Followers

Tuesday, August 07, 2018

30 வருடங்களுக்கு முன் உள்ள நிலையை எண்ணிப் பார்த்தேன்!

30 வருடங்களுக்கு முன் உள்ள நிலையை எண்ணிப் பார்த்தேன்!
30 வருடங்களுக்கு முன்பு நான் முதன் முதலில் சவுதி வந்தபோது இந்த அளவு இணைய வசதி கிடையாது. ஒரு சிறிய டேப் ரிகார்டர் என்னிடம் இருந்தது. அதில் அவ்வப்போது இளையராஜா பாடல்களும்,எம்எஸ்வி பாடல்களும் ஓடிக் கொண்டிருக்கும். எனக்கு அமைந்த ரூம் மேட் ஒரு ஹைதராபாதி. அவனுக்கு தமிழ் தெரியாது. எனக்கு உருது தெரியாது. இருவரும் ஆங்கிலத்திலும் அரபியிலும் பேசி காலம் தள்ளிய அந்த நாட்கள்.....
அப்போதுதான் எங்கள் ஊர் தப்லீக் ஜமாத்தில் இன்றும் ஐக்கியமாகி இருக்கும் கமால் பாய் என்னிடம் 'நஜீர்.... நம் ஊர் நண்பர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்... இந்த கேசட்டுகளை கேளுங்கள்... உங்களுக்கு உண்மை விளங்கும்' என்று 10 ஆடியோ கேசட்டுகளை கொடுத்தார். 'நஜாத்' பத்திரிக்கையின் சில பிரதிகளையும் என்னிடம் தந்தார். வேலை முடிந்து, சாப்பாடும் முடிந்தவுடன் ஓய்வு நேரத்தில் அந்த கேசட்டுகளை கேட்க ஆரம்பித்தேன். அனைத்தும் பிஜே பேசிய கேசட்டுகள். எனக்குள் ஒரு பொறி தட்டியது. ஏ ஆர் ரஹ்மானும், இளையராஜாக்களும் எனக்கு தூரமானார்கள். பிஜேயின் கேசட்டுகளை தேடித் தேடி கேட்க ஆரம்பித்தேன். ரூம் மேட்டோ வேற்று மொழிக் காரன். எனவே அவனுக்கும் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக காதோரம் அந்த சிறிய டேப் ரிகார்டரை வைத்து தினமும் ஏகத்துவ பயான்களை கேட்க ஆரம்பித்தேன். அஸர், ஃபீல் போன்ற குர்ஆனின் சிறிய சூராக்களுக்கான விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. யாரும் சொல்லாமலேயே ஃபஜருக்கு எழுந்து அறையின் வெளியில் தொழ ஆரம்பித்தேன்.
எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பர் முஹம்மது தமீம் என்பவர் 'உங்களை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பத்ஹாவில் ஒரு பயானுக்கு அழைத்துச் செல்கிறேன். தயாராக இருங்கள்' என்றார். அதன்படி பயானுக்கு அவரோடு சென்றேன். அங்கு அழகிய தமிழில் பள்ளிவாசலில் யூசுஃப் மிஸ்பாஹி என்ற தமிழறிஞர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சு பிஜேயைப் போலவே மிகவும் சிறப்பாக இருந்தது. வாரா வாரம் அந்த பள்ளிக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்போது ஒரு வாரம் மேலப் பாளையத்தில் பிஜே மத்ஹப் வெறியர்களால் வெட்டப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டது. சிறிது நேரம் பயங்கர அமைதி. துவாச் செய்து பிறகு சகஜ நிலைக்கு வந்தோம். அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் இல்லை. நம் நெருங்கிய உறவினரில் ஒருவர் வெட்டப்பட்டால் எப்படி துடிப்போமோ அப்படி துடித்துப் போனேன். மறு நாள் பிஜே ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டார். இரண்டொரு நாளில் சகஜ நிலைக்கு வந்து விடுவார் என்றவுடன் தான் நானும் சகஜ நிலைக்கு வந்தேன். தமிழகமெங்கும் ஏகத்துவ இளைஞர்களின் நிலை அவர்களின் எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்தது. பிஜே என்ற அந்த மனிதருக்காக உயிரையும் கொடுக்க ஆயிரமாயிரம் இளைஞர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் உருவானார்கள்.
ஆனால் நேற்று நடந்த பொதுக் குழுவில் அவரால் வார்த்தெடுக்கப்பட்ட இன்றைய இளைஞர்கள், 'பிஜேயை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குகிறோம்' என்று சொன்னவுடன் 'அல்லாஹூ அக்பர்' என்ற கோஷத்தோடு அதனை ஆமோதித்தனர். இந்த மாற்றம் எப்படி வந்தது? உயிரையும் கொடுக்க தயாரான இளைஞர்கள் இன்று அவரை வெளியாக்க துடிப்பதேன்?
அதுதான் தனி மனித ஒழுக்கம். பிஜே ஒழுக்க சீலராக ஏகத்துவத்தை சொல்லக் கூடியவராக என்று வலம் வந்தாரோ அன்று அவருக்காக கண்ணீர் சிந்தியவர்கள் லட்சக்கணக்கானவர்கள். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்ற போது அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்கள் லட்சக்கணக்கானோர். என்று அவர் சைத்தானின் வலையில் வீழ்ந்து விட்டார் என்ற உறுதிபடுத்தப்பட்ட செய்தி வந்ததோ அன்றே அவரை தூரமாக்கி விட்டனர் ஏகத்துவ வாதிகள். அவருக்கு அளித்த அன்பு, பாசம் அனைத்தும் அவர் வாயிலிருந்து வந்த ஏகத்துவ செய்திகளுக்காகத்தானேயொழிய தனி மனித துதி பாடல் அல்ல. அதைத்தான் பொதுக் குழுவில் நாம் பார்த்தோம்.
இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

பிறந்த நாட்டை நேசிப்பதற்கு பல வழிகளில் இதுவும் ஒன்று!

பிறந்த நாட்டை நேசிப்பதற்கு பல வழிகளில் இதுவும் ஒன்று!
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் இரத்த தான முகாம். பிறந்த நாட்டை நேசிப்பதற்கு பல வழிகள் உண்டு. அவற்றில் ஒரு வழி இந்த குருதி கொடை...
எல்லா புகழும் இறைவனுக்கே!











Sunday, August 05, 2018

அழைப்பாளர்களை உருவாக்கியது தவ்ஹீத் ஜமாத்

மதரஸா சென்று படிக்காமல் கேட்டறிவைக் கொண்டு இது போன்ற ஆயிரம் ஆயிரம் அழைப்பாளர்களை உருவாக்கியது தவ்ஹீத் ஜமாத் செய்த பெரும் சாதனைகளில் ஒன்று.

Wednesday, August 01, 2018

நிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம்!

இன்று நாம் உலகம் முழுக்க நிறுத்தல் அளவைகளை அளவிடுகிறோம். முன்பெல்லாம் பொருள்களை அளவிடுவதற்கு ராத்தல்(பவுண்டு) எனும் அளவை பரவலாக பயன்படுத்தினோம். 7680 கோதுமை மணிகளின் எடை ஒரு பவுண்டு என்று முன்பு கணக்கிடப்பட்டது. தற்போது நாம் கிலோ கிராம் என்ற அளவையை பரவலாக பயன்படுத்துகிறோம். இதை வைத்து ஒரு சோதனையை தற்போது செய்து பார்ப்போம்.

ஒரே அளவுடைய இரண்டு கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜாடியில் உப்பை நிரப்பிக் கொள்வோம். மற்றொரு ஜாடியில் சிறு சிறு இரும்பு துண்டுகளை போட்டு நிரப்புவோம். தற்போது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஒரு தராசை எடுத்து இரண்டு ஜாடிகளையும் ஒரு சேர எடை போடுவோம். என்ன நடக்கும்? இரும்பு உள்ள ஜாடி கீழேயும் உப்பு உள்ள ஜாடி மேலேயும் காட்டும். ஏனெனில் உப்பை விட இரும்பின் பொருண்மை அல்லது அடர்த்தி அதிகமானதால் இரும்பு வைத்த ஜாடி கீழே இறங்கியுள்ளது என்று சொல்வோம். ஒரு வகையில் இந்த பதில் சரியானாலும் மற்றொரு வகையில் தவறாகும். ஏனெனில் பொருண்மையும் எடையும் ஒன்று எனும் தவறான பொருள் இந்த பதிலில் அடங்கியுள்ளது. ஆனால் எடையும் பொருண்மையும் வேறு வேறு ஆகும்.

இதனை நாம் நன்கு விளங்கிக் கொள்ள மற்றொரு சோதனையை செய்து பார்ப்போம். நாம் முன்பு எடை போட்ட உப்பையும், இரும்பையும் அதே தராசோடு விண்வெளிக்கு எடுத்துச் செல்வதாகக் கொள்வோம்.. பூமியில் நாம் பார்த்தது போன்று இரண்டு ஜாடிகளையும் தராசில் வைத்து முன்பு பார்த்தது போல் எடை பார்க்க முயற்சிப்போம். தற்போது தராசில் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம். உப்பு உள்ள பகுதியின் தட்டில் நாம் கை வைத்து கீழே அழுத்துகிறோம். இப்போது கையை எடுத்தாலும் உப்பு உள்ள பகுதி மேலே வராது. என்ன ஆனது நமது தராசுக்கு? உப்பின் பொருண்மை இங்கு இரும்பை விட கூடி விட்டதா? அதுவும் இல்லை. 

இங்கு எடை பார்க்கும் கருவியில் எந்த பிரச்னையும் இல்லை. பொருண்மையும் எடையும் ஒன்று என்று முன்பு நாம் நினைத்தது தவறு என்று இந்த சோதனை நிரூபிக்கிறது. எடை என்பது இடத்திற்கு இடம் மாறுவதைப் போன்று பொருண்மை மாறுவது இல்லை. பொருண்மைதான் ஒரு பொருளின் எடைக்கு முக்கிய காரணம் என்று சொன்னால் பூமியில் காட்டிய அதே எடையை விண்வெளியிலும் காட்ட வேண்டும். ஆனால் காட்டவில்லை. இதிலிருந்து ஒரு பொருளின் எடைக்கு அதன் பொருண்மை காரணமல்ல என்பதை விளங்கிக் கொண்டோம்.

அப்படி என்றால் எடை என்பதற்கான வரை விலக்கணம் என்ன என்று இனி பார்ப்போம். அறிவியல் எடைக்கு கூறும் இலக்கணமாவது 'ஈர்ப்பாற்றலின் இழு விசை' (weight is the pull of Gravitation) என்கிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலேயே எடை தீர்மானிக்கப்படுவதாக அறிவியல் கூறுகிறது. 

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பூமியில் ஒரு பொருளை நாம் எடை போடும் போது அப்பொருளின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது தெளிவாகும். இந்த புவியீர்ப்பு விசை இல்லை என்றால் நாம் சாதாரணமாக ஒரு தராசில் ஒரு பொருளை எடை போட முடியாது என்று விளங்குகிறோம். 

இது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.

'அவன் வானத்தை உயர்த்தினான்: நீங்கள் நீதி தவறி விடக் கூடாது என்பதற்காக தராசை நிலை நாட்டினான். நிச்சயமாக எடையை நிலை நாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.'
-குர்ஆன் 55:7-9


இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக ஒரு செய்தியை சொல்லுகிறது. அதாவது மனித குலம் தங்களின் எடைகளை சரியாக நிறுப்பதற்காக இறைவனால் பூமியில் இந்த ஈர்ப்பு விசை ஏற்படுத்தப் பட்டுள்ளது. பூமியின் சுழற்சியில் இருந்து இந்த பூமி பாதுகாப்பாக இருப்பது வரை இந்த ஈர்ப்பு விசையானது மனித குலத்துக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.புவி ஈர்ப்பு விசையின் பயன்களில் இதுவும் ஒன்று. நம்மை படைத்த இறைவனின் பெருங் கருணைகளில் நமக்காக இந்த ஈர்ப்பு சக்தியை இந்த பூமிக்கு வழங்கியதும் ஒன்று. இறைவனை மறுக்கும் நாத்திகர்களுக்கு இந்த வசனமும் பூமியில் தராசு நிலை நிறுத்தப் பட்டிருப்பதும் சிறந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இனி இந்த புவியீர்ப்பு விசை எவ்வாறு உருவாகிறது என்று பார்ப்போம்.

புவியின் காந்த சக்தி அளவிடமுடியாதது. வடக்கிலும் தெற்கிலும் ஒரு துருவங்கள் கொண்டு பூமியின் எல்லா இடங்களையும் இந்த சக்தி ஆக்ரமித்துள்ளது. இந்த காந்த சக்தியின் காரணம் என்ன? பூமியில் தேங்கிக்கிடக்கும் தீக்குழம்பில் இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் திரவ நிலையில் உள்ளன.

இவை ஒரு வித மின் அதிர்வுகளை, பூமியின் சுழலும் தன்மையால் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. பூமியின் படிமங்களில் இருகிய நிலையில் உள்ள இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் இந்த மின் அதிர்வுகளை காந்த சக்தியாக மாற்றி பூமியை ஒரு காந்த கல்லாக நிலை நிறுத்துகின்றன.

இந்த காந்த சக்தி மிக முக்கிய நன்மைகளை நம் பூமிக்கு அளிக்கிறது. உதாரணமாக சூரியனிடம் இருந்து வெளிப்பட்டு, நம் பூமியை தாக்கும் எத்தனையோ மின் அதிர்வுகளையும் ஒளி காற்றை போன்ற பல சக்திகளையும், பூமியின் காந்த அலைகள் எதிர் கொண்டு நம்மை வந்து அடையாமல் திருப்பிவிடுகின்றன (reflecting).

இந்த எதிர்ப்பையும் மீறி சில அதிர்வுகள் பூமியின் வட, தென் துருவங்களை வந்து அடைந்து, சில மாற்றங்களை செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பூமிக்கு காந்த சக்தி இல்லையென்றால் சூரியனின் பல கதிர்களால் கடும் விளைவுகள் ஏற்பட்டு, பூமியில் உயிர் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

மழை காலத்தில் கூட சில பகுதிகள் மழை பெய்வதும், சில இடங்களில் தூறல் கூட போடாமல் போவதும், இந்த காந்த சக்தி ஒரு சில இடங்களில் அதிகமாகவும், ஒரு சில இடங்களில் அடர்த்தி குறைவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

நம்மை படைத்த இறைவன் நம் மீது உள்ள கருணையினால் நாம் கேட்காத பல வசதிகளை தினமும் தந்து கொண்டிருக்கிறான். கடவுளை மறுப்பவருக்கும் அளவில்லாது அள்ளிக் கொடுக்கிறான். பூமியில் வாழும் காலம் முழுவதும் மற்றவர்களை துன்புறுத்தியே அதில் இன்பம் காணும் பலரையும் சந்தோஷத்துடனேயே வைத்துள்ளான். அவனது கருணைக்கு ஈடு இணை ஏது?


கங்கை நீரால் கழுவி விட்ட மூடத்தனம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

லக்னோ, ஜூலை 30 -
கங்கை நீரால் கழுவி விட்ட மூடத்தனம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம், முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு, ராத் தொகுதியை சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏ-வான மனிஷா அனுராகி கடந்த ஜூலை 12-ஆம் தேதி, விழா ஒன்றுக்காக வந்து சென்றுள்ளார்.
இதையடுத்து, ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டிய சுவாமி தயானந்த மகந்த் என்பவர், "பல நூற்றாண்டுகளாகவே பெண்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்ட கோயில் என்றும்,இது மகாபாரத காலத்தில் இருந்து இருக்கும் கோயிலென்றும் " கதைவிடத் துவங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கங்கை நீரால் கோவில் சுத்தப்படுத்தப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் கங்கை நதியில் உள்ள அசுத்தங்கள் சொல்லி மாளாது. அந்த தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது என்று அரசு தெரிவித்துள்ளது. அந்த தண்ணீரை கொண்டு வந்து கோவிலை சுத்தப்படுத்தினால் கோவில் சுத்தமாகும் என்கிறீர்கள்?
இதனிடையே, தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. மனிஷா அனுராகி, கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று அப்பாவித்தனமாக கூறி உள்ளார்.
பெண்களை தெய்வம் என்கிறார்கள் ஒரு சாரார். மற்றொரு சாரார் கோவிலுக்குள் நுழைந்தாலே தீட்டு என்கின்றனர்.