வாசிப்பை நேசிப்போம் நண்பர்களே!
இக்குழு நிறைய வாசக நண்பர்களை எமக்களித்திருக்கிறது. இப்பொழுது ஒரு
நூலாசிரியரையும் கொடுத்திருக்கிறது. அவரின் ஆக்கத்தை இங்கு பதிவு
செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏற்கனவே இந்நூலை போன வருடம் 2022 ஜனவரி மாதம்
அவரிடம் வெளியிட கேட்டேன். பிறகு போனமாதம் நமது குழு அட்மின் Kathiravan
Rathinavel இந்நூலைப்
பற்றி எழுதி இதை அச்சுக்கு கொண்டுவரச் சொன்னார்.
மீண்டும் எழுத்தாளரிடம் கேட்டேன். நான் கேட்ட எல்லாவற்றையும் செய்து
கொடுத்தார். நூலுக்கு நமது தோழர் எழுத்தாளர் Piraimathi Kuppusamy அருமையான
அணிந்துரை வழங்கியுள்ளார். அவருக்கு அன்பும் நன்றியும். மக்களுக்காகவும்
சமுதாயத்திற்காகவும் எழுதுபவனே எழுத்தாளன் என்பார் கவிஞர் யுகபாரதி. இது
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுதப்பட்டது. அவர்களின் வலிகளையும் சிந்திய
ரத்தங்களையும் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களையும் நம் கண்முன்னே
கொண்டு வந்து நிறுத்துகிறார் எழுத்தாளர் Jose H Jose
அரை நூற்றாண்டு காலப் போராட்டம். ஆதிக்க சக்திகள் அடிக்க அடிக்க எளிய மக்கள்
திருப்பி அடித்த போராட்டம். அவமான படுத்தப்படுத்த திமிறி எழுந்த போராட்டம்.
பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதால் முன்னணியில் அவர்களே இருந்தனர். அவர்களுக்கு
துணையாய் ஆண்கள் இருந்தனர். கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து நடத்திய
போராட்டம். எப்போதெல்லாம் மதம் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து மனிதன் தன்னை மனிதனாக மட்டுமே
கருதிக்கொண்டு போராடுகிறானோ அப்போதெல்லாம் வெற்றிக்கனியைச்
சுவைக்கிறான் என்பதைத் தற்கால மனிதர்களுக்குச் சொல்லும் போராட்டமே இந்த
"தோள்சீலைப் போராட்டம்".
தோள்சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு Dravidian
Stock பதிப்பகத்தின்
புதிய வெளியீடு.. விலை 120/- நூல் தேவைப்படுவோர் அழைக்க 9092787854 (வாட்ஸ் அப்) அமேசானில் ஆர்டர் செய்ய
https://www.amazon.in/dp/9395268301/ref=smop_skuctr_view
No comments:
Post a Comment