Followers

Wednesday, August 01, 2018

நிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம்!

இன்று நாம் உலகம் முழுக்க நிறுத்தல் அளவைகளை அளவிடுகிறோம். முன்பெல்லாம் பொருள்களை அளவிடுவதற்கு ராத்தல்(பவுண்டு) எனும் அளவை பரவலாக பயன்படுத்தினோம். 7680 கோதுமை மணிகளின் எடை ஒரு பவுண்டு என்று முன்பு கணக்கிடப்பட்டது. தற்போது நாம் கிலோ கிராம் என்ற அளவையை பரவலாக பயன்படுத்துகிறோம். இதை வைத்து ஒரு சோதனையை தற்போது செய்து பார்ப்போம்.

ஒரே அளவுடைய இரண்டு கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜாடியில் உப்பை நிரப்பிக் கொள்வோம். மற்றொரு ஜாடியில் சிறு சிறு இரும்பு துண்டுகளை போட்டு நிரப்புவோம். தற்போது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஒரு தராசை எடுத்து இரண்டு ஜாடிகளையும் ஒரு சேர எடை போடுவோம். என்ன நடக்கும்? இரும்பு உள்ள ஜாடி கீழேயும் உப்பு உள்ள ஜாடி மேலேயும் காட்டும். ஏனெனில் உப்பை விட இரும்பின் பொருண்மை அல்லது அடர்த்தி அதிகமானதால் இரும்பு வைத்த ஜாடி கீழே இறங்கியுள்ளது என்று சொல்வோம். ஒரு வகையில் இந்த பதில் சரியானாலும் மற்றொரு வகையில் தவறாகும். ஏனெனில் பொருண்மையும் எடையும் ஒன்று எனும் தவறான பொருள் இந்த பதிலில் அடங்கியுள்ளது. ஆனால் எடையும் பொருண்மையும் வேறு வேறு ஆகும்.

இதனை நாம் நன்கு விளங்கிக் கொள்ள மற்றொரு சோதனையை செய்து பார்ப்போம். நாம் முன்பு எடை போட்ட உப்பையும், இரும்பையும் அதே தராசோடு விண்வெளிக்கு எடுத்துச் செல்வதாகக் கொள்வோம்.. பூமியில் நாம் பார்த்தது போன்று இரண்டு ஜாடிகளையும் தராசில் வைத்து முன்பு பார்த்தது போல் எடை பார்க்க முயற்சிப்போம். தற்போது தராசில் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம். உப்பு உள்ள பகுதியின் தட்டில் நாம் கை வைத்து கீழே அழுத்துகிறோம். இப்போது கையை எடுத்தாலும் உப்பு உள்ள பகுதி மேலே வராது. என்ன ஆனது நமது தராசுக்கு? உப்பின் பொருண்மை இங்கு இரும்பை விட கூடி விட்டதா? அதுவும் இல்லை. 

இங்கு எடை பார்க்கும் கருவியில் எந்த பிரச்னையும் இல்லை. பொருண்மையும் எடையும் ஒன்று என்று முன்பு நாம் நினைத்தது தவறு என்று இந்த சோதனை நிரூபிக்கிறது. எடை என்பது இடத்திற்கு இடம் மாறுவதைப் போன்று பொருண்மை மாறுவது இல்லை. பொருண்மைதான் ஒரு பொருளின் எடைக்கு முக்கிய காரணம் என்று சொன்னால் பூமியில் காட்டிய அதே எடையை விண்வெளியிலும் காட்ட வேண்டும். ஆனால் காட்டவில்லை. இதிலிருந்து ஒரு பொருளின் எடைக்கு அதன் பொருண்மை காரணமல்ல என்பதை விளங்கிக் கொண்டோம்.

அப்படி என்றால் எடை என்பதற்கான வரை விலக்கணம் என்ன என்று இனி பார்ப்போம். அறிவியல் எடைக்கு கூறும் இலக்கணமாவது 'ஈர்ப்பாற்றலின் இழு விசை' (weight is the pull of Gravitation) என்கிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலேயே எடை தீர்மானிக்கப்படுவதாக அறிவியல் கூறுகிறது. 

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பூமியில் ஒரு பொருளை நாம் எடை போடும் போது அப்பொருளின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது தெளிவாகும். இந்த புவியீர்ப்பு விசை இல்லை என்றால் நாம் சாதாரணமாக ஒரு தராசில் ஒரு பொருளை எடை போட முடியாது என்று விளங்குகிறோம். 

இது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.

'அவன் வானத்தை உயர்த்தினான்: நீங்கள் நீதி தவறி விடக் கூடாது என்பதற்காக தராசை நிலை நாட்டினான். நிச்சயமாக எடையை நிலை நாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.'
-குர்ஆன் 55:7-9


இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக ஒரு செய்தியை சொல்லுகிறது. அதாவது மனித குலம் தங்களின் எடைகளை சரியாக நிறுப்பதற்காக இறைவனால் பூமியில் இந்த ஈர்ப்பு விசை ஏற்படுத்தப் பட்டுள்ளது. பூமியின் சுழற்சியில் இருந்து இந்த பூமி பாதுகாப்பாக இருப்பது வரை இந்த ஈர்ப்பு விசையானது மனித குலத்துக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.புவி ஈர்ப்பு விசையின் பயன்களில் இதுவும் ஒன்று. நம்மை படைத்த இறைவனின் பெருங் கருணைகளில் நமக்காக இந்த ஈர்ப்பு சக்தியை இந்த பூமிக்கு வழங்கியதும் ஒன்று. இறைவனை மறுக்கும் நாத்திகர்களுக்கு இந்த வசனமும் பூமியில் தராசு நிலை நிறுத்தப் பட்டிருப்பதும் சிறந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இனி இந்த புவியீர்ப்பு விசை எவ்வாறு உருவாகிறது என்று பார்ப்போம்.

புவியின் காந்த சக்தி அளவிடமுடியாதது. வடக்கிலும் தெற்கிலும் ஒரு துருவங்கள் கொண்டு பூமியின் எல்லா இடங்களையும் இந்த சக்தி ஆக்ரமித்துள்ளது. இந்த காந்த சக்தியின் காரணம் என்ன? பூமியில் தேங்கிக்கிடக்கும் தீக்குழம்பில் இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் திரவ நிலையில் உள்ளன.

இவை ஒரு வித மின் அதிர்வுகளை, பூமியின் சுழலும் தன்மையால் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. பூமியின் படிமங்களில் இருகிய நிலையில் உள்ள இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் இந்த மின் அதிர்வுகளை காந்த சக்தியாக மாற்றி பூமியை ஒரு காந்த கல்லாக நிலை நிறுத்துகின்றன.

இந்த காந்த சக்தி மிக முக்கிய நன்மைகளை நம் பூமிக்கு அளிக்கிறது. உதாரணமாக சூரியனிடம் இருந்து வெளிப்பட்டு, நம் பூமியை தாக்கும் எத்தனையோ மின் அதிர்வுகளையும் ஒளி காற்றை போன்ற பல சக்திகளையும், பூமியின் காந்த அலைகள் எதிர் கொண்டு நம்மை வந்து அடையாமல் திருப்பிவிடுகின்றன (reflecting).

இந்த எதிர்ப்பையும் மீறி சில அதிர்வுகள் பூமியின் வட, தென் துருவங்களை வந்து அடைந்து, சில மாற்றங்களை செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பூமிக்கு காந்த சக்தி இல்லையென்றால் சூரியனின் பல கதிர்களால் கடும் விளைவுகள் ஏற்பட்டு, பூமியில் உயிர் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

மழை காலத்தில் கூட சில பகுதிகள் மழை பெய்வதும், சில இடங்களில் தூறல் கூட போடாமல் போவதும், இந்த காந்த சக்தி ஒரு சில இடங்களில் அதிகமாகவும், ஒரு சில இடங்களில் அடர்த்தி குறைவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

நம்மை படைத்த இறைவன் நம் மீது உள்ள கருணையினால் நாம் கேட்காத பல வசதிகளை தினமும் தந்து கொண்டிருக்கிறான். கடவுளை மறுப்பவருக்கும் அளவில்லாது அள்ளிக் கொடுக்கிறான். பூமியில் வாழும் காலம் முழுவதும் மற்றவர்களை துன்புறுத்தியே அதில் இன்பம் காணும் பலரையும் சந்தோஷத்துடனேயே வைத்துள்ளான். அவனது கருணைக்கு ஈடு இணை ஏது?


12 comments:

Dr.Anburaj said...

இது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.

'அவன் வானத்தை உயர்த்தினான்: நீங்கள் நீதி தவறி விடக் கூடாது என்பதற்காக தராசை நிலை நாட்டினான். நிச்சயமாக எடையை நிலை நாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.'
-குர்ஆன் 55:7-9
---------------------------------------------
இரும்பின் எடை நீரின் எடை புவியிர்ச்சி விசை போன்ற எந்த அறிவியல் கருத்திற்கும் மேற்படி குரான் வசனத்திற்கும் சம்பந்தம் ஏதும் கிடையாது. மொடடை தலைக்கும் முழங்காலுக்கும் முயன்று தோற்றுள்ளீா்கள்.படித்த எந்த முஸ்லீமும் இந்த கருத்தை ஏற்க மாட்டான்.
கள்ள தராசு பயன்படுத்தாதீா்கள்.நியாயமாக எடையை அளந்து வியாபாரம் செய்யுங்கள் என்பது குரானின் அறிவரையாகும். இதைத் தவிர வேறு ஏந்த அர்த்தமும் கிடையாது.கிடையாது.கிடையவே கிடையாது.

vara vijay said...

In the given sura, nothing is mentioned about gravitational force is the reason for weight.

Dr.Anburaj said...

Gravity -புவியிா்ப்பு விசையை பயன்படுத்தாமல் எடையை அறிவிக்கும் மின்அணுதராசுதான் இன்று பழக்கத்தில் உள்ளது.அதி்ல் குரானின் அறிவியல் என்ன உள்ளது.
---------------------
மற்றவா்களை ஏமாற்றுவதற்கும்ஒரு அளவில்லையா ? இயற்பியல் படித்த முஸ்லீம்கள் இந்த கட்டுரையை ஆதரிப்பதாக சொல்வார்களா ?
அவர்களின் பதிலை முழு முகவரியுடன் பதிவு செய்யுங்களேன்.முடியுமா ?

Dr.Anburaj said...

கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதியாக்கும் அதிசய மந்திரம்! (Post No.5283)

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே

--திருமூலரின் திருமந்திரம்

பொருள்

பாவிகள், சிவன் (கடவுள்) நாமத்தை உச்சரிக்க மாட்டார்கள்; பாவம் செய்தவர்களும் சிவ, சிவ என்ற நாமத்தை உள்ளன்போடு உச்சரித்தால் பாவங்கள் போகும். சிவன் நாமத்தை உச்சரித்தால் மனிதனும் தேவர் ஆகிவிடுவான். தொடர்ந்து சிவன் நாமத்தை உச்சரிப்பவர்கள் சிவனுடன் ஒன்றிவிடுவார்கள்.

‘நாவுக்கு அருங்கலம் நமச்சிவாயவே’ என்று அப்பர் பெருமான் சொன்னதும் இதனால்தான்.

இதை விளக்க ஒரு கதை உண்டு

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சந்தித்த பெரிய பக்தர்களில் ஒருவர் கிருஷ்ண கிஷோர். அவர் ராம பிரானை வழிபடுபவர். அரியதாகா என்னுமிடத்தில் வாழ்ந்தார்.அவரைப் பற்றி ராமகிருஷ்ணர் சொன்னதாவது:

"எனக்கு முதலில் தெய்வீகப் பரவச நிலை ஏற்பட்டு அதிலேயே ஆழ்ந்து கிடந்தபோது , என்னால் உலக ஆசை பிடித்த சாதாரண மக்களோடு இருக்கவே முடியாது. நான் கடவுள் வெறி பிடித்து , கடவுள் பற்றிய விஷயங்களையே கேட்க விரும்பினேன். மஹாபாரதம் எங்கே நடக்கும்? பாகவதம் எங்கே நடக்கும்?

அத்யாத்ம ராமாயணம் எங்கே நடக்கும்? என்று அலைந்தேன். சில நேரங்களில் கிருஷ்ண கிஷோரிடம் செல்வேன். அவருக்குக் கடவுளிடம் அற்புதமான நம்பிக்கை இருந்தது.

ஒருமுறை கிருஷ்ண குமார் பிருந்தாவனத்துக்குச் சென்றிருந்தார். அவருக்கு மிகவும் தாகம் எடுத்தது. போகும் வழியில் இருந்த ஒரு கிணற்றடிக்குச் சென்றார். அங்கே ஒருவன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கிஷோர் அவனிடம் சென்று தமக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தரும்படி கேட்டார். அவனோ தான் மிகவும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன் என்றும் அவருக்குத் தண்ணீர் எடுத்துத் தருவது பாவம் என்றும் கூறினான்.

உடனே கிருஷ்ண கிஷோர் அவனிடம் ' சிவ, சிவா' என்று சொல்லச் சொன்னார். அவன் சொன்னதும் நீ உயர்குலத்தவன் ஆகிவிட்டாய், உன் கையாலேயே தண்ணீர் இறைத்துக் கொடு' என்றார். அவனும் தந்தான். கடவுளின் திருநாமத்தில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.
“சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்”- என்று திருமூலர் சொன்னது எவ்வளவு உண்மை! நாடு முழுதும் இந்த நம்பிக்கை உண்டு!
விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பலஸ்ருதியிலும்

“சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து”

என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தமும் சிவன் என்ற சப்தமும் எல்லாப் பாவங்களையும் போக்கி எல்லோரையும் உயர் நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறது. இதை அப்பர் சுவாமிகள் , திருமூலர், சம்பந்தர் முதலியோரும் ஆழ்வார்களும் நமக்கு பாடல்களால் உணர்த்தியுள்ளனர்.

--சுபம்--
Tamil and Vedas

Dr.Anburaj said...

ஒட்டக ஆராய்ச்சியில் வரும் விஷயங்கள்

ரிக்வேதத்தில் ஒட்டகம் பாணினியின் இலக்கண நூலில் ஒட்டகம்

பைபிளில் ஒட்டகம் சங்க இலக்கியத்தில் ஒட்டகம்

தொல்காப்பியத்தில் ஒட்டகம் சிலப்பதிகாரத்தில் ஒட்டகம்??

காளிதாசனில் ஒட்டகம் ஸம்ஸ்க்ருதக் கதை நூல்களில் ஒட்டகம்

அமர கோஷத்தில் ஒட்டகம் மஹாபாரதத்தில் ஒட்டகம்

மனு ஸ்ம்ருதியில் ஒட்டகம் சிந்து சமவெளியில் ஒட்டகம்

அகராதி, நிகண்டுக்களில் ஒட்டகம் ஒட்டக வாஹனம்

சங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப் படையிலும் அக நானூற்றிலும், ஒட்டகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒட்டகம் என்பது பாலைவன மிருகம். மேலும் உஷ் ட் ர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே இப்படி ஒட்டை, ஒட்டகம் என்று மருவியது.

சிறுபாணாற்றுப்படை சங்க காலத்தின் முடிவில் தோன்றிய நூல். ஆகவே பொது ஆண்டு 3000 முதல் 4000-க்குள் இருக்கலாம். பிற்கால இலக்கியத்திலும் கூட ஒட்டகம் பற்றிய குறிப்புகள் சிலவே.

பனி நீர்ப்படுவின் பட்டினம் படரின்

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன

வீங்கு திரை கொணர்ந்த விரைமர விறகின்

1153-155 சிறு பாணாற்றுப்படை

பொருள்

கடல் நீர் அலைகள் எயிற்பாட்டினக் கரையில் அகில் கட்டைகளைக் கொண்டுவந்து ஒதுக்கின. அக்கட்டைகள் ஒட்டகம் உறங்குவது போலக் காட்சி தந்தன.

தொல்காப்பியத்தில் ஒட்டகம் வருகிறது

சூத்திரம் 1517

‘ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும்………………….’

ஒட்டகத்தின் குட்டியையும் கன்று எனலாம்

சூத்திரம் 1552

‘ஒட்டகம், குதிரை, கழுதை, மரை இவை

பெட்டை என்னும் பெயர்க் கொடைக்கு உரிய’

ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான் ஆகியவற்றின் பெண்பால்- பெட்டை என்ற பெயர் பெறும். அதாவது ஒட்டகப் பெட்டை என்றால் அது பெண் ஒட்டகம்.

ஆக தொல்காப்பியர் காலத்திலேயே ‘உஷ்ட்ற’ என்பது தமிழில் ஒட்டகம் ஆகிவிட்டது.

XXX

அகநானூற்றில் ஒட்டகம்


அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலில்

"குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு

கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்

கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,

அம்மா அரிவை ஒழிய-- அகம்.245


பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும்.

ஆக எலும்பு போலக் காய்ந்த பூக்கள் அல்லது பூக்களைத் தாங்கிய , காய்ந்த சுள்ளிகள் என்றே கொள்ளல் வேண்டும்.

அகநானூறு, சிறுபாணாற்றுப் படை, தொல்காப்பியம் ஆகியவற்றில் ஒட்டகம் வருவதால் அக்காலத்தில் பாலைவனப் பகுதி மிருகமான ஒட்டகம் தமிழகம் வந்தது என்று கொள்ளவேண்டும். இல்லாவிடில் அதற்குத் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியர் இடம் தந்திருக்க மாட்டார்!- நன்றி தமிழ வேதா

Dr.Anburaj said...

2
சிலப்பதிகாரத்தில் கோவலன் அத்திரி மீது சவாரி செய்ததாக ஒரு செய்தி உண்டு; அத்திரி என்றால் கழுதை, ஒட்டகம் என்று இரு பொருள் உண்டு. கோவலன் போன்ற பெரிய வணிகன் கழுதை மேல் சவாரி செய்தான் என்பதை விட ஒட்டகத்தின் மீது சென்றான் என்று பொருள் கொள்வது பொருந்தும்

பூம்புகாரில் பௌர்ணமி நாளன்று நடந்தது என்ன?

வான வண்கையன் அத்திரி ஏற

மான் அமர் நோக்கியும் வையம் ஏறிக்

கோடி பல அடுக்கிய கொழிநிதிக் குப்பை………………………

--கடலாடு காதை, சிலப்பதிகாரம்

பொருள்

வானத்து மழைபோல வழங்கும் கைகளை உடைய கோவலன், கோவேறுக் கழுதையின் மீது ஏறிக்கொண்டான்; மான் போன்ற பார்வையுடைய மாதவி மூடு வண்டியில் ஏறிக்கொண்டாள்; கோடிக் கணக்கான பொருள் உடைய வணிகரின் மாட வீதிகளைக் கடந்து சென்றனர்.

இதில் அத்திரி என்பதைக் கழுதை என்று உரைகாரர்கள் வியாக்கியானம் செய்த போதும் அத்திரி என்பதற்கு ஒட்டகம் என்றும் பொருள் உண்டு. ஆக கோவலன் ஒட்டகம் மீது ஏறிக் கடலாடச் சென்றான் என்றும் பொருள் சொல்ல முடியும்.

மதுரையில் ஒட்டக பவனி

மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியும் அம்மனும் பவனி வருகையில் ஒட்டகம் யானை டமாரம் (முரசு) ஏந்திய மாடு முதலில் பவனி வரும் அவைகளுக்குப் பின்னர் சுந்தரேசரும் மீனாட்சி அம்மனும் பவனி வருவர்.

எருது ஒட்டகம், எருமை ஆகியவற்றுக்கும் திமில் இருந்தாலும் திமில் உள்ள மிருகம் என்றால் அது ஒட்டகத்தையே குறிக்கும். மாடு, ஆடு ஆகியவற்றுக்குக் கொம்புகள் இருந்தாலும் கொம்பு மிருகம் என்றால் அது காண்டா மிருகத்தையே குறிப்பது போல!

அகராதி, நிகண்டுக்களில்

ஒட்டகத்தின் தமிழ் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

ஒட்டகம், ஒட்டை, அத்திரி, இரவணம், கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தன், உஷ் ட் ர, க்ரமேல (இதிலிருந்து கேமல் CAMEL என்ற ஆங்கிலச் சொல் வந்தது;

அமர கோசம் என்னும் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருத நிகண்டில்

பெண் ஒட்டகத்துக்கு உஷ்ட்ரி கா (ம்ருத்தாண்டே) என்ற பெயர் உள்ளது

க்ரமேல, மய, மஹாங்காஹா, கரபஹ, தீர்க்கக்ரீவ, த்விகுடஹ, சரபஹ என்ற பெயர்கள் உள்ளன.

தமிழில் தாசேரம், நெடுங்கோணி, அயவனம், கூன்புறம் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை ஸம்ஸ்க்ருதப் பெயர்களே!

குட்டியாக இருந்தால்

கரபாஹா, ஸ்யுஹு, ஸ்ருல்லகா, தாரவைஹி, பாத பந்தனைஹி என்றும் உள்ளது.

Tamil and Vedas | August 5, 2018

Dr.Anburaj said...

ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய வியாசர் அருளிய மஹாபாரதத்தைத் தமிழில் பாக்களாகத் தர எண்ணினார் வில்லிப்புத்தூரார்.

“குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை” என்று பின்னால் ஒரு புலவர் பாடும் அளவு புலமை இல்லாதவர்கள் பாடத் துணிந்தால் அவர்களின் காதைக் குடைந்து தோண்டி தண்டிக்கும் அளவு புலமை பெற்றவர் வில்லிப்புத்தூரார்.

வியாசர் பாடிய 18 பர்வங்களில் 10 பர்வங்களை மட்டுமே சுமார் 4350 பாக்களில் தன் காவியத்தில் பாடியுள்ளார். தர்மர் முடிசூட்டியதுடன் வில்லி பாரதம் முடிவடைகிறது.

700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் தந்துள்ளார்.

பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,

தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்

தாயொடு தந்தை, மக்கள் தாரம், என்று இவர் பால் வைத்த

நேயமும் அவன் தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்!

மாயை என்னும் ஒருத்தியிடம் மனம் என்னும் மகன் தோன்றினான். பரிசுத்தமான ஞானம் என்பவனை வெளிப்படாமல் ஆகி வைத்தான். தாய், தந்தை, மக்கள், மனைவி ஆகியோர் மீதான பாசமும் அந்த மனம் என்பவனின் எண்ணத்தாலே தான் நிகழ்ந்தது!

குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம்பொருளும் தானே

அயின்று, முக்குணங்களோடும், அறுவகைப் படைகளோடும்,

பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்குத்

துயின்ற போது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!

உடம்பில் பொருந்தியுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களும் ஊறு சுவை. ஒளி. வாசனை, ஓசை என்னும் ஐந்து புலன்களையும் தானே அனுபவித்து, சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடும் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு வகை சேனைகளோடு பழகி அரசாட்சி செய்யும் மனம் என்னும் பகைவன் தூங்கிய போது, (அவனால்) தோற்றமில்லாதவனாய் செய்யப்பட்ட அந்த நல்லறிவன் வெளிப்படுவான்.

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்,

தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்

வந்து, அவன், தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர் ஆகி, வாழும்

பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்? நண்பு ஆர்?

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர்களே அறிஞர் ஆவார். அந்தப் (பரம்பொருள் என்னும்) தந்தையால் வகுக்கப்பட்ட சஞ்சரிப்பதும் சஞ்சாரியாதனவும் ஆகிய எல்லாப் பொருள்களிலும் பசுவின் பாலில் உள்ளே உறைந்திருக்கும் நெய் போல, உயிர்க்கு உயிர் ஆகி, ஜீவாத்மாக்களின் உள்ளே பரமாத்மாவாக உறைந்து வாழும், (இந்த) சம்பந்தத்தை உணர்ந்து நேரே பார்க்கும் போது பகைவன் யார்? நண்பன் யார்? எவருமில்லை!

உம்பரும், முனிவர் தாமும், யாவரும், உணரா ஒன்றை

இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்,

ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;

நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய் நடத்துகின்றான்!

தேவர்களும், முனிவர்களும், மற்றும் எல்லோரும் உணராத ஒன்றை, இந்த இடத்தில், இப்போது, உனக்கு நான் பொருந்தும் படி உணர்த்துகின்றேன். எல்லாப் பிராணிகளுக்கும் ஐம்பெரும் பூதங்களால் அமைந்தது உடல். அவற்றினுள்ளே ஞானியாய் இருந்து (ஒப்பற்ற கடவுளாய்) ஒருவன் தானே அனைத்துத் தொழில்களையும் செய்து நடத்துகின்றான்.

வில்லி ப்ஹரதம்

‘என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி

மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;

உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து மேல் நாள் –

நல் நிலா எறிக்கும் பூணாய்! – நரனும் நாரணனும் ஆனோம்

‘நல்ல சந்திரகாந்தியை ஒத்த ஒளியை வீசும் ஆபரணங்களை அணிந்துள்ள அர்ஜுனா! என்னை யார் என (உனக்கு உணர்த்துமாறு) நான் சொல்வதைக் கேள்! எல்லாப் பொருள்களிலும் பொருந்தி எல்லாப் பொருள்களுமாய் அழியாது நிலை பெற்ற பரம்பொருளும் நானே! வேதங்களுக்கு எல்லாம் முடிவான பொருளும் நானே! உன்னை என்றும் நான் பிறிந்தவன் அல்ல; முன்னொரு சமயம் நரனும் நாராயணனுமாக நீயும் நானும் அவதரித்தோம்!
.... 2

Dr.Anburaj said...

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;

இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;

நின்னிடை, மயங்கும் இந்த நேயமும் ஒழிக!” என்று,

தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.

பின்பு ஒரு அவதாரத்தில் நாமே இராமன், இலக்குவனாக அவதரித்தோம். இந்த நீண்ட அவதாரத்தில் நீ அர்ஜுனனாகவும் நான் கண்ணனாகவும் இங்கு இருக்கிறோம். உன்னிடமுள்ள திகைப்பையும் உறவினர், நண்பர் என்ற இந்த அபிமானத்தையும் நீக்குக’ என்று தன் உண்மையான விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டித் தத்துவத்தை அவம் மனம் தெளிவுறும்படி அருளினான்.

ஆஹா! என்ன அருமையான பாடல்கள்! எத்தனை எளிமையாக கீதை ஆறே பாடல்களில் எளிய தமிழில் பொருளாழத்துடனும் சொல் சிக்கனத்துடனும் சூத்திரப் பாங்குடனும் விளக்கப்பட்டுள்ளது.

இதைப் படிப்போர்கள் முழு வில்லி பாரதத்தையும் படிக்க உத்வேகம் பெறுவார்கள் என்பதில் ஐயமுண்டோ!

இந்த விளக்கத்தைப் படித்த பின்னர் மகாகவி பாரதியாரிடம் வருவோம்.

அவசர யுகம் அல்லவா! இரண்டே அடிகளில் அவன் தெள்ளத் தெளிவாக கீதையில் கண்ணன் போதித்ததை இப்படிச் சுருக்கமாகக் கூறி விட்டான்:



பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்.


மாம் அனுஸமர (என்னை நினை)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன! (கர்மம் புரிவதற்கே உனக்கு அதிகாரம் உள்ளது; அதில் வரும் பயனில் எண்ணம் வையாதே – ஒரு பொழுதும்!)

Dr.Anburaj said...

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரெஞ்சு கினியாவில் உள்ள கௌரவ் என்ற இடத்திலிருந்து இன்சாட் – 4 B சாடலைட் ஏவப்படுவதை மேற்பார்வையிட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான ஐஎஸ் ஆர் ஓவிலிருந்து இந்திய விஞ்ஞானிகள் பலர் சென்றனர். சோதனையை முடித்து விட்டு இந்தியா திரும்ப அவர்கள் பாரிஸில் உள்ள சார்லஸ் டீ கால் விமான நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்களை விமான நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார். பாஸ்போர்ட்டுகளை செக் செய்த பின்னர் வழக்கமாக அவர்கள் செல்லும் பயணிகளுக்கான இருக்கைகளை நோக்கி அவர்கள் செல்ல முயன்ற போது அந்த அதிகாரி அவர்களைத் தடுத்தார். என் கூட வாருங்கள் என்றார் அவர். விஞ்ஞானிகள் பயந்து போனார்கள். ஏதாவது பிரச்சினையா என்று பயத்துடன் வினவினர்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை! எனக்குக் கிடைத்த உத்தரவை நான் நிறைவேற்றுகிறேன். அவ்வளவு தான். கூட வாருங்கள் என்றார்.

எல்லோரையும் ஒரு விசேஷமான விஐபி தங்குமிடத்திற்கு அவர் அழைத்துச் சென்று அங்கு அமரச் சொன்னார்.

ஏதோ விபரீதம் தான் என்று எண்ணிய விஞ்ஞானிகள் நாங்கள் சாதாரண எகானமி க்ளாஸ் டிக்கட் தான் வாங்கி இருக்கிறோம். இங்கு தங்க முடியாது என்று தயக்கத்துடன் கூறினர்.

அந்த அதிகாரி அப்போது, “டிக்கட்டெல்லாம் தேவையில்லை. சற்று நேரத்திற்கு முன்னர் உங்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர்கள் எங்கள் நாட்டு விஞ்ஞானிகள் சோதனை முடிந்து திரும்பி வருவார்கள். அவர்களை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். இங்கு உங்கள் விமானம் புறப்பட இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. இங்கு உங்களை சௌகரியமாக வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு” என்றார்.

விஞ்ஞானிகளுக்கு மெய் சிலிர்த்தது. எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் தங்களின் வரவை நன்கு கணித்து விமான நிலைய அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதியின் அன்புள்ளத்தை நினைத்து அவர்கள் உருகிப் போனார்கள்.

மாமனிதர் என்று அப்துல்கலாமை காரணம் இல்லாமல் மக்கள் அழைக்கவில்லை!

Dr.Anburaj said...



Thanks a lot for publishing my postings.
You are generous.
You recognise and appreciate my hard work.

Dr.Anburaj said...

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரெஞ்சு கினியாவில் உள்ள கௌரவ் என்ற இடத்திலிருந்து இன்சாட் – 4 B சாடலைட் ஏவப்படுவதை மேற்பார்வையிட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான ஐஎஸ் ஆர் ஓவிலிருந்து இந்திய விஞ்ஞானிகள் பலர் சென்றனர். சோதனையை முடித்து விட்டு இந்தியா திரும்ப அவர்கள் பாரிஸில் உள்ள சார்லஸ் டீ கால் விமான நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்களை விமான நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார். பாஸ்போர்ட்டுகளை செக் செய்த பின்னர் வழக்கமாக அவர்கள் செல்லும் பயணிகளுக்கான இருக்கைகளை நோக்கி அவர்கள் செல்ல முயன்ற போது அந்த அதிகாரி அவர்களைத் தடுத்தார். என் கூட வாருங்கள் என்றார் அவர். விஞ்ஞானிகள் பயந்து போனார்கள். ஏதாவது பிரச்சினையா என்று பயத்துடன் வினவினர்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை! எனக்குக் கிடைத்த உத்தரவை நான் நிறைவேற்றுகிறேன். அவ்வளவு தான். கூட வாருங்கள் என்றார்.

எல்லோரையும் ஒரு விசேஷமான விஐபி தங்குமிடத்திற்கு அவர் அழைத்துச் சென்று அங்கு அமரச் சொன்னார்.

ஏதோ விபரீதம் தான் என்று எண்ணிய விஞ்ஞானிகள் நாங்கள் சாதாரண எகானமி க்ளாஸ் டிக்கட் தான் வாங்கி இருக்கிறோம். இங்கு தங்க முடியாது என்று தயக்கத்துடன் கூறினர்.

அந்த அதிகாரி அப்போது, “டிக்கட்டெல்லாம் தேவையில்லை. சற்று நேரத்திற்கு முன்னர் உங்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர்கள் எங்கள் நாட்டு விஞ்ஞானிகள் சோதனை முடிந்து திரும்பி வருவார்கள். அவர்களை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். இங்கு உங்கள் விமானம் புறப்பட இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. இங்கு உங்களை சௌகரியமாக வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு” என்றார்.

விஞ்ஞானிகளுக்கு மெய் சிலிர்த்தது. எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் தங்களின் வரவை நன்கு கணித்து விமான நிலைய அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதியின் அன்புள்ளத்தை நினைத்து அவர்கள் உருகிப் போனார்கள்.

மாமனிதர் என்று அப்துல்கலாமை காரணம் இல்லாமல் மக்கள் அழைக்கவில்லை!

ASHAK SJ said...

நஷீர் பாய் நீங்கள் ஆண்மையுள்ளவர் என்பதால் அன்புராஜின் பின்னூட்டத்தை (முட்டாள் தனமாக இருந்தாலும்) பிரசுரிக்கிறீர் ஆனால் தமிழ்ஹிந்து என்ற ஒரு கோழைத்தனமான வலைத்தளத்தில் எந்த பின்னூட்டமும் பிரசுரிப்பதில்லை