Followers

Saturday, August 15, 2015

போலி கணக்கெடுப்பு அதிகாரிகளாக நடித்த பிஜேபியினர்!



பெங்களூரு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கணக்கெடுப்பு அதிகாரிகள் போன்று நடித்து அவர்களது வாக்காளர் அட்டைகளை பறித்துச் செல்ல முயன்ற பா.ஜ.க.வின் மகளிர் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
கணக்கெடுப்பு அதிகாரிகளாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவைச் சேர்ந்த ஐந்து பெண்கள், நேற்று புதன் கிழமை (12.08.2015) மாலை வேளையில் முஸ்லிம் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளாக குறிவைத்துச் சென்று அவர்களுடைய வாக்காளர் அட்டைகளைச் சோதனை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம், உங்களுடைய வாக்காளர் அட்டைகள் இனிமேல் செல்லாது எனக் கூறி அவற்றைப் பறித்துச் செல்ல முயன்றுள்ளனர்.
.

தற்போது எந்த ஒரு கணக்கெடுப்பும் நடக்கவில்லை என்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அப்பெண்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் அவர்களை கையும் களவுமாக பிடித்து, கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கான அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லிக் கேட்ட போது, அவர்கள் போலிகள் என்பது தெரிய வந்துள்ளது. அப்போது, அப்பெண்கள், தாங்கள் பா.ஜ.க.வின் மகளிர் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும் போலியான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டதாகவும் ஒப்புக் கொண்டனர்.
.

இதற்கிடையை, அப்பகுதியில் நூற்றுக் கணக்கானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது. காவல்துறைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
.

சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் வசிக்கும் பகுதிகளில் இது போன்ற திருட்டுத் தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாஜகவினர் மீதும் சங்கப் பரிவார அமைப்புகள் மீதும் நீண்ட நாளாக குற்றச்சாட்டு இருந்து வரும் வேளையில், கணக்கெடுப்பு அதிகாரிகளைப் போன்று போலி வேடமிட்ட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவினர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மைப்படுத்தியுள்ளது.

தகவல் உதவி
இந்நேரம் டாட் காம்
13-08-2015
.
http://www.inneram.com/news/india/3445-fake-census-officials-in-muslim-areas.html
.

Thursday, August 13, 2015

கூகுளின் சுந்தர் பிச்சை பிராமிண் ஐயங்காராம்!



கூகுளின் CEO வாக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று நாமெல்லாம் பெருமைபட்டுக் கொள்கிறோம். ஆனால் நாராயணன் நல்லப்பா என்ற பார்பனர் வேறு விதமாக சிந்திக்கிறார். அவரது பக்கத்தில் இது பற்றி எவ்வாறு பெருமைபட்டுக் கொள்கிறார் என்று பாருங்கள்.

'வாழ்த்துக்கள் மிஸ்டர் சுந்தர் பிச்சை! மற்றுமொரு தமிழ் பிராமிண் ஐயங்கார் மிக உயரிய இடத்தை எட்டியுள்ளார்...... வீரமணிக்கும், கருணாநிதிக்கும் வயிறு எரியுதா? வயிறு எரிந்தால் கூகுள் அலுவலகம் சென்று போராடவும்' என்று கிண்டலடித்துள்ளார்.

பார்பனர்களாகிய உங்களைப் போன்றவர்கள் இந்து மதத்தின் மற்ற சாதியினரையும் சரி சமமாக நடத்தி வந்திருந்தால் உங்களுக்கு எதிராக பெரியாரும், வீரமணியும், கருணாநிதியும் எந்த காலத்திலும் எதிராக பேசியிருக்க மாட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் இன்று நீங்கள் உங்களின் வர்ணாசிரம சித்தாந்தை வேறு வழியின்றி குறைத்துக் கொண்டுள்ளீர்கள். சிறிது இடம் கிடைத்தாலும் பழைய படி பார்பனன் சூத்திரன் என்ற பேச்சை ஆரம்பித்து விடுவீர்கள்.

பார்பனர்கள் என்றுமே தமிழர்களோடு ஒட்ட மாட்டார்கள் என்பதற்கு நாராயணன் நல்லப்பாவின் பதிவு ஒரு சான்று. என்னதான் மொழி, நாடு என்று பேசினாலும் ஆரிய குழுமத்தில் இருந்து கொள்வதற்கே அவர்கள் பெருமைபடுவார்கள். இது இன்று நேற்றல்ல..... பல ஆயிரம் வருடங்களாக இந்த ஆரிய பித்து அவர்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது. இது மாற்ற முடியாத ஒன்று என்பதை இது போன்ற பதிவுகள் நமக்கு நிரூபிக்கின்றன.

கூகுளின் உயரத்தை எட்டி பிடித்த நீங்கள் எந்த இனமாக இருந்தாலும் தமிழன் என்ற முறையில் உங்களை நானும் வாழ்த்துகிறேன் மிஸ்டர் சுந்தர் பிச்சை!

வாழ்த்துக்கள்!

Wednesday, August 12, 2015

நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் மெஹ்மூத்!



'எனது தங்கை கடைவீதிக்கு ஆட்டோ ரிக்ஷாவில் சென்று விட்டு திரும்பும் போது விலையுயர்ந்த ஐ போனை தவற விட்டு விட்டாள். எங்களுக்கோ மிகவும் வருத்தம். என்ன ஆச்சரியம் சில மணி நேரத்தில் அந்த ஆட்டோ ரிக்ஷாவின் உரிமையாளர் எங்களின் விலாசம் தேடிக் கண்டு பிடித்து அந்த ஐ போனை எங்களிடம் ஒப்படைத்தார். பணத்துக்கு அடிமையாகாதவர்கள் இன்னும் நம்மோடு இருந்து கொண்டுதான் உள்ளார்கள். இவரின் நேர்மையைக் கண்டு நான் நெகிழ்ந்து விட்டேன். அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் மெஹ்மூத். உடன் அவரை போட்டோ எடுத்துக் கொண்டேன். தற்போது முக நூலிலும் பகிர்ந்துள்ளேன். நீங்களும் இதனை ஷேர் செய்து மெஹ்மூதின் நேர்மையை மற்றவர்களும் அறிந்து கொள்ள உதவிடுங்கள்.

- முகேஷ் மெஹ்தா

https://www.facebook.com/photo.php?fbid=10152994285901603&set=a.10152994285946603.1073741825.528996602&type=1&theater

My sister left her bag in a rickshaw while coming back from mqlqd Infiniti mall... Mr mehboob driver returned it along with new iPhone ...good humans still exist...please spread his name and photo to others... I was touched by his honesty

-Mukesh Mehta

Tuesday, August 11, 2015

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்!

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்!



மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி நமது நாடான இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க விவசாய அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டு இந்துத்வாவாதிகளின் முகமூடியை கிழித்து போட்டுள்ளது. 2015 ம் வருடம் 2.4 மில்லியன் மாட்டிறைச்சியை நமது நாடு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதே ஆண்டில் பிரேசில் 2 மில்லியனும் ஆஸ்திரேலியா 1.5 மில்லியனும் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இந்த மூன்று நாடுகள் மட்டும் 58.7 சதவீதம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அங்கம் வகிக்கின்றன. பசுவை தெய்வமாக வணங்கும் பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது நாடு தனது பங்காக மட்டும் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 23.5 சதவீதம் செய்து பெருமை தேடிக் கொள்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 20.8 சதவீதம் மட்டுமே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது.

Centre for Monitoring Indian Economy (CMIE) யின் அறிக்கை சொல்வதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து மாடு ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 14 சதவீதம் அதிகரித்து வருவதாக சொல்கிறது. இப்படி மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்பவர்கள் பெரும்பாலும் இந்துக்களே. 'அல் கபீர்' என்று அரபு பெயரை கம்பெனிக்கு வைத்துக் கொண்டு மார்வாடிகள் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டுகிறார்கள். அவர்களை நோக்கி மோடியின் சட்டம் என்றுமே பாயாது. வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்வதற்காகவே உள் நாட்டில் மத நம்பிக்கையை காரணம் காட்டி தடை போடப்பட்டது. பிஜேபிக்கு தேவையான கப்பத்தை ஒழுங்காக கட்டி விட்டால் கும்பிடும் தெய்வத்தையே விலை பேச இவர்கள் தயங்க மாட்டார்கள்.

ஆனால் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று ஒரு தலித் மாட்டை அறுத்து சாப்பிட்டால் 'எனது கோமாதாவை எவ்வாறு அறுக்கலாம்' என்று அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவர் இந்துத்வாவாதியினர். இவர்களுக்கு உண்மையிலேயே மாட்டின் மீது கரிசனம் இருந்தால் மோடி அரசை அல்லவா இது விஷயத்தில் உலுக்கி எடுக்க வேண்டும்? மத்தியில் சகல சக்தியோடு அமர்ந்துள்ள பிஜேபி அரசை அல்லவா இவர்கள் கண்டிக்க வேண்டும்? செய்தார்களா?

உண்மையில் இந்துத்வாவாதியினருக்கு கோமாதா பாசம் என்பது நாடகமே! இதனை வைத்து இஸ்லாமியரையும், கிருத்துவர்களையும், தலித்களையும் வம்புக்கு இழுக்க ஒரு பகடைக்காயாக கோமாதாவை பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில் பற்றுக் கொண்ட உண்மையான விசுவாசிகள் மோடி அமீத்ஷா போன்றவர்களின் இரட்டை நிலையை சீர்தூக்கி பார்க்க வேண்டும். இந்துத்வாவினரின் ஆட்சியில் இந்து மதம் பின்னோக்கி செல்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனை வரும் காலம் உண்மைப்படுத்தும்.


தகவல் உதவி
the hindu daily
10-08-2015

Monday, August 10, 2015

டாக்டர் ருவேதா சலாம் முதல் பெண் ஐபிஎஸ் காஷ்மீரிலிருந்து!



காஷ்மீர் பள்ளத்தாக்கின் குப்வாரா என்ற குக்கிராமத்தில் பிறந்து பல போராட்டங்களுக்குப் பிறகு காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் ஆபீஸராக பொறுப்பேற்றுள்ளார் டாக்டர் ருவேதா சலாம்! ருவேதா சலாம் ஒரு மருத்துவரும் கூட. ஸ்ரீநகர் மெடிக்கல் காலேஜில் மருத்துவ படிப்பு படித்து மருத்துவராகவும் உள்ளார். 2013 ல் யுபிஎஸ்எஸி தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்வு பெற்றார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தரப் பட்டியலில் 878 ஆவது இடத்தில் உள்ளார் டாக்டர் ருவேதா சலாம்.

Assistant Commissioner of Police (ACP) ஆக நமது சென்னையில் பொறுப்பேற்றுள்ளார் ருவேதா சலாம். இது பற்றி அவர் கூறும்போது 'இள வயதில் ஏசிபியாக பணியாற்றுவது என்பது மிகவும் சிக்கலான வேலை. சென்னை வாழ் மக்கள் காவல்துறைக்கு மிகவும் மதிப்பளிக்கக் கூடியவர்கள். அவ்வாறான இடத்தில் நான் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது' என்கிறார்.

இந்த சகோதரியைப் போல் பல துறைகளிலும் நமது பெண்கள் பரிணமிக்க ஊக்கமளிப்போம்.