Followers

Saturday, September 11, 2021

சனாதனத்திற்கு விழுந்த செருப்படி...

 


4 comments:

Dr.Anburaj said...


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

– கணியன் பூங்குன்றனார்

Dr.Anburaj said...

அன்பும் சிவனும் இலண்டென்பர் அறிவிலர்
அன்பே சிவமாவது அரும் அறிகிலார் ……’
எனத் திருமூலர் மிகவும் அருமையாக எடுத்தரைத்துள்ளார். அன்பு மானிடத்துவம் சமத்துவம் சகோதரத்துவம் எடுத்துரைக்கும் காலத்தால் முற்பட்ட அரும் நூல்களில் தலையாயது திருமந்திரமாகும்.
சகல மனிதர்களிடத்தும்அன்பு செலுத்தவதுடன் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் அன்றாட வாழ்வினை எவ்வாறு அமைக்கலாம் என்பதற்கு திருமந்திரம் அறிவுரை வழங்குகிறது. “யாவர்க்குமாம் இறைவற் கொருபச் சிலை
பசுவிற் கொருவாயுறை யாவர்க்குமாம்
உண்ணும் போதொரு கைபிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே’
என்ற நியதியிலே ஒவ்வொருவரும் வாழ்ந்து வருவாராகில் உலகில் இல்லாமை என்பதே இல்லாதாகி விடும். அதனால் திருமுலர் பிறரையும் நேசித்தல் அவசியம் என்பதை
“யான் பெற்ற இன்பம் - பெறுக இவ் வையகம்’
எனவும் வாழ்த்தினார் நாட்டிலே நல்லாட்சியும் அற நெறியும் சிறந்து விளங்கினால் மக்கள் நலமடைந்து இன்புறுவார் கோன்முறை அரசு செய்தாலே அறம் வளரும் பாவம் தேயும் அறவழி நில்லாது ஆண்டவனை நினைவிற் கொள்ளாதே மற வழி ஒழுகும் மன்னனால் நாட்டிற்கும் சழுகத்திற்கும் பெரும் கேடு விளையும் அத்தகைய அரசன் பல கற்றும் கல்லாதவனுக்கே சமனாவான்;.
கல்லா அரசனைக் காட்டிலும் முறமை வழுவாத காலன் மிக நல்லவன் என்பதனை திருமந்திரம்
“கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லவன்
இவ்வாறு கல்வி பற்றிய சிந்தனைகளும் திரமந்திரத்தில் காணப்படுகின்றது. ஒழுக்கக் கல்வியும்’ ஆண்மிகக் கல்வியும் மனிதனை சுய கட்டுப்பாட்டுடன் முறையான வாழ்வு வாழ வழிவகுக்கும் கல்வி கற்றவர் இதயத்தில் இருந்து பிறரிடம் பரிவும் அன்பும் தானே சுரக்க வேண்டும். கற்ற பின் அன்பில் நிலை பெற்றவர்களேமுறமையறிந்து வாழ்பவர்கள.; ஏனையோர் என்ன கற்றும் கல்லாத மூடர்களே என்பது திருமூலரின் உள்ளகக் கருத்தாகும். சமூக சேவையே கல்வி முறையின் அத்திவாரமாக அமைய வேண்டும். கல்வியும் ஒழுக்கமும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே
“வேதம் உணரத்தானும் வேதியன் ஆகான் என திரமூலர் விளக்கியுள்ளார் எனவே கல்வியானது பண்பாளர்களை உருவாக்க வேண்டுமே தவிர பணக்காரர்களை அல்ல. பொராசை மனிதனுக்கு இருக்க வேண்டும் முன்னேற்றத்திற்கு பொருள் இன்றியமையாததே ஆனால் பொரளாசை தன்னையும் பிறரையும் அழிக்கும் பேராசையாக மாறக் கூடாது. “மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர் மிசை செல்லம் கலம் போல” என்றம் ஆதலால் உடனுக்குடன் அறம் செய்ய வேண்டும.; அவ்வாறு செய்யாதவர் செல்வம் ‘எட்டிப் பழுத்த இருங்கனி வீழ்ந்தென்ன ஒட்டிய நல்லறம் செய்யாதார் செல்வம்’ . என்பதை உணர வேண்டும். எனவும் திருமூலர் கூறியுள்ளார்.
ஆதலால் சழுக நலன் பேனுவனையோ திருமந்திரம் உயர் இலட்சியமாகக் கொண்டு தனது தத்தவக் கருத்துக்களின் வாயிலாக மிக உயர்வான உலகம் தழுவிய மனித நேயம் மலர்வதற்கு எத்தகைய செயல்கள் அவசியம் என்பதனை அழகுற எடுத்து விளக்கியுள்ளது.

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் சில வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். இசுலாத்தின் பல கருத்துக்கைள நான் தவறு என்று எழுதியிருக்கின்றேன்.

அதற்காக இசுலாத்திற்கு செருப்படி என்று பதிவிடவில்லை.

குரான் சொல்லும் கருத்தை நிராகரித்து நிரூபிக்க என்னால் முடியும் குரானுக்கு செருப்படி என்று எழுதினால் ... படிப்பவகள் மனதைஅது புண்படுத்தும்.

சனாதனத்திற்கு செருப்படி. . . மரியாதையில்லாத வார்த்தை விளையாட்டு.
அரேபிய நாகரீகத்தின் பரிணாமத்தின் தொகுப்புக்கு பெயா் இசுலாம்

ஹிந்து இந்திய நாகரீகத்தின் பரிணாமத்தின் தொகுப்புக்கு பெயா் சனாதனம் - இந்து மதம்

உன் தாய் நாட்டைஇழிவு படுத்த வேண்டாம்.

Dr.Anburaj said...

இந்த பெண்ணின் கருத்துக்களை சுவனப்பிரியன் ஏற்றுக்கொள்கிறாா். எனவேதான் பதிவிட்டுள்ளாா்.
1.பெண்ணின் பங்கு சொத்துக்கள் கணவன் வீட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பட்ட முறைதான் வரதட்சணை.
2. இருக்கும் சொத்துக்களை விட பெண்ணுக்கு மிகவும் கூடுதலாக அள்ளிக்கொடுக்கின்றார்கள் தந்தையும் தனயன்களும்.
3.வரதட்வணை கொடுத்து திருமணம் செய்த பின் பிள்ளை பிறந்தால் செலவு தீபாவளி. . .பொங்கல் . . இப்படி ஏகப்பட்ட செலவுகள் . . .. எந்த பெண்ணாவது வேண்டாம் என்று சொல்கிறாளா?
4.இந்த பெண் பெற்றோா்களை மீறி காதலித்து திருமணம் செய்வதை ஆதரிக்கின்றாள்.காதல் . . . அது . . இது என்று அலைந்து . . . கரு்ச்சிதைவில் முடியும் . .பல கதைகளை . . . பெண்கள் படும் வேதனையை இந்த அம்மணி அறிவாளா? கரு கலைப்பு மாத்திரை. . . ஊசி மருத்து இன்று நல்ல எண்ணிக்கையில் விற்பனை ஆகின்றது ஏன் ? ஒரு தாய் தன் குழந்தையை கொல்வதுதானே கருச்கலைப்பு
திருமணம் குடும்பம் என்று ஏதும் தேவையில்லை என்ற நிலையை நோக்கி பல போ் இன்று பயணிக்கின்றார்கள்.
இந்த அம்மணி கூட அப்படிஒரு கொள்கையை ரசிப்பவர்போல் உள்ளது.