Followers

Tuesday, March 26, 2013

மாணிக்கமா! மாலிக்கா! ஒரே குழப்பம்- சிறுகதை.

'ஏங்க....மதம் மாத்தி தவறா போட்டு பாஸ்போர்ட் எடுத்தா பிரச்னையாயிடுதுங்களா?'

'ஒண்ணும் ஆகாது மாணிக்கம். அங்கே உள்ள ஆளுங்க எல்லாம் நம்ம ஆளுங்கதான்...கவலைபடாதே...'

சவுதி போகும் ஆசையில் ஏஜண்ட் குமாரிடம் 50000 ரூபாயை கொடுத்து விட்டு பாஸ்போர்ட் ஃபாரத்தில் கையெழுத்திடும போதுதான் மாணிக்கம் யோசனையில் ஆழ்ந்தான். தற்போது மெக்கா மதினாவுக்குத்தான் ஆள் எடுப்பதாகவும் அங்கு செல்ல முஸ்லிம்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதாலும் ஏஜண்ட் குமார் கொடுத்த ஐடியாதான் முஸ்லிம் பெயரில் பாஸ்போர்ட் எடுக்க சொன்னது. குமார் கொடுத்த தைரியத்தில் எப்படியோ கையெழுத்தும் போட்டு விட்டு பணத்தையும் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் மாணிக்கம்.

வறுமையான குடும்பம். வயதான தாய் தகப்பனை காப்பாற்ற வேண்டும். விவசாயமும் கை கொடுக்கவில்லை. எனவே அரபு நாடு சென்றாவது தனது குடும்பத்தின் வறுமையை போக்கலாம் என்ற நினைப்பில் தற்போது வயலையும் விற்று விட்டான் மாணிக்கம். பத்தாம் வகுப்பு வரை அரசு உதவியோடு எப்படியோ படித்து விட்டான். அதற்கு மேலும் படிக்க குடும்ப சூழல் ஒத்து வரவில்லை.

'ஏம்பா....இருந்த ஒரே வயலையும் வித்துபுட்டீயே...ஏஜண்ட் நம்பிக்கையா சொன்னாருல்ல'

'கவலைபடாதேம்மா....நம்ம சாமி நம்மை கைவிட மாட்டார். இன்னும் ஒரு மாசத்தில வேலை முடிஞ்சுறும் என்று ஏஜண்ட் குமார் சொல்லியிருக்கார்.'

'எப்படியோப்பா...ஏமாந்துடாதே...அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.'

அம்மாவின் அன்பான உபசரிப்பில் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்கச் சென்றான் மாணிக்கம்.

இரண்டு மாதம் சென்று விட்டது. குமாரிடமிருந்து மாணிக்கத்தின் செல்லுக்கு ஒரு குறுஞ் செய்தி வந்தது. 'வேலை முடிந்து விட்டது. மீதி பணம் 10000 தை எடுத்துக் கொண்டு ஆபிஸூக்கு வரவும்' செய்தியை பார்த்ததிலிருந்து மாணிக்கத்துக்கு கையும் ஓடவில்லை..காலும் ஓடவில்லை...'அம்மா..அம்மா'

'என்னப்பா'

'எனக்கு விஷா வந்திருச்சு. அந்த பாக்கி பணம் 10000 தை எடு'

'ரொம்ப சந்தோஷம்பா. இந்தா பணம். அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிடு'

'நீயே சொல்லிடும்மா. நான் ஏஜண்ட் குமாரை பார்க்க இப்பவே கிளம்புறேன்.'

'நல்லபடியா போய்ட்டு வாப்பா' தாய் அஞ்சலை மாணிக்கத்தை சந்தோஷத்தோடு வழியனுப்பி வைத்தார்.

--------------------------------------------------

'மாணிக்கம்....இன்னையிலேருந்து நீ மாணிக்கம் இல்லே....அப்துல் மாலிக் புரிஞ்சுதா? நமம ஆபீஸூல வேலை செய்யற ரஹீமிடம் உனக்கு முஸ்லிம்களோட பழக்க வழக்கம், வழிபாடு எல்லாம் கத்துக் கொடுக்க சொல்லியிருக்கேன். பார்த்து எல்லாத்தையும் கத்துக்கோ. எல்லாரும் கும்புடுறது ஒரு கடவுளைதான்யா..என்ன'

'சரிண்ணே! நான் எல்லாத்தையும் கத்துக்கிறேன். இந்தாங்க பாக்கி பணம்'

'நீ இன்னும் ஒரு வாரத்துல சவுதி போற....டிக்கெட்டெல்லாம் போட்டாச்சு. தேதி குறிச்சு தர்றேன். பெட்டியோட சரியா ஆபீஸ் வந்து சேரு'

'சரிண்ணே'

'இந்தாப்பா ரஹீம். மாணிக்கத்துக்கு உங்க பழக்கத்தை எல்லாம் கொஞ்சம் சொல்லிக் கொடு'

தலையாட்டிய ரஹீம் மாணிக்கத்தை குறும்போடு பார்த்து புன்னகைத்தார். 'ம்....அப்துல் மாலிக்கா..சரி தொழுகிறது எப்படின்னு முதல்ல சொல்லித் தர்றேன்.' என்று சொல்லிய ரஹீம் எவ்வாறு கை கால்களை சுத்தம் செய்வது எவ்வாறு தொழுவது என்பதை எல்லாம் சுருக்கமாக சொல்லிக் கொடுத்தார். இந்த முறைகளை எல்லாம் பழக்கப்படுத்திக் கொண்ட மாணிக்கம் வீட்டிலும் சென்று செய்து பார்த்தான். மகன் வித்தியாசமாக தொழுவதைப் பார்த்த அஞ்சலை 'ஏலேய்...நீ முஸ்லிமா மாறிட்டீயா' என்று கேட்டார்.

'இல்லேம்மா...உடனே வெளிநாடு போகணும்னா தற்போது முஸ்லிம் விஷா தான் இருக்கு. வேலைக்காகத்தான் முஸ்லிம் பெயரில் பாஸ்போர்ட் எடுத்துருக்கேன். நமக்கு சாமி முனியாண்டி தானேம்மா'

'அதானே பார்த்தேன். உன் அப்பனுக்கு தெரிஞ்சா உன்னைய கொன்னே போட்டுருவாரு'

'அய்யோ இத அப்பா கிட்டே சொல்லிடாதே... நான் எப்போதும் உன் பிள்ளை மாணிக்கம்தான் கவலைப்படாதே'

சவுதி செல்லும் நாளும் வந்தது. மாணிக்கத்தையும் சேர்த்து மொத்தம் 60 பேர் சென்னை விமான நிலையத்தில் குழுமினர். ஏஜண்ட் குமார் எல்லோரிடமும் அவரவர் பாஸ்போர்டை தந்து விட்டு மாணிக்கத்திடம் நெருங்கி ரகசியமாக 'உன் பெயர் அப்துல் மாலிக். மறந்துடாதே. உன் கூட வரும் யாருக்கும் பெயர் மாற்றிய விஷயம் தெரியாது. நீயும் சொல்லிடாதே' என்றார்.

சரி என்று தலையாட்டியவாறு மாணிக்கம் சற்றே பதட்டத்துடன் பாஸ்போர்டை வாங்கி பார்த்தான். இவனது புகைப்படம் ஒட்டப்பட்டு அதன் கீழ் அப்துல் மாலிக் என்ற இவனது பொய்யான கையெழுத்தையும் ஒரு வித அச்சத்தோடு பார்த்துக் கொண்டே வரிசையில் வந்து நின்றான் மாணிக்கம். விமான நிலைய சோதனைகள் எல்லாம் முடிந்து விமானத்தை நோக்கி அனைவரும் புறப்பட்டனர். 'சவுதியா' விமானம் இவர்களின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தது. இது வரை சினிமாவில் மாத்திரமே விமானங்களை பார்த்த மாணிக்கத்துக்கு அதனுள் நுழைந்து அதன் பிரம்மாண்டத்தை பார்த்து சற்றே மலைத்தான். இவ்வளவு பேரையும் தூக்கிக் கொண்டு எப்படி இது பறக்கிறது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே தனது பேக்கை சீட்டுக்கு மேல் வைத்தான்.

சினிமாவில் விமான பணிப் பெண்கள் அரை குறை உடையோடு பயணிகளுக்கு மது பரிமாறுவதைப் பார்த்துள்ளான். ஆனால் இங்கோ விமான பணிப்பெண்கள் முழு உடலையும் மறைத்து தலையிலும் முக்காடு இட்டு வேலை செய்வதை ஆச்சரித்தோடு பார்த்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த நபரோடு சற்று பேச்சு கொடுத்து பார்த்தான்.

'ஏங்க...மது இங்க சப்ளை பண்ணுவாங்களா'

மாணிக்கத்தை அந்த நபர் ஏற இறங்க பார்த்து விட்டு 'சவுதிக்கு புதுசா?' என்று கேட்டார்.

'ஆமாங்க....முதல் முறையா இப்போதான் ஃபிளைட்டும் ஏறியிருக்கேன்'

'மது முற்றிலும் சவுதியில் தடை செய்யப்பட்டது. எனவே பார்த்து கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க...ஊருக்கு திரும்பவும் ஒழுங்கா போய்ச் சேரணும்ல...'

'ஆமாம் பாய்..சரியாகவே சொன்னீங்க. சும்மாதான் கேட்டேன்'

விமான பணிப்பெண் பயணிகளின் ஆபத்து கால முதலுதவிகளை தனது செய்கைகளால் காண்பித்துக் கொண்டிருந்தார். திரையில் செய்முறையும் செய்து காட்டப்பட்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில் விமானம் புறப்படத் தயாரானது.

'அல்லாஹு அக்பர்.....அல்லாஹு அக்பர்....அல்லாஹூ அக்பர்'

மாணிக்கத்துக்கு இந்த சொற்கள் விமானத்தில் ஒலித்தது சற்று ஆச்சரியமாக இருந்தது. பணயத்திலும் இறைவனை நினைவு கூறும் இஸ்லாமியரின் பழக்கத்தை எண்ணி வியந்தபடியே அருகில் இருந்த நண்பரிடம் 'இது எதற்காக சொல்கின்றனர்? இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டான்.

அந்த நண்பர் தனது மொபைலில் சேமித்து வைத்திருந்த தமிழ் பயண பிரார்த்தனை ஃபைலை தேடி எடுத்தபடியே மாணிக்கத்துக்கு பதிலளித்தார்.

'இது பயண நேர பிரார்த்தனை. ஒவ்வொரு பயணத்திலும் இந்த பிரார்த்தனையை செய்து கொள்ளுமாறு நபிகள் நாயகம் நமக்கு கட்டளையிட்டுள்ளார். அதனைத்தான் சவுதியா நிர்வாகம் செயல்படுத்துகிறது. இதன் அர்த்தம் தமிழில் சொல்கிறேன்.

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்! (இறைவன் மிகப் பெரியவன்)

அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா இறைவா! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். (நூல்: முஸ்லிம் 2392.)

'என்ன புரிந்ததா. உங்களுக்கு விளங்கியதா?'

'ஓ...அருமையான பிரார்த்தனை பாய்...விளக்கியதற்கு நன்றி'

இதன் அர்த்தத்தையும் அதில் பொதிந்துள்ள கருத்துக்களையும் ஆழமாக உள் வாங்கிக் கொண்டான் மாணிக்கம். சிறிது நேரத்தில் சாப்பாடும் வந்தது. சாப்பிட்டு முடிந்தவுடன் சிறிது கண்கள் அசதியில் சொருகவே தூங்கிக் போனான் மாணிக்கம். நான்கரை மணி நேர பயணத்திற்குப் பிறகு விமானம் ஜெத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கியது. ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான ஹாஜிகள் வருவதும் போவதுமாக இருப்பதால் அதன் வசதியைக் கருதி மிக விசாலமாக கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரமிப்போடு பார்த்துக் கொண்டு பாஸ்போர்டை கவுண்டரில் கொடுத்தான் மாணிக்கம். கணிணி மூலமாக சரி பார்த்த பின்னர் திரும்ப மாணிக்கத்திடம் பாஸ்போர்டை கொடுத்தனர். கம்பெனி ஆட்கள் அனைவரும் வரும் வரை அங்கு இருந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். பக்கத்திலேயே பலர் தொழுது கொண்டும் இருந்தனர்.

மாணிக்கத்தோடு வந்தவர்களும் காலைத் தொழுகைக்காக கை கால்களை அலம்பி விட்டு தொழுகைக்கு தயாரானார்கள். மாணிக்கமும் அவர்களோடு சேர்ந்து தொழுது கொண்டான்.

எல்லோரையும் அவரவர் அறைக்கு அழைத்துச் செல்ல கம்பெனி பேரூந்து வந்து அனைவரையும் ஏற்றிச் சென்றது. புதிதாக வந்தவர்கள் ஒரு குரூப்பாகவும் பழையவர்கள் மெக்கா மெதினாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். மாணிக்கத்துக்கு ஜெத்தாவிலேயே ஒரு பள்ளி வாசலை சுத்தம் பண்ணும் வேலை கொடுக்கப்பட்டது. தெய்வத் தொண்டாக எண்ணி சந்தோஷமாக அந்த பணியை ஏற்றுக் கொண்டான் மாணிக்கம். பள்ளியின் பின் பக்கம் இவனுக்கு ஒரு தனி அறை ஒதுக்கி தரப்பட்டது.

-தொடரும்

10 comments:

Unknown said...

ஹ்ம்ம் ...

கதை நல்லாப் போகுது ..

Anonymous said...

ஸ்ரீநகர்: வணிக வளாகத்தை தாக்க வருபவர் ஒரு கையில் மனைவியையும், மறுகையில் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டா வருவார் என்று கைதான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் அலி ஷா கைது பற்றி ஜம்மு காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள வணிக வளாகம் ஒன்றை தாக்கும் நோக்குடன் வந்ததாகக் கூறி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் அலி ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் தாக்குதல் நடத்த வரும் ஒருவர் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தான் வருவாரா? வணிக வளாகத்தை தாக்க வரும் தீவிரவாதி ஒரு கையில் மனைவியையும், மறுகையில் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டு ஏதோ சுற்றுலா செல்வது போல இந்தியாவுக்கு வந்துள்ளார் என்பதை முதன்முறையாக கேட்கிறேன். தீவிரவாதிகள் தாக்க வருகையில் ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில் வெடிகுண்டும் தான் வைத்திருப்பார்கள். இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என்றார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து டெல்லி மற்றும் காஷ்மீர் போலீசாரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. டெல்லி போலீசாரோ லியாகத் வணிக வளாகத்தை தாக்க வந்த தீவிரவாதி என்றனர். ஆனால் காஷ்மீர் போலீசாரோ அவர் சரணடைய வந்தவர் என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/27/india-omar-abdullah-picks-holes-liyaqat-ali-shah-arrest-172287.html

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//ஆகியவற்றில் அல்லா மனித குலத்தை ஆண்களாகவும் பெண்களாகவும் படைத்ததாக முகம்மது சொல்கிறார்.

அலிகளாக இருப்பவர்களை யார் படைத்தார் என்று முகம்மதுவிடம் கேட்டு சொல்லுங்களேன்.//

http://pinnoottavaathi.blogspot.com/2011/02/blog-post_10.html

அரவாணிகள், அலிகள் என்ற அமைப்பே கற்பனையாக உண்டாக்கப்பட்டது என்பதை இந்த பதிவிலே மிக அழகாக சகோதரர் விளக்கியுள்ளார். பார்த்து தெளிவு பெறுங்கள்.

——————————-

இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் ஆசிரியரின் கற்பனைகளே என்பதை பிபிசி யின் தமிழோசை மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.

http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post_29.html

suvanappiriyan said...

சகோ சுல்தான் மைதீன்!

//ஹ்ம்ம் ...

கதை நல்லாப் போகுது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

mohamed said...

சலாம் பாய்,

ஆரவதொடு படித்து கொண்டு வரும்பொழுதே தொடரும்னு போட்டு ஆரவத்துக்கு தொடர்ப்புள்ளு வசுடீங்க.கதை அருமை பி.அடுத்த பதிவுக்கு வைடிங்

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//ஆரவதொடு படித்து கொண்டு வரும்பொழுதே தொடரும்னு போட்டு ஆரவத்துக்கு தொடர்ப்புள்ளு வசுடீங்க.கதை அருமை பி.அடுத்த பதிவுக்கு வைடிங்//

தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி! வேலையைப் பொருத்து இன்றோ நாளையோ அடுத்த பகுதியை வெளியிடுகிறேன்.

suvanappiriyan said...

தங்கமணி!

//இந்த “முக்கியமான இறுதி உரை” ஏன் புகாரி, முஸ்லீம் என்று சவுதி அரேபிய முஸ்லீம்கள் போற்றும் எந்த ஒரு ஹதீஸ் தொகுப்பிலும் இல்லை?//

இந்த இறுதிப் பேருரையானது நீண்ட ஒன்று. அன்றைய கால கட்டத்தில் அனைவரும் இவ்வளவு நீண்ட பேருரையை எழுதி வைக்கும் அளவுக்கு தோல்களோ, எலும்புகளோ, பேரிச்சை மட்டைகளோ இருந்திருக்க வில்லை. எனவே தங்களால் இயன்ற மட்டும் அதனை நபி தோழர்கள் தொகுத்து வைத்தனர். எனவே தான் சிறு சிறு குறிப்புகளாக அனைத்து கிரந்தங்களிலும் இந்த பேச்சு காணப்படுகிறது.

இந்த செய்தி புகாரியில் வரும் இடங்கள் 1623, 1626, 6361

திர்மதியில் வரும் இடங்கள் 1628, 2046, 2085

இமாம் ஹம்பலி குறித்த இறுதி உரை வரும் எண் 19774.
இப்னு மாஜா 3074
இத்தனை ஆதாரங்கள் இருக்க அனைத்தையும் ஒதுக்கி விட்டு தங்கமணி சொல்வதைக் கேட்க வேண்டுமா?

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)

ஆதாரம் ஸஹீஹூல் புகாரி



suvanappiriyan said...

தங்கமணி!

//ஒரே பல்லி ஒரு காலத்தில் ஆணாகவும் மற்றொரு நேரத்தில் பெண்ணாகவும் இருக்கும் பல்லி வகைகள் இருக்கின்றன. ஆண்களே இல்லாத பெண் வகை பல்லிகளும் இருக்கின்றன. அதற்கும் மேல், உலகத்தில் இருக்கும் உயிரினங்களில் முக்காலே மூணுவாசி உயிரினங்களில் பால் வகையே இல்லை.//

பிறகு எப்படி அவை இனப் பெருக்கம் செய்கின்றன? ஒரு உண்மையை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியாததாலேயே அது இல்லை என்று ஆகி விடாது அல்லவா?

ராவணன் said...

அண்ணாச்சி ஒங்க கதையை நீங்கள் எழுதுவீர்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

நம் ஒரே இறைவன் முனியாண்டிசாமியின் மகிமையை அனைவரும் அறியும்வண்ணம் சிறப்பாக எழுதுங்கள்.

suvanappiriyan said...

//அண்ணாச்சி ஒங்க கதையை நீங்கள் எழுதுவீர்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

நம் ஒரே இறைவன் முனியாண்டிசாமியின் மகிமையை அனைவரும் அறியும்வண்ணம் சிறப்பாக எழுதுங்கள். //

இது ஒரு தாழ்த்தப்பட்ட நண்பர் சொன்ன உண்மைக் கதை. இது எனது கதையாக இருந்தால் மிகுந்த சந்தோஷப்பட்டிருப்பேன். ஏனெனில் புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களின் முன்னால் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுவதாக இஸ்லாம் கூறுகிறது. அந்த பாக்கியம் என்க்கில்லை. ஏனெனில் எப்போது மதம் மாறினோம் நாங்கள் முன்பு என்ன சாதி என்பதே தெரியவில்லை. ஐந்து தலைமுறையாக இஸ்லாத்தில் உள்ளோம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!