Followers

Saturday, March 23, 2013

அல்காய்தா இயக்கத்தில் அமெரிக்கர்கள்!

"அல்கைதாவும், அமெரிக்காவும் எதிரிகள்" என்று நம்பும் அப்பாவியா நீங்கள்? அமெரிக்க இராணுவத்தின், இரகசியமான துணைப்படை தான் அல்கைதா என்பது, ஏற்கனவே பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட விடயம். இங்கேயுள்ள படத்தில் இருப்பவர், ஒரு முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர். இப்போது, சிரியா அரசுக்கு எதிராக போராடும் Al Nusrah என்ற அல்கைதாவின் கிளை அமைப்பொன்றில் சேர்ந்து போராடி வருகின்றார். Eric Harroun என்ற 30 வயது இளைஞர், முஸ்லிமாக மதம் மாறி, சிரியாவின் "விடுதலைப் போராட்டத்தில்" பங்கெடுத்து வருகிறார். சிரிய தீவிரவாதக் குழுக்கள் மத்தியில், "அமெரிக்கன்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவர். ஆனால், இவர் மட்டுமே ஒரேயொரு அமெரிக்கர் அல்ல. இன்று வரையில், எத்தனை அமெரிக்கர்கள் சிரிய அல்கைதாவில் சேர்ந்து போரிடுகிறார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. ஆனால், Eric Harroun சிரியாவிலும், அமெரிக்காவிலும் பிரபலமாக அறியப்பட்ட ஒருவர். அதற்கு காரணம், சிரிய படைகளுக்கு எதிரான பல தாக்குதல்களில் பங்குபற்றியிருக்கிறார். சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதைக் காட்டும் வீடியோ ஒன்றில், இவர் தலையைக் காட்டுகிறார். அதைத் தவிர, இன்னொரு வீடியோவில், சிரிய அதிபர் ஆசாத்திற்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் விடுக்கின்றார்.



சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில், சில தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும், எரிக் ஹரூனும் அவர்களில் ஒருவர் என்று சிரிய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தான் இன்னும் சாகவில்லை என்று, Eric Harroun பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். மேலும், தான் Al Nusrah வில் சேரவில்லை என்றும், (மதச்சார்பற்ற) FSA வில் சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளார். ஆயினும், சுதந்திர சிரிய இராணுவம் என்ற FSA, முழுக்க முழுக்க முன்னாள் சிரிய படையினரையும், சிரிய பிரஜைகளையும் கொண்ட படை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த அமெரிக்கர் போன்ற வெளிநாட்டு போராளிகள், பொதுவாக அல்கைதாவின் கிளை அமைப்பான Al Nusrah போன்ற இயக்கங்களில் சேர்வது ஊரறிந்த இரகசியம் ஆகும். அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறதென்பது இன்றைக்கும் பலருக்குத் தெரியாது. அதனால், ஏதாவது பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

சிரியாவில் போரிட்ட இன்னொரு அமெரிக்கர் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது. Matthew VanDyke என்ற பெயரை உடைய அந்த அமெரிக்கர், தான் ஒரு "ஊடகவியலாளர்" என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார். இவர் முன்பு லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போரிட்டவர். அங்கே வேலை முடிந்தவுடன் சிரியா வந்து விட்டார். இவரது புகைப்படமும், சிரிய அரச ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்டதால் தான், வெளியுலகம் இவரைப் பற்றி அறிந்து கொண்டது. இவர்களைப் போல இன்னும் எத்தனை அமெரிக்கர்கள், அல்கைதா தீவிரவாதிகள் என்ற பெயரில் உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ? அந்த ஒபாமாவுக்கே வெளிச்சம்!

- US Army veteran fighting with al Qaeda http://www.longwarjournal.org/videos/2013/03/us_army_veteran_fighting_with.php

- Message from U.S. Mujahid in Syria to Bashar al-Assad Message from U.S. Mujahid in Syria to Bashar al-Assad and his militia (shabeha)

சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆயுதபாணி இயக்கங்கள், அல்கைதா போன்ற தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் என்பது தெரிந்ததே. அந்த இயக்கங்களுக்கு, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அயல்நாடான ஜோர்டானில் வைத்து, அல்கைதா போன்ற இயக்கங்களுக்கு, அமெரிக்க படைகள் இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் இயக்கங்களில், வெளிநாட்டு போராளிகள் பெருமளவில் போரிடுவதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக, லிபியா, ஈராக், எகிப்தை சேர்ந்த தொண்டர் அணிகள், சிரியாவில் போரிட்டு வருகின்றன. இந்த செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தவை தான். ஆனால், அதனை மேற்குலக நாடுகள் மறுத்து வந்தன. தற்போது, மேற்குலக நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் சிரியாவில் போரிடுவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.



பிரிட்டனை சேர்ந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், தற்போது சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே நேரம், ரஷ்யாவில் இருந்தும் பெருமளவு செச்னிய இளைஞர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் எல்லாம், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நடந்ததை நினைவுபடுத்துகின்றன. எண்பதுகளில், சோவியத் படைகளினால் பாதுகாக்கப்பட்ட ஆப்கான் சோஷலிச அரசுக்கு எதிராக முஜாஹிதீன் இயக்கங்கள் போராடி வந்தன. அன்றும், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளித்து வந்தன. அன்றும், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து தொண்டர் அணிகள், ஆப்கானிஸ்தானில் போரிட்டன. ஆப்கான் போர் முடிந்ததும், வெளிநாட்டு போராளிகள் தமது தாயகங்களுக்கு திரும்பி வந்து, தமது அரசுகளுக்கு எதிரான ஜிகாத் போராட்டங்களை நடத்தினார்கள். இவை எல்லாம் வரலாறு.

இன்று வரலாறு திரும்புகின்றது. அமெரிக்கா அன்று ஆப்கானிஸ்தானில் விட்ட அதே தவறை, இன்று சிரியாவில் விடுகின்றது. இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், சிரியா எல்லையில் இஸ்ரேல் இருக்கின்றது. நாளை, சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்த பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போகும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இஸ்ரேலுக்கு எதிராக தமது ஆயுதங்களை திருப்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ஒருவேளை, சிரியாவை சேர்ந்த போராளிகள் தயங்கினாலும், வெளிநாட்டு ஜிகாதிகள் இஸ்ரேலுக்கு எதிரான போரை நடத்தப் போகின்றார்கள். இஸ்ரேலிய இராணுவத்திற்கு அது தெரியாமல் இல்லை. ஆசாத் அரசு, இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்களை பாவித்தால், சிரியா மீது படையெடுப்பதற்கு இஸ்ரேல் தயாராக இருக்கின்றது. வெகு விரைவில், மூன்றாம் உலகப்போரை எதிர்பாருங்கள்.

"அமெரிக்கா மறைமுகமாக தாலிபானுக்கு உதவி வருகின்றது. காபுல் நகரில் நடந்த குண்டுவெடிப்புகள் கூட அமெரிக்கர்களின் வேலை தான். தாலிபானும், அமெரிக்காவும் ஒன்று சேர்ந்து சதி நாடகம் ஆடுகின்றன!" இதைக் கூறியது யார் தெரியுமா? நம்பினால் நம்புங்கள்! இன்றைய ஆப்கான் அதிபர் கர்சாயின் கூற்றுக்கள் இவை. 2014 ம் ஆண்டுக்குப் பின்னரும், அமெரிக்கப் படைகளை நிறுத்தி வைக்கும் நோக்குடன், இந்த சதித்திட்டம் நிறைவேறுவதாக கர்சாய் குற்றஞ் சாட்டுகின்றார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Chuck Hagel ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள தருணத்திலேயே, இந்த விமர்சனங்கள் வந்துள்ளன. ஊடகளுக்கான இருதரப்பு கூட்டறிக்கை, "பாதுகாப்பு காரணங்களுக்காக" வெளியிடப் படவில்லை. அண்மைக் காலமாக, கர்சாய்க்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப் பட்டிருப்பதால் போர் தொடர்ந்து நடப்பதாக விமர்சித்து வருகின்றார். அமெரிக்க/நேட்டோ படைகளின் பொது மக்கள் மீதான தாக்குதல்களையும் கண்டிக்கத் தவறுவதில்லை. எல்லோருக்கும் பட்ட பிறகு தான் ஞானம் பிறக்கிறது.

நன்றி: கலையரசன்

5 comments:

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் பாய் ,
செய்தி புதுசாக இருக்கிறது !! , அமித் கர்சாயும் இதையேதான் முன்பு சொல்லியிருக்கார் ,
ம்ம்ம் .....கத்திரிக்காய் முற்றிப்போனால் சந்தைக்கு
வந்துதானே ஆகணும் ....அப்போ தெரியும் உண்மைகள்

Unknown said...

அதானே சுவ்னம்
இன்னும் ஆச்சரியமான செய்தி

1.பாகிஸ்தான் தற்கொலை தீவிரவாதிங்க எல்லோரும் அமெரிக்கர்களாமே
2.கஜினி முகம்மது, கோரி முகம்மது எல்லோரும் ஆப்ரிக்கர்களாமே

Sathish Murugan . said...

சகோ கண்டாயா இந்த அநியாயத்தை, அமெரிக்காவின் அடியாட்கள் சக அமெரிக்க அடியாளான ஒசாமாவை கொன்றதை. அய்யகோ... செம சிரிப்புயா உன்கூட...

faizeejamali said...

இன்த கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை சகோ இது போன்ர செஇய்திகலுக்கு வலுவான உளவு தகவல்கள் தேவை அமெரிக்கா உலகம் முழுக்க குன்டுவெடிப்பு போன்ர அசம்பாவித சம்பவஙலை அரன்கேற்ற எல்லா மத இனதிலிருன்து பனதுகாக ஏகென்டுகளை வைதிருக்கிரது

ஆனந்த் சாகர் said...

முஸ்லிம்களுக்கே உரிய முறையில் பொய் பிரசாரத்தில்(தக்கியா) வல்லமை பெற்று இருக்கிறார், அன்னார் சுவன பிரியன். அண்ணலார்(!!!???) முஹம்மதின் முன்மாதிரி அப்படி இருக்கிறது.