Followers

Sunday, February 24, 2019

பாகிஸ்தான் 'சுப்ரீம் கோர்ட்' தலைமை நீதிபதி 'பகவான்தாஸ்' மரணம்!

பாகிஸ்தான் 'சுப்ரீம் கோர்ட்' தலைமை நீதிபதி 'பகவான்தாஸ்' மரணம்!
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி 'ரானா பகவான்தாஸ்' நேற்றைய தினம் (23/02/15) மாரடைப்பால் மரணமடைந்தார், அவருக்கு வயது 72.
கராச்சி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பகவான்தாஸ், திங்களன்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பகவான்தாஸ், பாகிஸ்தான் சிறுபான்மை 'ஹிந்து' சமூகத்தை சேர்ந்தவர் என்றபோதிலும், அவருக்கு இரண்டு முறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2005-2006 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பகவான் தாஸ், பாகிஸ்தானில் நீதித்துறைக்கு நெருக்கடி ஏற்பட்ட 2007-ம் ஆண்டிலும், சில மாதங்களுக்காக மீண்டும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு உரிய அந்தஸ்தை வழங்கி வந்துள்ளதை இதிலிருந்து அறியலாம்


1 comment:

Dr.Anburaj said...


தொடா்ந்து பொய்களை அரங்கேற்றுவது பாவம். விதிவிலக்கு விதியாகாது. One swallow does not make a summer.

இந்துக்கள் நிலை காஷ்மீரிலே பரிதாபம். காஷமீரில் வாழ்ந்த 4 லட்சம் இந்துக்கள் காடையா்களால் தொடா்ந்து துன்பருத்தப்பட்டு காஷ்மீரில் வாழ இயலாது அகதிகளாக பிறபகுதிகளில் வாழ்ந்து வருகின்றனா். பாக்கிஸ்தானில் இவர்கள் நிலைஎப்படி இருக்கும் என்பது ?? இந்து குழந்தைகளுக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றதா ? சிறுபான்மையினருக்கு அரசில் இட ஒதுக்கீடு உள்ளதா ? இப்படி கேள்விகள் ஆயிரம் உள்ளது.முதலில் மேற்படி இரு கேள்விகளுக்கு பதில் உள்ளதா ? பதிவு செய்யுங்களேன் அண்ணாச்சி