அரபி மொழி கற்க, குர்ஆனை தஜவீத் முறைப்படி பயில.....
ஒவ்வொரு வியாழக்கிழமை இரவுத் தொழுகை (இஷா) க்கு பிறகு ஒரு மணி நேரம் அரபு மொழி ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும், அரபி நன்கு ஓதத் தெரிந்தவர்களுக்கு தஜ்வீத் முறைப்படி எவ்வாறு ஓதுதல் என்பதையும் விளக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், உருது, பெங்காள் மொழிகளில் கதீம் செனையா, Ameer Salman Street (Exit 17) பாலத்துக்கு அருகில் உள்ள பள்ளியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. வரும் வாரத்திலிருந்து கரும் பலகைகள் நிறுவப்பட்டு பள்ளிக் கூட சூழலில் பாடங்கள் நடத்தப்படும். பயிற்சி முடிந்தவுடன் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் இலவசம்.
‘நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதிட வேண்டுமோ அவ்வாறு ஓதுகிறார்கள்….‘ [அல் குர்ஆன் 2:221]
அதனால், ஓதுதல் என்றால் என்ன? குர்ஆன் எப்படி அருளப்பட்டதோ அதேபோல ஓதுதல். இந்த வசனம் அல்லாஹ் தன் வேதம் எப்படி ஓதப்பட வேண்டும் என விரும்புகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது.
‘மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தியும் ஓதுவீராக.’ [அல் குர்ஆன் 73:4]
இந்த வசனத்தில் உள்ள ‘தர்த்தீலன்’ என்ற சொல்லுக்கு அலீ இப்னு அபி தாலிப் (ரலி) அவர்கள், ‘அளவிடப்பட்ட ஓதுதல்’ (measured recitation), அதாவது எழுத்துக்களின் தஜ்வீத், எந்த இடத்தில் நிறுத்துவது என்பதை சரியாக அறிதல் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.
தஜ்வீத் என்றால் என்ன?
சுறுக்கமாகக் கூறுவதென்றால், தஜ்வீதை, சொல் திறன் என்று சொல்லலாம். குறிப்பாக சொல்வதென்றால், ஒவ்வொரு எழுத்தையும் அவற்றின் சட்டங்களைப் பின்பற்றி உச்சரித்தல்.
குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் இந்த நல் வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு எதிர்புறம் இப்பள்ளி அமைந்துள்ளது.
No comments:
Post a Comment