நாடாளுமன்ற தேர்தல் வருகிறது.... மக்களே... உஷார்!
பொதுவாக பிஜேபியிடம் தற்போதய தேர்தலை சந்திக்க உருப்படியான திட்டம் ஏதும் இல்லை. நாட்டின் பொருளாதாரம் மிக அபாயகரமான கட்டத்தில் உள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, அனில் அம்பானி என்று பணத்தை ஆட்டையைப் போட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஃபேல் விமான ஊழல் சந்தி சிரிக்கிறது. அமீத்ஷாவின் சொத்துக்களின் மதிப்பு கடந்த ஐந்து அண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. நான்கு மாநில தேர்தல்களிலும் பிஜேபி படு தோல்வியை சந்தித்துள்ளது. இதை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் இந்த முறை பிஜேபி 100 தொகுதிகளை பெற்றாலே ஆச்சரியம்தான்.
பிஜேபியினர் திரும்பவும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் பலர் சிறை தண்டனை பெறலாம். அந்த அளவு ஊழல் முடை நாற்றமெடுத்துள்ளது. யார் போகா விட்டாலும் அமீத்ஷா உள்ளே செல்வது உறுதி. ஏற்கெனவே இவர் மீது உள்ள கொலை வழக்குகளும் தூசி தட்டப்படலாம். எனவே இவர்கள் எந்த விலை கொடுத்தாவது திரும்பவும் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பர்.
பல உளவு நிறுவனங்களும் தேர்தலை ஒட்டி பெரும் மதக் கலவரங்கள் நிகழலாம் என்று ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது. சமீபத்தில் கூட திருபுவனத்தில் பாமக ஆதரவாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் பேசியது சம்பந்தமாக உலா வரும் வீடியோவில் கூட இஸ்லாமியர் எந்த வித பதட்டமும் இல்லாமல் சென்று விடுகின்றனர். மறுநாளே இவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்படுகிறார்.
உண்மை வெளி வருவதற்கு முன்பே முகநூலில் இந்துத்வாவினர் செய்தது முஸ்லிம்கள் தான் என்ற பரப்புரையில் இறங்கியுள்ளனர். இந்துக்கள் ஒன்று பட வேண்டும் என்றும் பதிவிடுகின்றனர். இவை எல்லாம் வாக்குகளை அள்ளுவதற்கு திட்டமிட்டு நடத்தப்படுவதை அறியலாம். எனவே பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சான்களாகவும் அன்போடு பழகி வரும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரிக்க ஆரிய சூழ்ச்சி பல வழிகளிலும் வரக் காத்திருக்கிறது. வாக்குகளை அள்ளுவதற்காக சொந்த மக்களையே கொன்று குவிக்க தயங்காதவர்கள் இந்துத்வாவினர். எனவே மிக கவனமாக இருந்து உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவை இழந்து விடாமல் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
கலவர சுழல் வரும் இடங்களில் சென்று உண்மையை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். இந்துத்வாக்கள் தமிழகத்தில் காலூன்ற நாமே பாதை அமைத்து கொடுத்து விடக் கூடாது. திருபுவனத்தில் கொல்லப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் 5000 க்கும், 10000 க்கும் உயிரை எடுக்கும் கூலிப் படையின் கொட்டம் அடங்கும். ஒரு இடத்தில் கொலை நடந்தால் மத ரீதியாக உடனே அணுகும் போக்கு மாற வேண்டும். இதற்கு முன்னால் கொல்லப்பட்ட இந்துத்வாவினர் அனைவரும் கந்து வட்டி, கொடுக்கல் வாங்கல், பெண் பிரச்னை என்ற ரீதியில்தான் கொல்லப்பட்டுள்ளனர். எனவே ராமலிங்கம் கொலைக்கும் பொறுமை காப்போம்: குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத் தருவோம்.
தமிழகம் முன்பு போல் அமைதி பூங்காவாக திகழ எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்!
No comments:
Post a Comment