ஜூனைத் பாசிசவாதிகளால் கொல்லப்பட்ட நாள் - 22-ஜூன், 2017
இதே நாள்தான் பெருநாளுக்கு துணி வாங்கி வருகிறேன் என்று தாயிடம் சொல்லி விட்டு ரயில் ஏறி இருக்கிறான் ஜூனைத். இவனது இஸ்லாமிய தூய வெள்ளை உடையை கண்டு கோபமடைந்த இந்துத்வா கும்பல் அவனிடம் வீண் வம்பு செய்து அடித்தே கொன்றனர். ஜூனைத் இஸ்லாமியன் என்பதுதான் அவனை கொல்ல காரணம். வேறு தனிப்பட்ட விரோதங்களும் இல்லை. ஹரியானாவில் உள்ள அசோதி ரயில்வே நிலையத்தில் பிணமாக மீட்டெடுக்கப்பட்டான் ஜூனைத்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.
6 இந்துத்வ குண்டர்களை கைது செய்தது காவல் துறை. அந்த ஆறு பேரும் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
44 தடவைக்கு மேல் வழக்கு எடுக்கப்பட்டு கொரோனாவை காரணம் காட்டி தீர்ப்பை தள்ளி வைத்துக் கொண்டே செல்கிறது பாசிச அரசு. இவ்வாறு குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டால் குற்றம் பெருகுமே என்ற கவலை இந்த அரசுக்கு இருக்கிறதா? இன்று முஸ்லிம்களின் மேல் கை வைத்தவன் நாளை இந்துக்களின் மேல் கை வைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.
ஜூனைதின் தாய் சாய்ரா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனது மகனுக்கு நீதி பெற்றே தீருவேன் என்று டெல்லியில் காத்திருக்கிறார். மூத்த சகோதரர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக சொன்னார்கள். ஆனால் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை.
கவலைப் படாதே ஜூனைத்... இந்த பாசிசவாதிகள் உனக்கு நீதி வழங்க மாட்டார்கள். இது ஒரு அற்ப உலகம். நிரந்தரமான மறுமை வாழ்வில் ஜிஹாத் என்ற அந்தஸ்தை இறைவன் உனக்கு கொடுத்து கண்ணியப்படுத்துவான். நீ அனுபவித்த கொடுமைகளை விட பல ஆயிரம் மடங்கு தண்டனையை அந்த ஆறு பேருக்கும் உலக மக்கள் முன்னிலையில் இறைவன் கொடுப்பான். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.
ஆக்கம்
சுவனப்பிரியன்
No comments:
Post a Comment