முகலாய பேரரசர்களில் ஒருவரான ‘அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்’ என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிரசித்திப் பெற்ற கடிதமாக நிலைப் பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதமது. தீவிர சிந்தனைகளை கொண்டதாகவும் யதார்த்த இழையோடியதாகவும் அந்தக் கடிதம் நம் பார்வையை ஈர்க்கிறது. இவ்வளவு பரந்த மனம் கொண்ட தனது குடி மக்களை மதம் கடந்து நேசித்த ஒரு ஒப்பற்ற தலைவரை நமது வரலாறு எந்த அளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவு கேவலப்படுத்தி வைத்துள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் எந்த அளவு கூர்மையாக தனது அறிவை பயன்படுத்தியுள்ளார் என்பதை இந்த கடிதம் நமக்கு மிக அழகாக விளக்குகிறது. கடிதத்தில் தெறிக்கும் அவரது கோபம் யோசிக்கத் தகுந்தது. ஆசிரியரின் திறமையின்மைக் குறித்து, தனது வருத்தத்தை ஔரங்கசீப் விமர்சனக் கோணத்தில் வெளிப்படுத்தி இருப்பது தேர்ந்ததோர் அழகு!
(1658-ஆம் ஆண்டு ஔரங்கசீப் ஹிந்துஸ்தானத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றார். அல்லது முடிசூட்டிக் கொண்டார். ஔரங்கசீபிற்கு இளம் வயதில் ஆசிரியராக இருந்த முல்லா சாஹேப் என்பவருக்கு, ஔரங்கசீப் எழுதிய கடிதம் இது. ஔரங்கசீப் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட பிறகு முல்லா சாஹேப், ‘தனக்கு ஔரங்கசீபின் அரச சபையில் கௌரவ பதவியும், சன் மானமும் தர வேண்டும்’ – என்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஔரங்கசீபின் இந்தக் கடிதம்.) – துக்ளக் / 30.04.2008
"கற்றவரே!
நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தவேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன், நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.
ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?
ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும் கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா…! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு!
எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? – உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? – இவற்றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும், அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின – அந்த சாம்ராஜியங்கள் அழிந்தன – என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?
உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் – அவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது.
ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்!
காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித் திருந்தால் – மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் – அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி – துரதிஷ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி – இரண்டுக்குமே மயங்காத மனோதைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் – நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது? – என்பதை எல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால் – இப்பொழுதும் சொல்கிறேன் – இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள், எனக்கு கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன். அலக்ஸாண்டர், அவனுடைய குரு அரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ, அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன், நன்றி காட்டியிருப்பேன்.
சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜபரி பாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன் பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவுக்கு, நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா?
ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப் படையை எப்படி நடத்திச் செல்வது – என்பதை எல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?
பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் – நிச்சயமாக உமக்கல்ல!
போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய் சேருங்கள்! நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதை யெல்லாம் எவருமே தெரிந்து கொள்ளவேண்டாம்."
- ஔரங்கசீப்
---------------------------------------------------------------
ஒளரங்கஜேப் அவர்கள் தனது கைகளாலேயே எழுதிய புனித குர்ஆனின் பிரதிகளில் ஒன்றைத்தான் நாம் பார்க்கிறோம்.
http://en.wikipedia.org/wiki/File:Aurangzeb_Handwritten_Quran.jpg
---------------------------------------------------------------
ஒளரங்கஜேப்பின் ஆட்சி காலத்தில் நமது நாடு ஆப்கானிஸ்தான் வரை எல்லையாக இருந்தது. அந்த அளவு நமது நாட்டை விரிவாக்கம் செய்து ஒரே குடையின் கீழ் ஆட்சியைக் கொண்டு வந்தார். ஆனால் இன்று நாமோ ஒவ்வொரு பகுதியாக இழந்து வருகிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று அனைத்தும் இன்று நம் கையை விட்டு சென்று விட்டது.
http://en.wikipedia.org/wiki/Aurangzeb
அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளில் பல போர்களை சந்தித்து உருவாக்கிய ஒளரங்கஜேப்புக்கு: நமது நாட்டை வெகுவாக நேசித்து கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு மன்னருக்கு நமது பாடநூல்கள் தரும் விளக்கம் இவர் ஒரு மத வெறியர்.
அந்தமான் சிறையில் வெள்ளையர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து 'இனி ஆங்கிலேயர்களை எதிர்த்து எந்த கூட்டமோ கோரிக்கையோ வைக்க மாட்டேன்' என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்கருக்கு நமது பாராளுமன்றத்தில் அவரது புகைப்படத்தை திறந்து மரியாதை செய்கின்றனர். இது தான் நமது பாரதம்.
16 comments:
ஷாலி says:
February 26, 2013 at 5:22 pm
திரு.பாண்டியன் கூறுவதுபோல்,
// வீர சாவர்க்கார் என்ன பண்ணினால் உங்களுக்கென்ன வந்தது? அப்படி என்ன வெறுப்பு?//.
சேவக்குகள் விநாயக் தாமோதர் சாவார்க்கரை ஏற்றிப் போற்றட்டும்,அது பற்றி யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இவர்களுடைய ஆதர்ஷ புருஷர் ஏன் அந்தமான் ஜெயிலில் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து வெளியே வந்தார்? ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ஒருமுறை மன்னிப்பு கடிதம் கேட்டு கடிதம் எழுதியிருந்தால் அதை புரிந்துகொள்ளலாம்.ஆனால் ஜெயிலுக்கு வந்த வருடமே மன்றாடலை ஆரம்பித்துவிட்டார்.1911 அக்டோபரில் ல் முதல் கடிதம்,1912 டிசம்பர் 15 ல் இரண்டாவது கடிதம், 1913 நவம்பரில் மூன்றாவது கடிதம்,19 14 பிப்ரவரியில் நான்காவது கடிதம்.நான் ஏன் வெளியே வரவேண்டும்? என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் இங்கு ஹைலைட்.திருவாளர். க்ருஷ்ண குமார்,பாண்டியன்களின் வீரத் தலைவரின் மன்றாட்டத்தைப் பாருங்கள். “ இந்திய இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்பட்டிருக்கிறார்கள். என்னை விடுவித்தால் நானும் எங்கள் இளைஞர்களும் உங்கள் அரசுக்குப் பணியாற்றி உங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.” வழி தவறிப்போன மகன், அரசராகிய பிறந்த வீட்டு வாசலுக்கு வரும்போது சர்வ வல்லமை பொருந்திய தங்களையன்றி வேறு யார் கருணை காட்டமுடியும்? தயவு செய்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”…..இப்படிப்போகிறது சரணாகதி வ்யாசம். சாவர்க்கரின் உறுதிமொழியை இன்றும் அவரது சீடர்கள் வெள்ளையன் வாழ் இங்கிலாந்து,அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா நாடுகளில் உஞ்சவிருத்தி சேவை செய்து நிறைவேற்றுகிறார்கள்.
காந்தி கணக்கை முடிக்க என்ன காரணம்? 1942 ஆகஸ்ட் 8 ல் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறும் முன்பு காந்தியின் சொற்பொழிவில் கூறியது.” வாள் வலிமையால் முஸ்லிம்களை ஹிந்துக்களின் மேலாதிக்கத்தின் கீழ் வைக்கவேண்டும் என டாக்டர் முன்ஷி, திரு.சாவர்க்கர் ஆகியோர் நினைக்கிறார்கள்,அவர்களை என்னால் பிரதிநிதிப் படுத்தமுடியாது.” வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தவர் சாவர்கார். ஹிந்துஸ்தான் என்னும் ஒரு நிலப்பரப்பை மட்டும் நேசித்து,முப்பது முக்கோடி தேவர்கள் நிரம்பிய ஹிந்து மதத்தின் ஞான தரிசனத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு நாத்திகரை ஹிந்து மதத்தின் ஆதாரமாக பேசுவது வேடிக்கைதான். நாத்திகரையும் உட்செரித்துக்கொண்டதுதான் ஹிந்து மதம் என்பார்கள்.பவுத்தனையும் பத்தாவது அவதாரமாக ஆக்கிக்கொண்டதால்தான்,தமிழ் ஹிந்து சைவர்களைக் கொன்ற புத்தனின் பேரன் அஹிம்சாமூர்த்தி ராஜ பக்ஷேக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. அவரும் புத்த பெருமாளை சேவிக்க திருப்பதி வருகிறார். விபரம் புரியாத தமிழர்கள் எதிர்க்கிறார்கள். இறுதியாக, வீரர்கள் கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்வார்கள், வீர் சாவர்க்கரைபோல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஒருவேளை இது வீரத் தற்கொலையாக இருக்கலாம்.
இவர்கள் என்ன தான் தூற்றினாலும் இந்தியாவை ஆண்ட மன்னர்களிலே சிறந்தவரும், நேர்மையானவரும் ஔரங்கஜேப் தான்...
இதை இந்திய வரலாறு வேண்டுமென்றால் மறைக்கலாம், திரிக்கலாம்... தனது நாட்டை அருமையாக ஆண்ட மன்னனை நினைக்காத சமூகம் என்ன சமூகம்????
ஓள்ரன்க்சீப் உலக முஸ்லிம் இளைனர்களுக்கு மகத்தான தோர் முன்மாதிரியாக உள்ளார்
அஸ்ஸலாம் அலைக்கும் ...பாய் ,
// வீர் சாவர்க்கரைபோல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஒருவேளை இது வீரத் தற்கொலையாக இருக்கலாம்.//
தூத்தேரி .....இவனெல்லாம் தேச பக்தனாம் ,வீரனாம் ..!!??
இந்த கோழைக்கு பாராளுமன்றத்திலே மரியாதையாம்,படம் திறப்பாம் ...!!வெட்கம் கெட்ட செயல் ....
ஆலம்கீர் மஹா சக்ரவர்த்தி ஔரங்கசிப்பின் இந்த கடிதம் முதல்முறையாக இப்பத்தான் பார்கிறேன். மிகவும் சிந்திக்கவேண்டிய, இன்றைய சூழலுக்கும் பொருந்தக்கூடிய
அருமையான கடிதம் ...
மஹா சக்ரவர்த்தி அவர்கள் ஒளுவுடன் இருந்தால், தன் உதவியாளரை "முஹம்மது கல்லி" என்று அழைப்பார் ஒளு இல்லையென்றால் வெறும் "கல்லி" என்றே அழைப்பார் ....
" முஹம்மது " என்கிற பெயருக்கு அவர் தரும் மரியாதையை
பார்த்தீர்களா ...!!!! மிக்க நன்றி பாய் .
அண்ணே அப்படியே ஏன் ஷாஜஹான் சிறையில் இருந்தார் என்றும் எழுதியிருக்கலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
//அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளில் பல போர்களை சந்தித்து உருவாக்கிய ஒளரங்கஜேப்புக்கு: நமது நாட்டை வெகுவாக நேசித்து கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு மன்னருக்கு நமது பாடநூல்கள் தரும் விளக்கம் இவர் ஒரு மத வெறியர்.
அந்தமான் சிறையில் வெள்ளையர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து 'இனி ஆங்கிலேயர்களை எதிர்த்து எந்த கூட்டமோ கோரிக்கையோ வைக்க மாட்டேன்' என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்கருக்கு நமது பாராளுமன்றத்தில் அவரது புகைப்படத்தை திறந்து மரியாதை செய்கின்றனர். இது தான் நமது பாரதம்.//
வெள்ளையர்கள் தன்மதத்தை வளற்பதற்கும் இருப்பை நிலைநிருத்திக்கொள்ளவும் முன்னால் முஸ்லீம் மன்னர்களை துவேஷப்படுத்தினார்கள். அதையே அவர்களின் அடிவருடிகளும் செய்கிறார்கள்,
நம்மிடம் மீடியா இல்லாததினால் நிறைய இழந்திருக்கிறோம், இன்ஸா அல்லா இனிவரும் காலங்களில் அந்த குறை இருக்காது, இதையெல்லாம் படிக்கும் போது எவ்வளவு வேதணையாக இருக்கிறது நம் வரலாறை நிணைத்து, நல்ல பணி மேலும் இதுபோல் எழுதுங்கள்.
உங்கள் சகோதரண்
ஷாஜஹான் - தம்மாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
//அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளில் பல போர்களை சந்தித்து உருவாக்கிய ஒளரங்கஜேப்புக்கு: நமது நாட்டை வெகுவாக நேசித்து கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு மன்னருக்கு நமது பாடநூல்கள் தரும் விளக்கம் இவர் ஒரு மத வெறியர்.
அந்தமான் சிறையில் வெள்ளையர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து 'இனி ஆங்கிலேயர்களை எதிர்த்து எந்த கூட்டமோ கோரிக்கையோ வைக்க மாட்டேன்' என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்கருக்கு நமது பாராளுமன்றத்தில் அவரது புகைப்படத்தை திறந்து மரியாதை செய்கின்றனர். இது தான் நமது பாரதம்.//
வெள்ளையர்கள் தன்மதத்தை வளற்பதற்கும் இருப்பை நிலைநிருத்திக்கொள்ளவும் முன்னால் முஸ்லீம் மன்னர்களை துவேஷப்படுத்தினார்கள். அதையே அவர்களின் அடிவருடிகளும் செய்கிறார்கள்,
நம்மிடம் மீடியா இல்லாததினால் நிறைய இழந்திருக்கிறோம், இன்ஸா அல்லா இனிவரும் காலங்களில் அந்த குறை இருக்காது, இதையெல்லாம் படிக்கும் போது எவ்வளவு வேதணையாக இருக்கிறது நம் வரலாறை நிணைத்து, நல்ல பணி மேலும் இதுபோல் எழுதுங்கள்.
உங்கள் சகோதரண்
ஷாஜஹான் - தம்மாம்
சலாம் சகோ சிராஜ்!
//இதை இந்திய வரலாறு வேண்டுமென்றால் மறைக்கலாம், திரிக்கலாம்... தனது நாட்டை அருமையாக ஆண்ட மன்னனை நினைக்காத சமூகம் என்ன சமூகம்????//
நினைக்கா விட்டாலும் பரவாயில்லை. மாறாக முஸ்லிம்களின் மீதும் முஸ்லிம் மன்னர்களின் மேலும் அவதூறுகளை அல்லவா வரலாறுகளாக இன்று வரை சொல்லிக் கொடுக்கிறார்கள்?
சகோ ஃபைஜி ஜமால்!
//ஓள்ரன்க்சீப் உலக முஸ்லிம் இளைனர்களுக்கு மகத்தான தோர் முன்மாதிரியாக உள்ளார்//
தமிழில் டைப் செய்ய மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனது தளத்திலேயே பாமினி டு யுனி கோடு என்ற பகுதிக்கு சென்று மிக எளிதில் தமிழில் எழுதலாமே. முயற்ச்சித்து பாருங்கள்.
சகோ ஷாஜஹான்!
//நம்மிடம் மீடியா இல்லாததினால் நிறைய இழந்திருக்கிறோம், இன்ஸா அல்லா இனிவரும் காலங்களில் அந்த குறை இருக்காது, இதையெல்லாம் படிக்கும் போது எவ்வளவு வேதணையாக இருக்கிறது நம் வரலாறை நிணைத்து, நல்ல பணி மேலும் இதுபோல் எழுதுங்கள்.
உங்கள் சகோதரண்
ஷாஜஹான் - தம்மாம்//
இவ்வளவு வசதி வாய்ப்புக்கள் நமக்கு இருந்தும் இன்றும் இயக்கம் சாராமல் அரசியல் கட்சிகளுக்கு தூபம் போடாமல் நடுநிலையாக செயல்படக் கூடிய ஒரு தினப்பத்திரிக்கையை நம்மால் கொண்டு வர முடியாமைக்கு உண்மையிலேயே நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்.
இரண்டு சதவீதம் இருக்கும் பர்ப்பனர்களுக்கு ஆதரவாக தினமலர், தினமணி, விகடன், துக்ளக் என்று வரிசையாக களமிறக்கி வருகின்றனர். அதைப் பார்த்தாவது நமது மக்கள் தினப் பத்திரிக்கையை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். கேரளாவில் மாத்யமம் மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சகோ ஜெய்சங்கர்!
//அண்ணே அப்படியே ஏன் ஷாஜஹான் சிறையில் இருந்தார் என்றும் எழுதியிருக்கலாம்//
.....இரண்டு நாட்கள் கழித்து, ஷாஜகானின் செல்ல மகளும், இளவரசியுமான ஜஹனாராவிடமிருந்து ஒளரங்கசீப்பிக்கு ஒரு கடிதம் வந்தது.
'பேரரசின் பெரும்பகுதியை நீயே எடுத்துக்கொள். ஆட்சி செய். நீ முடி சூட்டிக் கொள்வதில் நம் தந்தைக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அனால் உன் சகோதரர்களுக்குச் சேர வேண்டிய சில பகுதிகளை மட்டும் விட்டுக்கொடுத்துவிடு. இது சம்பந்தமாகத் தந்தை உன்னிடம் நேரடியாகப் பேச விரும்புகிறார். அதுதான் நீ அவருக்குச் செய்யும் மரியாதை.'
ஒளரங்கசீப் தன் சகோதரியின் வார்த்தைகளை மதித்தார். கண்டிப்பாகச் சந்திக்க வருவதாகச் சொல்லி பதில் அனுப்பினார். தன் படையினருடன் கிளம்பி, ஆக்ரா கோட்டைக்குப் பேரணியாகச் சென்று சந்திக்லாம் என்று கிளம்பினார். அந்த நேரத்தில் ஒளரங்கசீப்பின் இளைய சகோதரி ரோஷனாரா அங்கு வந்தார். அவருக்கு ஒளரங்கசீப் மேல் தனிப்பாசம் உண்டு.
'எங்கே புறப்பட்டு விட்டாய் சகோதரா?'
கடிதத்தைக் காண்பித்தார் ஒளரங்கசீப்.
'எனக்கு எல்லாம் தெரியும். இது சம்பந்தமாக உன்னை எச்சரித்துவிட்டுப் போகத்தான் வந்தேன். தந்தை உன்னைக் காண பாசத்துடன் காத்திருக்கிறார் என்றா நினைக்கிறாய்?'
'பின் வேறு என்ன? இந்த வயதான காலத்தில் அவரால் என்னை என்ன செய்துவிட முடியும்?'
'நீ தப்புக்கணக்குப் போடுகிறாய் சகோதரா. உன்னை ஆக்ரா கோட்டைக்குள் அழைத்து, பேசுவதுபோல நடித்து அங்குள்ள பலம் வாய்ந்த பெண்களால் தாக்கிக் கொலை செய்வதாகத் திட்டம். இந்தக் கடிதத்தை அனுப்பியது ஜஹனரா தானே. உன் மீது கொஞ்சம்கூடப் பாசம் இல்லாத அவளது வார்த்தைகளை நீ எப்படி நம்பினாய்?'
ஒளரங்கசீப்பின் மனம் கொதித்தது. உடனடியாகத் தன் தளபதியை அழைத்து ஓர் உத்தரவிட்டார்.
'ஷா-இன்-ஷாவை இப்போதே கைது செய்யுங்கள். யாருடனும் அவருக்குப் பேச அனுமதி கிடையாது. என் உத்தரவின்றி யாரும் அவரைச் சந்திக்கக்கூடாது. ஆனால்ஒரு பேரரசருக்குறிய மரியாதை எந்தவிதத்திலும் குறயைக்கூடாது. எல்லா வசதிகளுடனும் அவர் இருக்கின்ற இடத்திலேயே சுதந்திரமாக வாழலாம். அவருடைய முதல் மகள் ஜஹானாராவை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பினால், அனுமதிக்கவும்.'
ஒளரங்கசீப்பின் கட்டளை செயல்படுத்தப்பட்டது. ஷா ஜஹான் தன் இறுதி நாள்களை ஆக்ரா கோட்டையில், அரண்மனைக் கைதியாகக் கழித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் (1666) பிறகு இறந்துப் போனார்.
அந்தச்சமயத்தில் ஒளரங்கசீப் ஆக்ராவில் இல்லை. ஆனால் தன் தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற செய்தி அறிந்த உடனேயே தன் மகன்களளை ஆக்ராவுக்கு அனுப்பினார்.
ஷா ஜகான் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி உரிய மரியாதைகள் செய்யப்பட்டன. சந்தனமரப் பெட்டிฏில் வைக்கப்பட்டு, படகில் ஏற்றப்பட்ட உடல், யமுனை நதியில் பயணம் செய்து, தாஜ்மஹாலை அடைந்தது.
அவரது அன்பு மனைவி மும்தாஜின் நினைவிடத்துக்குப் பக்கத்திலேயே, ஷா ஜஹானின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
ஷாஜஹான் ஒளரங்கஜேப்பை வஞ்சகமாக கொல்ல நினைத்தார். மக்களின் வரிப்பணத்தில் கோடிக் கணக்கில் பல வருடங்களாக 'தாஜ்மஹால்' என்ற ஒரு கல்லறையை கட்டினார். மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்ததால் தன தந்தையை திருத்துவதற்காக அவரை வீட்டுச் சிறையில் அடைத்து அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்தான் ஒளரங்கஜேப்.
குரானைப்படித்தவன் நம்பகிறவன் காபீர்களாக இந்துக்களக்கு நியாயம் செய்வார்க்ள் என்று கதையளப்பதற்கும் ஒரு அளவு உண்டு .குரானின் லட்சணத்தை.
காபிர்களோடு பழகக்கூடாது, நட்பு பாராட்டக்கூடாது.
Qur’an 3:118
3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்.
4:144. முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
60:4. இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
இதற்கு ஏன் பதில் எழுதவில்லை.
Why this has been removed frm orginal text? reason???
//எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான – முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன். //
you not only censor the above but all below contents. don't think you are clever...
எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான - முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்.
ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விடயங்களைக் கற்றுக்கொண்டால், அந்த நினைவு, வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும், சட்டம், மதவழிபாட்டு முறைகள், விஞ்ஞானம் இவற்றையெல்லாம் என் தாய் மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள். என் தந்தை சாஜஹானிடம் எனக்கு மதத்துவங்களைப் போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
அர்த்தமே இல்லாத இருந்தாலும் புரிந்துகொள்ள முடியாத புரிந்து கொண்டாலும் மனத்திருப்தி அளிக்காத மனத்திருப்தி அளித்தாலும் கூட, இன்றைய சமுதாயத்தில் எந்தவிதப் பயனுமே இல்லாத புதிர்களையெல்லாம் என்னிடம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்தீர்கள், நீங்கள் கற்றுக்கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை, மறப்பதற்கு மிக எழியவை.
நீங்கள் போதித்த மதத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இருளடைந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். உங்களைப் போன்றவர்களின் அறியாமை யையும், இறுமாப்பையும் மறைக்க உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எங்களைப் போன்ற மகா மேதாவிக ளுக்குத்தான் இந்தப் பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கிற அரிய தத்துவ ரகசியங்கள் புரியும் என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக, உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.
I hope you would say sorry to readers and do copy / paste the entire contents here without doing any censor.
Post a Comment