
பெங்களூரு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கணக்கெடுப்பு அதிகாரிகள் போன்று நடித்து அவர்களது வாக்காளர் அட்டைகளை பறித்துச் செல்ல முயன்ற பா.ஜ.க.வின் மகளிர் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
கணக்கெடுப்பு அதிகாரிகளாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவைச் சேர்ந்த ஐந்து பெண்கள், நேற்று புதன் கிழமை (12.08.2015) மாலை வேளையில் முஸ்லிம் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளாக குறிவைத்துச் சென்று அவர்களுடைய வாக்காளர் அட்டைகளைச் சோதனை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம், உங்களுடைய வாக்காளர் அட்டைகள் இனிமேல் செல்லாது எனக் கூறி அவற்றைப் பறித்துச் செல்ல முயன்றுள்ளனர்.
.
தற்போது எந்த ஒரு கணக்கெடுப்பும் நடக்கவில்லை என்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அப்பெண்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் அவர்களை கையும் களவுமாக பிடித்து, கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கான அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லிக் கேட்ட போது, அவர்கள் போலிகள் என்பது தெரிய வந்துள்ளது. அப்போது, அப்பெண்கள், தாங்கள் பா.ஜ.க.வின் மகளிர் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும் போலியான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டதாகவும் ஒப்புக் கொண்டனர்.
.
இதற்கிடையை, அப்பகுதியில் நூற்றுக் கணக்கானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது. காவல்துறைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
.
சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் வசிக்கும் பகுதிகளில் இது போன்ற திருட்டுத் தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாஜகவினர் மீதும் சங்கப் பரிவார அமைப்புகள் மீதும் நீண்ட நாளாக குற்றச்சாட்டு இருந்து வரும் வேளையில், கணக்கெடுப்பு அதிகாரிகளைப் போன்று போலி வேடமிட்ட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவினர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மைப்படுத்தியுள்ளது.
தகவல் உதவி
இந்நேரம் டாட் காம்
13-08-2015
.
http://www.inneram.com/news/india/3445-fake-census-officials-in-muslim-areas.html
.
No comments:
Post a Comment