Followers

Thursday, February 21, 2019

இம்ரான் கான் சொல்வதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

இம்ரான் கான் சொல்வதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?
'நியூக்ளியர் பாம் வைத்துள்ள இரண்டு நாடுகள் போரைப் பற்றி நினைப்பது தற்கொலைக்கு சமமானது. எந்த பிரச்னையையுமே பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். நான் இந்திய பிரமரிடம் முன்பே சொல்லியுள்ளேன். நீங்கள் நட்புக் கரத்தை நீட்ட ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் இரண்டடி முன் வைக்கிறோம் என்று. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவிடமிருந்து அதற்கான முன்னேற்பாடுகள் இல்லை. இதற்கான காரணமாக வரும் இந்திய பாராளுமன்ற தேர்தலாக இருக்குமோ என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தான் வெறுப்பை காரணமாக்கி அதன் மூலம் பிஜேபி வாக்குகளை அள்ள திட்டமிடுவதாக நினைக்கிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக காஷ்மீரில் நடப்பது பற்றி அறிந்திருப்பீர்கள். 10 வயது சிறுவர்களிலிருந்து பலரை ராணுவத்தை கொண்டு மிரட்டுகின்றனர். பல பெண்களின் கண் பார்வை போயுள்ளது. வருடத்தில் 500க்கு மேற்பட்ட காஷ்மீரிகளை கொன்றுள்ளது இந்திய ராணுவம். காஷ்மீர் பிரச்னையை ராணுவத்தை வைத்து மிரட்டுவதால் தீர்த்து விட முடியாது. பேச்சு வார்த்தையின் மூலமே நிரந்தர தீர்வு காண முடியும்,'


3 comments:

Dr.Anburaj said...

இசுலாமிய சகோதரத்துவம் அடிப்படையில் ஜனாப் இம்ரான்கான் தங்களுக்கு சகோதரா். இந்தியா்கள் குறிப்பாக இந்துக்கள் அனைவரும் காபீர்கள்.முர்ஷரிக்கள்.கொல்லப்பட வேண்டியவர்கள்.
ஆகவே அண்ணன் காக்கா இம்ரான்கான் சொல்வது அனைத்து முஸ்லீம்களையும் சென்று அடைய வேண்டும்என்று விரும்பி இவரது கருத்தை பதிவு செய்துள்ளீர். இதுவரை பேச்சு வார்த்தை நடத்தி என்ன கிழிந்தது என்பதை இம்ரான்கானிடமே கேளுங்கள்.எத்தனை முறைபேசி எத்தனை தாவாக்களுக்கு தீர்வு கண்டார்கள்.திரு.வாஜ்பாய் லாகூருக்கு பஸ் விட்டாா். அதற்குப்பிறகு கார்கில் ஆக்கிரமிப்பு -போர் ஏற்பட்டது.இந்தியாவின் நல்லெண்ணத்திற்கு வெகுளித்தனத்திற்கு ஒவ்வொரு முறையும் கிடைதத பரிசு இந்தியர்களின் இரத்தம் வீணானது தவிர வேறு எனன சாதிக்கப்பட்டது.

1காஸ்மீர் பாக்கி்தானுக்கே என்பது பாக்கிஸ்தானின் கொள்கை
2.காஸ்மீர் இந்தியாவிற்கே என்பது இந்தியாவின் கொள்கை

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி என்ன பயன் ? விமான பயணம் மற்றும் வெட்டிச் செலவுகள் ஏற்பட்டதைத் தவிர வேறு என்ன நன்மை விளைந்தது. நன்மைகள் வினைந்தது என்றால் ஏன் பயங்கரவாத தாக்குதல்கள் தொடருகின்றன ?

அரேபிய புத்தகங்கள் முஸ்லீம்கள் ஒருபோதும் காபீர்கள் -முஷ்ரிக்குகளின் ஆட்சியின் கீழ் இருக்கக் கூடாது என்று உபதேசிக்கின்றது.
எனவே விஷமாகி இருப்பது வழக்கம்போல் குரானும் முஹம்மதுவும்தான். இந்த இரண்டு இருக்கும் வரைஉலகத்தில் இரத்தக்களறி ஒரு போதும் நிற்காது.நிற்கவில்லைதான்.

Dr.Anburaj said...

கொலைகாரக் கிறிஸ்தவம் – 12
February 23, 2019
- பி.எஸ். நரேந்திரன் tamilhindu

தனேஜாவின் பேச்சைக் கேட்டுத் தன்னுடைய கப்பல்களை கோவா நோக்கித் திருப்பிய போர்ச்சுகீசிய தளபதி அல்புகர்க்கி, தனேஜாவிற்கு கீழ்க்கண்ட பதிலை அவர் அளித்ததாக அவரது செயலாளர் காஸ்பர் கரேர்ரா சொல்கிறார்:

“தனேஜா, நீங்கள் சொல்வது உண்மையென நான் நம்புகிறேன். எனது மேன்மை தங்கிய அரசரின் அனுமதியின்பேரில் நான் செல்லவேண்டிய இன்னொரு பகுதிக்குச் செல்லாமல் உங்களுக்கு உதவிசெய்யத் துணிகிறேன். என்னை நீங்கள் கோவாவிற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றால் எனது அரசர் உமக்கு ஏராளமான பொன்னும், பொருளும் பரிசளிப்பார் என்று உறுதியளிக்கிறேன். அதனுடன் நீங்கள் ஆள்வதற்குத் தேவையான சரியான நிலப்பகுதியும் பரிசாக அளிக்கப்படும் எனவும் கூறுகிறேன்.”

அதனைத் தொடர்ந்து கோவாவின்மீது படையெடுத்துவரும் அல்புகர்க்கிகிற்கின் படைகளைக் கண்டு, தனேஜா சொன்னது போல, கோவா அமைதியாக போர்ச்சுகீசியர்களிடம் சரணடைந்தது. அதற்கு அடுத்தநாளே கோவாவின் தலைமை அதிகாரியாக இருந்த கிருஷ்ணா என்பவர் அல்புகர்க்கியிடம் சென்று கோவாவின் குடிமக்களுக்கும், பிராமணர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் என வேண்டினார். அதனை ஏற்று அல்புகர்க்கி பொதுமக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் உறுதிமொழியை அளித்தான். வியாபாரிகள், கோவா குடிமக்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் மற்றும் பிறருக்குப் பாதுகாப்பளிப்பதாக அவர் கூறிய உறுதிமொழி, ஹிந்து மற்றும் முஸ்லிம்களிடையே மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது.

கோவாவில் முஸ்லிம்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் போர்ச்சுகீசியர்களை அமர்த்துவது தனேஜாவின் விருப்பமல்லாததால் அவர்களுக்குத் தேவையான பணத்தை அளித்தால் போர்ச்சுகீசியர்கள் தன்னிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவார்கள் என நம்புகிறார். ஆனால், அல்புகர்க்கி அங்கிருந்து செல்வதற்குப் பதிலாக கோவாவைச் சுற்றி கோட்டைச் சுவர்களைக் கட்டுவதிலும், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதனால் போர்ச்சுகீசியர்கள் கோவாவைவிட்டுச் செல்லப்போவதில்லை என்பதினை உணர்ந்தான்.

கோவாவின் பாதுகாப்புகளை பலப்படுத்தியபின்னர், குடிமக்கள், வியாபாரிகள் என அனைவரும் போர்ச்சுகீசிய அரசரின் பிரதிநிதியான தனக்கு வரிகட்ட வேண்டும் என அறிவுறுத்தும்படி அல்புகர்க்கி தனேஜாவிடம் உத்தரவிட்டான். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனேஜா, தனது உணர்வுகளை மறைத்துக் கொண்டு, கோவாவாசிகளை அழைத்து இது குறித்துப் பேசுவதாக பதிலளித்தான். எனினும் தனக்கு கோவாவை ஒப்படைக்கவில்லை என்னும் ஏமாற்றம் அவரிடம் தொனித்தது. அல்புகர்க்கியைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் தனேஜா தன்னிடம் கோவாவை ஒப்படைக்குமாறும் அதற்குப் பிரதியுபகாரமாக தேவையான பணம் அளிப்பதாகவும் கூறினார். அந்த நேரத்தில் தனேஜாவின் படையினரை கோட்டைச் சுவர்கள் கட்ட உபயோகித்துக் கொண்டிருந்த அல்புகர்க்கி, அதற்கான பதிலை நேரடியாக தனேஜாவின் தராமல் மழுப்பினார்.

அல்புகர்க்கி தன்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்க்கப் போவதில்லை என்பதை உணர்ந்த தனேஜா, அல்புகர்க்கியின் கப்பல்படை கேப்டன்களிடம் பேசி, அவர்களின் ஆதரவைப்பெற முயன்றார். அந்த அதிகாரிகளிடம் பேசிய அல்புகர்க்கி, தனக்கு ஒவ்வொரு வருடமும் 20,000 பரோடாக்கள் (இந்தியப் பணம்) தருவதாக இருந்தால் கோவாவை ஒப்படைப்பதாகவும், போர்ச்சுகீசிய அரசரின்கீழ் தனேஜாவிற்கு உயர்ந்த பதவியும் வாங்கித் தருவதாகச் சொன்னார்.

Dr.Anburaj said...

அதனைக் குறித்து அல்புகர்க்கியின் மகன் இவ்வாறு எழுதியிருக்கிறான்:

“..…..போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செய்த சதிவேலைகளுக்காகவும், துரோகத்திற்காகவும், கோவாவின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் மிக அவசியமானது என நினைத்த அல்ஃபோன்ஸோ டி அல்புகர்க்கி , தனது கேப்டன்களை அழைத்து, கோவா தீவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களையும் — அவர்கள் ஆண், பெண், குழந்தைகள் என யாராக இருந்தாலும் — கண்ட இடத்திலேயே கொல்லும்படி உத்தரவிட்டான். அந்தத் தீவில் எங்கினும் முஸ்லிம்கள் என்பவர்கள் எவருமே இருக்கக்கூடாது என்பதில் அவன் கண்டிப்பானவனாக இருந்தான். அதன்படி கோவாத் தீவில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள்.

“அவ்வாறு கொல்லப்பட்ட முஸ்லிம் ஆண், பெண், குழந்தைகளின் எண்ணிக்கை ஆறாயிரத்தையும் தாண்டியது. இதனைத் தொடர்ந்து, அடுத்த நான்கு நாட்கள் கோவாவில் வசித்த முஸ்லிம்களின் ரத்தம் தெருவெங்கும் ஓடியது.”

அந்தக் கொலைகளை நேரில் பார்த்த ஜோவா பர்ரோஸ் என்பவர், “இந்த பயங்கரத்திலிருந்து தப்புவதற்காக பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆற்றில் குதித்து அக்கரைக்குச் செல்ல முற்பட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையான படகுகள் எவையும் கிடைக்காததால் அவர்களில் பலர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இந்தப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், தனேஜா தனது மூவாயிரம் படையினருடன் மீண்டும் கோவாவிற்குத் திரும்பி வந்தான். இந்தச் சம்பவங்களுக்கு முன்னரே தான் வர இயாலாதது குறித்து அல்புகர்க்கியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் தனேஜா.” எனக் கூறியிருக்கிறார்.

கோவாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழும் கொலைச் சம்பவங்களைக் கண்டு அஞ்சிய கோவா ஹிந்துக்கள், அங்கிருந்து வெளியேறி, அருகாமைப் பகுதிகளில் சென்று தங்கினர். அவர்களைத் தைரியப்படுத்தும் விதமாக அல்புகர்க்கி அவர்களை மீண்டும் கோவாவில் வந்து குடியேறும்படி தண்டோரா அடித்து, “போர்ச்சுகீசியர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களேயன்றி உங்களுக்கல்ல. நீங்கள் மீண்டும் உங்கள் முன்னோர்களின் வீடுகளில் தங்கி, உங்கள் நிலங்களில் விவசாயம் செய்து, அரசாங்கத்திற்கு வரிகளைச் செலுத்துமாறு வேண்டுகிறேன்” என அறிவித்தான்.