Followers

Thursday, February 14, 2019

காஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 12 வீரர்கள் பலி



காஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 12 வீரர்கள் பலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கி 12 ராணுவத்தினர் பலியான சம்பவத்துக்கு நமது வன்மையான கண்டனங்கள். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்கிறது ராணுவ வட்டாரம். உயிர் இழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஒவ்வொரு முறை தாக்குதல் நடக்கும் பொதும் ஜெய்ஷே முஹம்மது, ஹர்கத்துல் முஜாஜிதீன், என்று ஏதாவது ஒரு பெயரை கூறி நாமும் கண்டனம் தெரிவித்து சென்று விடுகிறோம். இந்த சம்பவத்தை பல கோணங்களில் நாம் சிந்திக்க வேண்டும்.
1. இந்த தாக்குதல் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக இருந்தால் அதற்கு தக்க பதிலடியை நாம் கொடுக்க வேண்டும். ரஃபேல் விமானங்களில் கொட்டும் பணத்தை விட நமது எல்லை தாண்டி வரும் பயங்கரவாதத்தை தடுப்பது முக்கியம். எல்லைகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு, ஐந்து அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டு அனுமதியின்றி எல்லை தாண்டுபவர்களை அந்த இடத்திலேயே சுட்டு வீழ்த்த வேண்டும்.
2. ராணுவம் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து அடக்கு முறை என்ற பேரில் அத்து மீறி நடு இரவில் பெண்களை இழுத்துச் சென்று கற்பழித்து பிறகு விடுவதும், இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கொண்டு சென்று கொல்வதும் தொடர்கதையாக உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடவும் முகாந்திரம் உண்டு.
3. ராணுவத்தை முற்றாக விலக்கி காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தண்டித்து அந்த மக்களின் அன்பை பெறுவதுதான் நிரந்தர அமைதிக்கு தீர்வாகும். ராணுவத்தை கொண்டு மிரட்டினால் அந்த மக்கள் எல்லை தாண்டி பாகிஸ்தானின் ஆதரவாளர்களாக மாறவும் வாய்ப்புண்டு. இவ்வாறு சென்றால் அது நமக்கு காலத்துக்கும் தலைவலியை தரும் பிரச்னையாக உருவெடுக்கும்.
நமது நாட்டை கொடிய அரக்கர்களிடமிருந்து காத்து அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!


1 comment:

Dr.Anburaj said...

பலி எண்ணிக்கை 50 யை தாண்டிவிட்டது. மத்திய ரிசர்வ போலீஸ் வீரா்கள் பயணம் செய்த பேருந்தின் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் ஒன்றினால் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்தவன் காஷ்மீரத்து முஸ்லீம்தான்.
-------------------------------------------------------------------------------------------
2. ராணுவம் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து அடக்கு முறை என்ற பேரில் அத்து மீறி நடு இரவில் பெண்களை இழுத்துச் சென்று கற்பழித்து பிறகு விடுவதும், இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கொண்டு சென்று கொல்வதும் தொடர்கதையாக உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடவும் முகாந்திரம் உண்டு.( முற்றிலும் தவறான தகவல்.ராணுவவீரா்களை சதாரணமாக மாணவர்கள் மாணவிகள் சிறு ஆண் பெண்குழந்தைகள் கல்லால் எறந்து தாக்குவது மிகச் சாதாரணம். ராணுவம் தன் பண்புகளை வீரத்தை அடக்கி பெரும் பொறுமை காத்து வருகின்றது என்பது உண்மை நிலை )
ஆகவே அரசுதான் குற்றவாளி.தாக்குதல் நடத்தியது நியாயமானது.என்பது சுவனப்பிரியன் கருத்து.
அரேபிய அடிமைகள் இந்தியாவை நேசிக்காதவர்கள்.இப்படித்தான் எழுதுவார்கள்.
----------------------------------------------------------------------------------------
ராணுவத்தை முற்றாக விலக்கி காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தண்டித்து அந்த மக்களின் அன்பை பெறுவதுதான் நிரந்தர அமைதிக்கு தீர்வாகும். ராணுவத்தை கொண்டு மிரட்டினால் அந்த மக்கள் எல்லை தாண்டி பாகிஸ்தானின் ஆதரவாளர்களாக மாறவும் வாய்ப்புண்டு. இவ்வாறு சென்றால் அது நமக்கு காலத்துக்கும் தலைவலியை தரும் பிரச்னையாக உருவெடுக்கும். நமது நாட்டை கொடிய அரக்கர்களிடமிருந்து காத்து அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
காஷமீரை பாக்கிஸ்தானோடு இணைக்க வேண்டும். அங்குள்ள இந்து காபீர்களை கொல்ல வேண்டும்.காஷ்மீா் மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என்பதுதான் முஸ்லீம்களின் கொள்கை.அதற்குதான் தீா்வுகாண வேண்டும். தாங்கள் பதிவு செய்திருப்பது முற்றிலும் பொய்யான தகவல்.

அரேபிய அடிமைகள் என்றும் கண்முடித்தனமாக முஸ்லீம்களை ஆதரிப்பார்கள்.