கிருபானந்த வாரியார்
இன்று இந்து மத காவலர்களாக மோடிக்களும், அமீத்ஷாக்களும், அர்ஜூன் சம்பத்துகளும் வலம் வரக் கூடிய காலம். ஆனால் அன்று நான் சிறுவனாக இருந்த சமயம் கிருபானந்த வாரியாரின் உரைகளை நேரிலேயே கேட்டுள்ளேன். மிகவும் ஹாஸ்யமாக பேசி சலிப்புத் தட்டாமல் இந்து மத விளக்கங்களை தரக் கூடியவர். வாரியார் சுவாமிகளால் இந்து மதமும் அதன் கருத்துக்களும் சாமான்ய இந்துவையும் சென்றடைந்தது. அவரது ராமாயணம் சம்பந்தமான கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றாலும் மனித நல்லொழுக்கம், குடும்பம் சம்பந்தமாக அவரின் சொற்பொழிவுகளைக் கேட்டு பல இந்துக்கள் திருந்தியுள்ளனர்.
ஆனால் மோடி, அமீத்ஷா, அர்ஜூன் சம்பத் போன்றவர்களின் அடாவடித் தனங்களால் இந்து மதம் அதன் பெருமையை இன்று இழந்து வருகிறது. இதனை இந்துக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
1 comment:
என்ன சுவனப்பிரியன் ஆச்சரியமாக உள்ளது. சொல்லின் செல்வா் திருமுருக கிருபானந்தவாரியாா் அவர்களின் உபன்நியாசத்தை வீடியோவாக வெளியிட்டு இன்ப அதிா்ச்சி அளித்து விட்டீர்கள். நன்றி.
இந்துமதத்தில் இராமாயாணம் உள்ளது.
இராமாயாணத்திற்குள் இந்து சமயம் அடங்கி ஒடுங்கி முடங்கிப் போகவில்லை.அதை்தாண்டி விண்ணைத் தொட்டு வளா்ந்து காணப்படுகின்றது இந்துசமயம்.
பத்தாயிரம் ஆண்டுகள் ஸ்ரீராமா் ஆண்டாா் என்ற செய்தி வேண்டுமானால் ஏதோ நம்ப முடியாததாக தங்களுக்கு தோனறலாம்.
ஆனால் சீதைக்குப் பின் தர்ப்பைப்புல் பாயில் படுத்து பிரம்மச்சரியம் காத்தாா். முஹம்மதின் மனைவிகள் முஹம்மதின் இறப்புக்குப்பின் அவரது மனைவிமார்கள் துறவு நெறி காத்தது போல் இராமரும் சீதையின் மரணத்திற்கு பின் பிரம்மச்சரியம் காத்தாா்.உலகை தன் குடும்பமாக நினைத்து துறவு வாழ்க்கை வாழ்ந்தாா். என்பது மகத்தான செய்தி.
ஒரு சமய பிரச்சாரரின் முதல் தகுதி சொல்லும் செயலும் இணக்கமாக இருப்பதுதான் என்பது இந்து மதத்தின் கொள்கை.அதனால்தான் இந்து சமய மக்கள் யாரையம் அவ்வளவு சுலபமாக சமய ஆச்சாரியாராக பிரச்சாரராகஎற்பதில்லை. சொல்லின் செல்வா் திருமுருக கிருபானந்தவாரியாா் அவர்களின் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை.
Post a Comment