'எனக்கு 29 வயதாகிறது. இஸ்லாமிய மதத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு 2012 ல் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினேன். 2014 ல் ஒரு இஸ்லாமியரை மணமுடித்தேன். நான் மதம் மாறிய விபரத்தையும் திருமணம் முடித்த விபரத்தையும் வீட்டில் சொல்லி விட்டு வெளியேறி விட்டேன். தற்போது எனது கணவரை கைது செய்துள்ளார்கள்.'
'நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காவல் துறை என்னை எனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் என்னை ஜம்முவுக்கு அழைத்துச் சென்றனர். பிறகு அங்கிருந்து பஞ்சாபுக்கு என்னை கொண்டு சென்றனர். பல இந்து அமைப்புகள் வந்து என்னை மன மாற்றம் அடைய முயற்சிக்கின்றன. நான் அவர்களிடம் 'நான் சிறு குழந்தை அல்ல. 29 வயதாகிறது. இஸ்லாமிய மார்க்கம் பிடித்திருந்ததால்தான் மாறியுள்ளேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை' என்றும் பல முறை சொல்லி விட்டேன். '
'ஆனால் எனது கணவருக்கு எதிராக சாட்சி சொல்லிம்படியும் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டதாக சொல்ல வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறேன்'
விரும்பி ஒரு மார்க்கத்தை ஏற்றதால் அந்த பெண் படும் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல.
- இஸ்லாமிய தாய் தந்தையருக்கு பிறந்து விட்டதால் எங்களுக்கெல்லாம் இஸ்லாம் சுலபமாக கிடைத்து விட்டது. இது போன்று விளங்கி இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கடினமாக கழிகிறது. சொந்த வீட்டில் எதிர்ப்பு, அரசு மிரட்டல், இந்துத்வாவாதிகளின் மிரட்டல் என்று அவர்கள் தினம் தினம் செத்து பிழைக்கின்றனர். எங்களை எல்லாம் விட புதிதாக விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இறைவன் மிகச் சிறந்த அந்தஸ்தை வழங்குவான்.
No comments:
Post a Comment