டஹேன ஆகிய பகுதிகள் இஸ்லாமிய உடையில் நடமாடிய மாணவியர் , குடும்ப பெண்களுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, அதேபோன்று மாத்தறை திக்குவல , பொலநறுவை மல்லம்பிட்டி ஆகிய இடங்களிலும் இஸ்லாமிய உடையில் நடமாடிய பெண்களுகெதிராக அடாவடிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .

அதேவளை கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஹபாயா அணிவோர் தொகையின் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது .

ராவணன் said...

///அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு///


அண்ணாச்சி கெட்டவார்த்தையில் யாரோ ஒங்களத் திட்டுவது நல்லாயில்ல

நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமியிடம் வேண்டிங்கொள்ளுங்கள்.