ஷாஹித் ஆஜ்மி - இந்துத்வாவாதிகளால் கொல்லப்பட்ட நாள் இன்றுதான்!
ஷாஹித் ஆஜ்மி படித்துக் கொண்டிருந்த காலங்களில் ஹிந்து தலைவர்களை கொன்றதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியது காவல்துறை. செய்யாத குற்றத்திற்காக சிறையில் மிக கொடூரமான சித்ரவதைகளை அனுபவித்தார். ஐந்து வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து ஆதாரம் இல்லாததால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியேறி ஒரு வித உத்வேகத்தோடு ஊடகத்துறை, சட்டம் இரண்டையும் எடுத்து படித்து தேர்வும் ஆனார். 2000 மாத சம்பளத்தில் உதவியாளராக வேலையில் சேர்ந்தார். அப்பாவி முஸ்லிம்களை பொய் வழக்குகளில் புனைவதை தேடி பிடித்து அது போன்ற வழக்குகளை தானாகவே எடுத்து நடத்த ஆரம்பித்தார். 7 வருடங்களில் 17 பேரை பொய் வழக்கிலிருந்து வாதாடி விடுவித்தார். அவுரங்காபாத் ஆயுத கடத்தல் வழக்கு, மும்பை ரயில் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள் ஒவ்வொருவராக விடுதலை ஆனார்கள்.
பல முஸ்லிம்கள் இவரால் விடுதலையாவதை பொருக்க முடியாத இந்துத்வாக்கள் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பிப்ரவரி 11 ந்தேதி 2010 ஆம் ஆண்டு சொன்னபடிபடியே இவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர் மாபாவிகள். 9 வருடங்கள் கடந்தும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை காவல்துறை.
இறந்த ஷாஹிதைப் போல தாங்களும் சாதிக்க வேண்டும் என்று பல இளைஞர்கள் ஊடகத் துறையையும், சட்டத்தையும் தங்கள் பாடமாக எடுத்து படித்தனர். இவரது உடன் பிறந்த சகோதரரும் சட்டம் பயின்று வருகிறார்.
2013 ஆம் ஆண்டு 'ஷாஹித்' என்ற இந்தி படமும் இவரது வாழ்வை மையமாக வைத்து வெளிவந்தது. கோழைகளான இந்துத்வாக்கள் ஷாஹிதை கொன்று விதையை விதைத்துள்ளார்கள். அது முளைத்து பல கனிகளை இன்று தந்து கொண்டுள்ளது.
உண்மைக்காகவே உழைத்து தனது உயிரை இழந்த ஷாஹிதுக்காக அவர் இறந்த இந்நாளில் நாமும் பிரார்த்திப்போம்.
1 comment:
முஸ்லீம்கள் முஸ்லீம் சமூதாயத்திற்கு பெரும் பணி ஆற்றி வருகின்றாா்கள். அந்த பணிகளின் நன்மைகள் இந்துக்களுக்கு கிடைக்கக் கூடாது அல்லது அற்ப அளவுதான் கிடைக்கலாம் என்பதுதான் கொள்கை.
இவருக்கும் சொத்து தவறாது இல்லையா?.
கூத்தியாக்கள் தகராறு இல்லையா ?
ஏன் அதன் காரணமாக இவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா ? இவர் மட்டும் உத்தமா் என்பதற்கு என்ன நியாயம். நிரூபணம் தங்களிடம் உள்ளது.
Post a Comment