ப.சிதம்பரம் அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகள்!
'நாட்டின் பிரதமருக்கு தான் கல்லூரியில் படித்த சான்றிதழை இன்று வரை சமர்பிக்க முடியவில்லை. ஆனால் வெள்ளத்தால் வீடுகளையும் ஆவணங்களையும் இழந்த அஸ்ஸாம் மக்களை தங்களின் 15 விதமான ஆவணங்களை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துவது எந்த வகையில் சாத்தியம்? என்னிடமே நான் படித்த பள்ளியின் சான்றிதழை தற்போது வாங்கி வரச் சொன்னால் நான் எங்கிருந்து கொண்டு வர முடியும்?
நான் எந்த கடவுளை வணங்குகிறேன் என்பது எனக்கும் கடவுளுக்குமான விஷயம். அதில் போய் அரசியலை கலப்பது மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும்.
முஸ்லிம்களோ, கிருத்துவர்களோ, சீக்கியர்களோ, பவுத்தர்களோ இல்லாத இந்தியாவை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
கன்னடம், தமிழ், மலையாளம், உர்து போன்ற மொழிகள் இல்லாத இந்தியாவை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா?
தீபாவளி, கிருஸ்துமஸ், பக்ரீத் என்ற முப்பெரும் பண்டிகைகளைத்தான் இந்தியா தவிர்க்க முடியுமா?
இந்த அழகிய சூழலை கெடுக்கப் பார்க்கிறது பிஜேபியும், ஆர்எஸ்ஸூம். நான் இந்துத்வாவை முற்றிலுமாக ஏற்கவில்லை.
மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் போராட வெளியில் வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.'
No comments:
Post a Comment