Followers

Tuesday, June 15, 2021

பஞ்சாபில் உதயமாகிறது புதிய பள்ளிவாசல்.

 

பஞ்சாபில் உதயமாகிறது புதிய பள்ளிவாசல்.

 

பஞ்சாப் - மோகா பூலர் கிராமம்

 

இந்த கிராமத்தில் ஐந்து முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. சுதந்திரத்துக்கு முன்பு இங்கு ஒரு பள்ளி இருந்தது. பாகிஸ்தான் பிரிவினையில் பலர் இந்த கிராமத்தை விட்டு சென்று விட்டனர். இங்கேயே தங்கி விட்ட ஐந்து முஸ்லிம் குடும்பத்துக்கு தொழுவதற்கு பள்ளி இல்லை. இருந்த ஒரு பள்ளியும் சிதிலமடைந்து கிடக்கிறது.

 

சாரா பஞ்ச் பாலா சிங் என்ற சீக்கியர் கூறுகிறார்.. 'சிதிலமடைந்து கிடக்கும் இந்த பள்ளியை சீரமைத்து கொடுக்க முடிவு செய்தோம். கிராம மக்கள் அனைவரும் 100 லிருந்து ஒரு லட்சம் வரை நன்கொடைகள் அளித்தோம். அஸ்திவாரம் தோண்ட முற்பட்ட போது பெரும் மழை. விழா தடைபடுமோ என்று முஸ்லிம்கள் அஞ்சினர். ஆனால் எங்களின் குருத்வாராவை திறந்து விட்டு விழா நடத்திக் கொள்ள அனுமதியளித்தோம். ஜிலேபி போன்ற இனிப்பு வகைகளையும் செய்து கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினோம். எங்கள் கிராமத்தில் 7 குருத்வாராக்களும் 2 கோவில்களும் உள்ளன. இனி எங்கள் கிராமத்தில் பள்ளிவாசலும் சிறப்பாக அமையும். எங்கள் கிராமத்தில் சீக்கியர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கிறோம். அதற்கு எடுத்துக் காட்டே இந்நிகழ்வு'

 

தகவல் உதவி

இந்தியன் எக்ஸ்பிரஸ்

15-06-2021

 

நரேந்திர மோடி, அமித்ஷா போன்றவர்கள் மக்களை பிளவுபடுத்தி குளிர் காய நினைத்தாலும் இது போன்ற நம்பிக்கை கீற்றுகள் ஆங்காங்கே துளிர் விடத்தான் செய்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும். பாசிசவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.





 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 comment:

Dr.Anburaj said...

கசாப்புக் கடைக்காரன் ஆட்டிற்கு தீவனம் அளிப்பது தன்மீதுள்ள அன்பினால் என்று கிடா நம்பினால் . . . கிடா முட்டாள்.

இந்துக்கள் பெரும்பாலும் ஏமாளிகளாகவே இருக்கின்றார்கள். இந்துக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தி கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் வைத்திருக்கும் அரேபிய அடிமைகளுக்கு உதவுவது எவ்வளவு பிரச்சனைக்குரியதாகும் என்பதை பட்டும் உணராத மாக்களை எனன செய்வது.