மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்!
மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி நமது நாடான இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க விவசாய அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டு இந்துத்வாவாதிகளின் முகமூடியை கிழித்து போட்டுள்ளது. 2015 ம் வருடம் 2.4 மில்லியன் மாட்டிறைச்சியை நமது நாடு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதே ஆண்டில் பிரேசில் 2 மில்லியனும் ஆஸ்திரேலியா 1.5 மில்லியனும் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இந்த மூன்று நாடுகள் மட்டும் 58.7 சதவீதம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அங்கம் வகிக்கின்றன. பசுவை தெய்வமாக வணங்கும் பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது நாடு தனது பங்காக மட்டும் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 23.5 சதவீதம் செய்து பெருமை தேடிக் கொள்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 20.8 சதவீதம் மட்டுமே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது.
Centre for Monitoring Indian Economy (CMIE) யின் அறிக்கை சொல்வதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து மாடு ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 14 சதவீதம் அதிகரித்து வருவதாக சொல்கிறது. இப்படி மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்பவர்கள் பெரும்பாலும் இந்துக்களே. 'அல் கபீர்' என்று அரபு பெயரை கம்பெனிக்கு வைத்துக் கொண்டு மார்வாடிகள் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டுகிறார்கள். அவர்களை நோக்கி மோடியின் சட்டம் என்றுமே பாயாது. வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்வதற்காகவே உள் நாட்டில் மத நம்பிக்கையை காரணம் காட்டி தடை போடப்பட்டது. பிஜேபிக்கு தேவையான கப்பத்தை ஒழுங்காக கட்டி விட்டால் கும்பிடும் தெய்வத்தையே விலை பேச இவர்கள் தயங்க மாட்டார்கள்.
ஆனால் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று ஒரு தலித் மாட்டை அறுத்து சாப்பிட்டால் 'எனது கோமாதாவை எவ்வாறு அறுக்கலாம்' என்று அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவர் இந்துத்வாவாதியினர். இவர்களுக்கு உண்மையிலேயே மாட்டின் மீது கரிசனம் இருந்தால் மோடி அரசை அல்லவா இது விஷயத்தில் உலுக்கி எடுக்க வேண்டும்? மத்தியில் சகல சக்தியோடு அமர்ந்துள்ள பிஜேபி அரசை அல்லவா இவர்கள் கண்டிக்க வேண்டும்? செய்தார்களா?
உண்மையில் இந்துத்வாவாதியினருக்கு கோமாதா பாசம் என்பது நாடகமே! இதனை வைத்து இஸ்லாமியரையும், கிருத்துவர்களையும், தலித்களையும் வம்புக்கு இழுக்க ஒரு பகடைக்காயாக கோமாதாவை பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில் பற்றுக் கொண்ட உண்மையான விசுவாசிகள் மோடி அமீத்ஷா போன்றவர்களின் இரட்டை நிலையை சீர்தூக்கி பார்க்க வேண்டும். இந்துத்வாவினரின் ஆட்சியில் இந்து மதம் பின்னோக்கி செல்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனை வரும் காலம் உண்மைப்படுத்தும்.
தகவல் உதவி
the hindu daily
10-08-2015
No comments:
Post a Comment