அம்மா-அப்பாவை உம்ராவுக்கு அனுப்புவேன்
ஐம்பது கிலோ எடையுள்ள பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கெடுத்துவந்த இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரீன் வியட்னாமின் டி டாம் என்ற பெண்ணை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.
பட்டம் வென்ற கையுடன் கிடைத்த பரிசுத்தொகையை வைத்து தனது பெற்றோர் இருவரையும் உம்ராவுக்கு அனுப்புவேன் என செய்தியாளரிடம் கூறினார் அவர். தன்னுடைய பரிசுத்தொகையைக் கொண்டு தன்னுடைய நீண்டநாளைய ஆசையான மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டுமென்றிருந்த ஆவலை பிற்படுத்தி வைத்துள்ளதாக கூறும் நிகாத் சரீன் ,
நடந்த போட்டியில் 5-0
என்ற கணக்கில் போட்டியை வென்று தனது இரண்டாவது உலக சாம்பியன் பட்டத்தை பெற்று பெயரை
தக்க வைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் ஒரு மஹிந்திரா காரும் பரிசாக கிடைத்துள்ள காரணத்தால் தனக்கிருந்த பென்ஸ் மோகம் இப்போது இல்லை என்றும் கூறிய அவர், இதுபற்றி
நாட்டிற்கு திரும்பியவுடன் அம்மா அப்பாவிடம் பேசுவேன் என்றார்.
இதுவரை இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்றிருப்பதோடு அடுத்து தனது ஆசை ஏசியன் கேம்சிலும் ஒலிம்பிக்சிலும் இந்தியாவுக்காக கப் அடிக்க வேண்டும் என்கிறார்.
Nasrath S Rosy ன் காப்பி பேஸ்ட்
No comments:
Post a Comment