Followers

Wednesday, March 13, 2013

ராமன் தேடிய சீதை!

எந்த ஒரு நம்பிக்கையும் ஒரு இனத்தவருக்கு தானாக வந்து விடுவதில்லை. அந்த மக்களின் வேதங்கள், வேதங்களை அறிமுகப்படுத்திய இறை தூதர்கள், வேத விற்பன்னர்கள், ஊர் பெரியவர்கள் என்று பலரின் எண்ணங்களை கிரகித்துக் கொள்ளும் மனித சமூகம் காலப்போக்கில் தனது வாழ்விலும் அதனை செயல்படுத்தி விடுகிறது.

இனி விஷயத்துக்கு வருவோம்.

ராமன் தனது மனைவி சீதைக்கு ஏற்பட்ட பழியை துடைக்க தீயில் இறங்க சொன்னார். இது நாம் அனைவரும் அறிந்த கதை. இது நியாயம் தானா என்று தமிழகம் தோறும் பல பட்டி மன்றங்கள் நடந்து விட்டது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இவர் கடவுளா? அல்லது ஒரு அரசரின் மகனா என்ற சர்ச்சையும் இருந்து வருகிறது. இது ஒரு கற்பனை காவியம் என்று சொல்வோரும் உண்டு. எப்படியோ இருந்து விட்டு போகட்டும். ஆனால் இந்த ராமன் அன்று தனது மனைவிக்கு போட்ட கட்டளை இன்று வரை நமது மக்களின் வாழ்வில் பிண்ணிப் பிணைந்திருப்பதைப் பார்க்கிறோம்.

தினமலரில் வந்த செய்தியைப் பாருங்கள்.....

ரோஹ்தாஸ்:தற்போதைய நவீன யுகத்திலும், தீயில் இறங்கி, நடத்தையை நிரூபிக்கக் கோரும் பழமைவாதிகள், இந்தியாவில் உள்ளனர் என்பதற்குச் சான்றாக, பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பீகார், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள, அகோரி என்னும் கிராமத்தில், பழமையான, மத பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான, முல்க் லெட்டூர் ரேடியன் என்பவரது மனைவி, தன் கணவரிடம் தகவல் தெரிவிக்காமல், நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் சகோதரியின் கணவரைப் பார்க்கச் சென்றார். இதை அறிந்த, ரேடியனின் உறவினர்கள், சந்தேகம் அடைந்து, அவர் மனைவியைத் துன்புறுத்தினர். இந்தப் பிரச்னை, ஊர் தலைவரிடம் கொண்டு செல்லப்பட்டது.

அவர்களுடைய வழக்கப்படி, தீயில் இறங்கி நடந்து, உயிருடன் வெளியில் வந்தால் தான், அவர் கற்புள்ளவர் என்றும்; நல்ல நடத்தை உள்ளவர் என்றும் நம்பப்படும். அவ்வாறே, ரேடியனின் மனைவியும், தீயில் இறங்கி நடந்து, தன் நடத்தையை நிரூபிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

உடனே, ஒரு மரத்தை வெட்டி, 3 அடிக்கு நீளத்திற்கு, தீ மூட்டப்பட்டது. அந்தத் தீயில், அப்பெண் இறங்கி நடந்து, தன் நடத்தையை, ஊருக்கு நிரூபித்தார். போலீசுக்கு இதுகுறித்து, எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அந்தப் பெண், தீப்புண்ணுக்கு, மருந்து இட்டுக் கொண்டிருக்கிறார்.

-dinamalar
13-03-2013


இந்த செய்கைக்காக வருத்தப்படும் தினமலர் ராமன் செய்ததை மட்டும் நியாயப்படுத்துவது ஏன் என்று நாம் கேட்கா விட்டாலும் பதிவைப் படிப்பவர்கள் கேட்பார்கள் இல்லையா? முல்க் லெட்டூருக்கு ஒரு நியாயம்: அயோத்தி ராமனுக்கு ஒரு நியாயமா? என்று கேட்க மாட்டார்களா?

நடுநிலைவாதிகள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

-----------------------------------------------------------------


Flash News ...



அமெரிக்கா ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு


ஞாயிற்று கிழமை (17.3.2013) இரவு 9.30 மணிக்கு பி.ஜே அவர்கள் பதில் அளிக்கும் அமெரிக்கா ஆன்லைன் நிகழ்ச்சி (மின்னஸோட்டா மாகாணம்) நமது வெப் டிவி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்





குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு


வெள்ளிக்கிழமை (15.3.2013) இரவு 8.30 மணிக்கு பி.ஜே அவர்கள் ”அகங்காரமும் அதன் விபரீதங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றும் குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி நமது வெப்டிவி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!



http://www.onlinepj.com/


6 comments:

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

ரொம்ப பிஸி போல..! :-)) இங்கு தினமலர் செய்தது சரிதான்..ராமன் காவியமும் கற்பனை தான் ,தினமலர் செய்திகளும் கற்பனைதான் !! மைனசும் மைனசும் ப்ளஸ் ஆயிருச்சி !!

( அது எப்படி எங்கள் நம்பிக்கையை கற்பனை என்று கூறலாம் என்பவர்களுக்காக :

ராமன் காவியத்தை கற்பனை என்று கூற காரணம் , வெறும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உள்ள இஸ்லாமிய வரலாற்றையே நம்புவதற்கு இவரிடம் இருந்து இவர் சொன்னார் ,பின் அவர் சொன்னார் என்று அவர்களின் நம்பகக தன்மை முதற்கொண்டு சேகரித்து வைத்து உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கையில் , அட்ரசே இல்லாமல் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வாழ்ந்தார் என்று திருடனாய் இருந்த ஒருவர் உட்கார்ந்து எழுதினார் என்றால் அது கதை இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்..! )

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம்சகோ.

ராமன் யார் என்ற ஆராய்ச்சிக்கு போகும் முன் இதை சற்று படிப்போம் ...


எது ஹிந்து மதம்...? இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது?

இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா?

இந்து மதம் என்றால் என்ன?எப்போது உருவானது?

அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம்

உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டு இருக்கிறோம்.

இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும்,
ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும்,

ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும்

சண்டையிடுகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் .

" அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது;

நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்;

யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்" என்கிறார்கள்.

அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது?

இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள்.

இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால், 'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது,

அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள் ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம் பெறவில்லை. :- தந்தை பெரியார் 1923. --நன்றி:>> thamilachi http://thamilachi.blogspot.com/
--------------------------------
எது ஹிந்து மதம்...?
ஆனால்... நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

பிறகு... ‘ஹிந்து...’ என்ற பெயர் வந்தது எப்படி?

நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு! இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.

CONTINUE NEXT PART

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

ஆமாம்... எண்ணி சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால்தான் அய்ரோப்பியர், அதாவது வெள்ளைக்காரர்கள் நமது தேசத்தில் அடியெடுத்து வைத்தனர். அப்போது நமது தேஸத்தில் ஆங்காங்கே மொகலாய சாம்ராஜ்யம் ராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. அதாவது முகம்மதிய சுல்தான்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது வெறும் வியாபார நோக்கத்தில் இங்கே வந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.

அப்போது நமது பூமியில் எல்லா வளங்களும் கொழித்துக் கிடந்தன. ஆனால் ‘ஒற்றுமை’ என்னும் வளம் மட்டும் வறண்டு கிடந்தது.அதாவது... மொகலாயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள்... தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர். சிற்றரசர்கள் என்ற ரீதியில் ராஜாக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டனர். மக்களோ... ப்ராம்மண, சூத்ர, பஞ்சமர் பிளவுகளில் ஈடுபாட்டோடு இருந்தனர்.

பார்த்தான் வெள்ளைக்காரன், ‘என்னடா இது?’ என கேட்டான். ‘இதுதான் எங்கள் ஜாதி தத்வம்; இதை கேட்க நீ யார்?’ என குரல் எழுந்தது.சரி... இவர்களிடையே இவ்வளவு பிளவுகள் இருக்கிறது. இந்த தேஸத்தில் இவ்வளவு வளங்கள் இருக்கிறது... என யோசித்த வெள்ளைக்காரன் தன் குடும்பம், குட்டிகளோடு இங்கே வந்தான்.

அங்கிருந்து பாதிரிகளும் இங்கே வந்தனர். நமது தேஸத்தில் புரையோடிப் போயிருந்த ‘ஜாதிதத்வ’ நடைமுறை... அதாவது ‘ப்ராம்மணனே தெய்வம்’ நசூத்ரா மதிந்தத்யாது... (சூத்திரனை அடி உதை. அவனுக்கு எந்த உபதேசமும் கிடையாது) என்ற நிலைமைகளைப் பார்த்து...

ஒரு அணா, ரெண்டு அணாவுக்கு புஸ்தகங்களைப் போட்டான். அவற்றை சூத்ரர்களிடையே விநியோகித்தான். உங்கள் நிலைமை எப்படியிருக்கிறது பாருங்கள்... என அந்த புஸ்தகங்களைக் காட்டினான்.

‘Don’t follow, religion of brhamin, we give you alternative’ என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது.

இப்படியாக சில பல வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க... இந்த ஒட்டுமொத்த மக்களை எப்படி அழைப்பது? என யோசித்தான் வெள்ளைக்காரன். அப்போதுதான் இவர்கள் சிந்துநதிக்கரை மக்கள், அப்படியென்றால் இவர்களை ‘சிந்தூ’ எனக் கூப்பிடுவோம் என முடிவுக்கு வந்தான். அதாவது... பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதலில் எப்படிக் குறிப்பிட்டான் என்றால் ‘Zindoo...’

நமது மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல வந்தது வரை பார்த்தோம்.

சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை Zindoo என எழுதினான் வெள்ளைக்காரன்.

இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான Library.

CONTINUE NEXT PART

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

ரகுநாதராவ், என்னைவிட வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்.அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்...

கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கேதான் பிரிட்டிஷாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன்.முதலில் நம்மைப்பற்றி Zindoo என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான். அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.

இப்போது Zindoo என்பது Hindu ஆகிவிட்டது. ஆக... இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால்... இது Christian சூட்டிய பெயர். நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த... கண்டுகூட பிடிக்கவில்லை. தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு, ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்... எல்லாவற்றையும் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு நாம் அவற்றிலிருந்து ஒரு பொதுப் பெயரை எடுத்து சூட்டிக் கொள்ளவில்லை.

சூட்டிக் கொள்ள முடியாது. ஏனென்றால்...நம் தேசத்தில் எக்கச்சக்க மதங்கள். நான் சொன்னேனே.... ஆரியர்களான பிராமணர்கள் இங்கு வரும்போதே! நம் தேசத்தில் சுமார் 450 மதங்கள் இருந்தன. இதில் எது ஹிந்து மதம் என்று கேட்டிருந்தேன் அல்லவா?

இப்போது நீங்களே சொல்லுங்கள்.
எது ஹிந்து மதம்...?வேத மதம், ஆரிய மதம், ப்ராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வ மதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. இடையிலே சமணம் தோன்றியது.வைணவத்தில் கூட தென் கலை, வடகலை, என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.

இவையெல்லாம் தவிர்த்து...நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறுதெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம், காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி என.. சொல்லிக் கொண்டே போகலாம்.

அதாவது இவ்வளவு... வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் தான் எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சேர்த்து இந்த தேசத்தில் வாழ்பவர்களை யெல்லாம் மொத்தமாக ‘இந்து’ என்று அழைத்தான்.

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. என்ன செய்வோம்? பையனாக இருந்தால் தாத்தா பேர் வைப்போம். பெண்ணாக இருந்தால் பாட்டி பேர் வைப்போம். அல்லது குல தெய்வத்தின் பேரை சூட்டுவோம்.

ஆனால்... நமக்கு முன்பின் தெரியாத இதுவரை நம்மைப்பற்றி எதுவுமே அறியாத... எவனோ ஒருத்தன்... நம் பாஷையும் தெரியாத அவன் தன் வாயில் நுழையும் பெயரை வைத்துக் கூப்பிட்டதால்.... அந்த ‘சத்தத்தையே’ உங்கள் குழந்தைக்குப் பெயராக வைப்பீர்களா?... அப்படித்தான் வைத்திருக்கிறோம். நம் மதம் என்னும் குழந்தைக்கு!சரி... ‘ஹிந்து’ என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்துவிட்டோம்.

இதுதான் உங்கள் பள்ளி சர்டிபிகேட்களிலும்.... வாழ்க்கையிலும் உங்களைப்பற்றி நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு. வெள்ளைக்காரன் நமக்குக் கொடுத்த இந்த அடையாளத்தை அப்படியே நாம் பின்பற்றி வருகிறோம்.

thanks:http://idhuthanunmai.blogspot.in/2007/12/blog-post_25.html

Anonymous said...

அண்ணாச்சி ஒங்களுக்கு என்ன பிரச்சனை?

Anonymous said...

அண்ணாச்சி அந்த பீஜெ யாரு?

அந்த மாலிக் வேற சொல்றாரு...

ஒங்களுக்கு எதுக்கு அண்ணாச்சி இந்த பீஜெ?

நமக்குத்தான் நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமி இருக்காரில்ல?

நம்ம அப்துல்லா பாய் கடையில் நம்ம ஊரு முனியாண்டிசாமி துன்னூரு கிடைக்கும். மறக்காமல் வாங்கிப் பூசிக்கொள்ளுங்கள்.