முன்னால் ஆர்எஸ்எஸ் ஊழியரின் இந்நாள் பதிவு!
ஆச்சர்யம்:-
சில நாட்களுக்கு முன்பு
வோடபோன் இணைப்பு எடுப்பதற்காக துவரங்குறிச்சி சென்றிருந்தேன்.
அங்கு ஸ்டோர் வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் அல்லாத சகோதரர் ஒருவரை சந்தித்தேன்.
என்னிடம் உள்ள போஸ்ட்பெய்ட் பிளானை பற்றி சொல்லி கொண்டிருக்கும் போது அவருடைய
பார்வை முழுக்க முழுக்க என் தாடியிலயே இருந்தது.
தொழில் ரீதியான சம்பாசனையை முடித்து விட்ட பிறகு...
‘’அண்ணா என் தாடி நல்லாயிருக்கா?’’ என்றேன்.
அவரும் ‘’நல்லாயிருக்கு தம்பி. நீங்க எந்த ஊரு ?’’என்றார்.
நான் ‘’பன்னவயல்’’ என்றேன்.
‘’அங்கு முஸ்லிம் இருக்கிறார்களா?’’ என்றார்.
‘’இருக்கிறார்கள்’’ என்றேன்.
சிறிது நேரம் கழித்து ‘’அண்ணா நீங்களும் தாடி வச்சிருக்கீங்க சூப்பர்னா, இதுல நிறைய
நன்மை இருக்கிறது அண்ணா,’’ என்ற நான் என்னுடைய மொபைலில் கூகுலில் பக்கத்தில் சென்று தாடியின் நன்மைகள்
என்று டைப் செய்து அவரிடம் படிக்க கொடுத்தேன். பிறகு ஓரிறைகொள்கையையும்
விளக்கினேன்.
அவரின் அடுத்த கேள்வி.
‘’நீங்க ஒரிஜினல் முஸ்லீமா? மாறுன முஸ்லிமா ?’’ என்றார்.
( என்னுள்
பயங்கர சிரிப்பு)
‘’அண்ணா முஸ்லீம்ல ஒரிஜினல் டூப்ளிகேட்டல்லாம் இல்லன்னா. இறைவனுக்கு அஞ்சி
வாழ்பவர்கள் அனைவரும் முஸ்லிம்களே’’ என்று விளக்கி கூறி, மாமனிதர்
நபிகள் நாயகம் புத்தகம் கொடுத்தேன், நான் இஸ்லாத்தை குடும்பத்துடன் ஏற்றுக்கொண்ட
விபரத்தை கூறி கிளம்பும் தருவாயில்...
‘’அண்ணா, நீங்க என்னை
ஒரிஜினலா? மாறுனவரானு
கேட்டிங்களே ஏன்னா?’’ என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில்:-
‘’பக்கத்தில் ஒர் கிராமம் எனது ஊர். எனது பெற்றோர்க்கு என்னையும் சேர்த்து 4 ஆன் பிள்ளைகள், 2 பென்
பிள்ளைகள். மூன்றாவது
அண்ணன் ஆன்மீக தேடலில் ஈடுபட்டு வந்தவர்.சிறிது காலம் கழித்து வேலை விசயமாக
வெளியூர் சென்றார். சென்றவர் சில ஆண்டுகள் தொடர்பில் வரவேயில்லை. பிறகு வீட்டிற்கு
ஒரு கடிதம் வந்தது. அவர்தான் எழுதியிருந்தார். விரைவில் வீட்டிற்கு வருவதாக
குறிப்பிட்டிருந்த அவர், தனக்கு
திருமனம் முடிந்து இரண்டு பிள்ளைகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
சந்தோசமாக கடிதத்தை படித்து வந்த எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.
கடிதத்தின் முடிவில் இப்படிக்கு..., உங்கள் சகோதரன் அப்துல்லாஹ் என்றிருந்தது.
சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்தவரை பார்த்து நாங்கள் அசந்துபோனோம் .
உங்களைப்போன்று பெரியதாடி.சொல் செயல் நடை உடை, அனைத்தும் அற்புமாக ஒர் சிறந்த மனிதனாக அவரை
பக்குவபடுத்தியிருந்தது இஸ்லாம்.
அவருக்கு சேர வேண்டிய சொத்தை பங்குக்கு அதிகமாகவே கொடுத்தோம். எங்களுக்கு
இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி எடுத்துச்சொல்லியிருக்கிறார்.
தற்போது சென்னையில் வசிக்கிறார், என அவரின் தொலைபேசி என்னை நம்மிடம்
கொடுத்தவர் ,உங்களை
போன்றுதான் அண்ணனும் தாடி வச்சிருப்பார்,நீங்கள் பேசும் தோரனை எனக்கு என் அண்ணனை
நினைவு படுத்துகிறது’’ என கண்கள் கலங்கிய நிலையில் குரல் தழு
தழுக்க..,
" இஸ்லாம் ஒர் சிறந்த மார்க்கம்" ஏற்றுக்கொண்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’’
என்றார்.
பிறகு இருவரும் தேநீர் அருந்திவிட்டு , அவருக்காகவும் அவருடைய
குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்துவிட்டு கிளம்பினேன்.
நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.
அன்புடன்
உங்கள்., யஹ்யா
(முன்னால் RSS ஊழியன்)
No comments:
Post a Comment