Followers

Saturday, June 19, 2021

ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் .ஜூன் 17.06.1911.

ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் .ஜூன் 17.06.1911.

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.


அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் பிராமணர்களும்மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்.


அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த தலித்மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை விலக்கி வருகிறது.


ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.


அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும், வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள், சுற்றிலும் நான்கைந்து பெண்களும் , தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று? பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான், ‘’அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும். வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும், ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம்’’

 

. ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன்,’’  சொன்னது போல் செய்தான், ஆஷ். அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டால் என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி,

 

 வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து. அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப்பட்டது.


மணியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து ஆஷ் துரையை சுட்டுக் கொன்றனர். அப்போது வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் (பிள்ளைமார்கள்) மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே ஆஷ் துரை தீண்டாமைக்கு எதிராக செயல்பட்ட தென்காசி, செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தரும ராசன், வெங்கடேசுவரன் ஆகிய அனைவரும் பார்ப்பனர்கள். குற்றம் சாட்டப்பட்ட டி.என்.சிதம்பரம், முத்துக்குமாரசாமி, சாவடி அருணாச்சலம், அழகப்பன் ஆகியோர் தென்காசி, செங்கோட்டையைச் சேர்ந்த வெள்ளாளர்கள்.






1 comment:

Dr.Anburaj said...

வெள்ளைக்காரன் கலெக்டராக சில நல்ல காரியங்களைச் செய்து விட்டான் என்பதற்காக அவன் நல்லவன் என்று ஏற்கமுடியாது. ஆஷ்துரை கொல்லப்பட்டதற்கான காரணங்கள் நீண்ட பட்டியல். இந்த காரியம் ஒன்றாக இருக்கலாம்.

சாதிக்கொடுமை இருந்தது உண்மை.இந்துக்களை காபீர் என்று இழிவு படுத்தி பெரும் கொடுமை செய்தது அரேபிய மதம் என்ற விஷம் குடித்த மு்ஸ்லீம்களும் குற்றவாளிகள்தாம்.